முன்பு அடுத்து Page:

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும…

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும் போராட்டம்!

விருதுகள் அளித்தும் - படங்கள் திறந்தும் - திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சென்னை, ஜன.17 நாட்டில் நடப்பது சமுகநீதிக்கும், சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா 16.1.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி....... மேலும்

17 ஜனவரி 2019 16:08:04

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாடு, ஜன.17 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 16-.01-.2019 அன்று காலை உரத்தநாட்டில் எருமைமாட்டு ஊர்வலம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கடும் உழைப்பும், கட்டிப்பாலும், கெட்டித் தயிரும், தரும் எருமைமாட்டை கருப்பு என்பதால் புறக்கணிக்கும் புல்லர்களுக்கு புத்தி புகட்ட திராவிட....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன்: க.ப. அறவாணன் அவர்களின் வாழ்விணையர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள். மேலும்

17 ஜனவரி 2019 15:47:03

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில், திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோருக்கு பெரியார் விருதினை'' வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, குவைத் செல்லப்பெருமாள், மலேசியா அன்பழகன், த.க.நடராசன், தாயம்மாள் அறவாணன் ஆகியோர் உள்ளனர்....... மேலும்

17 ஜனவரி 2019 15:19:03

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு  மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்தவற்றை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதை பாராட்டி  தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான தூய்மை விருதினை பள்ளி முதல்வர் க.வனிதாவிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார். மேலும்

14 ஜனவரி 2019 17:07:05

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்  தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக்கழக பதிவாளர் பேரா. சொ.ஆ.தனராஜ், பெரியார் தொழில் நுட்ப வணிகக்காப்பகத்தின் முதன்மை  செயல் அலுலவர் பேரா. எஸ்.தேவதாஸ் மற்றும் கல்விப்புல முதன்மையர் பேரா பி.கே.சிறீவித்யா ஆகியோர்  முன் னிலை வகிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி அவர்கள் தலைமை வகிக்க கூட்டு  பணியாளர் நலமன்ற சார்பாக பணி யாளர்களுக்கு உறியடி போட்டி,....... மேலும்

14 ஜனவரி 2019 17:03:05

'விடுதலை'க்கு விடுமுறை

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் (15.1.2019, 16.1.2019) விடுமுறை.  வழக்கம்போல் 17.1.2019 அன்று விடுதலை வெளிவரும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! - ஆசிரியர் மேலும்

14 ஜனவரி 2019 15:01:03

மதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள் விழா

மதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள் விழா

மேலஅனுப்பானடி, ஜன.13 மதுரை மேலஅனுப்பானடியில் 13.12.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சுயமரியாதை நாளாக எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவுக்கு பகுதி செயலாளர் பொ.பவுன்ராசு தலைமை வகித்தார். அனைவரையும் வரவேற்றார் பகுத்தறிவாளர் கழகம் சுப.முருகானந்தம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினார்கள். தொடக்கத்தில் மாவட்ட அமைப்பாளர்....... மேலும்

13 ஜனவரி 2019 16:19:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம், ஜன.11 சேலம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.1.2019 அன்று காலை 10.30 மணிக்கு அம்மாபேட்டை தமிழாசிரியர் மன்றத்தில் நடைபெற்றது.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவகர் தலைமை வகித்தார். மண்டல கழகத் தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்பை விளக்கியும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். அறிவாசான் தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தந்தை பெரியார் தத்துவங்கள் தேவை என்பதையும், கழகத் தலைவருக்கு எதிராக களமிறங்கியவர்கள் கூட, தமிழர் தலைவர் அவர்களால் தான் இந்த மாற்றங்கள் என்று தெரிவித்திருப்பதை சுட்டிக் காட்டி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை உறுப்பினர் பழநி.புள் ளையண்ணன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட கழக செயலாளர் அ.ச.இளவழ கன், மாவட்ட துணைத் தலைவர் பண்ருட்டி பரமசிவம், மாநகர தலைவர் பு.வடிவேலு, மாநகர செயலாளர் அரங்க.இளவரசன், மண் டல மாணவர் கழக செயலாளர் இ.தமிழர் தலைவர், ஈரோடு பா.வைரம், அம்மாபேட்டை தனபால், வங்கி & இராசு, பெரியார் பெருந் தொண்டர் வ.வேணுகோபால், ஆர்.கோவிந்த ராசு, ப.பூபாலன், கோ.சங்கரபாண்டியன், ஆர்.குமார், பி.இரஞ்சித், ஆர்.செகதீசு, பி.இரவிக்குமார், மு.கவுதமன், எஸ்.தங்கவேல், கே.ஆர்.இராசேசு, திருப்பூர் நகர கழக தலைவர் பாலகிருட்டிணன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கவிஞர் பா.திவ்வியபாரதி, சட்டக்கல்லூரி மாணவர் கழக தலைவர் கோ.விக்னேசுவரி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

மாவட்ட அமைப்பாளர் இராவணபூபதி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

புதிய பொறுப்பாளர்கள்

சேலம் மாவட்ட மாணவர் கழக தலைவர்: கோ.சங்க பாண்டியன், செயலாளர்: கவிஞர் பா.திவ்விய பாரதி

தீர்மானங்கள்

1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி பிப்ரவரி 7ஆம் தேதி நடை பெறவுள்ள மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கி சேலம் மாவட்ட 60 வட்டங்களிலும் 18.1.2019 அன்று தொடங்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

2) சேலம் சட்டக்கல்லூரி திராவிட மாண வர் கழகம் சார்பில் கவிஞர் நந்தலாலா அவர்களைக் கொண்டு தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? என்ற நூலினை வெளி யிட்டு விழா நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

3) மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், நூல் அறிமுக விழாவை சிறப்பாக நடத்துவதற்கு கீழ்க்கண்ட பிரச்சாரக்குழு நியமிக்கப்படுகிறது.

ஒருங்கிணைப்பாளர்கள்:

கே.ஜவகர் (மாவட்ட தலைவர்), அ.இள வரசன் (மாவட்ட செயலாளர்), இராவணபூபதி (மாவட்ட அமைப்பாளர்), பு.வடிவேல் (மாநகர தலைவர்), இள.இளவரசன் (மாநகர செயலாளர்), பரமசிவன் (மாவட்ட துணைத் தலைவர்)

பிரச்சாரக்குழு

தலைவர்: பா.வெற்றி, துணைத் தலைவர்: பா.திவ்வியபாரதி, செயலாளர்: இ.தமிழர் தலைவர், துணை செயலாளர்: பா.பூபாலன், பொருளாளர்: மு.கவுதமன், அமைப்பாளர்: வங்கி இராசு

வார்டு வாரியாக பொறுப்பேற்று கொண்டவர்கள்

1ஆவது வார்டு: பொறியாளர் செல்வராசு, பரமசிவம், 9 ஆவது வார்டு: பாண்டியன், பா.வைரம், 11 ஆவது வார்டு: சுஜாதா தமிழ்ச் செல்வம், 16 ஆவது வார்டு: இரமேசு, 23 ஆவது வார்டு: வங்கி இராசு, 37ஆவது வார்டு: மு.மொட்டையன், 39 ஆவது வார்டு: தனபால், பா.பூபாலன், 40 ஆவது வார்டு: தங்கவேல், இராசு, 54 ஆவது வார்டு: பு.வடி வேல், 56 ஆவது வார்டு: இராவண பூபதி, 57 ஆவது வார்டு: கே.ஜவகர், 59 ஆவது வார்டு: வ.வேணுகோபால், 60 ஆவது வார்டு: இள வரசன், கமலம்

அயோத்தியாப்பட்டினம்: ஜி.சங்கபாண்டி யன், மாதேஸ்வரன், கண்ணங்குறிச்சி: திருப் பூர் பாலு, திவ்வியபாரதி, கோ.விக்னேசுவரி, கல்பாரப்பட்டி: கோவிந்தராசு.

3) 18.1.2019 அன்று மாலை நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்ட தொடக்க விழாவினை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களைக் கொண்டு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner