Banner
முன்பு அடுத்து Page:

அரக்கோணம் கழக மாவட்டத்தில் பெரியார் 1000 பரிசளிப்பு நிகழ்வுகள்

அரக்கோணம் கழக மாவட்டத்தில் பெரியார் 1000 பரிசளிப்பு நிகழ்வுகள்

அரக்கோணம், மார்ச் 6_ 24.2.2015 அன்று காலை 10 மணிக்கு அரக்கோணம் பெருமுச்சி நடுநிலைப் பள்ளியிலும், 11 மணிக்கு ஜோதி வள்ளலார் நடு நிலைப்பள்ளி, போலாச்சி யம்மன் நடுநிலைப்பள்ளி, காந்திநகர் நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் (200 பேர்) ஆறுதல் பரிசுகள் மாவட்டத் தலைவர் சு. லோகநாதன், மண்டலத் தலைவர் பு.எல்லப்பன், அரக்கோணம் நகரச் செயலாளர் கா.சு.பெரியார் நேசன் ஆகியோருடன் சென்று வழங்கினர். 25.2.2015 அன்று....... மேலும்

06 மார்ச் 2015 14:44:02

திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை எழுச்சியுடன் நடத்த இலால்குடி கழகக் கலந்துரையாடலில் தீர்மானம…

திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை எழுச்சியுடன் நடத்த இலால்குடி கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை எழுச்சியுடன் நடத்த இலால்குடி கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் இலால்குடி, மார்ச் 6_ இலால்குடி கழக மாவட் டக் கலந்துரையாடல் கூட்டம் சமயபுரம் எண்.1, டோல்கேட் இராமசாமி தோட்டத்தில் கழக பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலை மையில் 8.2.2015 அன்று நடந்தது. மாவட்டத் தலை வர் தே.வால்டேர், பொதுக் குழு உறுப்பினர் ந.தர்ம ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒன் றிய, கிளைக்கழக அனைத்து பொறுப்பாளர்களும்....... மேலும்

06 மார்ச் 2015 14:40:02

வேதாரண்யத்தில் பெரியார் 1000 வினா - விடைப் போட்டி பரிசளிப்பு விழா

வேதாரண்யத்தில் பெரியார் 1000 வினா - விடைப் போட்டி பரிசளிப்பு விழா

வேதாரண்யம், மார்ச் 6_ வேதாரண்யம் இராசாசி பூங்காவில் உள்ள அறிஞர் அண்ணா அரங்கில் 17.1.2015 அன்று மாலை 4 மணியள வில் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் விழா, தந்தை பெரியார் 136-ஆவது பிறந்த நாள் விழா, பெரி யார் 1000 வினா_விடைப் போட்டி பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடை பெற்றது. விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சீனிவாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்........ மேலும்

06 மார்ச் 2015 14:40:02

புதுக்கோட்டை திராவிடர் கழக வட்டார மாநாட்டில் தோழமைக் கட்சியினர் எழுச்சியுரை

புதுக்கோட்டை திராவிடர் கழக வட்டார மாநாட்டில் தோழமைக் கட்சியினர் எழுச்சியுரை

புதுக்கோட்டை, மார்ச் 6_ புதுக்கோட்டையில் திரா விடர் கழகத்தின் சார்பில் வட்டார மாநாடு நடந் தது. தமிழகம் முழுவதும் வட்டார மாநாடுகளாக 2000- மாநாடுகள் நடத்த ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. மாநாடுகள் தொடர்ச்சியாக நடந்தும் வருகின்றன. அவ்வாறு நடத்த வேண்டிய அவசியம் என்ன? புதுக்கோட்டை வட்டார மாநாட்டில் நம் ஒத்த கருத்துடைய தோழர் கள் பேசியது:_ திமுக வடக்கு மாவட் டச் செயலாளர் பெரி யண்ணன் அரசு:_ இன் றைய அரசியல் சூழ்நிலை....... மேலும்

06 மார்ச் 2015 14:40:02

வேலூர், காட்பாடி வட்டார திராவிடர் விழிப்புணர்வு மாநாடு துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்

வேலூர், காட்பாடி வட்டார திராவிடர் விழிப்புணர்வு மாநாடு துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்

வேலூர், காட்பாடி வட்டார திராவிடர் விழிப்புணர்வு மாநாடுதுரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார் காட்பாடி, மார்ச் 6_ 24.2.2015 அன்று மாலை 6 மணியளவில் காட்பாடி வட்டார திராவிடர் விழிப்புணர்வு மாநாடு காந்திநகர் பெரியார் சிலை ரவுண்டானாவில் சுய மரியாதை சுடரொளிகள் கழிஞ்சூர் ஆசிரியர் சொக் கலிங்கம், காந்திநகர் செ.ப. வெங்கடேசன் நினைவு மேடையில் நடைபெற்றது. காட்பாடி ஒன்றிய கழகத் தலைவர் ந.சஞ்சீவி மாநாட் டுக்கு தலைமை வகித்தார். வேலூர் மாநகரத் தலை வர் நெ.கி.சுப்ரமணியன்....... மேலும்

06 மார்ச் 2015 14:40:02

நீதிபதிகள் ஆகப் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் தகுதியா? சென்னை சிறப்புக் கூட்டத்தில் வழக்குரைஞர்கள் ச…

நீதிபதிகள் ஆகப் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் தகுதியா? சென்னை சிறப்புக் கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கநாதம்

நீதிபதிகள் ஆகப் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் தகுதியா?சென்னை சிறப்புக் கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கநாதம் சென்னை, மார்ச் 5_ சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக வருவதற்குப் பார்ப்பனர்கள் மட்டும்தான் தகுதி உடையவர்களா? என்ற வினாவை எழுப்பினர் வழக்குரைஞர்கள். திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன்: சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் நிரப்பு வதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கையில் இதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பார்ப்பனர்கள் 6 பேர் இருக்கிறார்கள். அவர் களுடைய விகிதாச்சாரமாக உள்ள நூற்றுக்கு மூன்று பேர்....... மேலும்

05 மார்ச் 2015 14:45:02

சமூகநீதி வளாகமாகக் காட்சியளித்த பெரியார் திடல்

சமூகநீதி வளாகமாகக் காட்சியளித்த பெரியார் திடல்

சமூகநீதி வளாகமாகக் காட்சியளித்த பெரியார் திடல் சென்னை, மார்ச் 4_ சென்னை பெரியார் திடலில் நேற்று (3.3.2015) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நியமனத்தில் சமூக நீதி கோரிய சிறப்புப் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் வரவேற்றார். பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுக உரை ஆற்றினார். திராவிடர் கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் வீரமர்த்தினி இணைப்புரையை வழங்கினார். திமுக....... மேலும்

04 மார்ச் 2015 16:42:04

அன்னூரில் பகுத்தறிவுப் புயலைக்கிளப்பிய மாநாடு

அன்னூரில் பகுத்தறிவுப் புயலைக்கிளப்பிய மாநாடு

அன்னூரில் பகுத்தறிவுப் புயலைக்கிளப்பிய மாநாடு அன்னூர், மார்ச் 4_ திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு அன்னூ ரில் பகுத்தறிவுப் புயலைக் கிளப்பிய வண்ணம் சிறப் போடு நடைபெற்றது. திராவிடர் கழகம் சார் பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் திரா விடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டின் ஒரு பகுதியாக மேட்டுப்பா ளையம் கழக மாவட்டம் அன்னூரில் 17.2.2015 அன்று மாலை 6 மணிக்கு அன்னூர் ஓதிமலை சாலை யில் துவங்கி நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு....... மேலும்

04 மார்ச் 2015 15:55:03

சங்கராபுரத்தில் ஓவியக் கண்காட்சி தந்தை பெரியார் 136 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

சங்கராபுரத்தில் ஓவியக் கண்காட்சி தந்தை பெரியார் 136 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

சங்கராபுரம், மார்ச் 3_ தென்னார்க்காடு ஓவியக் கலைஞர்கள் கழகம், கலைச்செழியன் ஓவியக் கலைப்பயிற்சிப் பள்ளி இணைந்து நடத்திய 24_ஆம் ஆண்டு ஓவியக் கலைக்கண்காட்சி மற்றும் தந்தை பெரியார் 136_ஆம் ஆண்டு பிறந்த நாள் தந்தை பெரியார் ஓவியங் களுக்குப் பரிசு வழங்கும் விழா 15.2.2015 அன்று சங்கராபுரம் சின்னதம்பி நாட்டார் வணிக வளாகத் தில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு ஓவியக் கலை ஞர்கள் கழகத் தலைவர் மு.கலைச்செழியன் தலைமை வகித்தார்........ மேலும்

03 மார்ச் 2015 15:38:03

திருப்பூர் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

திருப்பூர் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

திருப்பூர் தெற்கு திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு திரா விடர் கழகம் சார்பில் 11.2.2015 அன்று மாலை 6 மணிக்கு திருப்பூர் பல்ல டம் சாலை, கரைத்தோட் டத்தில் சிறப்போடு துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திருப்பூர் மாநகர செயலாளர் பா.மா.கரு ணாகரன் தலைமை தாங் கினார். மாவட்ட இ.அ.செய லாளர் தே.மயில்மணி வரவேற்றார். மாவட்டத் தலைவர் இரா.ஆறுமுகம், செயலாளர் யாழ்.ஆறுச் சாமி, அமைப்பாளர் வீ. சிவசாமி, மாவட்ட ப.க. தலைவர்....... மேலும்

03 மார்ச் 2015 15:38:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி,ஏப்.14-காரைக்குடி கழக மாவட் டம் தேவகோட்டை, சி.கே.மங்கலம், காளை யார்கோவில் ஆகிய ஊர் களில்  தமிழர் தலைவர் எழுதிய உடையும் இந்தி யாவா? உடையும் ஆரி யமா? நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தேவகோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேவகோட்டை நகர தி.க.தலைவர் தி.கலை மணி தலைமை தாங்கி னார். தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் பெரி. இராமசாமி நூலினை வெளியிட்டார். முதல் நூலினை தேவகோட்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெ.மதார்சேட் பெற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து நகர தி.மு.க. பொருளாளர் கருணா நிதி, நகர் மன்ற உறுப்பி னர் ஜெ.ஜாகீர் உசேன், முரசொலி காந்திநாதன் நகர அவைத் தலைவர் அய்யாக்கண்ணு  உள் ளிட்ட ஏராளமானோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். நகர தி.க. செயலாளர் சிவ.தில்லை ராசா ஒன்றிய தி.க. தலைவர் ரெ.சக்தி, ஒன் றிய தி.க.செயலாளர் கும. வைகறை தாசன்,ஒன்றிய தி.க.அமைப்பாளர் நெய் வேலி மணிவண்ணன், வழக்குரைஞர் வி.முத்த ரசபாண்டியன் த்ஹிரு மனவயல் பன்னீர்செல் வம் உள்ளிட்ட கழகத் தினர் பங்கேற்றனர். காளையார்கோவிலில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட தி.க. அமைப் பாளர் இரா.பெரியார் குணா தலைமை வகித் திட மாவட்ட ப.க.செய லாளர் யா.இராசசேகர் முன்னிலை வகித்தார். நூலினை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குரு.போஸ் வெளியிட இந்நாள் ஊராட்சி மன்ற தலைவர் கேப்டன் ஒய். அருள்ராஜ்முதல் நூலினைபெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தி.மு.க.ஒன்றிய துணை செயலாளர் அருள்சாமி, சி.பி.அய்.வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அய் யாத்துரை, அய்.ஜெ.கே. மாவட்ட தலைவர் சி. குழந்தைசாமி, காங்கிரஸ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.கஸ்பார், சி.அய்.டி.யு. ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் எம்.சசிவர்ணம், நகர் வர்த்தகர் சங்க தலைவர் எஸ்.ஜெயராஜ், சி.அய்.டி.யு மாவட்ட பொருளாளர் வி.பாண்டி நகர் தி.மு.க. நிருவாகி ஆர்.வீராசாமி, வணிகர் சங்க மாநில இணை செயலாளர் டி.குழந்தைதாஸ் சி.பி.எம் ஒன்றிய குழு கொல்லங்குடி எம். கணேசன்,இந்திய தேசிய காங்கிரஸ் மாநில பேச் சாளர் ஆர்.ஆறுமுகம், தியாகி இம்மானு வேல் பேரவை ஒன்றிய செய லாளர் எல்.குப்பமுத்து, நகர் ஆட்டோ சங்க பொருளாளர் லெ. மலைச்சாமி, வேலரங் கன், தமிழ் கணினியகம் நா.முத்துக்குமார், ஜெமினி ஸ்டுடியோ க. இரமேஷ் எஸ்.சி.எஸ்.டி. அரசு ஊழியர் கூட்ட மைப்பு மாநில செயலா ளர் சி.முத்து உள்ளிட்ட ஏராளமானோர் நூல் களை பெற்றுக் கொண் டனர். ஒன்றிய தி.க.தலைவர் நாத்திகராசா, மாவட்ட இளை.அணி.தலைவர் பி.திராவிட வெற்றிக் குமார்,  மாவட்ட மாண வரணி அமைப் பாளர் எ.வினோத்ராசா உள் ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர். சி.கே.மங்கலம் நகரில் நடந்த விழாவிற்கு ஒன் றிய ப.க.அமைப்பாளர் தலைமை வகித்தார். நூலினை கழக தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி வெளியிட கருமொழி ஊராட்சி மன்ற தலை வர் எஸ்.சேவியர், சி.பி. எம்.(எம்ல்) மாவட்ட செயலாளர் கா.பூவலிங் கம், கல்லூர் ம.தி.மு.க. செயலாளர் கா.கும ரையா, ப.க.ஒன்றிய அமைப்பாளர் ந.தம்பி ராசு உள்ளிட்ட பலரும் நூல்களைபெற்றுக் கொண்டனர். மேற் கண்ட நிகழ்ச்சிகளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திரா விடமணி,மண்டல செயலாளர் சாமி.சம தர்மம்,காரைக்குடி மாவட்டதலைவர் ச.அரங்கசாமி, காரைக் குடி மாவட்ட செய லாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோர் கலந்து கொண்டனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner

அண்மைச் செயல்பாடுகள்