முன்பு அடுத்து Page:

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களே தன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்! பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே! பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே! தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள் தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்! கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்! கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்! கலை நிகழ்ச்சி விருந்துக்குப் பஞ்சமில்லை காதுக்கும் கண்ணுக்கும் கற்கண்டுதான் பகுத்தறிவுதான் மனிதனுக் கழகுயென்றால் பாடம் கேட்கலாம் பகுத்தறிவாளர்களால் சிந்தனையைத் தீட்டிக் கொள்ள வேண்டும் - சீழ் மதத்தை நெட்டித் தள்ளவேண்டும் பஞ்சமில்லை தோழர்களே, மிக்கவுண்டு பண்பட்ட பேச்சாம் மழையுமுண்டு தொண்டுக்கு முன்னுரிமை கழகத்தில் - இதன் கொள்கைக்கு நிகரில்லை உலகத்தில்! தன்னல மறுப்பென்னும் தியாகமே கழகத் தோழரின் ரத்த ஓட்டமே! மதவாத யானையை....... மேலும்

22 பிப்ரவரி 2019 17:03:05

திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு கழக அமைப்பாளர் இரா. குணசேகரன் நிதி வழங்கல்!

திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு கழக அமைப்பாளர் இரா. குணசேகரன் நிதி வழங்கல்!

மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் மாநாட்டு நிதியாக திரட்டிய ரூ.2,50,000/-&த்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன்: நெல்லுப்பட்டு இராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர் (தஞ்சை 22.2.2019) சோழிங்கநல்லூர் மாவட்ட சார்பாக மாவட்ட கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்ரன் மாநாட்டு நிதி முதல் தவணையாக ரூ.50,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நித்யானந்தம்,  மாவட்ட பொருளாளர் தமிழ் இனியன் உள்ளனர். (சென்னை பெரியார் திடல், 21.2.2019) தஞ்சை மாநில....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:55:04

மதுரை: அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்

மதுரை: அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்

மதுரை, பிப். 22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், திராவிட மாணவர் கழக சார்பாக அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்  3.2.2019 அன்று மாலை 5 மணி  முதல் 8 மணி வரை மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ்.அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் வரவேற்று கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி உரை யாற்றினார். நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகத்தினைச்சார்ந்த....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:52:04

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட அறிமுக விழா

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட அறிமுக விழா

வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை இராணிப்பேட்டை, பிப். 22 16.2.2019 அன்று மாலை இராணிப்பேட்டை தனியார் விடுதியில் பெல் நிறுவன ஊழியர்களின் அம்பேத்கார் பெரியார் படிப்பு வட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. வட்டத்தின்தலைவர் வே.இந்தி ரன் தலைமை வகித்தார். பெ.ஜெயக்கொடி வரவேற்புரையாற்றி னார். ஆலோசகர்கள் கோ.இளங் கீரன், தி.க.சின்னதுரை, கு.விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கவுரவத்....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:52:04

உடன் பிறப்புகளின் தலைவன் உணர்ச்சிகளால் ஒரு விழா

நாள்: 25.2.2019 திங்கட்கிழமை, மாலை 5.30 மணி இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை தலைமை ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் - திராவிடர் கழகம்) உணர்வு உரைகள் திராவிட இயக்கத்தின் கையிருப்பு - திரு. வைகோ. முத்தமிழறிஞரின் மகன் - திரு. வைரமுத்து நிகரற்ற நிர்வாகி - திரு. பீட்டர் அல்போன்ஸ் இந்தியாவின் எதிர்பார்ப்பு - திரு. ஆ.ராசா ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் - திரு. சுப.வீரபாண்டியன் உடன்பிறப்புகளின் தலைவன் -  திருமதி. தமிழச்சி தங்கப்பாண்டியன் உங்களில் ஒருவன் - திரு. அன்பில் மகேஷ்....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:06:04

திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமுகநீதி மாநாடு

திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமுகநீதி மாநாடு

பிப்ரவரி 23: திராவிடர் கழக மாநில மாநாடு பேரணி 1. விளம்பர வண்டி 2. தப்பாட்டக் குழு 3.காவடியாட்டக் குழு 4. தீச்சட்டி குழு 5. பெரியார் பிஞ்சுகள் 6. சடையார்கோயில் கோலாட்டக் குழு 7.  மகளிரணி 8. பெரியார் சமூக காப்பணி 9. இளைஞரணி அணிவகுப்பு 10.  திராவிடர் தொழிலாளரணி 11. வழக்குரைஞரணி 12. திராவிடர் இயக்க சாதனை விளக்க ஊர்திகள் 13. மாவட்ட வாரியாக கழக தோழர்கள் ஊர்வலத்தில் ஒலிமுழக்கம் எழுப்புவோர் 1. சு. சிங்காரவேல் (தலைமை கழக பேச்சாளர்) 2.  பா. மணியம்மை (மாநில மாணவரணி இணைச் செயலாளர்) 3. கோவை. சிற்றரசு (கோவை....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:27:03

தஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு!

தஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு!

கலந்துரையாடலில் தீர்மானம் அரியலூர், பிப்.21 அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.2.2019 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கலந்து ரையாடல் கூட்டத்திற்கு கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க,மாநில இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன்,மண்டல தலைவர் சி.காமராஜ், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் முன்னிலை ....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:27:03

தந்தை பெரியார் கூறுகிறார்

தந்தை பெரியார் கூறுகிறார்

தஞ்சை ஜில்லா சுயமரியாதை ஜில்லா என்னும் - மாடல் ஜில்லா! கழகப் பெரு மக்களே, சுயமரியாதை வீரர்களே, பகுத்தறிவாளர்களே, முற்போக்கு வாணர்களே, நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்த அமைப்பில் இருந்தாலும், தமிழ்நாட்டின் எந்த மூலையில் குடியிருந்தாலும் நீங்கள் வரும் சனி, ஞாயிறுகளில் (பிப்ரவரி 23, 24) குடும்பம் குடும்பமாக வந்து கூட வேண்டிய - சங்கமிக்க வேண்டிய இடம் தஞ்சைத் திலகர் திடல்தான். கடல் இல்லாத தஞ்சையின் திலகர் திடல் மக்கள்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:14:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்மாபேட்டை

22.1.2019 அன்று மாலை 5.30 மணிக்கு சேலம் அம்மா பேட்டை காந்தி மைதானத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 86ஆவது பிறந்தநாள் தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் கே.ஜவகர் தலைமையில் மாநகர துணை செயலாளர் கே.ராசு வரவேற் புரைக்குப் பின் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வனின் பரப்புரை வீச்சு நடைபெற்றது.

தமிழர்களின் நிலை பண் பாடு எப்படி சீரழிக்கப்பட்டது. 10% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அனல் பறக்க பேசினார். இந்நிகழ்ச் சியில் பழனி.புள்ளையண்ணன் அறக்கட்டளை உறுப்பினர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள்.

வித்யாநகர்

22.1.2019 அன்று இரவு 8 மணி அளவில் பல்லவன் சாலை வித்யாநகர் சேலம் 3இல் இரண்டாவது கூட்டம் மாநகர் துணைத் தலைவர் கே.ராசு தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மத் திய அரசின் 10% இடஒதுக்கீட் டின் சீர்கேட்டைப் பற்றியும், பகுத்தறிவுக் கருத்துக்களையும் எடுத்துக் கூறினார்.

இரு நிகழ்வுகளிலும் மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், அமைப்பாளர் இராவணபூபதி, அம்மாபேட்டை மொட்டை யன், மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன், மாநில மாணவர் கழக துணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வெற்றிச்செல்வன் நன்றி கூறினார்.

சேலம் தர்மநகர்

23.1.2019 அன்று முதல் நிகழ்ச்சி சேலம் ஜங்ஷன் தர்ம நகரில் மாலை 5.30 மணி அளவில் துணைத் தலைவர்  பரமசிவம் வரவேற்க பேங்க் ராசு தலைமையில் தெரு முனைப் பரப்புரை நடை பெற்றது. இந்நிகழ்வில் இந்து மதத்தால் நாம் அடையும் இழி வுகள் பற்றி மிகத் தெளிவாக அனைவருக்கும் புரிகின்ற முறையில் எடுத்துக் கூறினார். தஞ்சை பெரியார் செல்வன், மத்திய அரசின் 10% இடஒதுக் கீட்டை பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறி யது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை உரு வாக்கியது. கூட்ட முடிவில் மாவட்ட அமைப்பாளர் இரா வண பூபதி நன்றி கூறினார்.

தென் அழகாபுரம்

23.1.2019 அன்று இரவு 7.30 மணிக்கு சேலம் தென் அழ காபுரம் காலனியில் சேலம் மாநகராட்சி (திமுக) எதிர்க் கட்சித் தலைவர் புவனேசுவரி முரளி தலைமையில் எழுச்சி யுடன் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பெண்கள் பெருமள வில் கலந்து கொண்டனர். தலைமை உரையாற்றிய புவ னேசுவரிமுரளி பெண்கள் பகுத்தறிவோடு வாழ்ந்தால் குடும்பம் நல்ல அறிவுள்ள குடும்பமாக இருக்கும். பகுத் தறிவோடு மட்டுமல்லாமல் தந்தை பெரியார் பேசிய பேச்சுக்களையும், பெரியாரின் புத்தகங்களையும் படித்தால் தான் நாமெல்லாம் மானத் தோடு வாழ முடியும் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். சிறப்புரையாற்றிய பெரியார் செல்வன் தந்தை பெரியாரின் கொள்கைகளையும், கருத்துக்க ளையும், அண்ணல் அம்பேத்கர் ஏற்றுக்கொண்டு செயல்பட்ட தையும், தந்தை பெரியாரின் தொண்டு, அம்பேத்கர் ஆற்றிய பணி, பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் செயல் பாடு முத்தமிழ் அறிஞர் கலை ஞரின் நலத்திட்டங்கள் தமி ழுக்கு ஆற்றிய தொண்டு உள் ளிட்ட கருத்துக்களையும், இந்து மதத்தால் விளைந்துள்ள தீமைகளை பற்றியும், சமஸ் கிருதத்தால் தமிழுக்கு ஏற்பட்ட இன்னல்களையும், சங்பரிவா ரின் எதிர்கால தீய திட்டங்க ளைப் பற்றியும், எழுச்சிமிகு உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் இராவணபூபதி நன்றி கூற கூட்டம் முடிவ டைந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பெரியார் செல்வன் அவர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் முரளி. துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன் இறுதியாக நன்றி கூறினார்.

2 நாட்களில் 4 நிகழ்ச்சிக ளிலும், மாவட்டத் தலைவர் கே.ஜவகர், மாவட்ட செயலா ளர் அ.ச.இளவழகன், மாநில செயலாளர் கே.சுரேஷ், மாண வர் கழக மண்டல செயலாளர் சு.இ.தமிழர் தலைவர், மாவட் டத் துணைச் செயலாளர் வெற் றிச்செல்வன், மாநகரத் துணை செயலாளர் கே.இராசு, மாவட்ட அமைப்பாளர் இராவணபூபதி, பேங்க் இராசு, துணைத் தலை வர் பழ.பரமசிவம் உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner