முன்பு அடுத்து Page:

திராவிடர் கழக அமைப்பு

1.  தலைவர்    -   & கி.வீரமணி 2.  துணைத் தலைவர் -  & கவிஞர் கலி.பூங்குன்றன் 3. செயலவைத் தலைவர் &-    சு.அறிவுக்கரசு 4. பொதுச்செயலாளர்கள்: 1.  துரை.சந்திரசேகரன் (பிரச்சாரம்) 2.  வீ.அன்புராஜ்    (தலைமை நிலையம், ஒருங்கிணைப்பு) 3.  இரா.ஜெயக்குமார்    (மாநில கழக அமைப்புப் பணி,     இளைஞரணி ஒருங்கிணைப்பு) 5. பொருளாளர் & வீ. குமரேசன்   கூடுதல் பொறுப்பு: வெளியுறவுத் துறை 6.  மாநில அமைப்பாளர் &  இரா.குணசேகரன் (திராவிட மாணவர் கழக ஒருங்கிணைப்பு) 7. பிரச்சார செயலாளர்       & வழக்குரைஞர் அ. அருள்மொழி கூடுதல்....... மேலும்

18 டிசம்பர் 2018 16:46:04

இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டி இருக்கிறது! தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் வே…

இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டி இருக்கிறது!  தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்  பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தியது வரவேற்கத்தக்கது

சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி சென்னை, டிச.18  தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தியது வரவேற்கத்தக்கது - இந்தியாவிற்கே வழிகாட்டியுள்ளது தமிழகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 18.12.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவிற்குப் பிறகு  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திராவிடர் கழக தலைமைச்....... மேலும்

18 டிசம்பர் 2018 16:46:04

மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களின் படத்திறப்பு

மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களின் படத்திறப்பு

கழகப் பொருளாளர் மறைந்த மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் (சென்னை, 18.12.2018) மேலும்

18 டிசம்பர் 2018 15:46:03

கழகப் பொருளாளர் மறைவுற்ற மருத்துவர் பிறைநுதல்செல்வி படத்திறப்பு நினைவேந்தல்

கழகப் பொருளாளர் மறைவுற்ற மருத்துவர் பிறைநுதல்செல்வி படத்திறப்பு நினைவேந்தல்

சென்னை, டிச.18 சென்னை பெரியார் திடலில் இன்று (18.12.2018) காலை நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் கழகப் பொருளாளர் மறைந்த மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களின் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து மறைந்த மருத்துவர் பிறைநுதல்செல்வி படத்தைத் திறந்துவைத்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். திமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆ.இராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்....... மேலும்

18 டிசம்பர் 2018 15:14:03

கருஞ்சட்டைப் பேரணி - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்

கருஞ்சட்டைப் பேரணி - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்

ஆபத்தான இந்துத்துவ சனாதன சக்திகளை முறியடிக்கும் ஒற்றை நோக்கத்தோடு திருச்சியில் டிசம்பர் 23 அன்று நடைபெறும் கருஞ்சட்டைப் பேரணியில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கிறார். மேலும்

18 டிசம்பர் 2018 15:14:03

நத்தமலை கொள்கையாளர் பன்னீர்செல்வம் மறைவிற்கு இரங்கல்

காட்டுமன்னார்குடி வட்டம் நத்தமலை சுயமரியாதை வீரர் க.பன்னீர்செல்வம் அவர்கள், தனது 61ஆம் அகவையில் மறைந்த செய்தி அறிந்து (27.11.2018) வருத்தமுற்றேன். க.பன்னீர்செல்வம் சிறந்த கொள்கையாளர் பண்பாளர் ஆவார். அவரின் புதுமனை யைத் திறந்து வைத்து உரையாற்றிய (17.4.1992) நினைவு பசுமையாக உள்ளது. அத்தகுப் பெருமகன் மறைவால் வருந்தும் குடும்பத்தி னருக்கும், சுற்றத்தாருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங் கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் மேலும்

17 டிசம்பர் 2018 15:32:03

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து உரத்தநாட்டில் அனைத்து கட்சியினர…

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து உரத்தநாட்டில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திராவிடர் கழகம் பங்கேற்பு

உரத்தநாடு டிச. 17 கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தென்னை விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கப்படாததை கண்டித்து, உரத்த நாட்டில் வெள்ளிக்கிழமை (டிச. 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரத்தநாடு வட்டாட்சியர் அலுவல கம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திமுக மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமை வகித்தார். கடந்த நவம்பர் 16ஆம் தேதி தாக்கிய கஜாபுயலில் வீடு, உடமைகளை இழந் தவர்கள் குறித்த....... மேலும்

17 டிசம்பர் 2018 15:32:03

டிசம்பர் 18இல் திராவிடர் கழக

டிசம்பர் 18இல் திராவிடர் கழக

தலைமைச் செயற்குழுக் கூட்டம் நாள் : 18-12-2018 செவ்வாய்  சரியாக 10 மணி முதல் 11.30 மணி வரை இடம் :  பெரியார் திடல் (துரை. சக்ரவர்த்தி நினைவகம்),  சென்னை - 600 007. தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள், தஞ்சை, திருவாரூர் மண்டலத் தலைவர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். - கலி. பூங்குன்றன் துணைத்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:09:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி மாவட்டத்தில் கருஞ்சட்டைப் படையின் கொள்கை ஊர்வலம்!

ஆவடி, அக். 10 ஆவடி கழக மாவட்டக் கிளைக்கழகங்களில் கொடியேற்றுவதற்காக காலைமுதல் இரவு வரை ஊர்வல மாகச் சென்று, ஆங்காங்கே தெருமுனைக்கூட்டங்களை நடத்தியும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தந்தை பெரி யாரின் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி ஆவடி மாவட்டத்தின் சார்பாக கழகக் கிளைகழகங்களில், இயக்கத் தோழர்கள் தங்களின் குடும் பங்களுடன் ஊர்வலமாகச் சென்று புதிதாகக் கொடியேற்றியும், அங்குள்ள மக்களுக்கு இனிப்பு வழங்கியும் தந்தை பெரியாரின் அரும்பெரும் பணிகளை விளக்கிப்பேசியும் அவரது பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் 2018 செப்டம்பர் 17 ஆம் தேதி காலையில் 10 கிளைக்கழகங்களிலும், செப் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, 50க்கும் மேற்பட்ட கிளைக்கழகங்களிலும் கொடியேற்றிக் கொண்டாடப் பட்டது. இதற்காகவே தனியாக மாவட்டப் பொறுப்பாளர் களின் கலந்துரையாடல் கூட்டம் செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவடி பெரியார் மாளிகையில் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் முன்னிலையில் மாவட்டத் தலைவர் பா. தென்னரசு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த ஊர்வலத்தை தலைமையேற்று செயல்வடிவத்திற்கு கொண்டுவர ஒரு குழுவை துணைத்தலைவர் ஏழுமலை தலைமையில் நியமித்தது, அதன்படி ஏழுமலையும் அவரது தலைமையிலான குழுவினரும் தங்களது பணிகளை செவ்வனே நிறைவேற்றினார். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான இடங்களில் கொடியேற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கருஞ்சட்டைப் படையின் ஊர்வலமும்! மக்கள் காட்டிய ஆர்வமும்!

இந்த ஊர்வலத்தில், ஜெனரேட்டர் மற்றும் ஒலிபெருக்கி கருவிகளோடு கூடிய ஒரு குட்டியானை வாகனம் முன்னே செல்ல, அதில் மாவட்டத் தலைவர் பா. தென்னரசு அமர்ந்து கொண்டு வழிநெடுக இந்த ஊர்வலத்திற்கான காரணத்தை பட்டியலிட்டுக் கொண்டும், பின்னால் வருகின்ற வாகனங்களுக்கும் வழிகாட்டிக் கொண்டே செல்வார்! அந்த வாகனத்தின் இரண்டு பக்கமும் தந்தை பெரியாரின் படத்துடன் கூடிய புத்தம் புதிய பதாகைகள் பளபளக்கும்! வழிகாட்ட வேண்டிய பணிநேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் அந்த வாகனத்திலிருந்து இயக்கப் பாடல்கள் கணீரென்று ஊராரின் செவிகளில் எதிரொ லிக்கும்! அதைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தலா இருவர் இருவராக இரண்டு வரிசைகளில் (40 பேர்) வருவர்! அந்த வண்டிகளில் கழகக்கொடிகள் காற்றில் படபடத்து பட்டொளி வீசிப் பறக்கும்! அதற்கும் பின்னாலே இரண்டு விணீஜ்வீ நீணீஜீ ஸ்ணீஸீ-கள் ஒரு மகிழுந்து ஆகியவற்றில் கழகக் கொடிகள் பறக்க மகளிரும், சிறுவர்களும் மிகுந்த உற் சாகத்தோடு வருவர்! அவர்கள் கொடியேற்றும் இடங்களில் மட்டும் இறங்கி தோழர்களோடு கலந்துகொண்டு உணர்வு பூர்வமாகவும், எழுச்சிகரமாகவும் ஒலிமுழக்கங்களை எழுப்புவர்! இதில் பெரியார் பிஞ்சுகளும் பெரியார் உருவம் பொறித்த புத்தாடைகளை அணிந்து கொண்டு பங்கேற்றது குறிப்பிடத்தக்கது! இந்தப்பயணம் ஆவடி மாவட்டத்தின் முதன்மை மற்றும் உள்வட்டச்சாலைகளிலும் பயணித்தது! இதில் இன்னொரு சிறப்பு, தொடக்கத்திலேயே கலந்து கொள்ள முடியாத இயக்கத் தோழர்கள் ஆங்காங்கே ஊர்வலம் வருகின்ற போது வந்து கலந்து கொண்டதால் ஊர்வலத்தின் நீளம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. காவல் துறையினர் அந்தந்த பகுதிகளில் கலந்து கொண்டு உரிய பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்! காலையில் 7மணிக்குத்  தொடங்கிய இந்த ஊர்வலம் இரவு 8 மணிக்கு கொரட்டூரில் நிறைவு பெற்றது! அது வரையிலும் மிகுந்த கட்டுப்பாடோடும், போக்குவரத்திற்கு எந்த இடையூறு மின்றியும் அணியணியாக தொடர்ந்த இந்த கருஞ்சட்டைப் படை ஊர்வலத்தைக் கண்டு மக்கள் வியந்து போயினர்!

முதல் கொடியை ஏற்றிய பெரியார் பிஞ்சுகள் இளந்தளிர், நிலவன்!

முதலில் காலை 7:00 மணிக்கு ஆவடி மாவட்ட கழகக் கட்டடமான பெரியார் மாளிகையில் இந்த கொடியேற்ற ஊர்வலம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூவிருந்த வல்லி சாலையிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை யணிவித்துவிட்டு, 7.50 மணிக்கு ஆவடி பெருநகராட்சி அலுவலகத்திற்கருகில் தோழர்கள் அனைவரும் கூடினர்! இந்த நிகழ்வில் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மாவட்டத்தலைவர் பா. தென்னரசு, செந்துறை இராசேந்திரன், துணைத்தலைவர் ஏழுமலை, செயலாளர் சிவக்குமார், துணைச்செயலாளர் இளவரசு, இளைஞரணித் தலைவர் கார்வேந்தன், மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மாணவர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் பார்த்திபன், நகரகழகத் தலைவர் கோ.முருகன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இராமதுரை மற்றும் செயலாளர் கொரட்டூர் பன்னீர் செல்வம், மேனாள் மாவட்டச் செயலாளர் இல.குப்புராசு மற்றும் அமைப்பாளர் அருண், தலைமை செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, பொதுக்குழு உறுப்பினர் கந்தசாமி, உண்மை வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் ஜெயந்தி, சோபன்பாபு, இளை ஞரணிச் செயலாளர் வை.கலையரசன், அமைப்பாளர் கலைமணி, திருநின்றவூர் பகுதித்தலைவர் ரகுபதி, ராணி, பிரேம்குமார்,  சிலம்பரசன், கலைவேந்தன், திருநின்றவூர் கார்த்திக், பட்டாளம் பன்னீர் செல்வம், சிவ.ரவிச்சந்திரன்,  சுந்தரவடிவேலு, அம்பத்தூர் ராஜசேகரன், மு. இளங் கோவன், எல்லம்மாள், ஸ்டீபன், பூவை. வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், கருணாகரன், மகளிரணித் தோழர்கள் ஜெயசுதா, கனிமொழி, பாக்யா, பாவனா, மரகதமணி, மாணவர் கழகத் தோழர்கள் அறிவுமணி, அறிவுமதி, யாஷ்மின், மங்களபுரம் பார்த்திபன், நதியா, வ.ம.வேலவன், ஆவடி விஜய், கார்ல்மார்க்ஸ், பெரியார் பெருந்தொண்டர்கள் முத்துகிருட்டிணன், அம்பத்தூர் ஆ.வெ.நடராசன், பெரி யார் பிஞ்சுகள் தென்றல் மணியம்மை, சித்தார்த்தன் ஆகியோர் கறுப்புப் புத்தாடைகளை அணிந்து கொண்டு உற்சாகத்துடன் வருகை தந்திருந்தனர்! முறைப்படி, காவல் துறை ஆணையாளர் அலுவலகம் மற்றும் ஆங்காங்கிருந்த காவல் நிலையங்களில் இதற்கான கடிதங்கள் கொடுக்கப்பட்டிருந்ததால் காவல் துறையினரும் அங்கே பெருமளவில் வருகை தந்திருந்தனர்! இத்தகைய சூழலில்  நகராட்சிக் கட்டடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயர புதிய கொடிமரத்தில் சே.கோபாலகிருஷ்ணன் தலைமையில் அவரது மகள் கோ.த. இளந்தளிர், மகன் கோ.த. நிலவன் ஆகிய பெரியார் பிஞ்சுகள் இருவரும், தோழர்களின் ஆரவாரமான கொள்கை முழக்கங்களுக்கி டையே உற்சாகத்துடன் கொடியேற்றினர்! ஊர்வலம் தொடங்கியதிலிருந்து, இறுதிவரையிலும் ஒவ்வொரு கொடிமரத்திற்கும் புதிதாக கயிறு மாற்றுதல், கொடியை அதில் இணைத்தல் போன்ற முக்கியப் பணிகளை சளைக் காமலும், உற்சாகமாகவும் செய்துகொடுத்த மாவட்ட இளைஞரணியின் தலைவர் கார்வேந்தனின் பணி அனைவரையும் கவர்ந்தது. இவர் ஒவ்வொரு ஆண்டும் தனது நிறுவனத்தின் மூலம் புதிய இரும்புக் கொடிமரங் களை குறைவான விலைக்கு தயார் செய்து கொடுத்து மாவட்டத் தோழர்களுக்கு  உற்சாகமும், ஊக்கமும் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆங்காங்கே கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!

தொடக்கத்தில் கலந்துகொள்ள இயலாமல் போனாலும், ஊர்வலம் வருகிற பாதையில் ஆங்காங்கே உள்ள தோழர் கள் கலந்து கொள்ளுவர் என்ற முன்னேற்பாட்டின்படியே திருவேற்காடு பகுதியில் காவியா, திலகம், ராஜேஷ், மதுரவாயலில் சரவணன், வேலுச்சாமி, செக்கடிக்குப்பம் சந்திரசேகர், நாகராஜ்,  தொடர்ந்து வானகரம் பகுதியில் உண்மை வாசகர் வட்டத் தலைவர் க.வனிதா, பெரியார் பிஞ்சு சமத்துவமணி, பூவிருந்தவல்லியில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் பா.மணியம்மை, பூவைபகுதித் தலைவர் பெரியார் மாணாக்கன், தொண் டறம், இ.ப.இனநலம், இ.ப.சீர்த்தி, பூவைபகுதி அமைப் பாளர் மணிமாறன், ஆவடி பகுதிக்கழகத்தின் தலைவர் அருள்தாஸ் (எ) இரணியன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, உண்மை வாசகர் வட்டத்தின் புரவலர் பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி ஆகியோர் பங்கேற்றதுடன் இறுதி வரையிலும் ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர். திருமழிசையில் பாசறை நதியா, கண்ணன், திருநின்றவூர்ப் பகுதியில், ஊர்வலத்தில் தொடக்கம் முதல் வந்துகொண் டிருந்த கார்த்திக்கின் சகோதரி மோகனப்பிரியா, கலை வேந்தன் இணையர் ஹதினி, கொரட்டூர் பகுதியில் இளந் திரையன், தங்கரவி, இறுதிநிகழ்வில் சென்னை மண்டலச் செயலாளர் தே.செ.கோபால், அவரது மகன் பெரியார் பிஞ்சு அன்பு மற்றும் தமிழ்ச்செல்வன், கொடுங்கையூர் தங்கமணி, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு இந்த கருஞ்சட்டைப்படையின் கொள்கை ஊர்வலத்தை மறக்கவியலாத ஒன்றாக ஆக்கிக்காட்டினர்.

50 கொடியேற்றங்களும்! 10 தெருமுனைக் கூட்டங்களும்!

ஆவடி நகராட்சிக் கட்டடத்திலிருந்து புறப்பட்ட இந்த நேர்த்தியான ஊர்வலத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றங்களும், 10க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்றன! முதல் தெருமுனைக்கூட்ட மாக 8:20 மணிக்கு திருவேற்காடு பேருந்து நிலையத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி ஏன் நாம் தந்தை பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று உரை நிகழ்த்தினார்! 11 மணிக்கு திருமழிசையில் நமது தோழமை அமைப்பான பெரியார் பாசறையின் தலைவர் ஜெகத்பிரியன் அவர்கள் இந்துத்வாவின் கொடூ ரங்களையும், அதிலிருந்து நம்மை மீட்கக் கூடிய தந்தை பெரியாரின் கொள்கைகளையும் விளக்கிப் பேசினார்! இந்தப்பகுதியில் ஜாதியொழிப்பு முன்னணியின் அமைப் பாளர் ஜெயநேசன் கலந்து கொண்டார்.  தொடர்ந்து திரு நின்றவூர் காந்தி சிலையருகில் மாநில மாணவர் கழக இணை கூட்டுச் செயலாளர் தோழர் யாழ்திலீபன் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் திராவிடர் கழகத்தின் தலைமையை எதற்காக ஏற்று நடத்தினர்? அதற்கான தேவை என்ன? என்பது குறித்துப் பேசினார்! அதைத் தொடர்ந்து பி.டி.எம்.எஸ் பகுதியில் உள்ள உழைப்பாளர் நகரில் வசித்து அங்குள்ள தோழர்கள் மத்தியில் பெரியாரின் பெரும்பணிகளை இளைஞர்களிடம் சேர்த்ததில் பெரும் பங்குவகித்த பெரியார் பெருந்தொண்டர் இரா.சக்ரபாணி அவர்களின் கல்வெட்டு அருகிலுள்ள கொடிமரத்தின் முன்னால் மாநில அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் கொடியேற்றி, மாவட்டத் தலைவர் பா.தென்னரசு இரா.பன் னீர் செல்வம் அவரை நினைவு கூர்ந்து உரையாற்றினர்!

ஒரகடம்

அதைத்தொடர்ந்து ஒரகடம் பேருந்து நிலையத்தில் உள்ள கொடிமரத்தின் முன்னால் நடைபெற்ற தெரு முனைக்கூட்டத்தில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தந்தை பெரியார் நமக்காகச் செய்துகாட்டிய அரும்பெரும் பணி களை விளக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த கொடிமரத்தின் முன்பாகவே அதாவது, அம்பத்தூர் புதூர் பகுதியில் மாநில மாணவர் கழக இணைகூட்டுச் செயலாளர் யாழ்திலீபன் தந்தை பெரியாரின் பிறந்தநாள் சிறப்பை, அதாவது அவரது கொள்கைகள் மூலமாகத்தான் இந்துத்வாவை வேரறுக்க முடியும் என்று மக்களின் மத்தியில் எடுத்து வைத்தார்! அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையத்தின் முன் உள்ள கழகக் கொடி முன்பாக, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம் கூடியிருந்த மக்களுக்கு பெரியாரை புதிய கோணத்தில் அதாவது, ஆட்சிக்கு வரு கிறவர்கள் பதவிக்காக இன்னாராகிய நான் என்று பொறுப் பேற்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், தந்தை பெரியார்தான் ஈ.வெ.ராமசாமியாகிய நான் இந்த திராவிட மக்களை மானமும் அறிவும் உள்ள மக்களாக மாற்றுவேன் என்று நமது மானத்தை மீட்க உறுதியேற்றார் என்றும், அதனால் நாம் பெற்ற பயன்கள் என்னென்ன என்ற கருத்தில் உரையாற்றினார்!

அம்பத்தூர்

அதைத்தொடர்ந்து அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் தோழர்கள் இன்பக்கனியும், பா.மணியம்மையும் உரையாற் றினர்! அடுத்தாக முகப்பேர் மேற்குப் பகுதியில் யாழ்திலீபனும், கொரட்டூர் பேருந்து நிறுத்தத்தில் கொரட்டூர் பன்னீர் செல்வமும், இறுதித் தெருமுனைக்கூட்டத்தில் கொரட்டூர் பிரிட்டானியா நிறுவனத்திற்கு எதிரிலுள்ள தொடர் வண்டி சாலையில் பா.மணியம்மையும் உரையாற் றினர். ஒவ்வொரு தெருமுனைக்கூட்டங்களையும் நடத்த மக்கள் அதிகமாகக் கூடுகின்ற இடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே மக்களும் நல்லவண்ணம் கூடிநின்று கருத்துக்களை செவிமடுத்தனர். காவல் துறையினரின் ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.

ஊர்வலமும்! உபசரிப்பும்!

காலை 10 மணியளவில் பூவிருந்தவல்லி ராஜாநகரில் பூவை பகுதித் தலைவர் பெரியார் மாணாக்கன், அமைப் பாளர் மணிமாறன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் காலை உணவும், பிற்பகல் 2 மணியளவில் ஆவடி பெரியார் மாளிகையில் மதியஉணவு மற்றும் அம்பத்தூர் பகுதியில் வழங்கப்பட்ட கோடைக்கேற்ற குளிர் பானங் களும் பிறந்தநாள் ஊர்வல ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஏழுமலை சார்பிலும், 8.30 மணிக்கு கொரட்டூரில் அமைந்துள்ள தி.மு.க.வின் சார்பு அமைப்பான பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் ஆகியோராலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தோழர்கள் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளில் அவருக்குக் காட்டுகின்ற நன்றியுணர்ச்சியாக, நாள் முழுவதும் அவரது கொள்கைகளை பரப்புகின்ற பணிகளை திட்டமிட்டு ஒரு திருவிழாபோல ஏற்பாடு செய்து, அந்தக்களிப்பை அணு வணுவாக ரசித்து, ருசித்த களிப்பில் அடுத்தாண்டு இன்னும் சிறப்பாக கொண்டாடவேண்டும் என்கிற உத் வேகத்தில் அனைவரும் விடைபெற்றனர். நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியப் பொறுப்பாளர்களுக்கு தந்தை பெரியார் பிறந்தநாள் மலர் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.----

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner