காரைக்குடி விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
முன்பு அடுத்து Page:

என் மதம், என் மொழி, என் கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸின் இந்தக் கொள்கையே புதிய கல்வி செய்தியாளர்களிடையே…

என் மதம், என் மொழி, என் கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸின் இந்தக் கொள்கையே புதிய கல்வி செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, ஜூலை 28 என் மதம் இந்து மதம், என் மொழி சமஸ்கிருதம், என் கலாச் சாரம் சமஸ்கிருத கலாச்சாரம் என்னும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை உள்ளடக்க மாகக் கொண்டதுதான் மத்திய பிஜேபி அரசு கொண்டு வரத் தயாராகும் தேசிய புதிய கல்வித்திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். செய்தியாளர்களிடையே இன்று (28.7.2016) அவர் கூறியதாவது: இன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள் உடன டியாக செய லுக்கு வரும்........ மேலும்

28 ஜூலை 2016 21:19:09

லால்குடியில் விடுதலை 82ஆம் ஆண்டு விழா 100 சந்தாக்கள் வழங்க முடிவு

லால்குடியில் விடுதலை 82ஆம் ஆண்டு விழா 100 சந்தாக்கள் வழங்க முடிவு

இலால்குடி, ஜூலை 28- இலால் குடி மாவட்டத் திராவிடர் கழ கம் சார்பில் விடுதலை 82ஆம் ஆண்டு விழாவில் 100 விடு தலை சந்தா வழங்க கலந்துரை யாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இலால்குடி மாவட்டத் திரா விடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 24.7.2016 அன்று காலை 10.30 மணிக்கு பெரியார் திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அனை வரையும் வரவேற்று மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து உரையாற்றி ஓராண்டு மாவட்ட....... மேலும்

28 ஜூலை 2016 16:11:04

திண்டிவனம் கழக மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

திண்டிவனம் கழக மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

திண்டிவனம், ஜூலை 28- திண் டிவனம் ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22.7.2016 காலை 9 மணியளவில் பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் தலைமையில், மண்டல தலைவர் க.மு.தாஸ், பரிசுகளை வழங்கினார். பரிசு பெற்ற மாணவர்கள் ஏ.பாஸ்கரன் +1 வகுப்பு - முதல் பரிசு, கே.அருண்பாண் டியன் +1 வகுப்பு - முதல் பரிசு, என்.ராமச்சந்திரன் 10ஆம் வகுப்பு - முதல்....... மேலும்

28 ஜூலை 2016 16:10:04

தென்சென்னை மயிலை அம்பேத்கர் பாலத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு - பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம்

தென்சென்னை மயிலை அம்பேத்கர் பாலத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு - பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம்

மயிலாப்பூர், ஜூலை 28- 22.7.2016 ஆம் நாள் மாலை 6.30 மணி அளவில் தென்சென்னை மாவட் டத்தை சேர்ந்த மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகம் ஏற் பாட்டில் மயிலாப்பூர், அம் பேத்கர் பாலம் அருகில் (பி.வி. கோயில் தெரு) பொறியாளர் ஈ.குமார் தலைமையிலும்,  மாவட்ட தலைவர் இரா. வில்வ நாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணைத் தலைவர்  டி.ஆர் சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் முன்னிலையி லும்....... மேலும்

28 ஜூலை 2016 16:09:04

இராமநாதபுரம் மாவட்ட கழக தலைவர் உடல் நிலையில் முன்னேற்றம்

காரைக்குடி, ஜூலை 28- இராம நாதபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.ச.கருப் பையா இரண்டு மாதமாக மஞ்சள் காமாலை நோய் வாய்ப்பட்டு மானாமதுரை அருகில் உள்ள பார்த்திபனூர், பாரதி நகரிலுள்ள தமது இல்லத்தில் இருக்கின்றார். தகுந்த மருத்துவத்தை மேற் கொண்டும், மிகவும் பாதிக் கப்பட்ட நிலையில் இருப் பதை தகவல் அறிந்து, தலை மைச் செயற்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி திராவிட மணி மற்றும் காரைக்குடி கழக மாவட்ட....... மேலும்

28 ஜூலை 2016 16:09:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழனின் தன்மானத்தை அடமானமாக கேட்டு  வெகுமானம் பெறுவோரை வீழ்த்த விடுதலை ஏடு ஒன்றே நமக்கு ஆயுதம்

முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் உணர்ச்சியுரை விடுதலை ஏட்டின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் உரையாற்றினார். (காரைக்குடி)

காரைக்குடி,மே 4-காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத்தின் சிறப்புக்கூட்டம் என். ஆர்.சாமி மாளிகையில் அதன் தலைவர் சிவ. கிருட்டிணன் தலைமை யில் நடைபெற்றது. தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திரா விடமணி அனைவரை யும் வரவேற்று உரை யாற்றியதுடன்  அண் மையில் நடத்திய 21 ஆம் ஆண்டு பாரதிதாசன் விழாவின் வரவு செலவு கணக்குகளை ஒப்ப டைத்தார்.

மாவட்ட தி.க. செய லாளர் தி.என்னாரெசு பிராட்லா விடுதலை வாசகர் வட்டத்தின் நிகழ்வுகளை கழக தலை வர் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுத லோடு ஊர் தோறும் நடைபெறுவதையும் அதேபோல காரைக் குடியில் நடத்திட ஆசிரி யர் பணித்ததையும் எடுத் துக்கூறிமுன்னிலை யேற்று உரையாற்றினார். பிறகு, தி.மு.க.மாநில இலக்கிய அணியின் துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சரு மான சீரிய பகுத்தறி வாளர் மு.தென்னவன் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரை யில், விடுதலை வாசகர் வட்டம்தொடங்கி நடத்திவரும் நிகழ்வில் நான்பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக  உள்ளது.காரணம், நாட்டில் எத்தனையோ பத்திரிகைகள் இருந் தாலும் விடுதலை இத ழுக்கு என்று ஒரு சிறப்பு உண்டு.வேண்டாத கருத்துக்களை ஆகாத நெறிகளை உள்ளடக்கி பல பத்திரிகைகள் உள் ளன. ஆனால்,விடுதலை இதழ் ஒன்றுதான் இன உணர்வைமொழி உணர்வை தமிழினத்தின் பண்பாட்டை பறைசாற் றும் இதழாக வெளி வருகிறது.அனைவரும் இதை வாங்கி படிக்க வேண்டும்.அப்படி படித்தால் நமது எதிரி யார்,நமது நண்பன் யார் என்பதைஉணர்ந்து கொள்ள முடியும்.அதே வேளையில் நமது எதிரி களின் பத்திரிகைகளான தினமணி இனமணியாக வும்,தினமலர் இனமல ராகவும் நம்மை அழிக் கத்துடிப்பதைநாம் பார்க்கமுடிகிறது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திஒரு இனத்தையே மாய்த்திட நினைக்கும் அக்கிரகார கூட்டத்தை நமக்கு இந்த விடுதலைஅடையாளம் காட்டுவதோடு அவ்வப் போது சரியான பதிலடி கொடுப்பதால் நாம் பயன் பெறுகிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நமது தமிழினத்தின் தன்மானத்தை அட மானம் வைத்து சிலர் வெகுமானம்பெறு வதையும்பார்த்துக் கொண்டுதான் இருக்கி றோம். அதிலிருந்து நாம் மீளவும் யாரையும் தாழ்த்தாமல் யாராலும் தாழ்த்தப்படாமல், எவரையும் சுரண்டாமல் எவராலும் சுரண்டப் படாமல், யாருக்கும் அஞ்சாமல் யாரையும் அச்சுறுத்தாமல் நமது தமிழினம்தலை நிமிர்ந்து செம்மாந்து வாழ வேண்டுமானால் நாம் அனைவரும் தொடர்ந்து விடுதலை நாளிதழை  படிப்பதோடு மட்டு மில்லாமல் மக்கள் மத்தி யில் அதை பரப்பும் பணியில் நாம் நம்மை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நம் இனத்தின் கேடுகளை நீக்க முடியும் அதற்கு ஒரே ஆயுதம் நமக்கு விடுதலை இதழ் ஒன்றுதான் என உணர்ச்சி பூர்வமாக உரையாற் றினார். மேலும்,நடந்து முடிந்த பாரதிதாசன் விழாவின் வரவு செலவு கணக்கு ஒப்படைக்கப் பட்டது.

அதன்படி, நன் கொடையாக மொத்த வரவு ரூ.35520/-செலவு ரூ.10835/- மீதி இருப்பு ரூ.24685/-முன்னிருப்பு (வங்கியில்) ரூ.65,734/- சேர்த்துமொத்தம் ரூ.90,000/-வங்கியில் நிலை வைப்பு தொகை யாக போடப் பட்டது. அதை அனைவர்க்கும் பேரவையின் நிறுவன ரும் தலைமை செயற் குழு உறுப்பினருமான சாமி.திராவிடமணி படித்துக் காட்டினார். நிகழ்வில்,மண்டல செய லாளர் சாமி.சமதர் மம், மாவட்ட ப.க.தலைவர் ந.செகதீசன்,தேவ கோட்டை நகர தலைவர் தி.கலைமணி, சாக் கோட்டை ஒன்றிய செய லாளர் கல்லூர் சி.செல்வ மணி,த.திருமேனி, தி .தொல்காப்பியன், காரைக்குடி நகர தி.மு.க. இளை.அணி துணை அமைப்பாளர் ஆர்.கே.பி .முனீஸ்வ ரன், மும்பை மாநில தி.மு.க. இளை.அணி அமைப் பாளர்சேசுராசு மாவட்டதி.மு.க. ஆதிதிராவிட நலக்குழு செயலாளர் சுப.சிதம் பரம், ஆர்.எஸ்.மங்களம் ஒன்றிய தி.மு.க.துணை செயலாளர் சி.கர்ணன், குறள்மிகு சுப.பரமசிவம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன், அண்ணல் அம்பேத்கர், சர்.பிட்டி.தியாகராயர் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் தொண்டு கள் நினைவு கூறப்பட் டது. மேலும், அண்மை யில் விடுதலை நாளி தழில் வெளிவந்த பிட்டி தியாகராயரை பற்றிய தலையங்க செய்தி படித் துக் காட்டப்பட்டது. முடிவில்,மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி நன்றி கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner