முன்பு அடுத்து Page:

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

மாநில கலந்துரையாடல் கூட்டம் * நாள்: 19.10.2018 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை * இடம்: வல்லம், தஞ்சாவூர் * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், பகுத்தறிவாளர் கழக பொன்விழா அமைப்புச் செயல்பாடுகள் இன்ன பிற * கருத்துரை: வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்) *....... மேலும்

15 அக்டோபர் 2018 17:15:05

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநிலத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா  புதுச்சேரி மாநிலத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

புதுச்சேரி, அக். 15 "தத்துவத் தலைவர்", "பகுத்தறிவு பகல வன்" தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய தன்னி கரில்லா தனிப்பெருந்தலைவர் உலகத் தலைவர் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் புதுச்சேரி மண்டல திராவிடர் கழக தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி கழக....... மேலும்

15 அக்டோபர் 2018 16:56:04

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, அக். 15- 25.9.2018 அன்று கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியர் அணி கலந்து ரையாடல் கூட்டம் கிருட்டின கிரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் ஈ.லூயிஸ்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு மருதாசலம் கூறினார். வந்திருந்திருந்த அனைவரையும் எல்.அய்.சி. சுப்பிரமணி வரவேற்று பேசி னார். கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில ப.க. ஆசிரியர் அணி அமைப்பாளர்....... மேலும்

15 அக்டோபர் 2018 16:10:04

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில்

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை, அக். 15- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வெள்ள முனி அம்மன் கோவில் அருகில் பெரியார் பெருந்தொண்டர் டி.எம்.தங்கவேல் நினைவு அரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் 140-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை ஒன்றியத் தலைவர் சு.சித்திரவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் மூ.சேகர் அனைவரையும் வரவேற் றார். திராவிடர் கழகத்தின் மண்டலத் தலைவர் பெ.இராவணன்,....... மேலும்

15 அக்டோபர் 2018 16:10:04

செய்யாறில் நாள் முழுவதும் பெரியார் கொள்கை மணம் பயிற்சிப் பட்டறை - வழக்காடு மன்றம் களை கட்டியது

செய்யாறில் நாள் முழுவதும் பெரியார் கொள்கை மணம்  பயிற்சிப் பட்டறை - வழக்காடு மன்றம் களை கட்டியது

செய்யாறு, அக்.15 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எந்த கொள்கைக்காக கடைசி மூச்சு அடங்கும் வரை இந்த மக்களை சூத்திர இழி ஜாதி பட்டத்தோடு விட்டுவிட்டு போகிறேனே என்று கடைசி கூட்டத்திலும் இதனை முழங்கினார். உலகத் தலைவர் பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவை செய்யாறு திராவிட மாணவர் கழகம் சார்பில் சிறப்பாக நடத்தப் பட்டது. பயிற்சி முகாமில் செய்யாறு நகரத் தலைவர் தி.காமராசு வரவேற்புரையாற்றினார். பயிற்சி முகாமினை திராவிட மாணவர் கழக....... மேலும்

15 அக்டோபர் 2018 15:57:03

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் பங்கேற்ற மலேசியா பெரியார் பெருந்தொண்டர் முனைவர் பெரு. அ.தமிழ்மணி, கிரிதரன், எப்.காந்தராஜ் மற்றும் அமீரக தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். (திருச்சி -&12.10.2018) மேலும்

14 அக்டோபர் 2018 16:10:04

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் - பொறுப்பாளர்கள் - சுற்றுப்பயணம் மேலும்

14 அக்டோபர் 2018 13:57:01

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில கலந்துரையாடல் கூட்டம்

* நாள்: 19.10.2018 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை * இடம்: வல்லம், தஞ்சாவூர் * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், பகுத்தறிவாளர் கழக பொன்விழா அமைப்புச் செயல்பாடுகள் இன்ன பிற * கருத்துரை: வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர்....... மேலும்

13 அக்டோபர் 2018 16:37:04

விடுதலை சந்தா வழங்கல்

விடுதலை சந்தா வழங்கல்

திராவிடர் கழக பூவிருந்தவல்லிப் பகுதியின் தலைவர் பெரியார் மாணாக்கண், ஆவடி மாவட்டத்தின் சார்பில் 10 விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.18 ஆயிரத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் (05-10-2018). மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பொதுக்குழு உறுப்பினர் பூவை.செல்வி ஆகியோர் உடனிருக்கின்றனர். மேலும்

13 அக்டோபர் 2018 16:37:04

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு மாநாடு திராவிடர் கழகம் பங்கேற்கிறது

தெலங்கானா மாநிலம் வாரங்கலில்  அறிவியல் மாணவர் கூட்டமைப்பு மாநாடு  திராவிடர் கழகம் பங்கேற்கிறது

விசாகப்பட்டிணம், அக்.13 தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் காக்கத்தியா பல்கலைக் கழகத்தில் அறிவியல் மாணவர் கூட்டமைப்பு மூன்று நாள்  மாநாட்டினை நடத்தி வருகிறது. அக்டோபர் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாள் களில் நடைபெற்று வரும் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் பங்கேற்கிறது. தெலங்கானா மாநிலம் விசாகபட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாக்டர் ஜெயகோபால் தலைமையிலான இந்திய நாத்திகர் சங்கம் (Atheist Society of India....... மேலும்

13 அக்டோபர் 2018 15:37:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாழ்த்தப்பட்டவர் என்பதால் குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?''

தீண்டாமை ஒழிப்புச் சட்டம் எங்கே? எங்கே? குறட்டை விடுகிறதா?

சென்னை, ஜூன் 7 இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவரது துணைவியாரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைக் கண்டித்தும், மனித உரிமை - தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு இந்தியாவின் முதல் குடிமகனான - முப்படைக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தன் துணைவியாருடன் சென் றுள்ளார்.

குடியரசுத் தலைவராக இருந்தால் என்ன? அவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராயிற்றே! ஏற்குமா இந்த சனாதனக் கூட்டம்? எனவே, சாமி' கும்பிட அவரை கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை.

எந்தப் பதவியில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்றால் கோவிலுக்குள் இடமில்லை என்று கறாராகக் கூறிவிட்டனர். அதன் விளைவு படியில் அமர்ந்து வழிபாடு செய்துவிட்டுப் புறப்பட்டு விட்டார் - 120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகன்.

வழிபாடு செய்ய குடியரசுத் தலைவர் கோவிலுக்குள் நுழை யவே அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி எத்தகைய கொடுமை - எவ்வளவுக் கேவலமான ஜாதியின் பெயரால் அவமதிப்பு? ஜாதி ஆணவம்?

குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர் களும், அவர்தம் துணைவியாரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே! கோவிலுக்குள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே! இதற்குக் காரணம் என்ன? குடியரசுத் தலைவராக இருந்தாலும், அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே இந்தக் கொடுமை!

இது மன்னிக்கப்பட முடியாத மிகப்பெரிய குற்றமே - தீண் டாமை ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது? இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், நிருவாகிகள் பிணையில் வர முடியாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா?

இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல - மனித உரிமைப் பிரச்சினை - சட்டத்தின் மரியாதையைக் காப்பாற்றும் பிரச் சினை. எனவே, குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய விடாததைக் கண்டித்து சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் சார்பில் முதற்கட்டமாக 7.6.2018 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று (7.6.2018) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒத்தக் கருத்துள்ள அனைவருடன் இணைந்து திராவிடர் கழகம் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில்....

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.

போராடுவோம் வெற்றி பெறுவோம்!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்! போன்ற ஒலி முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழங்கப்பட்டன.

என தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  திருவள்ளூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வழக்குரைஞர் சைதை சுப்பிரமணி, கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நிகழ்த்தினர்.

முன்னதாக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன் வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் இ.ச.இன்பக்கனி, சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், செயலாளர் இரா.விஜயகுமார், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner