முன்பு அடுத்து Page:

தந்தை பெரியார் சிலை உட்பட எந்தத் தலைவர்களின் சிலைகளையும் மூடக்கூடாது சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

தந்தை பெரியார் சிலை உட்பட  எந்தத் தலைவர்களின் சிலைகளையும் மூடக்கூடாது  சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

தேர்தல் நேரத்தில் தந்தை பெரியார் சிலையை மூடக்கூடாது என்று திராவிடர் கழகத்தால் போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 23.3.2011 அன்று ஆணை பிறப்பித்துள்ள நிலையில், நடக்கவிருக்கும் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தந்தை பெரியார் சிலையை சில இடங்களில் மூடியுள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பாகும். சென்னை உயர்நீதிமன்ற ஆணை இதோ: மேலும்

22 மார்ச் 2019 16:00:04

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அன்னை மணியம்மை நூற்றாண்டு விழா : வேந்தர…

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்  அன்னை மணியம்மை நூற்றாண்டு விழா : வேந்தர் பங்கேற்று உரை

வல்லம், மார்ச் 22 அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா, பள்ளி, கல்லூரிகளுக்கு பரிசளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அய்ன்ஸ்டின் அரங்கில் பல்கலைக்கழக வேந்தர்  டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 20.3.2019 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் தஞ்சை, திருச்சி, அரியலூர் கல்வி மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவர்கள் உட்பட்ட கல்லூரி மாணவர்கள் 38 மாணவ, மாணவிகளுக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள 5 கல்லூரி மாணவர்களுக்கும் ரூபாய் 5000/- முதல் பரிசு, இரண்டாம் பரிசு ரூ 3000/,....... மேலும்

22 மார்ச் 2019 15:20:03

பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர் பெரியார் தொண்டறச் செம்மல் கல்வியாளர் கோ.அரங்கசாமி படத…

* நாள்: 23.09.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமை: ஆசிரியர் கி.வீரமணி * அன்புடன் அழைக்கும்: இராஜம் அரங்கசாமி, ஆர்.எம்.சுந்தர், சி.மீனாம்பாள், ஆர்.சாமிநாதன், ஆர்.இராமச் சந்திரன் மேலும்

22 மார்ச் 2019 15:15:03

அவசர சிறப்புக் கூட்டம்

நாள்    :                22.3.2019 வெள்ளி மாலை 7.00 மணி முதல் 9.00 வரை இடம் :               நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை - 7 உரை வீச்சு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கவிஞர் கலி. பூங்குன்றன் வழக்குரைஞர் அருள்மொழி பொருள்: "பொள்ளாச்சி அவலமும் - பொறுப்பற்ற பார்ப்பனர்களின் விஷமமும்!" - திராவிடர் கழகம்   குறிப்பு: இக்கூட்டத்தில் சிங்கப்பூர் அறிஞர் அ.சி. சுப்பய்யா அவர்கள் எழுதிய "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்" என்ற நூல்....... மேலும்

21 மார்ச் 2019 16:53:04

'புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

'புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

புதிய பார்வை' ஆசிரியர் ம. நடராசன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பழ. நெடுமாறன், டி.டி.வி. தினகரன், எல். கணேசன், கவிஞர் காசிஆனந்தன், தனியரசு எம்.எல்.ஏ. மற்றும் பலர் பங்கேற்பு. (தஞ்சாவூர் 20.3.2019). மேலும்

21 மார்ச் 2019 16:48:04

தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் - திருத்தப்பட்ட பட்டியல்

தேர்தல் பிரச்சார சூறாவளி  சுற்றுப் பயணம் - திருத்தப்பட்ட பட்டியல்

சொற்பொழிவாளர்கள்     சு.அறிவுக்கரசு செயலவைத் தலைவர், திராவிடர் கழகம் முனைவர் துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பாளர்கள் : வீ.அன்புராஜ் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர், 80125 56060 தஞ்சை இரா.ஜெயக்குமார் பொதுச் செயலாளர்- 98425 98743 மதுரை வே.செல்வம் மாநில அமைப்புச் செயலாளர் - 98433 46346 ஈரோடு த.சண்முகம் மாநில அமைப்புச் செயலாளர் - 98424 10620 ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்: பேரா. ப.சுப்பிரமணியன் மாநிலத் தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக்கழகம் - 94426 31344   மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் செய்ய வேண்டியவை 1. மாவட்ட தி.மு.க செயலாளர், தொகுதி பொறுப்பாளர்கள்,  வேட்பாளர் ஆகியோரை....... மேலும்

21 மார்ச் 2019 15:48:03

"பொள்ளாச்சி அவலமும் பொறுப்பற்ற பார்ப்பனர்களின் விஷமமும்!"

நாள்    :               22.3.2019 வெள்ளி மாலை 7 முதல் 9 மணி வரை இடம் :               பெரியார் திடல், சென்னை - 7 உரை வீச்சு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கவிஞர் கலி. பூங்குன்றன் வழக்குரைஞர் அருள்மொழி திராவிடர் கழகம் மேலும்

20 மார்ச் 2019 17:34:05

பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர் பெரியார் தொண்டறச் செம்மல் கல்வியாளர் கோ.அரங்கசாமி படத…

* நாள்: 23.09.2019 சனிக்கிழமை மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமை: ஆசிரியர் கி.வீரமணி * அன்புடன் அழைக்கும்: இராஜம் அரங்கசாமி, ஆர்.எம்.சுந்தர், சி.மீனாம்பாள், ஆர்.சாமிநாதன், ஆர்.இராமச் சந்திரன் மேலும்

20 மார்ச் 2019 17:10:05

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற சுயமரியாதை மணவிழா

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற சுயமரியாதை மணவிழா

அருப்புக்கோட்டை, மார்ச் 19 அருப்புக் கோட்டை அ.நா.உ.மு. திருமண மண்ட பத்தில், அன்னை மணியம்மையார் நூற் றாண்டு தொடக்க நாளான 10.3.2019 அன்று காலை 11 மணிக்கு, சுயமரியாதைச் சுடரொளிகள் கவிஞர் எம்.எஸ்.இராம சாமி & பார்வதியம்மாள் இணையரது பேரனும், டாக்டர் இரா. புகழேந்தி & டாக்டர் கே.நாகரத்தினம் இணையரது மகனுமான டாக்டர் பு.இராசராசனுக்கும், திருவில்லிபுத்தூர் க.ஆறுமுகப்பெருமாள் & காளீஸ்வரி இணையரது மகள் டாக்டர் ஆ.சிவரஞ்சனிக்கும் மணவிழா நடை பெற்றது. பகுத்தறிவாளர்....... மேலும்

19 மார்ச் 2019 16:10:04

திருத்தங்கல்லில் நடைபெற்ற சுயமரியாதை மணவிழா

திருத்தங்கல்லில் நடைபெற்ற சுயமரியாதை மணவிழா

திருத்தங்கல், மார்ச் 19 திருத்தங்கல் சரவணா மகாலில், அன்னை மணியம் மையார் நூற்றாண்டு தொடக்க நாளான 10.3.2019 அன்று காலை 9 மணிக்கு திருத்தங்கல் நகர கழக அமைப்பாளர் மா.நல்லவன் (எ) சுப்பிரமணியன் & மாரியம்மாள் இணையரது மகனும், மாவட்ட கழக இளைஞரணிச் செயலா ளருமான சு.ஆசைத்தம்பிக்கும், மதுரை ரா.செல்வராஜ் & குருவம்மாள் இணை யரது மகள் செ.சுகன்யாவிற்கும் வாழ் விணையர் ஏற்பு விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன்....... மேலும்

19 மார்ச் 2019 16:10:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சங்கராபுரம், ஜன.  11  கல்லக்குறிச்சியை அடுத்துள்ள சங்கராபுரத்தில் 19.12.2018 அன்று பேருந்து நிலைய பொதுக்கூட்ட மேடையில் தமிழர் தலைவர் பிறந்தநாள் & சுயமரியாதை நாள் என் கடன் பெரியார் பணி முடிப்பதே திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணித்தலைவர்  அ.கரிகாலன் தலைமை தாங்கினார். சங்கராபுரம் நகர கழகத் தலைவர் இல.சேரன் வரவேற்புரை ஆற்றினார். விழுப்புரம் மண்டல கழகச் செயலாளர் குழ.செல்வராசு கழகக் கொடியை ஏற்றிவைத்தார். மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தொடக்கவுரை யாற்றினார். மாவட்ட கழக அமைப்பாளர் த.பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர் ஓவிய இமயம் மு.கலைச்செழியன், மாவட்ட கழக மகளிர் அணித்தலைவர் பழனியம்மாள் கூத்தன், சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இரா.நாராயணன், மூங்கில்துறைப்பட்டு நகர கழக தலைவர் நூ.சலீம், மூங்கில் துறைப்பட்டு திருவள்ளுவர் தமிழ் மக்கள் இயக்கத்தலைவர் முனைவர் ம.விசய் ஆனந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மந்திரமா? தந்திரமா?

முதலில் திண்டுக்கல் ஈட்டி.கணேசன், அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மண்ணை சக்கரையாக மாற்றுதல், முட்டையை பையில் போட்டு நசுக்கி, அம்முட்டையை பார்வையாளரிடம் இருந்து வரவைத்தல், சணல் கயிறை துண்டித்து அதனை முடிச்சு போட்டு பின் முடிச்சில்லாமல் ஒரே கயிறாக மாற்றுதல், காலியான துணிப்பையில் இருந்து அழகான கைக்குட்டையை வரவைத்தல் உள்ளிட்ட பல நிகழ்ச்சி களை நடத்தினார். பிறகு அவையெல்லாம் மந்திரத்தால் செய்யப்பட்டது  அல்ல; தந்திரத்தால் செய்ததே என விளக்கமும் அளித்தார். ஓவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் பொதுமக்கள் கை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளி படுத்தினார்கள்.

பா.மணியம்மை

தலைமைக் கழகப் பேச்சாளரும் மாநில மாணவர் கழக இணைச் செய லாளருமான  (மகளிர் பிரிவு) வழக்குரை ஞர் பா.மணியம்மை எழுச்சியுரை ஆற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியார் மறைந்து 45 -ஆண்டுகள் ஆகிறது. பெரியாருக்குப்பின் இவ்வியக் கம் இருக்குமா! என்று கேலி பேசிய வர்களும், எக்காளம் இட்டவர்களும் நிறையபேர்கள்! அவர்களெல்லாம் வெட் கப்பட்டு தலைகுனியும்படி அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத்தினை தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தி னார். உலகத்திலேயே ஒரு நாத்திக இயக்கத்திற்கு தலைமைதாங்கி வழி நடத்திய பெருமை  அன்னை மணியம் மையாருக்கு மட்டுமே உண்டு. அவர் மறைவிற்குப் பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைமையேற்று பெரியார் சிந்தனைகளை இந்திய துணைக்கண்டம் மட்டுமல்லாது, உலகமெங்கும் பரப்பி வருகிறார்.

நாத்திக மய்யம்

இந்தியாவின் நாத்திக மய்யமாக பெரியார் திடல் விளங்கி வருகிறது. ஏனெனில், அரசியலாளர்கள் ஆலோ சனை பெறவும் ஆறுதல் பெறவும் இங்குதான் வருகிறார்கள். உலக நாத்திகத் தலைவர்கள் விரும்பிவரும் இடமாகவும், பெரியார் திடல் விளங்குகிறது. தமிழர் தலைவர் 56-ஆண்டுகளாக விடுதலை நாளிதழின் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். சமூக நீதிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதைக்கண்டித்து, சட்ட ரீதியாகவும், நியாமானதாகவும் அறிக்கை விடுகிறார். தேவைப்படும் போது பேராட்டங்களை நடத்தி சமூக நீதியை நிலை நாட்டுகிறார். பிற்படுத் தப்பட்டவர்களுக்கான மண்டல் கமிசன் அறிக்கையை அமல்படுத்த 32 மாநாடுகளையும் 16 போராட்டங்ளையும் நடத்தி வெற்றி கண்டவர் நம் தமிழர் தலைவர். தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு அபாயத்தை முன்கூட்டியே தடுத்து நிறுத்த தமிழ் நாட்டின் எல்லாப் பகுதி மக்களுக்கும் 5 குழுக்களாகப் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் நம் தமிழர் தலைவர்!

சங்கராபுரத்தில்  எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்தநாள் - சுயமரியாதை நாள் என் கடன் பெரியார் பணி முடிப்பதே திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்தோர் (19.12.2018)

மத்திய தகவல் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, 10 ரூபாயில் பேச வேண்டியதை 1 ரூபாயில் பேசலாம் என்ற திட்டம் தீட்டி அமைச்சரவை ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தினார். இதில் 1 இலட்சத்து 76ஆயிரம் கோடியை அமைச்சர் ஊழல் செய்து விட்டார் என்று உண்மை அறியாமல் எதிர்கட்சியினர் கூவினார்கள். அதை ஊடகங்களும் ஊதி பெரிதாக்கின. இதன் காரணமாக ஆ.இராசா திகார் சிறையில்  இருந்த போது தமிழர் தலைவர் நேரில் சென்று நம்பிக்கையூட்டும் ஆலோசனை சொன் னார். இவ்வழக்கில் ஆ.இராசா அவர்களே ஆஜராகி இந்திய மக்களுக்கெல்லாம் 10 ரூபாயில் தரவேண்டிய தகவலை 1 ரூபாயில் தரும்போது அரசுக்கு இழப்பு தான்! ஆனால் மக்களுக்கு அது ஒரு பெரிய சேவை! மக்களுக்குச் சேவை செய்வதுதானேஅரசாங்கத்தின் பொறுப்பு! என்று வாதிட்டார். கனம் நீதிபதி அவர்கள் வழக்கின் நியாயத்தை உணர்ந்து ஆ.இராசா அவர்களை குற்ற மற்றவர் என விடுவித்தார்.

தமிழர் தலைவர் ஓய்வில்லாமல் தமிழர்களின் நலன்களுக்காக பாடுபட்டு வருகிறார். அவர் இன்னும் பல ஆண் டுகள் வாழ வேண்டும். தமிழர்களாகிய நாம் எல்லாம் அவருக்கு உறுதுணையாக விளங்குவோம். என்று கூறி முடித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திராவிடர் கழக இலக்கிய அணித்தலைவர் பெ.சயராமன், மாவட்ட ப.க. தலைவர். பெ.எழிலரசன்; அமைப்பாளர் சி.முருகன், ரிஷிவந்தியம் ஒன்றிய கழக தலைவர் அர.சண்முகம், மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி அமைப்பாளர் நா.பெரியார், கல்லை நகர கழக தலைவர் ச.சுந்தரராசன் மேலூர் கிளைக்கழகத் தலைவர் ஆ.பழனிமுத்து, குளத்தூர் கழகத் தலைவர் இரா.சிவக்குமார், அத்தியூர் பகுத்தறிவாளர் கழகத்தலைவர் க.பார்த்திபன், புத்திராம் பட்டு ப.க. தலைவர் கோ.விஜயன், குளத்தூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பி.கோவிந்தன், நா.ஆறுமுகம், ச.முனியன், சங்கராபுரம் தமிழ் படைப்பாளர் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க செம்பியன், சங்கைத் தமிழ் சங்க செயலாளர் கவிஞர். ச.சாதிக் பாட்சா, மூவேந்தர் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் தி.ம.சுப்பிரமணியன், முத் தமிழ் கலை இலக்கிய பேரவைத்தலைவர்  நல்லாசிரியர் மு.முகமது உசேன், தியாக துருகம் கவிஞர் கல்யாணி நடராசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறுதியில்  சங்கராபுரம் நகர பகுத் தறிவாளர் கழகத் தலைவர் ஆ.இலக் குமிபதி நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner