எழுச்சி முழக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்!
Banner
முன்பு அடுத்து Page:

கொள்கை விழாவாக நடைபெற்ற குடும்ப விழா கலைமாமணி மன்னர் மன்னன் வாழ்த்துரை

கொள்கை விழாவாக நடைபெற்ற குடும்ப விழா கலைமாமணி மன்னர் மன்னன் வாழ்த்துரை

புதுச்சேரி, மே 27_ புதுச் சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொள்கை விழாவாக 24.5.2016 அன்று பெரியார் படிப்பகத்தில் புதுவை மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் நடைபெற் றது. புதுச்சேரி மண்டல தலைவர் இர.இராசு, மண் டல செயலாளர் கி.அறி வழகன், புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக தலைவர் வீர. இளங்கோவன்,....... மேலும்

28 மே 2016 15:57:03

‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகங்கை இராமச்சந்திரனார் வரலாற்று நூல் வெளியீட்டு விழா

‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகங்கை இராமச்சந்திரனார் வரலாற்று நூல் வெளியீட்டு விழா

‘சுயமரியாதைச் சுடரொளி’ சிவகங்கை இராமச்சந்திரனார் வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னை, மே 26- சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (25.5.2016) மாலை இலக்கியத் திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி எழுதிய சீர்பதிப்பு வரலாற்று நூல் ”சிவகங்கை இராமச்சந்திரனார்” நூல் வெளி யீட்டு விழாவும், அதனைத் தொடர்ந்து சிவகங்கை இராமச் சந்திரனாரின் பேரன் பத்திரிகையாளர் பொறியாளர் க.நகை முகன்  படத்திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஸ்பைக் & ஸ்பேன் பில்டர்ஸ், எஸ்.ஆர்.ஆர்........ மேலும்

26 மே 2016 16:57:04

திராவிடர் கழக கொடியேற்று விழா

திராவிடர் கழக கொடியேற்று விழா

  தாம்பரம், மே 25_ தாம்பரம் மாவட்ட திராவிடர் கழ கத்தின் சார்பில் அரசன் கழனி பகுதியில் கழக கொடியேற்றும் நிகழ்ச்சி 22.05.2016 ஞாயிற்று கிழமை  மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு அரசன் கழனி திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் நா. குண சேகரன் தலைமை தாங் கினார். தாம்பரம் நகரச் செய லாளர் சு. மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் ஆர் டி வீரபத்திரன், அர சன் கழனி தேமுதிக....... மேலும்

25 மே 2016 17:18:05

நடக்க இருப்பவை

பெரியார் நூலக வாசகர் வட்டம் -  2173ஆம் நிகழ்வு - திராவிடத்தால் எழுந்தோம் 26.5.2016 வியாழக்கிழமை சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை, சொற்பொழிவாளர்: பெரியார் பேருரையாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), பொருள்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2016 - ஒரு விமர்சனம் வாழ்க்கை இணை ஏற்பு விழா தமிழர் தலைவர் பங்கேற்பு 28.5.2016 சனிக்கிழமை மும்பை :  காலை 10 மணி மணமக்கள்: இங்கர்சால் - இரஞ்சனி, இடம்:....... மேலும்

24 மே 2016 16:21:04

கொள்கையும், நாணயமும் எங்கே இருக்கிறதோ- அங்கே வாழ்வியல் வெற்றிகரமாக இருக்கும்! ஒரத்தநாட்டில் மதிவாணன்…

கொள்கையும், நாணயமும் எங்கே இருக்கிறதோ- அங்கே வாழ்வியல் வெற்றிகரமாக இருக்கும்! ஒரத்தநாட்டில் மதிவாணன் படத்தினை திறந்து தமிழர் தலைவர் கருத்துரை

ஒரத்தநாடு, மே 23- கொள்கையும், நாணயமும் எங்கே இருக்கிறதோ, அங்கே வாழ்வு, வாழ்வியல் வெற்றிகரமாக இருக்கும். ஒரு மனிதன் எவ்வளவு பணம் சம்பாதித்தான் என்பது பெருமையல்ல. ஒரு மனிதன் எவ்வளவு சிறப் பாக வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 14.5.2016 அன்று மாலை ஒரத்தநாட்டில் நடைபெற்ற மறைந்த மதிவாணன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்....... மேலும்

23 மே 2016 16:21:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேதுசமுத்திரத்திட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை, காவிரிநதிநீர்ப் பிரச்சினை ஆகியவற்றை நிறைவேற்றக்கோரி எழுச்சி முழக்கத்தோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்!

சென்னை, ஏப்.14-சேதுசமுத்திரத்திட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை, காவிரி நதிநீர்ப்பிரச்சினை ஆகியவற்றை நிறைவேற்றக்கோரி மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் விவரம் வருமாறு:

காஞ்சிபுரம்

தமிழர் தலைவர் அவர்களின் ஆணைப்படி 11.4.2012 அன்று காலை 10.30 மணியளவில் தந்தை பெரியார் நினைவுத்தூண், காந்தி சாலை, காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் அ.கோ.கோபால்சாமி தலைமை வகித்து பேசினார்.

பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, செங்கை மாவட்ட செயலாளர் ஆ.சண்முகம், மா.சுந்தரபிரபாகரன், காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர், த.சத்யா, கா.இ.அ.தலை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி மாவட்ட தி.க. தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், காஞ்சி மாவட்ட செயலாளர் செ.ரா.முகிலன் ஆகியோர் ஆர்ப் பாட்டத்தை விளக்கி உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கருத்துரையாற்றியோர்: பொதுக்குழு உறுப்பினர் இரா.கோவிந்தசாமி, செ.ந.த. க.சுந்தரம், வா.ஒ.அ. ஆ.மோகன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் துவக்கத்திலும் முடிவிலும் ஆ.மோகன் ஒலிமுழக்கமிட அனைத்து தோழர் களும் முழக்கமிட்டனர். ஏ.கந்தன், ந.மோகனவேலு, சுந்தரபிரபாகரன், பொன்.இராஜேந்திரன், இரா. குழந்தைவேலு, திருமங்கலம் நடராஜன், ஆர்.சந் திரன், சவுண்ட் சர்வீஸ் சேகர் உள்ளிட்ட தோழர் களும் பொது மக்களும் திரளாக பங்கேற்றனர். டீ.ஏ.ஜி.அசோகன் நிகழ்ச்சியை வழிநடத்தி நெறிபடுத்தினார்.

நெல்லை

நெல்லை திராவிடர் கழகத்தின் சார்பில் 11.4.2012 அன்று காலை 10.30 மணி அளவில் பாளையங் கோட்டை சந்தைத் திடலில் மாவட்டத் தலைவர் இரா.காசி தலைமையில், சீ.டேவிட் செல்லத்துரை, அய்.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் ச.இராசேந்திரன் ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினார். நெல்லை மண்டலச் செயலாளர் மா.பால் ராசேந்திரம் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார். இந்நிகழ்வினில் சீ.தங்கத்துரை, வழக்குரைஞர் த.வீரன் மண்டல இளைஞரணி செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் சிற்பி  பாமா, சி.வேலாயுதம், பி.ஆர்.கே.அருண், கவிஞர் அழகப்பன், பானுமதி இராசேந்திரன், கீழப்பாவூர் பி.பொன்ராஜ், பெ.சுடலையாண்டி, ந.இராமச் சந்திரன், செ.செல்வராஜ், த.தமிழ்தாசன், மெஞ் ஞானபுரம் மருத்துவர் டே.அன்பரசன், பொன்மலர் அன்பரசன், கி.சேகர், ஜோன்ஸ், பொன்னை, நாராயணன், ஆர்.ஏ.எஸ்.முத்துவடிவு, பி.சாந்தி மு.இராமசாமி, பெரியார் பிஞ்சுகள் அன்பரசி, கண்மணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித் தனர். ஏராளமான பொதுமக்கள் ஆர்ப்பாட் டத்தின் நோக்கங்களுக்காகக் கழகத்தினைப் பாராட்டிச் செவிமடுத்தனர். சரியாக 10.30 மணியளவில் சிற்பி பாமா அவர்களின் நன்றியோடு ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது.

திருப்பூர் திருப்பூர் மாவட்டத் தி.க. சார்பாக ஆர்ப்பாட்டம் 11.4.2012 காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் முன்பாக மாவட்ட தி.க. தலைவர் இரா.ஆறுமுகம் தலைமை யில் நடைபெற்றது.

மாவட்ட கழகச் செயலாளர் வழக்குரைஞர் நா.சக்திவேல் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழகம் விடுதலையில் வெளியிட்ட ஆர்ப்பாட்ட முழக்கங்களை தொடர் முழக்கமிட்டார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் கணியூர் சாமிநாதன், மாநகரத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாநகரச் செயலாளர் இல.பாலகிருட்டிணன், மாநகரத் துணைத் தலைவர் ஆட்டோ தங்கவேல், மாநகரத் துணைச் செயலாளர் தென்னூர் முத்து, திருப்பூர் ஒன்றிய தி.க. தலைவர் ஆசிரியர் முத்துமுருகேசன்,  திருப்பூர் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வம், உடுமலை நகரத் தலைவர், காஞ்சி மலையான், நகரச் செயலாளர் நா.மாயவன், பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் க.மைனர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.பன்னீர்செல்வம் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக சாக்ரடீஸ், மாநகர இளைஞரணி செயலாளர் தே.மயில்மணி, திருப்பூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் துரைமுருகன், தாராபுரம் நகர இளைஞரணி  தலைவர் விதி மோகன், தாராபுரம் ஒன்றியச் செயலாளர் நாத்திகச் சிதம்பரம், கணியூர் நகரச் செயலாளர் நா.இராமசாமி, பழனி மு.அன்பழகன், வி.வேலுச் சாமி, கு.மணிவண்ணன் ஆகிய தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

மாவட்ட ப.க. தலைவர் கழகச் சொற்பொழி வாளர் கு.கோபி வெ.குமாரராசா ஆர்ப்பாட்டத்தை விளக்கி உரையாற்றினார். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட கழக அமைப்பாளர் வீ.சிவசாமி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்ட பேருரை மக்களை நெகிழ வைத்தது. கொளுத்தும் வெயிலில் திரளான மக்கள் காத்திருந்து கேட்டது பெரும் வியப்பாக அமைந்தது. இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூர் மக்களிடையே எழுச்சியை தோற்றுவித்தது.

சேலம்

சேலத்தில் 11.4.2012 அன்று ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் : சேலம் மாவட்டம் : க.ஜவகர் சேலம் மாவட்ட தலைவர், பூ.வடிவேல், சேலம் மாநகர தலைவர், அரங்க.இளவரசன், சேலம் மாவட்ட செயலாளர், அ.ச.இளவழகன், சேலம் மாநகர செயலாளர் சி.பூபதி மாவட்ட துணைத் தலைவர், கந்தசாமி கோவிந்தராஜன் கல்பாரப்பட்டி, எம். கமலம் மாதேஸ்வரன், தமிழ்ச்செல்வன், முன்னாள் தலைவர் பொறியாளர் மு.செல்வராசு, அ.இ.தமிழர் தலைவர், மாணவரணி தலைவர், ஆத்தூர் மாவட்டம் : வெ.அண்ணாதுரை, ஜெயராமன், சு.சுரேஷ், மண்டல இளைஞரணி அமைப்பாளர்

மேட்டூர் மாவட்டம் :  பழனி புள்ளையண்ணன், சி.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் ப.கலைவாணன், தலைவர் இளைஞரணி மேட்டூர் மாவட்ட தி.க., க.நா.பாலு, தலைவர் எடப்பாடி நகர தி.க. ராணி, முத்து, முரளி கிருஷ்ணன், மா.ராஜேஸ், கோ.இளையராசா, மா.கதிர்வேல், சே.அருள், ரா.ஜெயப்பிரகாஷ், அமைப்பாளர் மேட்டூர் மாவட்ட மாணவரணி ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் இறுதியில் சேலம் மாவட்ட செயலாளர் அரங்க.இளவரசன் நன்றி கூறினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் 11.4.2012 அன்று நாமக்கல் அண்ணா சிலை முன்பு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனனூர் க.சண்முகம், தலைமை வகித்து பேசினார். மாவட்ட தி.க. தலைவர் வெங்கரை மு.பழனியப்பன்,  மாவட்ட அமைப்பாளர் பெரியார் குடில் வை.நடராசன், மாவட்ட செயலாளர் குமாரபாளையம் அ.குமார், நகர தலைவர் கே.எஸ்.அசேன், ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

பாவேந்தர் பேரவைத் தலைவர் ப.சுப்பண்ணன், நகர தி.க. செயலாளர் வை.பெரியசாமி, மின்னக்கல் செல்வகுமார், கே.எஸ்.அசேன் ஆகியோர் தமிழகம் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்பதைப் பற்றி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டம் 1 மணி அளவில் முடிவுற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் : பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, ஒன்றிய தலைவர் ப.வடிவேல், துணைத் தலைவர் இராசகோபால், நகரச் செயலாளர் மு.சீனிவாசன், அன்புமணி, பொருளாளர் மருத.கோபாலன், செங்கோடன் (மி.வா.ஓய்வு), பழனிசாமி, பொத்தனூர் தலைவர் சத்தியசீலன், இளைஞரணி தோழர்கள் : ஆ.சுரேசு, ஜே.உதயகுமார், செயலாளர்: மண்டை ஓடு சரவணன், ஆசைத்தம்பி, பள்ளிபாளையம் ஒன்றிய செயலர், ஆகியோர் ஆர்ப்பாட்ட முழக்கங்களை முழங்க பகல் 1 மணி அளவில் மாவட்ட செயலர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே முடிவுற்றது.

பெரம்பலூர்

11.4.2012 மாலை 5.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ப.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெ.சித்தார்த்தன் வரவேற்புரையாற்றி னார். இரா.அரங்கராசு, துரைசாமி அமைப்பாளர், மற்றும் நா.ஆறுமுகம், நகரத் தலைவர் பிச்சை பிள்ளை, தா.நல்லுசாமி, பெ.பெரியசாமி, பழனி முத்து, மணிகண்டன், அம்பேத்கர், செல்வராசு, மா.வீரன், சின்னதுரை, குமாரசாமி, தென்னவன், ஏகலூர் மாணிக்கம் துரைசாமி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விண்ணதிர ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட இளைஞரணி தலைவர் க.கல்யாண சுந்தரம் நன்றி கூற ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருவாரூர்  சேது சமுத்திர திட்டம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை, காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கட்டளைப்படி 11-04-2012 புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு திருவாரூர் பேருந்து நிலையத்தில் திராவிடர் கழக மாநில இளைஞர் அணி செயலாளர் ,  இரா.ஜெயகுமார்  தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் சு.மனோகரன் வரவேற்புரை யாற்றினார்.

இரா.கோபால் திருவாரூர் மாவட்ட தலைவர், கா. கணபதி மாநில தொழிலாளர் பேரவை துணை செயலாளர், கிருஷ்ணமூர்த்தி திருத்துறைப்பூண்டி மாவட்ட தி.க. செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில்   கழகச் சொற்பொழிவாளர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றினார். இதில் கி.அருண்காந்தி மா. து. தலைவர், க.வீரையன் மா. து. செயலாளர், க. முனியாண்டி மா. ப.க.தலைவர், சு.அறிவுக்கண்ணு நகர து. தலைவர், பி.கோவிந்தசாமி, பி.எஸ் அகமது, ஆத்மநாதன்  மா.ஆலோசகர்கள், வீர.கோவிந்தராசு குடவாசல் ஒன்றிய தலைவர், பொய்யாமொழி நன்னிலம் ஒன்றிய செயலாளர், முத்துராசா விடுதலை செய்தியாளர், சி.சரசு மா. ம. செயலாளர், கோ.ராமலிங்கம் நகர ப.க. தலைவர், குணசேகரன் திருத்துறைப்பூண்டி நகரத் தலைவர்   மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவில்  வழக்கறிஞர் சு. சிங்காரவேலர் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner