Banner
முன்பு அடுத்து Page:

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அய்.பி.எல். கிரிக்கெட்டு சூதாட்டத்தைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுவை விட அதிகம் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப் பதைக் கண்டித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங் களில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை நாள்: 24.05.2013, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி, இடம்:....... மேலும்

21 மே 2013 15:42:03

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், தொடர்பிரச்சாரம், கருத்தரங்கம்

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், தொடர்பிரச்சாரம், கருத்தரங்கம்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு சேலம், மே 21- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 19.5.2013 அன்று மாலை 6.30 மணிக்கு, மாநகர தலைவர் பூ.வடி வேலு இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவ கர் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் களை சிறப்பாக செயல் படுத்த வேண்டும் என் றும் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால்....... மேலும்

21 மே 2013 15:37:03

அகலட்டும் - ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட்டம்

அகலட்டும் - ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட்டம்

மதுரை, மே 21- நீதிபதி பொ.நடராசன் எழுதிய அகலட்டும் ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட் டம் கடந்த 15.5.2013 - புதன் கிழமை - மாலை 6 மணிக்கு மதுரை பெரி யார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோ ரியா ஹாலில் நடைபெற் றது. கூட்டத்திற்கு அகச் சுரப்பியல் நிபுணர் கு. கண்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன்ராசா, திரா விடர்....... மேலும்

21 மே 2013 15:36:03

குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?

குற்றாலம் - பெரியாரியல் பயிற்சிப் பட்டறை: தயாராகிவிட்டீர்களா தோழர்களே?

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை  நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார். பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு. அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர். பலர் அரசுப் பணிகளில்....... மேலும்

21 மே 2013 15:16:03

திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளியில் தருக்களுக்கும், தளிர்களுக்கும் துளிர் நிறுவனத்தின் ஆங்கில பயிற்…

திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளியில் தருக்களுக்கும், தளிர்களுக்கும் துளிர் நிறுவனத்தின் ஆங்கில பயிற்சி வகுப்பு முகாம்

ஆங்கிலப் பயிற்சி வகுப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக துளிர் அமைப்பி0ன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சனி கலந்துகொண்டு உரையாற்றினார் (திருச்சி, 19.5.2013). திருச்சி, மே.20-  சென்னை துளிர் அமைப்பும், திருச்சி பெரியார் மெட்ரிக் பள் ளியும் இணைந்து குழந் தைகளுக்கான ஆங்கில  எளிய முறை பயிற்சி வகுப்பு பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத் தில்  நேற்று (19.5.2013) மாலை  நடந்தது. இப்பயிற்சி வகுப் பிற்கு பெரியார் கல்வி நிறுவனங்களின் நிரு வாகக் குழுத்....... மேலும்

20 மே 2013 15:40:03

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்!    தமிழர் தலைவர்நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர்      மு.க.ஸ்டாலின் தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப்....... மேலும்

18 மே 2013 18:45:06

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்! மேலும் வீரர்கள் சிக்குகின்றனர் சென்னையில் 6 தரகர்கள் கைது! 13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல் மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம்....... மேலும்

18 மே 2013 17:20:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக தகவல் தொலைத் தொடர்பு நாள்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உலக தகவல் தொலைத் தொடர்பு நாள்

வல்லம், தஞ். மே 17- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் னணு தொலைத் தொடர்பு துறை, ஒளிபரப்பு பொறியாளர் கழகம் தஞ் சாவூர் பிரிவு மற்றும் பல்கலைக்கழக இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவை  சார்பாக உலக தகவல் தொலைத் தொடர்பு நாள் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மின்னணு தொலைத் தொடர்பு துறை தலைவர் பேரா. வயலட் ஜூலி வரவேற்றார். ஓளிபரப்பு பொறியாளர்கள் கழகத்தின் தஞ்சை பிரிவு முதன்மை....... மேலும்

17 மே 2013 16:57:04

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழா

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழா

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழாவட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு சென்னை, மே 15- வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று (12.5.13) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை வகித்து உரையாற்றினார். இவ்வாண்டு....... மேலும்

15 மே 2013 17:00:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழா

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழா

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழாவளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் சிறப்பான பல்கலைக் கழகம்     நீதியரசர் மோகன்மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் பல்கலைக் கழகம்       வேந்தர் கி.வீரமணி வல்லம், மே 13- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் சிறப்பான பல்கலைக்கழகம் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டான 25 ஆவது ஆண்டு வேந்தர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற....... மேலும்

13 மே 2013 17:27:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்களை ஈர்த்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி!
திராவிடர் இயக்கத்தால் யாரும் வீழ்ந்திடவில்லை; மாறாக எழுந்தவர்கள் - பயன்பெற்றவர்கள் தான் அதிகம்!
தமிழர் தலைவர் முழக்கம்!


சிதம்பரம், மே 8- திராவிடர் இயக்கத்தால் வீழ்ச்சி அடைந்துவிடவில்லை மாறாக எழுச்சி அடைந்த வர்கள் தான் அதிகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் இயக்க நூற்றாண்டையொட்டி சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற வட்டார மாநாடு - மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி சகிதமாக எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரை யாற்றினார்.

சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் சிதம் பரம் வட்டார கழக மாநாடும், திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவும் ஆயிரக்கணக்கான மக்கள் திரட்சியுடன் 7.5.2012 அன்று மாலை 6மணிக்கு மாவட்ட தி.க. தலைவர் ஜெ.கி.அருள்ராஜ் தலை மையில் தொடங்கியது.

மாவட்ட செயலாளர் கா.கண்ணன் வரவேற்பு ரையாற்றினார். மண்டல தி.க. தலைவர் வ.சு.சம் பந்தம், செயலாளர் அரங்க பன்னீர்செல்வம், மாவட்ட தி.க நிர்வாகிகளான செய.தண்டபாணி, சோ.புத்தன், நா.தாமோதரன், சிவ.வீரமணி, வே.அன்பரசன், கே.குமார், சி.கிருஷ்ணமூர்த்தி, புலவர் இளவரசன், கு.தென்னவன், பேராசிரியர் திருமாவளவன், கோவி.குணசேகரன், அ.செங்குட்டு வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈட்டி கணேசன், உத்திரக்குடி கலைவாணன் ஆகியோரின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடந்தது. மழவராயநல்லூர் சிலம்பரசன் குழுவினரின் நாடகம் நடைபெற்றது.

மாநிலமகளிர் பாசறை செயலாளர் ராம பிரபாஜோசப் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். கழக துணைப்பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாணவன் அமுதன், உரையாற்றியதைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு பேசினார்.

பெரியார் தொண்டர்களுக்கு விருது

புலவர் சி.இராசாங்கம், வல்லம்படுகை இராதா கிருட்டிணன், மஞ்சை அழகரசன், புவனகிரி பழநியாண்டி, கணபதி, பாவாடை, அமுதவள்ளி, கருணானந்தம், கணபதி, சீர்காழி செகதீசன், ஆகியோருக்கு பாராட்டு விருதுகளை தமிழர் தலைவர் வழங்கினார்.
நிறைவாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் மாநாட்டு சிறப்புரை - நிறைவுரையாற்றினார். முடிவில் நகர செயலாளர் அன்புசித்தார்த்தன் நன்றி கூறினார்.

சிதம்பரத்தை குலுக்கிய மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி

சிதம்பரம் கழக மாவட்ட சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவும், வட்டார மாநாடும் 7.5.2012 திங்கள் மாலை சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்தது. முன்னதாக மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி காந்தி சிலை அருகிலிருந்து புறப்பட்டது. மாவட்ட இளைஞரணி தலைவர் முரளிதரன் தலைமை யிலும், நகர இளைஞரணி தலைவர் தினேஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலையிலும் பேரணி புறப்பட்டது. மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சைஇரா.செயக்குமார் பேரணி தொடக்கி வைத்தார். பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு பயனாடை அணிவித்தார்.

சிதம்பரம் சுருதி பேண்டு இசைக்குழுவினர் முன் செல்ல கறம்பக்குடி முத்து குழுவினரின் வீரவிளை யாட்டுகள் சுருள் வீச்சு, தீப்பந்த வீச்சு, அரிவாள் மீது நிற்றல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்திச் சென்றனர்.

கழக மகளிரணியினர் சுமதி பெரியார்தாசன், விசயகுமார் கண்ணன், விசயலட்சுமி குணசேகரன், மகேஸ்வரி ஆறுமுகம் மற்றும் தோழியர்கள் தீச்சட்டி ஏந்தி தீச்சட்டி இங்கே மாரியாத்தா எங்கே என்று முழக்கமிட்டு வந்தனர்.

பகுத்தறிவு கோலாட்டம்

பெரியார் பிஞ்சுகளும், இளைஞரணியினரும் கழகக் கொடிகளை ஏந்தி முழக்கமிட்டு வந்தனர். தொடர்ந்து சடையார்கோவில் நாராயணசாமி குழுவினரின் பகுத்தறிவு கோலாட்டம் பார்ப் போரை கவர்ந்த வண்ணம் சென்றனர்.

செயங்கொண்டம் கே.பி.கலியமூர்த்தி, இராமச் சந்திரன் 108 அலகு காவடி குத்தி பகுத்தறிவு முழக்கம் எழுப்பி வந்தனர். பார்த்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அம்பாசிடர் கார் இழுத்தல்

சிதம்பரம் கணேசன், புதுச்சேரி பாட்சா, அம்பேத்குமார் ஆகியோர் முதுகில் அலகுமாட்டி கடவுள் இல்லை என முழக்கமிட்டு வந்தனர்.

மனிதசக்தியாலேயே எல்லாம் கடவுள் சக்தியால் அல்ல என்பதை நிரூபிப்பதாக இருந்தது. புதுச்சேரி முத்துவேல் எலுமிச்சை பழங்களை உடலில் குத்திக்கொண்டு கொள்கை முழக்கமிட்டு வந்தார். நாக்கில் கற்பூரம் கொளுத்தி பல தோழர்கள் பரபரப்பூட்டினர்.

பேரணி செ.பி.கோவில் தெரு, பச்சையப்பன் பள்ளி, சபாநாயகர் தெரு, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கிழக்கு வீதி வழியாக பொதுக்கூட்ட மேடையை அடைந்தது. பேரணி சென்று கொண் டிருந்தபோது அவ்வழியே வாகனத்தில் இருந்தபடி ஊர்வலத்தை தமிழர் தலைவர் பார்த்தார்.

மாநாட்டில் தமிழர் தலைவருக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசு

பேரணியில் கழக துணைப்பொதுச் செயலா ளர்கள் துரை.சந்திரசேகரன், உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், மாநில மாணவரணி துணைச் செயலாளர் இளந்திரையன், மண்டல தி.க. தலைவர் வ.சு.சம்பந்தம், செயலாளர் அரங்க.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட கழக நிருவாகிகள் சொ.தண்ட பாணி, கோ.புத்தன், நா.தாமோதரன், புதுச்சேரி மாவட்ட கழக நிர்வாகிகள் சிவ.வீரமணி, வே.அன்பரசன், கே.குமார், விருத்தாசலம் கழக மாவட்ட நிர்வாகிகள் சி.கிருஷ்ணமூர்த்தி, புலவர் வை.இளவரசன், சிதம்பரம் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.கி.அருள்ராஜ், கா.கண்ணன், கு.தென்னவன், மயிலாடுதுறை கழக அமைப்பாளர் செகதீசன், மண்டல மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் சி.மணிவேல், பா.செந்தில்வேல், இரா.மாணிக்கவேல், வெ.அறிவு, தி.ராசா, வேல்முருகன், கழக பேச்சாளர்கள் யாழ்திலீபன், முத்து.கதிரவன், புலவர் ராவணன், ப.க. மாவட்ட நிர்வாகிகள் பேராசிரியர் திருமால் வளவன், ப.க. அமைப்புச் செயலாளர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அ.செங்குட்டுவன், பேராசிரியர் செல்வராசு, நகர தி.க. நிர்வாகிகள் அன்பு சித்தார்த்தன், கோவி.குணசேகரன், நாக.ஆறு முகம் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் தோழர்கள் பலரும் அணிவகுத்து வந்தனர். பிரமாண்ட பேரணியாக சிதம்பரத்தை குலுக்கும் வகையில் அமைந்தது.

தமிழர் தலைவர் உரை

மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையாற்றினார். தமது உரையில் குறிப்பிட்டதாவது: நாங்கள் எல்லாம் மேடையிலே நின்று பேசுவதற்கு மேடை அமைத்து கொடுத்தவர்கள் பாராட்டு பெற்ற இந்த பெரியார் பெரும் பெருந்தொண்டர்கள்தான். கு.கிட்டிணச மி, என்.வி.இராமசாமி, நமச்சிவாயம் போன்ற மறைந்த பெரியார் தொண்டர்கள் கொள்கை உணர்வால் எங்களோடு வாழ்கிறார்கள்.

உங்களை பாராட்டுவது பொதுநலத்தோடு கூடியதுதான் என்றாலும் எங்களை தயார்படுத் திக்கொள்ள ஊக்கப்படுத்திக்கொள்ள உதவுகிறீர் கள் என்ற சுயநலமும் உண்டு.

சிதம்பரத்துக்கு நான் புதியவன் அல்ல. சிதம்பரத் தில் ஒரு திருப்பத்தை புத்துணர்ச்சியை பார்க்கி றோம். தோழர்கள் அந்த அளவு சிறப்பாக உழைத் திருக்கிறார்கள்.

திராவிடத்தால் விழுந்தவர்கள் யாரும் கிடை யாது. எழுந்தவர்கள்தான், பயன்பெற்றவர்கள்தான் இருக்கிறார்கள். தில்லை தீட்சிதர்கள் என்பார்கள். இன்று அது மாறி இருக்கிறதே. ஆறுமுகசாமி உள்ளே போயிருக்கிறாரே அதற்கு திராவிடர் இயக்கம்தானே காரணம். சோழர்காலத்திலேயிருந்து கட்டப்பட்ட நடராசர் கோவிலை தங்களுடையது என்றார்களே தீட்சிதர்கள். 180 ஆண்டு கால வழக்கு வேறு. இந்து அறநிலையை துறை சட்டம் போட்டு எவ்வளவு பாடுபட்டும் என்னவெல்லாம் பார்ப்பனர்கள் செய்தார்கள்.

அந்த நிலை மாறியதா இல்லையா?

எம்.ஜி.ஆர் ஆட்சியிலே - அமைச்சர் எவ்வளவோ முயற்சித்தும் சுப்ரீம் கோர்ட்டிலே போய் தடை ஏற்படுத்தினார்களே- அதை உடைக்க எம்ஜிஆர் என்ன செய்தார் என்றால் - இதை தி.க. காரர்களிடம் விட வேண்டியது தான் என்று எங்களை ஊர் வலம் போகுமாறு செய் தார்கள்.  நானே இங்கு வந்து பேசினேன். சிதம்பர ரகசியம் என்று நூலாகவே அது வந்துள்ளது. முக்கிய ஆதாரங்களோடு அந்த பேச்சும் - நூலும் இருந் தது. அப்படியும் எம்.ஜி. ஆரால் முடியவில்லை.

மீண்டும் கலைஞர் வந்தார். இந்து அற நிலையத்துறை அதிகாரம் பெறச் செய்தார். இதற்கு காரணம் இந்த கோபுரம் நிற்பதற்கு - திராவிடம் தானே காரணம். 23190 ரூபாய் ஒரு வருடத்துக்கு வருமா னம் என்று கோர்ட் டுக்குதீட்சிதர்கள் கொடுத்த கணக்கு. செலவு 23,000 மீதி 190 ரூபாய் என்று தீட்சிதர் கள் கொடுத்த கணக்கு. இப்போது இந்து அற நிலையத்துறை நுழைந்த பிறகு உண்டியல் வைக் கப்பட்டதற்கு பிறகு எவ்வளவு வருவாய் தெரி யுமா? எடுத்து 15 மாத வருமானம் 25 லட்சம். இதை  கேட்பதற்கு, சொல் வதற்கு திராவிடர் கழகம் தானே தேவைப்படுகிறது. நீதிக்கட்சிதான் இந்து அறநிலையத் துறையை ஏற்படுத்தியது. திராவிடர் இயக்கம் தேர்தலுக்காக தோற்று விக்கப்பட்ட இயக்கம் அல்ல. இனமானத்துக் காக, இன உரிமைக்காக நலத்துக்காக தோற்று விக்கப்பட்ட இயக்கம்.

இன்றைக்கு டாக்டர் களாகவும்,பட்டதாரி களாகவும்எப்படிவர முடிந்தது.அன்று சமஸ் கிருதம்தெரிந்திருந் தால்தான் டாக்டருக்கு படிக்க முடியும் என் றார்கள்.  டாக்டர் படிப் புக் கும், சமஸ்கிருதத்துக்கும் என்ன சம்பந்தம். பாதை யில்லலாத ஊருக்குபாதை போட்டஇயக்கம். புவனகிரியைசுற்றி முட் லூர் போய் செல்ல வேண் டிய காலம் ஒன்று. முட் லூரிலிருந்து 5 நிமிடத்தில் நேராக சிதம்பரம் வரக் கூடிய வாய்ப்பு இன் றைக்கு. எப்படிசாத்திய மானது? பாலம் போட் டதால் தானே. பாலம் போட்டவர்களை யார் நினைத்துப்பார்ப்பார் கள்.

அது போலத் தான் திராவிடர் கழகத்தின் சாதனை. சூத்திரப் பட் டம், கவுரவப்பட்டம் என்றுநினைத்துக் கொண்டிருந்தார்கள். நம்மாள்கள் கூட அவா ளெல்லாம் சூத்திரர்கள். நாங்களெல்லாம் சற்சூத்திரர்கள் என் றால், பெரியார் கேட்டார் சூத் திரன்என்றால் தேவடியாள் மகன் என்று அர்த்தம். சற் சூத்திரன் என்றால் நல்ல தேவடியாள் மகன் என்றல் லவா அர்த்தம் என்று. சூத்தி ரன், பஞ்ச மன், இழிவு இன்று உண்டா? கார ணம் திராவிடர் இயக்கம் தானே.

1899இல் சென்னை யில் ஒரு நாடகம்  அபி தான சுந்தரி நாடகம் அதற்கு ஒரு நோட்டீஸ். அதில் கட்டண விவரம் எல்லாம் போட்டு. பஞ்சமர்களுக்கு இட மில்லை என்று போட்டிருந் தானே. இன்று என்ன நிலை, எவ்வளவு பெரிய மாற்றம் இதற்கெல்லாம் காரணம் பெரியார் இயக் கம்தானே. திராவிடர் இயக்கம்தான் என மேலும் பல்வேறு கருத்து களை எடுத்து கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்