முன்பு அடுத்து Page:

சென்னையில் 27.4.2019 சனியன்று திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக்…

சென்னையில் 27.4.2019  சனியன்று  திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக் கூட்டம்

நாள் : 27.4.2019 சனியன்று காலை சரியாக 10 மணி இடம் : பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொருள்: கழகத்தின் எதிர்காலப் பணி திட்டமிடுதல் மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட கழக தலைவர் செயலாளர்கள் மட்டும் அவசியம் பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறோம். சட்டத் துறையினரும் கலந்து கொள்க! - & கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் மேலும்

23 ஏப்ரல் 2019 16:42:04

"நான் நிறையப் புத்தகங்களைப் படித்ததால்தான்; இன்னும் நிறையப் புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்றே தெரிந…

அறிஞர் சாக்ரட்டீசின் அனுபவத்தைக் குறிப்பிட்டு, கவிஞர் நெல்லை ஜெயந்தா உரைவீச்சு! சென்னை. ஏப். 23 சென்னை புத்தகச் சங்கமத்தில் மூன் றாம் நாள் உரையரங்கில் கவிஞர் நெல்லை ஜெயந்தா வாசிப்பைச் சுவாசிப்போம்! என்ற தலைப்பில் தன்னு டைய வாசிப்பு அனுபவங்களை சுவையாகப் பகிர்ந்து கொண்டார். பொதுவாக இன்றைய இளைய சமுகத்திடம் வாசிப்புத் திறன் குறைந்துகொண்டே செல்கிறது என்கின்ற ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது. அதில் ஓரளவு உண்மையிருக்கலாம். ஆனால், புத்தகங்களின்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:54:03

கவுரா இல்லத் திருமண விழா - தமிழர் தலைவர் வாழ்த்து

கவுரா இல்லத் திருமண விழா - தமிழர் தலைவர் வாழ்த்து

ராஜசேகரன் & -கவுமாரீஸ்வரி மகன் கவுதம் ஜீனாவுக்கும், சிவானந்தம் & பத்மாவதி மகள் உமாசிறீக்கும் இணையேற்பு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். (சென்னை 22.4.2019) மேலும்

22 ஏப்ரல் 2019 16:22:04

டிஜிட்டல் உலகம் எதிர்காலத்தில் நம்மையும் ஒரு ரோபோவாக மாற்றிவிடும்! திறன்பேசியை ஆக்கத்திற்கு பயன்படுத…

டிஜிட்டல் உலகம் எதிர்காலத்தில் நம்மையும் ஒரு ரோபோவாக மாற்றிவிடும்! திறன்பேசியை ஆக்கத்திற்கு பயன்படுத்தலாம் - புத்தகங்களைப் படிக்க வேண்டும்!

சென்னை புத்தகச் சங்கமத்தில் நடைபெற்ற அர்த்தமுள்ள விவாத அரங்கம்! கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் விவாதத்தில் பங்கேற்றவர்களுக்கும், நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளருக்கும் இயக்கப் புத்தகங்களைக் கொடுத்து சிறப்பு செய்தார். சென்னை, ஏப்.22, சென்னை புத்தகச் சங்கமத்தின் இரண்டாம் நாள் மாலைநேரக் கருத்தரங்கில் இளம் படைப் பாளிகள், வாசகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இன்றைய இளைய சமுகம் புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடினர். சென்னை....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:00:03

புத்தகத் திருவிழா, திரைப்படத் திருவிழா, குழந்தைகள் திருவிழா மூன்றும் ஒன்றாகச் சங்கமித்த சென்னை புத்த…

புத்தகத் திருவிழா, திரைப்படத் திருவிழா, குழந்தைகள் திருவிழா மூன்றும் ஒன்றாகச் சங்கமித்த சென்னை புத்தகச் சங்கமம்!

சென்னை, ஏப்.21  உலக புத்தக நாளை ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றி, அதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை நேசிக்க வைப்ப தற்காக தொடங்கப்பட்டது சென்னை புத்தகச் சங்கமம். நேற்று (20.4..2019) சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் 7 ஆவது சென்னை புத்தகச் சங்க மத்தைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கலந்து கொண்ட நீதியரசர், அபிராமி ராமநாதன், வரியியல் அறிஞர் இராசரத்தினம் ஆகியோருக்கு தமிழர் தலைவர்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:39:04

எஸ்கேஅய் என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு வல்லம், ஏப்.20 ஆசியாவிலேயே முதல் முறையாக முற்றிலும் மாணவி யர்களே தயாரித்த எஸ்கேஅய்  என்எஸ் எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள் 21.04.2019 ஞாயிறு காலை 10 மணி அளவில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழக திறந்தவெளி மைதானத்திலிருந்து விண் ணில் செலுத்தப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:36:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்லக்குறிச்சி, பிப். 12- கல்லக்குறிச்சி  கழக மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் 7.2.2019 அன்று கல்லக்குறிச்சி ஜெயகோவிந்த் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். கல்லக்குறிச்சி நகர தலைவர்  ச.சுந்தரராசன் வரவேற்புரையாற்றினார்.  குழ.செல்வராசு (மண்டல செயலாளர்), அரங்க.பரணிதரன் (மாவட்ட துணைத்தலைவர்), த.பெரிய சாமி (மாவட்ட அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தஞ்சாவூரில் பிப்ரவரி 23,24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டுநாள் மாநாட்டிற்கு நிறைய தோழர்கள் செல்வது பற்றியும் 15.02.2019 கல்லக்குறிச்சி மாவட்டத்தில் திராவிடர் மாணவர் கழகம் மற் றும் பகுத்தறிவாளர் கழகம் சார்பாக நடை பெறவுள்ள அறிவியல் பரப்புரை கூட்டம் நடத்துவது பற்றியும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, Modern Rationalist  ஆகிய இதழ்களுக்கு சந்தாக்கள் சேர்ப்பது பற்றியும் கிராமங்களில் பகுத்தறிவு பிரச் சாரம் செய்வது பற்றியும் மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் சிறப்புரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து மற்ற தோழர்களும் தங்கள் கருத்துகளை சிறப்பாக கூறினார்கள். பொதுக்குழு உறுப்பினர்  தி.பாலன், அ.கரிகாலன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), நா.பெரியார் (மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்), கருப்புச்சட்டை ஆறுமுகம் (திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர்), இரா.செல்வமணி (மூரார்பாது கிளைக்கழகத் தலைவர்), மு.சேகர் (வட கரைத்தாழனூர் கிளைக்கழகத் தலைவர்), பா.சக்திவேல் (சு.கொள்ளுர் கிளைக்கழகத் தலைவர்), சு.விக்ரம், கோ.ஜெயவீக்குமார் (திராவிடர் கழக மாணவரணி) ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லை நகர தி.க.செயலாளர் இரா.முத்துசாமி நன்றி கூறினார்

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. பிப்ரவரி 23, 24 ஆகிய இரு நாட்க ளில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள திரா விடர் கழக மாநில மாநாடு, சாதி ஒழிப்பு மாநாட்டிற்கு கல்லக்குறிச்சி கழக மாவட் டம் சார்பாக இரண்டு பேருந்துகளில் தோழர் கள் செல்வதென தீர்மானிக்கப்படுகிறது.

2. திருக்கோவிலூர் ஒன்றியம் வட கரைத்தாழனூரில் மார்ச் முதல் வாரத்தில் திராவிடர் கழக பொதுக் கூட்டம் நடத்து வது என தீர்மானிக்கப்பட்டது.

3. மாநாட்டிற்கு அரசு பணியில் உள்ளவரை குழுவாகச்சென்று நன்கொடை பெறுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner