முன்பு அடுத்து Page:

கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கப்பட்ட சந்தாக்கள்

கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கப்பட்ட சந்தாக்கள்

கிருட்டினகிரி, நவ. 21 கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘விடுதலை' சந்தாகள் வழங்கும் விழா 16.11.2017 அன்று மாலை 5 மணியளவில் கிருட்டினகிரி புதுப்பேட்டை வெல்கம் மகாலில் நடைபெற்றது.மாவட்ட கழகத் தலைவர் மு.துக்காராம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி அனைவரையும் வரவேற்றார்.தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன், மண்டலச் செயலாளர் கரு.பாலன், மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் அ.செ.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் ஆகியோர்....... மேலும்

21 நவம்பர் 2017 16:43:04

கல்லக்குறிச்சி, செய்யாறு கழக மாவட்டம் சார்பில் கழக துணைத் தலைவர் கவிஞரிடம் வழங்கப்பட்ட சந்தாக்கள்

கல்லக்குறிச்சி, செய்யாறு கழக மாவட்டம் சார்பில்  கழக துணைத் தலைவர் கவிஞரிடம்  வழங்கப்பட்ட சந்தாக்கள்

கல்லக்குறிச்சி, நவ, 21 கடலூரில் நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ‘விடுதலை' சந்தாக்கள் சேர்க்கும் பணி தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுற்றுப் பயணம் செய்து சந்தாக்களைப் பெற்று வருகிறார். கல்லக்குறிச்சி, செய்யாறு கழக மாவட்டங்களில் ‘விடுதலை' சந்தாக்களை கழகப் பொறுப்பாளர்கள் அவரிடம் வழங்கினார்.விவரம் வருமாறு: கல்லக்குறிச்சி17.11.2017 அன்று மாலை 4 மணியளவில் கல்லக்குறிச்சி செல்வி உதயகுமார் இல்லத்தில் கல்லக்குறிச்சி....... மேலும்

21 நவம்பர் 2017 16:38:04

திராவிடர் மாணவர்கள் சந்திப்போம் - சிந்திப்போம் கூட்டம் பள்ளி - கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கழகத்தில…

திராவிடர் மாணவர்கள் சந்திப்போம் - சிந்திப்போம் கூட்டம் பள்ளி - கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

தாம்பரம், நவ. 21- தாம்பரம் - குன்றத்தூரில் திராவிடர் மாணவர்கள் சந்திப்போம் - -- சிந்திப்போம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமாக கழகத்தில் இணைந்தனர்.19.11.2017 அன்று மாலை 5 மணிக்கு தோழர் திருமலை இல்லத்தில் குன்றத்தூர் திராவிடர் மாணவர்களின் சந்திப்போம் - சிந்திப்போம் கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. பெரியார் சமூகக் காப்பு அணியின் பொறுப்பாளர் கராத்தே மாஸ்டர் பரசுராமன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார்.திராவிடர் கழக....... மேலும்

21 நவம்பர் 2017 15:29:03

செந்துறையில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

செந்துறையில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

செந்துறை, நவ. 20 அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் உருவப்பட ஊர்வலமும் பொதுக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க பெரியார் பட ஊர்வலம் செந் துறை அண்ணாநகரில் 17.9.2017 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப் பட்ட தந்தை பெரியார் படம் கலைக்குழு இன்னிசை நிகழ்ச்சியுடன் வாக னங்களின் இருபுறமும் பெரியார் படம் கருத்துகள் அடங்கிய பதாகைகளுடன் இதோ....... மேலும்

20 நவம்பர் 2017 16:41:04

தந்தை பெரியார் பிறந்த நாள் - குருதிக்கொடை முகாம்

தந்தை பெரியார் பிறந்த நாள் - குருதிக்கொடை முகாம்

ஆண்டிப்பட்டி, நவ. 20 ஆண் டிப்பட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக ‘அறிவு ஆசான்’ தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாக கொள்கை திருவிழா கொண்டாடப்பட்டது.ஆசிரியர் கி.வீரமணி அவர் கள், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் வாழ்த் துக்கடிதங்களுடன் மகிழ்ச்சி பொங்க நடைபெற்றது.தேனி அரசு மருத்துவ மனைக்கு குருதி நன்கொடையாக வழங்க 16ஆம் ஆண்டு குருதிக் கொடை முகாம் (147 யூனிட்கள்) ஆண்டிபட்டியில் 21.9.2017....... மேலும்

20 நவம்பர் 2017 16:39:04

மதுரையில் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கம்

மதுரையில் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கம்

மதுரை, நவ.20 11.11.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 59ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது.கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கினார். வந்திருந்தோரை பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணியை சேர்ந்த சுப்ரமணியன் வரவேற்றுப் பேசி னார். சிறப்பு பேச்சாளர் வி.சி. வில்வம் அவர்களை அறிமுகம் செய்து விடுதலை வாசகர் வட் டத்தின் செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் அறிமுக....... மேலும்

20 நவம்பர் 2017 16:36:04

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

  குடந்தை, நவ. 20 28.10.2017 அன்று குடந்தையில் தந்தை பெரியார் பட ஊர்வலம் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. படஊர்வலம் குடந்தை காந்தி பூங்காவிலிருந்து கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் ரெட்டிப்பாளையம் சகோதரிகளின் தப்பாட்டம், சடையார்கோவில் குழந்தைகளின் கோலாட்டத்துடன் கழகத் தோழர்களின் ஒலிமுழக்கத்துடன் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. தஞ்சை மண்டல தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்........ மேலும்

20 நவம்பர் 2017 16:28:04

பகுத்தறிவாளர் கழக மேனாள் துணைத் தலைவர் கோ.அண்ணாவி மறைவு தமிழர் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்த…

பகுத்தறிவாளர் கழக மேனாள் துணைத் தலைவர் கோ.அண்ணாவி மறைவு  தமிழர் தலைவர் நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை

சென்னை, நவ. 19- பகுத்தறிவா ளர் கழக மேனாள் துணைத் தலைவரும், 'வீரமணி ஒரு வீரவிதை' என்ற ஆய்வு நூலின் ஆசிரியருமான கோ.அண்ணாவி (வயது 68) நேற்று 18-.11.-2017 மாலை 5 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். பகுத்தறிவாளர் கழகத்தில் அரும்பணி ஆற்றியவர்! எழுத் தாளர் ஜெயகாந்தன் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையேற்றி ஆசிரியர் குறித்த அவரது நினைவுகளைப் பதியச் செய்த பெருமைக்குரியவர்! ஆசிரியர் அவர்களின் இள மைக்காலப்....... மேலும்

19 நவம்பர் 2017 15:52:03

கடலூர், புதுச்சேரி கழக மாவட்டங்கள் சார்பாக கழக துணைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட ‘விடுதலை' சந்தாக்கள்

கடலூர், புதுச்சேரி கழக மாவட்டங்கள் சார்பாக  கழக துணைத் தலைவரிடம் அளிக்கப்பட்ட ‘விடுதலை' சந்தாக்கள்

கடலூர், நவ. 18- 16.11.2017 அன்று கடலூர் மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூர் ஹோட்டல் துரையில் காலை 11 மணியளவில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் தென்.சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் மாவட்ட செயலாளர் நா.தாமோதரன் தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 2 அன்று 15 ஆயிரம் விடுதலை சந்தா கொடுக்க....... மேலும்

18 நவம்பர் 2017 16:36:04

கருநாடக மாநிலத்தில் அளிக்கப்பட்ட விடுதலை சந்தாக்கள்

கருநாடக மாநிலத்தில் அளிக்கப்பட்ட விடுதலை சந்தாக்கள்

  பெங்களூரு, நவ.18 கருநாடகம் மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி தொட்ட நாகமங்கல பகுதியில் தொழில் சம்பந்தமாக வாழ கூடிய தோழர் ராஜா கார்பென்டர் பெங்களூருவுக்கு வருகை தந்த கழக பொதுச்  செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்களை  தங்கள் பகுதிக்கு வந்து செல்ல கேட்டுக் கொள்ள  அழைப்பை ஏற்று பொதுச் செயலாளர் கலந்து கொண்டார். அந்த கூட்டம் கலந்துரை யாடல் கூட்டமாக நடைபெற்றது. கழக பொதுச்செயலாளர் பேசுகை யில், இப்பகுதியில் இதே போன்று நம் தோழர்கள்....... மேலும்

18 நவம்பர் 2017 15:46:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடி, நவ.11 சிவகங்கை மண்டலத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணிகள் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு:

இராமநாதபுரம்

சிவகங்கை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நவ. 5ஆம் நாள் காலை 11 மணிக்கு இராமநாதபுரம் நகர் மதுரை சாலையிலுள்ள ராணி இந்திராதேவி நகர் முன்னாள் மாவட்டத் தலைவர் பா.செயராமன் இல்லத்தில் மாவட்ட தலைவர் எம்.முருகேசன் தலை மையில், தலைமைச்செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி முன்னிலையில் நடை பெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் பா.செயராமன், மாவட்ட செயலாளர் கோ.வ.அண்ணாரவி, கயல் கணேசன், இரா.காமராசு, அ.கார்த்திக், முகவை பழ.அசோகன், ஏ.தேவசகாயம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நவ. 7 ஆம் நாள் மாலை 6 மணிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் உ.சுப்பையா இல்லத்தில் மாவட்ட தலைவர் காளாப்பூர் பெரு.இராசாராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி முன்னிலையில் நடந்தது.

சிவகங்கை உ.சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர் சுப.மணிமேகலை, மாவட்ட செயலாளர் ச.ஆனந்தவேல், அ.மகேந்திரராசன், ப.முத்துக்குமார், வைகை தமிழ்வாணன் ஆகி யோர் கலந்து கொண்டார்கள்.

தீர்மானம்

மூத்த தமிழறிஞர் சீரிய பகுத்தறிவாளருமான பேராசிரியர் மா.நன்னன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தலைமைக் கழ கம் ஒதுக்கியுள்ள விடுதலை நாளிதழ் சந்தா சேர்ப்புப் பணியை தீவிரமாக்கி இலக்கினை முடித்து வரும் நவ. 14ஆம் நாளன்று காரைக்குடி வரும் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களிடம் வழங்குவதும், அதன்பிறகும் சந்தா சேர்ப்பினை தொடர்ந்து செய்து எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் நாளன்று ஈரோடு மாநகரில் நடைபெறவிருக்கும் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவிலும் தோழர்கள் பங்கேற்று விடு தலை சந்தாவும் வழங்குவது என முடிவு செய் யப்பட்டது.

காரைக்குடி மாவட்டத்தில்

ஒன்றிய கலந்துரையாடல்

கூட்டங்கள்

தேவக்கோட்டை

காரைக்குடி கழக மாவட்டம் தேவக் கோட்டை ஒன்றியத்தின் கழக கலந்துரையாடல் கூட்டம் நவ. 5ஆம் நாள் மாலை 6 மணிக்கு பேருந்து நிலையம் எதிரிலுள்ள மீனாட்சி வளா கத்தில், நகர கழக செயலாளர் வி.முத்தரசு பாண்டியன் தலைமையிலும், தலைமைச் செயற் குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி முன்னி லையிலும் நடந்தது.

மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், ஒன்றிய ப.க. அமைப்பாளர் அ.அரவரசன், ஒன்றிய ப.க. அமைப்பாளர் ந.தம்பிராசு, இளைஞரணி கழக அமைப்பாளர் பெரி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காளையார் கோவில்

காளையார்கோவில் ஒன்றியக் கலந்துரை யாடல் கூட்டம் நவ. 7 அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பெரியார் குணா காசன் இல்லத்தில் சாமி.திராவிடமணி தலை மையில் நடந்தது. மாவட்ட தலைவர் ச.அரங்க சாமி, மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, பெரியார் குணாகாசன், பெரியார் கமல்காசன், கு.கலைச்செல்வி, பா.இராஜ்குமார், ஜி.சுருதி இந்திரா, து.அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கழக நாளிதழ் விடுதலை சந்தா சேர்ப்புப் பணியை தீவிரப்படுத்தியும், வரும் நவ. 14 அன்று காரைக்குடி வரும் கழகச் செயல வைத் தலைவரிடம் வழங்குவதும், அடுத்து சந்தா சேர்ப்பினைத் தொடர்ந்து செய்து மீதமுள்ள சந்தாவை டிச. 2 இல் நடக்கும் ஈரோடு மாநகரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று ஒப்படைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner