Banner
முன்பு அடுத்து Page:

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள்…

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன

இடமிருந்து வலம் வேர்ல்டு டீச் ஆசிரியர்கள் செல்வி. மங்கேஸ்வரி, ஜஸ்டின் ஹல்ட்டன் (உரையாற்றுபவர் - வேர்ல்டு டீச் தலைமை ஆசிரியர்), தாமஸ், செல்வி. ஊர்வசி, கிட்ப்ஸ் ஆகியோருடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன்(17.6.2013). வல்லம், ஜுன் 18- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மணியம்மை பல் கலைக்கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச் சந்திரன் தொடங்கி....... மேலும்

18 ஜூன் 2013 15:45:03

சுயமரியாதைச் சுடரொளி முத்து. இரவிச்சந்திரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

சுயமரியாதைச் சுடரொளி முத்து. இரவிச்சந்திரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

உரத்தநாடு, ஜூன் 18- உரத்த நாடு ஒன்றியம், பொன்னாப்பூர் திருவாசலில் சுயமரியாதை சுட ரொளி முத்து.இரவிச்சந்திரன் முதலாம் ஆண்டு நினைவுநாள், நினைவுக் கல்வெட்டு திறப்பு கழக கொடியேற்று விழா 6.6.2013 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் இரா.துரைராசு தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட மாண வரணி செயலாளர் இர.தரும சீலன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட பகுத்தறிவு இலக்கிய அணி தலை வர் கவிஞர்....... மேலும்

18 ஜூன் 2013 15:30:03

பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் நடத்திய சடுகுடு போட்டி!

பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் நடத்திய சடுகுடு போட்டி!

கண்ணனூர் நேதாஜி புரட்சிப்படை கபாடி அணி முதல் பரிசை பெற்றது முதல் பரிசு - கண்ணனூர் நேதாஜி புரட்சி படை கபாடி அணிஅய்யனார்குளம், ஜூன் 18- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, அய்யனார் குளத்தில் இரண்டு நாட்கள் பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சடுகுடு போட்டியில் 68 அணிகள் பங்கேற்று சிறப்பித்தன. கண்ணனூர் நேதாஜி புரட்சிப்படை அணி முதல் பரிசைப் பெற்றது. முதல் நாள் நடைபெற்ற தொடக்க விழா....... மேலும்

18 ஜூன் 2013 15:29:03

மாநில ப.க. தலைவர் முனைவர் வா.நேருவின் தாயார் நினைவாக

மாநில ப.க. தலைவர் முனைவர் வா.நேருவின் தாயார் நினைவாக

சாப்டூரில் முத்துகிருஷ்ணம்மாள் பெயரில் படிப்பகம் அமைக்கவேண்டும்படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை மதுரை, ஜூன் 17-  மதுரை மாவட் டம் சாப்டூரைச் சேர்ந்த நினைவில் வாழும் திரு. க.வாலகுரு (ஆசிரியர்) அவர்களின் துணவியாரும், பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்களின் தாயா ருமான திருமதி சு.முத்துக் கிருஷ்ணம் மாள் (தலைமை ஆசிரியர், பணி நிறைவு) அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு  16.06.2013 ஞாயிறு மாலை 5.30 மணியளவில்....... மேலும்

17 ஜூன் 2013 16:00:04

60-ஆம் ஆண்டு மண விழாவையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

60-ஆம் ஆண்டு மண விழாவையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை

காஞ்சிபுரம் சுயமரியாதை சுடரொளி டி.ஏ. கோபாலன் அவர்களின் மூத்த சகோதரர் டி.ஏ.இரத் தினம் - வனிதா வாழ்விணையரின் 60-ஆம் ஆண்டு மண நாளின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500-ம் மருத்துவ காப்பீட்டு நிதியாக ரூ. 500-ம் ஆக ரூ. 1000 வழங்கப்பட்டது. டி.ஏ.இரத்தினம் அவர்கள் தனது சகோதரர் டி.ஏ.கோபாலனுடன் கழக நிகழ்வுகள் அனைத் திலும் உறுதுணையாக இருந்தார். காஞ்சிபுரம் தந்தை பெரியார் சிலை அமைக்க காரணமானவர் களில் முக்கியமானவர்....... மேலும்

17 ஜூன் 2013 15:40:03

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் போராட்டத்தில் பெரும்திரளாக பங்கேற்போம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் போராட்டத்தில் பெரும்திரளாக பங்கேற்போம்

மதுரை மாநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு மதுரை மாநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் வா.நேரு உரையாற்றினார்மதுரை, ஜூன் 17- 9.6.2013 அன்று இரவு 7  மணியளவில் மதுரை சிம்மக் கல்லில் உள்ள அ.முருகானந்தம் பழக் கடையில் மதுரை மாநகர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர், தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன்....... மேலும்

17 ஜூன் 2013 15:39:03

திருவெறும்பூரில் நடைபெற்ற எழுச்சிப் பட்டிமன்றம்! தமிழின முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடை அகப்பகையா? …

திருவெறும்பூரில் நடைபெற்ற எழுச்சிப் பட்டிமன்றம்! தமிழின முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடை அகப்பகையா? புறப்பகையா?

திருவெறும்பூர், ஜூன் 17- திராவிடர் கழகத்தின் சார்பில், திருவெறும்பூரில் 14.06.2013 அன்று,   தமிழின முன்னேற்றத்திற்குப் பெரிதும் தடையாக  இருப்பது அகப்பகையா? புறப்பகையா? எனும்  தலைப் பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அகப்பகையே எனும் தலைப்பில் பேசிய பூவை.புலிகேசி, பார்ப்பனர்களின் அனைத்துக் கருத்துகளையும் தமிழர்கள் ஏற்று வருகின்றனர். ஜாதி ஒழிப்புதான் தமிழர்களின் முக்கிய வளர்ச்சி யாக இருந்து வருகிறது. மருத்துவராக ஆவதற்கு ஜாதி ஒழிப்பும், இடஒதுக்கீடும் தேவைப்படுகிறது. ஆனால் அதை மறந்து இன்றைக்கு....... மேலும்

17 ஜூன் 2013 15:38:03

ஜாதி, மத மறுப்பு, விதவையர், மண விலக்குப் பெற்றோர், மாற்றுத் திறனாளிக்கான புரட்சிகர மன்றல் நிகழ்வு

ஜாதி, மத மறுப்பு, விதவையர், மண விலக்குப் பெற்றோர், மாற்றுத் திறனாளிக்கான புரட்சிகர மன்றல் நிகழ்வு

170 பேர் பதிவு செய்த நம்பிக்கையூட்டிய பாய்ச்சல் நேற்று (16.6.2013) கோவையில் நடைபெற்ற மன்றல் நிகழ்வில், கேரளாவைச் சேர்ந்த பிரவீன்குமார் (நாயர்) - கோவையைச் சேர்ந்த அமுதா (தாழ்த்தப்பட்டோர்) ஆகியோருக்கு வாழ்க்கை இணையேற்பு விழா நடத்தி வைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும் ஈரோடு மண்டல திராவிடர் கழகத் தலைவருமான பொத்தனூர் க. சண்முகம் தலைமையில், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன், பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி, கோவை மாநகர்....... மேலும்

17 ஜூன் 2013 00:00:12

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திண்டுக்கல் கூட்டத்தில் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றினார். (4.8.2012)

திண்டுக்கல், ஆக.18-மனித உரிமைகளை மறுக்கின்றமதமாக இந்து மதம் இருக் கின்றது என்று திண்டுக் கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பூவை.புலிகேசி உரை யாற்றினார்.

திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சி கர பகுத்தறிவுப் பிரச்சா ரக்கூட்டம் திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் 4.8.2012 சனி மாலை 6 மணியளவில் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.செல்வம் தலைமையேற்று உரையாற்றினார். நகரத் துணைத் தலைவர் எழில் சுந்தர் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார். மாவட்ட தலை வர் இரா.வீரபாண்டி, மாவட்ட செயலாளர் ப.யாழ்புலேந்திரன், மாவட்ட ப.க. செய லாளர் மு.நாகராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க. தலைவர் தி.க. பாலு, துணைத் தலைவர் ச. ஞானசேகர், பொதுக் குழு உறுப்பினர் இரா. நாராயணன், தி.தொ.ச பேரவைத் தலைவர் ஆ.நாகலிங்கம், மாவட்ட தலைவர் இரா .வீரபாண்டி ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி பல்வேறு கருத் துகளை எடுத்துக்கூறி உரையாற்றினார். அவர் தமது உரையில் குறிப் பிடும்போது:

இன்றைக்கு எல்லா மதங்களும் மூடநம்பிக் கைகளை பரப்புவதில் முன்னிற்கின்றன. கிறித்துவ மதப்பிரச் சாரத்தில் முடவர்கள் நடக்கிறார்கள். குருடர் கள் பார்க்கிறார்கள். செவிடர்கள் கேட்கி றார்கள் என்று சொல்லிக் கொண்டு, மறுபுறத்தில் காட்டாஸ்பத்திரி, அமெரிக்கன் ஆஸ்பத் திரி, மிசன் ஆஸ்பத்திரி என்று நிறைய மருத்து வமனைகளையும், உருவாக்குகிறார்கள். நோயாளிகள் எல்லாம் மருத்துவமனைக்கு வரவேண்டாம் ஜெபக் கூட்டத்திற்கு செல்லுங் கள் என்று கூறத் தயாரா? அதே போல, அத்வானி பாபர் மசூ தியை இடித்தபோது அல்லா எங்கு சென்றி ருந்தார். மனித தலைகள் தானே சாய்ந்தன. கிறித் துவ மதம் பைபிளைப் படி, சர்ச்சிற்கு வா என் கிறது. இஸ்லாமிய மதம் குரானைப் படி, பள்ளி வாசலுக்கு வா என் கிறது. ஆனால் பார்ப் பன இந்து மதம்தான் வேதங்களை படிக் காதே,படித்தால் நாக்கை அறுக்க வேண் டும் என்றும், அருகில் வராதே, தொட்டால் தீட்டு, பார்த்தாலே தோசம், கோவிலுக்குள் வராதே என்கிறது. மற்ற மதங்கள் அறி வுக்கு விரோதம் என் றால், இந்து மதம் அறிவுக்கும், மனித  உரி மைக்கும் விரோதமாக இருக்கிறது. எனவே, அறிவுக்கும், மனித உரி மைக்கும் எதிராக உள்ள மதங்களை விட் டொழித்து மாணவர் களும், இளைஞர்களும் பகுத்தறிவுக் கருத்து களை கேட்டு, பின் பற்றிடவேண்டும் எனக்கூறி உரையாற் றினார்.

தோழர்கள் கு.ஆனந்தராஜ், கே.ஜி.எஸ்.ஜீவானந்தம், மோகன்ராசன், சு.முத்தழகு, சந்திரன், ஜீவா, சிவபெருமான், முருகன், குழந்தைவேல், சய்யதுஆகியோர் கலந்துகொண்டு சிறப் பித்தனர்.தோழர் செபாஸ்டியன் சின்னப் பர் நன்றி கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்