முன்பு அடுத்து Page:

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படவேண்டும் என்ற கோரிக்கை இயக்கத்தை ஆசிரிய…

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படவேண்டும் என்ற  கோரிக்கை இயக்கத்தை ஆசிரியரும் - வைகோவும் தொடங்கவேண்டும்!

நீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழாவில் பேராசிரியர் அ.இராமசாமி உரை சென்னை, டிச.15 தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலே செயல்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, ஒரு இயக்கத்தை அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களும், சகோதரர் வைகோ அவர்களும் தொடங்கவேண்டும் என்றார் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய தலைவர் முனைவர் அ. இராமசாமி அவர்கள். நீதிக்கட்சியின் 102 ஆம் ஆண்டு நிறைவு விழா 20.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா....... மேலும்

15 டிசம்பர் 2018 14:34:02

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...

வழக்குரைஞர் கிருபா முனுசாமி 1938-இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கூடிய பெண்கள் கூட்டத்தைப் பார்த்து “என் மனம் நிலைகொள்ளா மகிழ்ச்சி யடைகிறது” என்றார் தந்தை பெரியார். அதுபோல, ஏன் அவர் பெரியார்? என்பதை, பெரியார் திடலில், அதுவும் பெரியாரின் பிறந்த நாளன்று பேசுவதை எண்ணும் போது என் மனமும் நிலைகொள்ளா மகிழ்ச்சி யடைகிறது. சென்னை பெரம்பூரில் பெண் தலைவர் ஒருவர் தலைமையிலும், பெரியார் தலைமை யிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. கடுமையான....... மேலும்

15 டிசம்பர் 2018 12:52:12

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 10 மணி         - நெய்குன்னம் சு. நடராசன் இல்லத்தில் இரங்கல் காலை 11 மணி         - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்     படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்  - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை    திருமண வரவேற்பு : திருவாளர் மோகன் - சரோஜா இளங்கோவன்  குடும்பத்தினர் மாலை 4.30 மணி  ....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 11 மணி - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்   பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்    படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்   - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை     திருவாளர் மோகன் - சரோஜா இணையர்  குடும்ப மணவிழா வரவேற்பு மாலை 4.30 மணி     - திருச்சி பெரியார் மருந்தியல்   கல்லூரியில்  விளையாட்டு விழா நிகழ்ச்சி மாலை 6 மணி  - தந்தை....... மேலும்

13 டிசம்பர் 2018 14:53:02

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

நாட்டில் மத மறுப்பு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாள்தோறும் நடைபெறுவது இருட்டடிக்கப்படுவது ஏன்? ஜாதி, மதமறுப்புத் திருமண இணையர்க்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்! 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, டிச.13 ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டியதுதான் - அதே நேரத்தில் ஆணவக் கொலைகளை விளம்பரப்படுத்தி, ஜாதி மத மறுப்புத் திருமணங்களை இருட்டடிப்புச் செய்து, பொய் சொல்லி தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் காட்டியதுடன்....... மேலும்

13 டிசம்பர் 2018 13:59:01

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

நாகரிகமான சமுதாயத்தைப் படைப்பதே பெரியாருக்குக் காட்டும் மரியாதை ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஆ.இராசா உணர்ச்சி உரை சென்னை, டிச.12 ஜாதி ஒழிந்த நாகரிகமான சமுதா யத்தைப் படைப்பதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள். சென்னை பெரியார் திடலில் 26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி - தீண் டாமை ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:40:03

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

தந்தை பெரியாரின் தனிச் செய லாளரும், பெரியார் பெருந்தொண்ட ருமான மானமிகு தி.மகாலிங்கம் அவர்கள் 25.11.2018 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவர்தம் நினைவை போற்றும் வகையில் வரும் 15.12.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.,பி.எல். இந்நிகழ்ச்சியில் கழகக் குடும்பத்தினர்,....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அ…

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர்  மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள்  கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து

சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரி, டிச. 11 கடந்த 9.12.2018 அன்று பொன்னேரி தோழர் செல்வி இல்லத்தில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பொருள்: தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24, ஓசூர் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வது, டிசம்பர் இறுதியில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொன்னேரியில் பொதுக் கூட்டம் நடத்துதல். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: வி.பன்னீர்செல்வம், நகர செயலாளர் மு.சுதாகர், ஒன்றிய....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பின்படி ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்க!

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, டிச. 3   சட்டப்படியும், மனிதநேயத்தோடும், நியாயப்படியும் கேட்கிறோம் - உச்சநீதிமன்றத்தின் தெளி வான தீர்ப்பின்படி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை யும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

இன்று (3..12.2018)  பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி, ம.தி.மு.க. சார்பில் சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய அருமை சகோதரர் வைகோ அவர்கள் மிகத் தெளிவான விளக்கத்தினை இங்கே சொல்லியிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் ஒலி முழக்கங்கள் மிகத் தெளிவாக அமைந்திருக்கின்றன.

சட்டப்படி, நியாயப்படியானது நம்முடைய கோரிக்கை

நாம் கேட்பது மனிதநேயத்தோடு கேட்கிறோம், மனிதநேயத்தோடு மட்டுமல்ல, சட்டப்படி, நியாயப்படி நம்முடைய கோரிக்கைகள் என்பது அமைந்திருக்கின்றன. தெளிவான முறையில் நம்முடைய கோரிக்கைகள் அமைந்திருக்கின்றன.

அருமைத் தோழர் வைகோ அவர்கள் தன்னுடைய தொடக்க உரையில் இந்தப் போராட்டத்தினுடைய நோக்கம் என்ன? ஏன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவேண்டும் என்கிற அளவிற்கு எங்களை நிர்ப்பந்தப் படுத்தி இருக்கிறார்கள். இது நாமாகத் தேர்ந்தெடுத்தப் போராட்டம் அல்ல. அவர்கள் ஆட்சியாளர்கள், குறிப் பாக ஆளுநர் நம்மீது திணித்த போராட்டம். எதிர்க்கட்சி கள்மீது திணித்த போராட்டம். இந்தப் போராட்டம் தேவையற்ற நிலை என்று அவர்கள் உருவாக்கியிருக்க வேண்டும். காரணம், நாம் சட்டப்படி உரிமைகளைக் கேட்கிறோம், நியாயப்படி உரிமைகளைக் கேட்கிறோம்.

உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பு!

உச்சநீதிமன்றம் தெளிவாக, ஏழு பேரையும் விடுதலை செய்யலாம்; எங்களுக்கு எந்தவிதமான மறுப்பும் கிடை யாது என்று இத்தனை ஆண்டுகாலத்திற்குப் பிறகு, தெளி வான ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டது. அதனை முடிவு செய்யவேண்டியது தமிழக அரசு என்கிற காரணத்தினால், தெளிவாக உச்சநீதிமன்றம், நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் அமைந்த அமர்வு, அந்த வழக்கில் தெளிவான தீர்ப்பை அளித்துவிட்டது.

அதனடிப்படையில், தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்கிற தீர்மானத்தையும் போட்டிருக் கிறார்கள். அந்தத் தீர்மானத்தை, முறைப்படி, தமிழக ஆளுநருக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

ஆளுநருடைய கடமை என்னவென்றால், அந்தத் தீர்மானத்தில் , கையெழுத்துப் போட்டு அனுப்புவதைத் தவிர, வேறு சொந்தமாக சிந்திக்கவேண்டிய அவசியமே கிடையாது. அதை கிடப்பில் போடுவதற்கு எந்த உரிமை யும் கிடையாது.

அப்படியானால், அதற்கு என்ன பொருள்? அருள் கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். இங்கே வைகோ அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, இங்கே நடப்பது ஒரு ஜனநாயக அரசு - மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசு. அது விரும்பத்தக்கதா? விரும்பத்தகாததா? சரியானதா?சரியானதில்லையா? என்பது பிரச்சினை யல்ல. அ.தி.மு.க. அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு.

தமிழ்நாட்டை விட்டு விரட்டப்படவேண்டியவர்

அந்த அரசு, தன்னுடைய அமைச்சரவையைக் கூட்டி, அதற்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துவிட்டது என்று சொன்ன பிறகு, அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற் றினார்கள். அந்தப் பரிந்துரையில், கையெழுத்துப் போட்டு அனுப்ப வேண்டிய ஒரு வேலையைத் தவிர, இந்த ஆளுநருக்கு அதிகப்பிரசிங்கித்தனமான வேலைக்கு உரிமையே கிடையாது. அது அரசியல் சட்ட விரோதம். அதற்காகவே இந்த ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு விரட்டப்படவேண்டிய ஆளுநராவார். சட்ட விரோதமாக நடந்துகொண்டிருக்கிறார்.

ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது!

ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன். இந்தத் தகவல்கள் செய்தியாளர்களுக்கு முக்கியமானது.

வழக்குரைஞர்கள் இங்கே நிறைய இருக்கிறோம். சட்டப்படி முறையாக தமிழ்நாடு அரசினுடைய அமைச்ச ரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது என்று சொல்கின்ற நேரத்தில்,  அந்தத் தீர்மானத்தை தன்னுடைய இருக்கையின் கீழ் போட்டு அமர்ந்துகொள்வதற்கு இந்த ஆளுநருக்கு எந்த உரிமையும் கிடையாது.

உதாரணமாக, by the Honorable Governor  என்றுதான் எல்லா உத்தரவும் வருகிறது. அந்த எல்லா உத்தரவும் வருகின்ற காரணத்தினால், ஆளுநரே நிர்வாகம் செய்ய முடியாது. எப்பொழுது ஆளுநருக்கு அதிகாரம் என்று சொன்னால், ஆளுநர் ஆட்சியின்போதுதான். குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தால்தான், அவருக்கோ, அவரு டைய செயலாளருக்கோ அதிகாரம் உண்டு.

முதுகெலும்பற்ற நம்முடைய மாநில அரசு!

ஆனால், ஆளுநர் நடத்துவது ஒரு போட்டி அரசாங் கத்தை நடத்துகிறார். அதனை முதன்முதலாக சுட்டிக் காட்டிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தது. ஆங்காங்கே ஆளுநருக்குக் கருப்புக் கொடி களைக் காட்டி, அரசாங்கப் பணிகளில் ஆளுநரை தலையிடவிடாதீர்கள் என்று தமிழக அரசைப் பார்த்துக் கேட்ட பொழுது, முதுகெலும்பற்ற நம்முடைய மாநில அரசு என்ன சொல்லியிருக்கவேண்டும் - நாம் செய்யவேண்டிய பணியை எதிர்க்கட்சியினர் செய்கிறார்களே என்று சும்மா இருக்கத் தயாராக இல்லை.

அதனால், தமிழகத்தின் உரிமை, மாநில உரிமைகள் எல்லாம் பறிபோய்விட்டன. அரசியல் சட்டப்படி ஒரு மாநில ஆட்சிக்கு இருக்கின்ற உரிமைகள் எல்லாம் போய்விட்டன.

இப்பொழுது வெறும் கையெழுத்துப் போட்டு அனுப்பவேண்டிய வேலைதான் ஆளுநருக்கு. அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. இதற்கு முன் இருந்த ஆளுநர்கள் எல்லாம் நேரிடையாக அறிக்கை கொடுத்திருக்கிறார்களா?

பொய்யான வாக்குமூலம் என்று ஒப்புதல்!

எனவேதான் நண்பர்களே! ஆளுநர் அதிகாரமல்ல - அரசு அதிகாரம். அமைச்சரவை முடிவு செய்துவிட்டது அவர்களை விடுதலை செய்வதற்கு.

ஏழு பேர்மீதும் சுமத்தப்பட்ட குற்றம் உண்மையான குற்றமா? கொலைக் குற்றமா?

பேரறிவாளனை விசாரித்த தியாகராஜன் என்கிற எஸ்.பி., தெளிவாக சொல்லியிருக்கிறார்.

நான் பொய்யாக எழுதினேன். நான் எழுதிய பொய் யைத்தான் பதிவு செய்து, அவர்களிடம் கையெழுத்து வாங்கினேன் என்று சொல்லிய பிறகு, நீதிமன்றத்தில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கே அடிப் படை இல்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டது.

நான் மனச்சாட்சிப்படி அந்த வழக்கின் தீர்ப்பை எழுதவில்லை!

அதுமட்டுமல்லாமல், அந்த வழக்கில் தீர்ப்பு எழுதியவர் நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள், முதலில் அவர்களைக் குற்றவாளிகள் என்று சொன்னவர், ஓய்வு பெற்ற பிறகு, நான் மனச்சாட்சிப்படி அந்த வழக்கின் தீர்ப்பை எழுதவில்லை'' என்று சொல்லியிருக்கிறார்.

பேரறிவாளன் உள்பட ஏழு பேரும் 27 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் செய்யாத குற்றத்திற் காக சிறையில் இருக்கிறார்கள். எனவேதான், நாம் நியா யத்தைக் கேட்கிறோம். அதுமட்டுமல்ல, மோடி தேர்தல் அறிக்கையில் சொன்னார்,  minimum government maximum governance - குறைந்த அரசாங்கம் - நிறைந்த ஆளுமை என்று சொன்னார்.

இதற்குப் பெயர்தான் குறைந்த அரசாங்கமா? மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இது மாநில அரசினுடைய கடமை. இது அரசியல் சட்டத்தில் இருக்கிறது.

ஆளுநர் உரை என்று சட்டமன்றத்தில் நடக்கிறது. அந்த ஆளுநர் உரையை தமிழக அமைச்சரவைதான் எழுதுகிறது, அதனுடைய கொள்கையை. உடனே நம்மூரில் இருக்கிற புரோகிதர் இருக்கிறாரே, இல்லை, இல்லை இனிமேல் நான்தான் அதனை எழுதுவேன்'' என்று சொன்னால், விட்டுக் கொடுத்துவிடுவார்களா இவர்கள்.

அது எவ்வளவு தவறான அதிகார துஷ்பிரயோகமோ, அதேதான் இப்பொழுது.

சாகடிக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்லவாம்!

எனவேதான், ஆளுநர் மாளிகையில் இருந்து அந்தத் தீர்மானம் வெளியே வரவேண்டும்.

இன்னொன்று அதிகப் பிரசிங்கத்தனம். தருமபுரியில் பேருந்தை எரித்த மூன்று பேரை விடுதலை செய்தைப் பற்றி சொன்னார்கள் அல்லவா - அவர்களை விடுதலை செய்ததைவிட இன்னொரு மோசமான விஷயம் என்ன தெரியுமா?

அட்வகேட் ஜெனரல் அவர்களுடைய கருத்துரை யைக் கேட்டு, அதற்குப் பிறகுதான் முடிவெடுத்தேன் என்று சொல்லும்பொழுது,

அவர்கள் பேருந்திற்கு தீ வைத்தார்கள்; ஆனால், உள்ளே இருப்பவர்களை சாகடிக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல என்று சொன்னார்கள். ஏதோ ஒரு வேகத்தில் அவர்கள் அதனை செய்துவிட்டார்கள் என்று சொல்லி, அதனை நியாயப்படுத்துகின்ற அளவிற்கு, மிகமோசமானது வேறு கிடையாது.

இது வெந்த புண்ணில் வேலை விட்டு ஆட்டுவதைப் போன்ற கொடுமையாகும்.

பரவாயில்லை, அந்த மூன்று பேர் விடுதலை ஆகியிருக்கிறார்கள். மற்றவர்களையும் வெளியே அனுப்புங் கள். இதில் மனிதநேயம் இருக்கவேண்டாமா? இவ்வளவு காலமாக சிறையில் இருந்துவிட்டார்களே - அவர்களு டைய வழக்கு சரியானபடி நடக்கவில்லை என்று வழக்கை விசாரித்த நீதிபதி சொல்கிறார். அதைவிட அவர்களிடம் பதிவு செய்த வாக்குமூலம் பொய்யான வாக்குமூலம் என்று அந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்தவர் சொல்கிறார்.

இதையெல்லாம் தாண்டி அவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையில் கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினைகள் எத்தனையோ ஆண்டுகாலம் நடைபெற்று, அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றினால், அந்தத் தீர்மானத்தில் கையெழுத்துப் போடுவதுதான் ஆளுநர் வேலையே தவிர வேறொன்றும் கிடையாது.

புரோகிதருக்குக் கருமாதி செய்துதான் பழக்கம்

புரோகிதரே வெளியேறு என்று இங்கே சொன்னார்கள் - புரோகிதருக்குக் கருமாதி செய்துதான் பழக்கமே தவிர, வேறு நல்ல காரியங்கள் செய்து பழக்கம் கிடையாது.

எனவே, கருமாதி செய்ய நினைக்கக்கூடாது ஆளுநர் அவர்களே, நீங்கள் எவ்வளவு விரைவில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறீர்களோ, அவ்வளவுக் கவ்வளவு இந்த நாடு நல்ல நிலையில் இருக்கும்.

இல்லையானால், அடுத்த தேர்தலில்  வரக்கூடிய அரசாங்கத்தின் மூலமாக நீங்கள் சட்டப்பூர்வமாகவே வெளியேற்றப்படுவீர்கள். அந்த நாள் வெகுதொலை வில்லை என்பதை எடுத்துச் சொல்லக்கூடிய கட்டம்தான் இது.

நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டத்தை நடத்துவோம்!

எனவேதான் நண்பர்களே, அந்த ஏழு பேரும் நம்முடைய சகோதரர்கள். நம் சதைகள்; நம்முடைய ரத்தங்கள்; நம்முடைய உணர்வுகள். அவர்கள் தேவையில்லாமல், சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால், நீங்கள் தீப்பற்றி எரிகின்ற நேரத்தில், வீணை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எரிமலையின் குமுறல் இங்கே இருக்கிறது; மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். இதற்காக என்ன விலை கொடுக்கவும் இங்கே உள்ள அத்துணைக் கட்சிகளும், அத்துணை அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர் களும் தயாராக இருக்கிறோம். எனவேதான், உடனடியாக இன்னும் சில நாள்களில் அவர்களை விடுதலை செய்யாவிட்டால், மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை நாங்கள் நாடு தழுவிய அளவில் நடத்துவோம்! நடத்துவோம்!! நடத்துவோம்!!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner