முன்பு அடுத்து Page:

பெரும் பணம் உள்ளவர்கள் சோற்றுக்குப் பதில் மாத்திரை சாப்பிடுகிறார்கள்

பெரும் பணம் உள்ளவர்கள் சோற்றுக்குப் பதில் மாத்திரை சாப்பிடுகிறார்கள்

ஆனால், தந்தை பெரியார் கூறும் சுயமரியாதை வாழ்வுதான் சுகவாழ்வு!நீடாமங்கலம்  ஆ.சுப்பிரமணியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் வாழ்வியல் உரை நீடாமங்கலம், ஜூலை 20- வெறும் பணம் மட்டும் வாழ்வல்ல; அது ஒரு கருவி அவ்வளவே! அதிக பணம் படைத்தவர்கள் சோற்றுக்குப் பதில் மாத்திரையைத்தான் சாப்பிடுகிறார்கள்; தந்தை பெரியார் கூறும் சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 16.7.2017 அன்று நீடாமங்கலத்தில் மறைந்த சுயமரியாதை  சுடரொளி....... மேலும்

20 ஜூலை 2017 15:55:03

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் இசைக் குறுந்தகடு வெளியீடு

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் இசைக் குறுந்தகடு வெளியீடு

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பாராட்டு மதுரை, ஜூலை 19 7.7.2017 அன்று மாலை 6 மணிக்கு மதுரை மாட் டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தியாளர் அரங் கத்தில் விடுதலை வாசகர் வட் டத்தின் 55 ஆவது நிகழ்ச்சியாக, விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும், பணி நிறைவு நீதி பதியுமான பொ. நடராசன் அவர் கள் எழுதிய பாடல்களில் உரு வான போற்றிப்பாடடி பெண்ணே  என்ற....... மேலும்

19 ஜூலை 2017 17:03:05

1000 விடுதலை சந்தா வழங்க தீவிர ஏற்பாடு

1000 விடுதலை சந்தா வழங்க தீவிர ஏற்பாடு

ஜூலை 30 வரை கிளைக் கழகக் கலந்துரையாடல் உரத்தநாடு, ஜூலை 18 உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 12.7.2017 அன்று மாலை 7 மணியளவில் பெரியார் மாளிகையில் மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில ப.க.பொதுச் செயலாளர் மா.அழகிரிசாமி, மாநில ப.க.துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன், மாநில கலைத்துறை தலைவர் ச.சித்தார்த்தன், பெரியார் வீரவிளையாட்டு கழக மாநில செயலாளர் நா.ராமகிருஷ்ணன், மாநில வீதி நாடகக்குழு....... மேலும்

18 ஜூலை 2017 18:12:06

திருப்பம் தரும் திருவாரூர் மண்டலக் கழகக் கலந்துரையாடல்!

கிராம பிரச்சாரத் திட்டம்- சோழங்கநல்லூரில் மகளிர் பயிற்சிப் பட்டறை- மாநாடு- புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு திருவாரூர், ஜூலை 17 திருவாரூர் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16.7.2017 அன்று மாலை 6 மணியளவில் திருவாரூர் யு.பி.மகாலில் நடைபெற்றது.தொடக்கத்தில் மாணவரணி தோழர் இளமாறன் கடவுள் மறுப்பு கூறினார். மண்டலத் தலைவர் இரா. கோபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து நாகை....... மேலும்

17 ஜூலை 2017 16:04:04

குற்றாலத்தில் பெரியாரின் கொள்கைச் சாரல்!

குற்றாலத்தில் பெரியாரின் கொள்கைச் சாரல்!

குற்றாலம் - சுற்றுலா பயணிகளுக்கு குதூகலத்தை தந்திடும் ஊர். அங்குள்ள அருவிகளில் ஆனந்தக் குளியல் போட்டு அகமகிழ்வை பெறுவோர் ஏராளம். குற்றாலத்துக்கு வருவோர் அதன் சாரலை, நீர்வீழ்ச்சிகளின் அழகை அனுபவித்திடும் ஆர்வத்தோடே மக்களை ஈர்க்கும்.தென் பொதிகைத் தென்றல் தாலாட்டும் குற்றாலத்தில் நாற்பதாம் ஆண்டாய் பெரியாரிசப் பயிற்சிப் பட்டறை. பெரிய சாதனைதான். ஆண்டுக்கு சராசரியாய் நூறுபேர் என்றாலும் 4000 பேர்களுக்கு குறையாமல் பெரியாரின் கொள்கைகளை பயின்றிருப்பார்கள். இப்போது எளிதாக இருந்தாலும், தொடக்கத்தில்....... மேலும்

17 ஜூலை 2017 15:53:03

கழக நிகழ்வுகள்

கழக நிகழ்வுகள்

திருப்பனந்தாளில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்திருப்பனந்தாள், ஜூலை 16- குடந்தை கழக மாவட்டம், திருப் பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், திருப்பனந்தாள் கடை வதற்கு வீதியில் 03.7.2017 மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - திராவிடர் கழக ஜாதி ஒழிப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை நிலைய பேச்சாளர் தஞ்சை.இரா.பெரியார்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் பட்டம் க.மோகன் அனைவரையும்....... மேலும்

16 ஜூலை 2017 16:38:04

விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கல்வித் தந்தை காமராசர் கருத்தரங்கம்

விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கல்வித் தந்தை காமராசர் கருத்தரங்கம்

பெரம்பலூர், ஜூலை 16- பெரம்பலூர் விடுதலை வாசகர் வட்டம் 6ஆவது கூட்டம் பெரம்பலூரில் குணகோமதி மருத்துவமனை யில் 10.7.2017 அன்று மாலை 6 மணிக்கு மேனாள் ப.க. தலைவர் ஆ.துரைசாமி தலை மையில் நடைபெற்றது. பெ. அண்ணாதுரை மாவட்டச் செய லாளர் அனைவரையும் வர வேற்றார்.சிறப்புரையாக முனைவர் சா.தங்கப்பிரகாசம் அவர்கள்: காமராஜர் முதல்வர் பதவி மூலம் அறியாமையுள்ள மக்களை அறிவுள்ள மக்களாக மாற்ற ஆசைப்பட்டவர். ராஜராஜ சோழர் கல்வெட்டு மூலம்....... மேலும்

16 ஜூலை 2017 16:35:04

திருவிடைமருதூர் திருநாகேஸ்வரத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திருவிடைமருதூர் திருநாகேஸ்வரத்தில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திருநாகேஸ்வரம், ஜூலை 16- குடந்தை கழக மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், திருநாகேஸ்வரம் நகர திராவி டர் கழகம் சார்பில், திருநாகேஸ் வரம் கடை வீதியில் 5.7.2017 மாலை 6 மணியளவில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - இளைஞர்களுக்கு அழைப்பு என்கிற தலைப்பில் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை நிலைய பேச்சாளர் தஞ்சை. இரா.பெரியார்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். திருவிடைமருதூர் ஒன்றிய அமைப்பாளர் ந.சிவக்குமார் அனைவரையும் வரவேற்று....... மேலும்

16 ஜூலை 2017 16:31:04

தோழர் என்.சங்கரய்யாவுக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து!

தோழர் என்.சங்கரய்யாவுக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து!

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முன்னோடி தோழர்  என்.சங்கரய்யா அவர்களுக்கு இன்று 96 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்!தியாகத்தின் திருவுருவம் அவர்; தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக் காக கடும் அடக்குமுறைகளையும் புன்முறுவலோடு ஏற்று, புது உலகம் - பொதுவுடைமை உலகம் காண அன்றும் இன்றும் என்றும் ஓர் போராளியாகவே தன்னை வார்த்துக்கொண்ட தலைவர் அவர்; எளியோர் - ஏந்தல் அவர்!மதச்சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும், சமதர்மக் கோட்பாட்டுக்கும்  சோதனை....... மேலும்

15 ஜூலை 2017 16:35:04

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மின்னணுவியல் துறை மாணவர் அமைப்பு தொடக்கம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மின்னணுவியல் துறை மாணவர் அமைப்பு தொடக்கம்

வல்லம், ஜூலை 15 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மின்னியியல் மற்றும் மின்னணுவியல் துறையின் மாணவர் அமைப்பு SYNERGEE யின் தொடக்க விழாவானது 12.07.2017 அன்று காலை 10.30 மணியளவில் பிராய்டு அரங்கத்தில் நடை பெற்றது. மாணவர் அமைப்பின் தலைவர் இறுதியாண்டு மாணவர் எம்.விக்னேஷ் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங் கினார். இந்த நிகழ்ச்சியை பல்கலைக் கழக முதன்மையர்  (SET) முனைவர்  ஆர்.ஜெயந்தி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து துறைத் தலைவர்....... மேலும்

15 ஜூலை 2017 12:51:12

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோவை மண்டல மகளிரணி கலந்தாய்வில் கழகப் பொருளாளர் உரை வீச்சு

கோவை, மே 15- பெண்ணுரிமையை வென்றெடுக்க மே-27ல் திருச்சியில் கூடுவோம் என்று கோவை மண்டல கலந்தாய்வில் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி உரை வீச்சு நிகழ்த்தினார்.

மாநாடும், கலந்தாய்வும்

திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிடர் மகளிர் பாசறை சார்பில் வருகின்ற 27.05.2017 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டிற்கு தமிழகப் பெண்களை பேரணியாக திரட்ட வேண்டுமென்ற நோக்கோடு கழகத்தின் சார்பில் தமிழக மெங்கும் மண்டல வாரியாக மகளிரணி கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெறுவதன் ஒரு பகுதியாக கோவை மண்டல மகளிரணி சார்பில் 11.05.2017, வியாழன் மாலை 6 மணியளவில் கலந்தாய்வுக் கூட்டம் கோவை, சுந்தரா புரம் ம.சந்திரசேகர் இல்லத்தில் துவங்கி நடைபெற்றது.

கோவை மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச் செல்வி தலைமை தாங்கினார். கழக பொதுக்குழு உறுப் பினர் ச.திலகமணி அனைவரையும் வரவேற்றார். வ.ராஜேஸ்வரி, செ.ஜோதிமணி, கு.புனிதா உள்ளிட்ட மக ளிரணியினர் முன்னிலை வகித்தனர். பெரியார் பிஞ்சு கார்முகிலி கடவுள் மறுப்பு கூறினார்

கழகப் பொருளாளர் உரை

நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்த கழகப் பொருளாளர் சு.பிறைநுதல்செல்வி அவர்கள் உரை நிகழ்த்தியதாவது:

பெண் சிசுவை பிறப்பதற்கு முன்பே அழிப்பதும், பிறந்த பின் அழிப்பதுமான பெண் கரு கொலை, பெண் சிசு கொலை ஆகிய இரண்டு சமுதாய பிற்போக்கு நிகழ்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக ஆண்களின் சராசரி விகிதத்தை விட பெண் களின் சராசரி விகிதம் குறைந்து பாலியல் வன்கொடுமை அநீதிகளும், ஆண்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் பெண் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் பிள்ளை பெறவும், கணவனுக்கு பணிவிடை செய்யவுமே தவிர சமுதாயத்தில் வேறு எந்த உரிமையும் பெண்களுக்கு இல்லை என்று மனுதர்மம் என்ற மனித அதர்மம் கூறுகிறது. கடந்த மார்ச் 10 அன்று அன்னை மணியம் மையார் பிறந்த நாளில் நமது ஆசிரியர் அவர்களின் உத்தரவுப்படி மனுஸ்மிருதியை எரித்து பெண்ணுரிமை மீட்பை உயர்த்திப் பிடித்தோம். அதேபோல் வருகிற 27 ஆம் தேதியன்று கழகத் தலைவர் வழிகாட்டுதலின்படி திருச்சியில் நடைபெறுகின்ற மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டில் பெண்ணுரிமை காக்கவும், வஞ்சிக்கப் படும் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெறவும் நாம் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும்!

பெண்கள் நகை, துணி, அலங்காரம் போன்றவற்றி லுள்ள ஆசையையும், மூடத்தனத்தையும் விட்டு சாதனை கள் புரிய வேண்டும் என்பதை விளக்கிச் சொல்லத்தான் திருச்சியில் மகளிர் மாநாடு நடைபெறுகிறது!

பெண்கள் பகுத்தறிவு பெற்றால் தான் அவர்களின் பிள்ளைகளையும் அறிவானவர்களாக வளர்க்கமுடியும்! பெண்கள் மூடத்தனம் மிக்கவர்களாக இருந்தால் பிள்ளை கள் மிருக கன்றுகளாகத் தான் வளரும் என்றார் தந்தை பெரியார் ஆகவே மூடத்தனத்தை ஒழித்து, பெண்களால் தான் சமுதாயத்தை மாற்ற முடியும் என அன்னை நாகம் மையார் நினைவு நாளில் சூளுரை ஏற்போம்! கழகத் தோழர்கள் மகளிர்களை பெருமளவில் மே 27 திருச்சி மாநாட்டில் பங்கேற்கச் செய்ய பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.

கோ.செந்தமிழ்செல்வி

கூட்டத்தில் பங்கேற்ற மாநில மகளிர் பாசறை செய லாளர் கோ.செந்தமிழ்செல்வி குறிப்பிட்டதாவது: முற் போக்குக் கருத்துக்கள் மகளிரிடத்தில் செல்லவேண்டும், பெண்கள் வரலாறு படைக்கவேண்டும் என்ற நோக்கில் காலத்தின் தொலைநோக்காளர் நம்முடைய தமிழர் தலை வர் அவர்கள் திருச்சியில் மே 27 அன்று மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாட்டை அறிவித்துள்ளார்கள்! ஜாதி ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு இரண்டையும் கண்களாகக் கொண்டது தான் நம்முடைய இயக்கம்!

தந்தை பெரியாருக்கு பின் அன்னை மணியம்மையார் அவர்கள் மேற்கொண்ட கழகப்பணி மிகவும் போற்றத் தக்கது! நாகம்மையார், மணியம்மையார் என்கிற இரு பெரும் பெண் புரட்சியாளர்களை உள்ளடக்கிய இயக்கம் திராவிடர் கழகம்! பெண்கள் வெற்றியடைய வேண்டு மென்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள் மகளிர்கள் மத்தியில் சென்றாக வேண்டும்! நடைமுறையில் பெண் களுக்கான உரிமைகள் பெயரளவிலேயே இருக்கிறதே யொழிய உரிமைகளை தொடர்வதற்கான, செயல்படுத்துவ தற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டே வருகிறது! இதை எச்சரிக்கையோடு சிந்தித்து தான் பெண்ணுரிமை பேரிகை முழங்க தொலைநோக்கோடு மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது!

மாநாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 100 மகளிர்களை பங்கேற்க செய்ய தோழர்கள் களப்பணியாற்ற வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

“பொறியாளர்” இன்பக்கனி

மகளிரணி கலந்தாய்வில் பங்கேற்ற வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இ.இன் பக்கனி பேசியதாவது:

மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்டம் இன்றும் நிறை வேற்றப்படாத காலகட்டத்தில், பாலியல் வன்கொடு மைகள் நடைபெறுகிற, கலப்பு மணம் புரிந்த தம்பதிகள் ஆணவக்கொலை செய்யப்படுகிற இன்றைய சூழ்நிலை யில் மகளிர் மத்தியில் விழிப்புணர்வை  ஏற்படுத்திட மகளிர் உரிமை பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்துகிறது.

இந்தியா முழுவதிலும் ஒரே கல்வி நடைமுறையில் இல்லாதபோது ஒரே மாதிரியான நீட் தேர்வை மத்திய அரசு நடத்தியுள்ளது, நாம் இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று முன்னேறியுள்ளோம்  இந்த முன்னேற்றத்தை ஒழிக்கும் முன்னோட்டமாகத்தான் மத்திய பிஜேபி அரசு இந்த நீட் தேர்வை நடத்தியுள்ளது. மாநில அரசு தன் பதவிகளை காப்பாற்றிக்கொள்ளவும், பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும் மாணவர்களின் எதிர்காலத்தை விற்க தயாராகிவிட்டார்கள்! பெண்களுக் கான உரிமையையும், நமது மாநிலத்திற்கான உரிமைக ளையும் வென்றெடுக்க மே 27 திருச்சி மாநாட்டில் பெருந்திரளாக மகளிர்கள் பங்கேற்க கழக மகளிரணியினர் ஏற்பாடு செய்யவேண்டும் என்று பேசினார்.

உரையாற்றியோர்

திராவிடர் கழகத்தின் கோவை மண்டல தலைவர் கருணாகரன், செயலாளர் ம.சந்திரசேகர், கோவை மாவட்ட தலைவர் சிற்றரசு, திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, பக மாநில துணைத்தலைவர் ஆ.முனியன், பொறியாளர் பரமசிவம், மேட்டுப்பாளையம் ராஜா, மகளிரணியைச் சார்ந்த தேவிகா, “பெரியார் பிஞ்சு” அன்புமதி ஆகியோர் உரையாற்றினர்.

பங்கேற்றோர்

திராவிடர்கழகத்தின் தலைமைக்கழக பேச்சாளர் புலியகுளம்.க.வீரமணி, நீலமலை மாவட்ட செயலாளர் வேணுகோபால், கோவை மண்டல இளைஞரணி செயலாளர் ச.மணிகண்டன், மாநில மாணவரணி துணை செயலாளர் ஆ.பிரபாகரன், தெற்கு பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, கவிக்கிருட்டிணன், மே.பா.ரங்கசாமி, சுந்தராபுரம் சிவக்குமார், இலைக்கடை செல்வம், குறிச்சி தமிழ்முரசு, மாணவரணியைச் சார்ந்த மதியரசு, விஜயன், கவுதமன், யாழினி, பூங்குழலி, சுபாசினி, பிரீத்தி, இளைஞரணியைச் சார்ந்த பிரபு, வெற்றிச்செல்வன், மகளிரணியைச்சார்ந்த மேட்டுப்பாளையம் நாகமணி உள்ளிட்ட திக, பக தோழர்கள், ஒத்த கருத்துடையோர் திரளாகப் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்

1.  மதவாதிகளால் கோவை, உக்கடத்தில் கடந்த 16.03.2017 அன்று படுகொலை செய்யப்பட்ட பகுத்தறி வாளர் பாரூக்கிற்கு கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

2. அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் மனுதர்ம எரிப்பு போராட்டத்தில் (10.3.2017) பெருந்திரளாக பங்கேற்று கோவையில் சிறை சென்ற தோழர்களுக்கும், குறிப்பாக இயக்கம் சாராமல் பங்கெடுத்த ப.தமிழரசி, ஞா.மங்கையர்க்கரசி, ச.முத்துலட்சுமி, வ.தங்கேஸ்வரி, ப.விமலா, அ.கரோலினா, ஞா.ராஜேஸ்வரி இராவணன், வேணி உள்ளிட்ட காட்டாறு குழுவினருக்கும் கூட்டத் தில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

3. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் “அயோத்தி தாசர் ஆதவன் விருது” வழங்கி சிறப்பிக்கப் பட்ட திராவிடர்கழக துணைத் தலைவர் கவிஞர்.கலி. பூங்குன்றன் அவர்களுக்கு கூட்டத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

4. நீட் தேர்வில்  சோதனை என்ற பெயரில் மாணவர் களை உளவியல் பாதிப்புக்குள்ளாக்கி குறிப்பாக மாண விகளை அவமானப்படுத்தி, உள்ளச் சிதைவை ஏற்படுத் திய மத்திய மருத்துவ தேர்வு குழுவிற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

5. சிறப்பாக செயல்படும் திராவிடர்கழக மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் மகளிர் களம் -2017 என்னும் ஓராண்டு செயல் திட்டத்தில் கோவை மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ள மகளிர் பயிற்சி வகுப்பு என்னும் ஓராண்டு களப்பணியினை சிறப்பாக செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

6. வருகிற மே 27 ல் திருச்சியில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ள மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் மற்றும் மகளிர் அணிவகுப்பு பேரணி, மகளிர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு வெற்றி பெற கழகத் தலைவர் வழிகாட்டுதலின்படி அனைவரும் குடும்பம், குடும்பமாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

7. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தது 100 மகளிர் தோழர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கழக பொறுப்பாளர்கள் தக்க ஏற்பாடுகளை செய்திட வேண்டு மென முடிவு செய்யப்பட்டது.

9. ஒவ்வொரு கழக மாவட்டமும் மாநாடு நன்கொடை நிதியாக குறைந்தது ரூ.10 ஆயிரம் வழங்கிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத்தின் நிறைவாக கழக மகளிரணியைச் சார்ந்த செ.முத்துமணி நன்றி கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner