முன்பு அடுத்து Page:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கழகத்தின் சார்பில் தார்பாய் வழங்கப்பட்டது

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கழகத்தின் சார்பில் தார்பாய் வழங்கப்பட்டது

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு முதல் கட்ட நிவாரணமாக திராவிடர் கழகத்தின் சார்பில் திருவாரூர் பகுதிக்கு நெய்வேலி அரங்க. பன்னீர்செல்வம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட 50 தார்பாய்கள் (நாற்பதாயிரம் மதிப்புள்ள) தமிழர் தலைவர் மூலம் வழங்கப்பட்டது. உடன்: மோகனா வீரமணி, விருத்தாசலம் இளங்கோவன், இளந்திரையன், ப. சுப்பிரமணியன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (நெய்வேலி, 19.11.2018) மேலும்

20 நவம்பர் 2018 15:44:03

மும்பை மாநில சமூகநீதி மாநாடு ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - தமிழர் தலைவர் பங்கேற்பு

* நாள்: 24.11.2018 சனிக்கிழமை மாலை 5 மணி * இடம்: சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ்.அன்பழகன் நினைவரங்கம், பைன்ஆர்ட்ஸ் ஆடிட்டோரியம் (சிவசாமி குளிர் அரங்கம்), ஆர்.சி.மார்க், செம்பூர், மும்பை - 400 089, மாநாடு * நெறியாள்கை: எழுத்தாளர் புதியமாதவி * வரவேற்புரை: பெ.கணேசன் (தலைவர், மும்பை திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: முகமது அலி ஜின்னா (சொற்பொழிவாளர், மும்பை புறநகர் தி.மு.க.) * தலைமை: அ.இரவிச்சந்திரன் (தலைவர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்) * ஏன் அவர் பெரியார்....... மேலும்

20 நவம்பர் 2018 15:39:03

இன்று நீதிக்கட்சியின் 102 ஆம் ஆண்டு

தமிழ் செம்மொழி: நீதிக்கட்சியின் தீர்மானம் தமிழைச் செம்மொழி என அறிவிக்க 1918 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம். 1918 மார்ச் 30, 31 ஆகிய நாள்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று: தீர்மானம் 8 (ஆ) எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர் தரமாக உருவாக்கப்பட்ட பலதிறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக....... மேலும்

20 நவம்பர் 2018 15:18:03

தமிழர் தலைவர் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டங்கள்

தமிழர் தலைவர் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டங்கள்

செந்துறை, நவ.19 அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 11.11.2018 அன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை மத்துமடக்கி கிராமத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையேற்று தமிழர் தலைவரின் தன்னிகரில்லா தலைமையை விளக்கியும் விடுதலை சந்தா சேர்க்கப்பட வேண்டியதன் காரணங்கள் குறித்தும் சிறப்புரையாற் றினார். மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன்....... மேலும்

19 நவம்பர் 2018 16:01:04

திருச்சி, கோவையில் தமிழர் தலைவர்

திருச்சி, கோவையில் தமிழர் தலைவர்

  கோவை மாவட்ட இளைஞரணி, மாணவர் கழக சார்பில் விடுதலை, உண்மை சந்தாக்கான தொகை ரூ.28,200/&த்தை தமிழர் தலைவரிடம் பொறுப்பாளர்கள் வழங்கினர். (கோவை, 16.11.2018) 80ஆவது பிறந்த நாள் காணும் பெரியார் பெருந்தொண்டர் இ. கண்ணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (கோவை, 16.11.2018) கோவை மாவட்ட கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர் (கோவை, 16.11.2018) தாராபுரம் பெரியார் சிலை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்காடிய கழக வழக்குரைஞர்....... மேலும்

18 நவம்பர் 2018 16:43:04

மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மணிராஜ் - சுஜாதா ஆகியோரின் மகள் முத்துலெட்சுமி (எ) சினேகாவுக்கும், இசக்கிபாண்டியன் - இந்திரா (மறைவு), வேல்தாய் ஆகியோரின் மகன் பிரபுவுக்கும் இணையேற்புவிழா  11.11.2018 அன்று மதுரையில் நடைபெற்றது. உடன் அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராசா, தென்காசி மாவட்ட தலைவர் த.வீரன், முத்துகுமார்  மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். மேலும்

18 நவம்பர் 2018 15:49:03

ஜாதி மறுப்பு திருமணம்

ஜாதி மறுப்பு திருமணம்

தியாகராசன் - லதா இவர்களுடைய ஜாதி மறுப்பு திருமணத்தை அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் கழக தலைவர் ப.முத்தையன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில், திராவிடர் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் நடத்தி வைத்தார். (பெரியார் திடல், 14.11.2018) மேலும்

18 நவம்பர் 2018 15:49:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பவள விழா (75 ஆம் ஆண்டு) காணும் திராவிட மாணவர் கழகத்தின் திராவிட மாணவச் செல்வங்கள் எடுத்துக்கொள்ளும் - கொண்ட உறுதிமொழிகள் வருமாறு:

1. ஜாதிமறுப்புத் திருமணம், விதவை மறுமணம், மணவிலக்குப் பெற்றோரை மறுவாழ்வுத் திருமணம் செய்துகொள்வேன். வர(ன்)தட்சணை வாங்குவது சுயமரியாதை இழக்கும் கொத்தடிமை முயற்சி, என்னை நான் ஒருபோதும் விற்க மாட்டேன் என்று சூளுரைக்கிறேன்.

2. கடவுள், மதம், ஜாதி, சினிமா, மது, மருந்து என்ற பலவகைப் போதைகளும், மூடநம்பிக்கைகளும் என் வாழ்வை அண்டாத பெரு நெருப்பாகவே வாழ்வேன்.

3. சுற்றுச் சூழலைத் தூய்மையாக்குவதிலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாது காக்கும் பொழுது ஒழுக்கத்தை நிலைநாட்டவும் என்னையே நான் ஒரு சமூகக் காவலனாக ஆக்கிக் கொண்டு வாழ்வேன்.

4. நல்ல உடல் நலமே, நல்ல உள்ளத்திற்கான ஊற்றுக்கண். உளநலத்திற்கான ஊற்றுக்கண் என்பதை உணர்ந்து வாழ்வதுடன் ஊர் நலம், உலக நலம் ஓம்பும் மானுடத்தின் உண்மைத் தொண்டனாக என்னையே நான் அர்ப்பணித்துக் கொள்வேன்.

5. கடவுளை மற, மனிதனை நினை, என்று அறிவு ஆசான் தந்தைபெரியார் கூறிய வழிப்படியே மனிதநேய மாண்பாளனாகவே எனது வாழ்வை அமைத்து, சொல்வதைச் செய்வதும், செய்வதை மட்டுமே சொல்வதுமே சுயமரியாதை சுகவாழ்வு என்று நான் வாழ்ந்து காட்டுவேன்.

6. வேலை கேட்டு விண்ணப்பம் போட்டு அலுக்காமல், மற்றவருக்கு வேலை தரும் நிலைக்கு உயரும் வகையில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையே எனது கடமையாகக் கருதி வாழ்வேன்.

7. எளிமை, சிக்கனம், பிற பாலரிடம் பண்புடன் பழகும் பான்மை இவைகளை என்றும் வளர்த்துக் கொள்வேன்.

இணையதளம், தொலைக்காட்சி, நுகர்வுக் கலாச்சாரம் இவைகளை உணவுக்கு உப்பு போல, தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வோம். இவற்றுக்கு ஒருபோதும் அடிமையாகோம். எங்கள் உரிய நேரத்தை இதற்கு, இந்த போதைக்கு பலியாகி நாங்கள் வீணடிக்க மாட்டோம்.

8. பண்பாட்டுப் படையெடுப்புகளினால் பாழான எமது இனத்தின் மீட்புக்கான களப் பணியாளனாக என்றும் இருப்பேன்.

9. இளமை என்பது வளமைக்காக என்று நினைக்காமல் தொண்டுக்கான, அதுவும் சமுதாயத் தொண்டுக்கான வாய்ப்பே என்று கருதி என்றும் உழைப்பேன்.

10. மற்றவர் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அப்படி நீ பிறரிடம் நடந்துகொள். அதுவே ஒழுக்கம் என்ற தந்தை பெரியார்தம் உயர் ஒழுக்கநெறியான மனிதநேயப் பண்புடன் என்றும் அதை சிந்தையில் ஏற்றுச் செயலாற்றி புதிய உலகினை உருவாக்கும் தூதுவனாக  என்னை நான் என்றும் மாற்றிக்கொண்டு எமது பகுத்தறிவு, சுயமரியாதை வாழ்வுப் பயணத்தை தொடர்வோம். எமது பணி சுயலாபத்திற்கு அல்ல. பொதுநலத்திற்காக, இன நலத்திற்காக, சமூக நலத்திற்காக, நாட்டு நலத்திற்காக.

இதன்படி மாணவ மணிகள் நல்லொழுக்க நாயகர்களாக, விஞ்ஞான மனப்போக்குடைய வித்தகர்களாக, மனிதநேயச் சின்னங்களாகத் திகழ,

ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளி

ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி

ஒவ்வொரு கல்லூரி

ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும்

மேற்கண்ட கட்டுப்பாட்டுக்கு ஒத்திசைவு தரும் மாணவர்களைக் கொண்டு, உடனடியாக தனித்தனியே திராவிட மாணவர் கழகங்களை அமைத்து, விடுதலை'க்குச் செய்தி அனுப்புங்கள். (ஒரு யூனிட்'- one unit).

குறைந்த பட்சம் - அமைப்பாளர்கள் 5-க்கு மேற்பட்டவர்கள் - அமைப்பு ரீதியாக

தலைவர், செயலாளர், அமைப்பாளர் என்ற பொறுப்புகளில் அமர்த்தி உடனே பதிவு செய்யுங்கள்.

ஏற்கெனவே மாநில அமைப்பில் உள்ள திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்களே, பம்பரம் எனச் சுழன்று அமைப்புகளை உருவாக்கி, மாணவர் உலகத்தில் புத்தாக்கச் சிந்தனைகளை உருவாக்குங்கள்!

அந்தந்த கல்வி நிறுவனத்தின் கிளையாகவே அவை அங்கீகரிக்கப்படும். இது அரசியல் அமைப்பு அல்ல!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்,

சென்னை

10.7.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner