முன்பு அடுத்து Page:

அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் எழுச்சியோடு பெரியார் பட ஊர்வலம்

அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் எழுச்சியோடு பெரியார் பட ஊர்வலம்

நீடாமங்கலம், அக். 19 பட்டுக்கோட்டை கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் நகரம் சார்பாக 28.9.2018 அன்று மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் கடைத் தெருவில் தந்தை பெரியார் பட ஊர்வலம் நீடாமங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் இருந்து தந்தை பெரியார் உருவப்படம் ஒரு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு கொள்கை முழக்கத்தோடு கடைவீதியில் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் பங்கேற்க ஊர்வல மாகப் புறப்பட்டு இரவு 7 மணியளவில் பெரியார்....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

மனிதம் வளர்த்த தந்தை பெரியார்

மனிதம் வளர்த்த தந்தை பெரியார்

பெரம்பலூர், அக்.19 பெரம்பலூர் விடுதலை வாசகர் வட்டம் 14 ஆவது கூட்டம் மாவட்ட கழக செயலாளர் அ.ஆதிசிவம் தலை மையில் குணகோமதி மருத்து வமனை, பெரம்பலூரில் 13.10.2018 அன்று மாலை 5 மணி யளவில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக, மாவட்டச் செயலாளர் பெ.நடராஜன் அனைவரையும் வர வேற்றார். அறிமுக உரையாக வை.நாத்திக நம்பி அவர்கள் தந்தை த.ஜேம்ஸ் ஆயர் அவர் களை தனது மாணவர் மற்றும் பெரியார் பற்றாளர் என்று அறிமுகப்படுத்தினார். சிறப்பு....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

மதுரவாயல் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!

ஆவடி, அக். 19 மதுரவாயல் கிளைக் கழகத் தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளை பொதுக்கூட்டமாக நடத்தி பிரச்சாரம் செய்யவேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது. கடந்த 02.10.2018 பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டலக் கலந்துரையாடலின் தீர்மானங்களை நிறைவேற்றும் முனைப் புடன் ஆவடி மாவட்டம் தனது கிளைக் கழகங்களில் ஒன்றான மதுரவாயலில் 07.10.2018....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

மதுரவாயல் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!

ஆவடி, அக். 19 மதுரவாயல் கிளைக் கழகத் தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளை பொதுக்கூட்டமாக நடத்தி பிரச்சாரம் செய்யவேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது. கடந்த 02.10.2018 பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டலக் கலந்துரையாடலின் தீர்மானங்களை நிறைவேற்றும் முனைப் புடன் ஆவடி மாவட்டம் தனது கிளைக் கழகங்களில் ஒன்றான மதுரவாயலில் 07.10.2018....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

மேலும்

19 அக்டோபர் 2018 16:03:04

அரசு வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழி கட்டாயமாக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வ…

அரசு வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழி கட்டாயமாக்க வேண்டும்  பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

  சென்னை, அக்.19 அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங் களின் கூட்டமைப்பின் நிர் வாகிகள் 18.10.2018 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென் னையில் பெரியார் திடலில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அரசு வங்கிகளில் கிளார்க் பதவிகளில் சேர்ந்திட மாநில மொழி அறிவு கட்டாயம் என்று விதியை மீண்டும் உரு வாக்கி, அந்தந்த மாநிலத்தவர் பணியில் சேர வாய்ப்பு உருவாக்கப்பட....... மேலும்

19 அக்டோபர் 2018 15:53:03

"ஏன் இன்னும் தேவைப்படுகிறார் பெரியார்?" - குவைத்தில் கருத்தரங்கம்

குவைத், அக்.19 பன்னாட்டு திமுக சார்பில் முப்பெரும் விழா குவைத், தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கில் 12.10.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா உள்ளிட்ட விழாவாக நடந்தேறியது. நிகழ்ச்சிக்கு மு.பஷீர் அகமது தலைமை தாங்கினார். பொருளாளர் சிதம்பரம் ந.தியாகராஜன் வரவேற்புரையாற்றினார். உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் ச.செல்லப்பெருமாள், வி.சி.க. முதன்மை செயலாளர் கமீ.அன்....... மேலும்

19 அக்டோபர் 2018 15:48:03

தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்

தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்

சென்னை, அக். 18 தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடத்தூர் தருமபுரி மாவட்டம் கடத்தூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா & திராவிடர் கழக பொதுக்கூட்டம் 2.10.2018 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி 8 மணியளவில் முடிவடைந்தது. பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக தலைவர் பெ.சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

தூத்துக்குடி, அக். 18 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 11ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங் கில் 22.9.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி தலைமை யேற்றார். மாவட்டத் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான், இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர். வழக்குரைஞர் ந.செல்வம் அனை வரையும் வரவேற்றார். முதலாவ தாகத் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லை மண்டல கழகக் கலந்துரையாடலில் முடிவு

கீழப்பாவூர், ஜூன் 8 நெல்லை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.6.2018 அன்று காலை 11 மணியளவில் கீழப்பவூர் பெரியார் திடலில் நடைபெற்றது.

நெல்லை மண்டல தலைவர் மா.பால் ராசேந்திரம் தலைமை தாங்கி உரையாற் றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.டேவிட் செல்லத்துரை, நெல்லை மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தென்காசி கழக மாவட்ட தலைவர் த.வீரன், செயலாளர் சி.பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

அமைப்புச் செயலாளர் வே.செல்வம், ப.க. மாநில துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி, தென் மாவட்ட பிரச்சார செய லாளர் தே.எடிசன்ராஜா ஆகியோர் கருத்து ரையாற்றினர்.

குற்றாலம் பெரியாரிய பயிற்சி முகாம், தமிழர் தலைவர் ஆசிரியர் தென் மாவட்ட வருகை, திராவிடர் கழகத்தின் எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

குமரி மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேசுவரி, பொதுக்குழு உறுப்பினர் அய்.ராமச்சந்திரன், தென்காசி  மாவட்ட ப.க. செயலாளர் ராசையா, நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் மகேஷ், நகர தலைவர் ராமசாமி, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.கந்தசாமி, குமரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அய்.மணி கண்டன், கழக தோழர்கள் வள்ளியூர் ரமேஷ், ர.கவுசல்யா, ர.சவுமியா, நம்பித்தாய், பாக்கியம், டெய்லர் குமார், ரா.புஷ்பம், மகிழினி, ஞானராஜ், கதிரவன், உரத்தநாடு இரா.கதிரவன், பி.சீலாதேவி, ஆதிநாரா யணன், ஜோன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) 2018 ஆகஸ்ட் 3 அன்று நாகர்கோவில், 4 அன்று பாவூர் சத்திரம் ஆகிய இடங்களில் நடக்க இருக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தர இருக்கிறார்கள். இந்த இரு கூட்டங்களையும் சிறப்பாக விளம்பரங்கள், சுவரெழுத்து, சுவரொட்டி, துண்டறிக்கை மூலம் விளம்பரம் செய்து எழுச்சிகரமாக நடத்தி கழக தோழர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக பங்கேற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

2) ஆகஸ்ட் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் குற்றாலத்தில் நடைபெற இருக்கும் பெரி யாரிய பயிற்சி முகாமினை சிறப்பாக நடத் துவது எனவும் எராளமான மாணவர்களை இந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வைப்பது எனவும் பயிற்சி முகாமிற்கான தொகையை தோழர்கள் வசூல் செய்து வழங்குவது பயிற்சி முகாமினை வெற்றிகரமாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner