Banner
முன்பு அடுத்து Page:

சிங்கப்பூரில் கொள்கை விழாவாக நடைபெற்றநூல் வெளியீட்டு விழா - தமிழர் தலைவர் பங்கேற்பு

சிங்கப்பூரில் கொள்கை விழாவாக நடைபெற்றநூல் வெளியீட்டு விழா - தமிழர் தலைவர் பங்கேற்பு

சிங்கப்பூரில் கொள்கை விழாவாக நடைபெற்றநூல் வெளியீட்டு விழா - தமிழர் தலைவர் பங்கேற்பு சிங்கப்பூர், ஜூலை 27- முடிச்சூர் மு.இரா. இளங்கோ எழுதிய தலைவர் கலைஞர் அவர்களின் வரலாற்றுச் சாதனை நூல் பகை வென்ற கலைஞருக்கு புகழ்மாலை தொண்ணூறு என்னும் நூலினை சிங்கப்பூரில் திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை ஆசிரியருமான மானமிகு கி. வீரமணி அவர்கள் வெளியிட, சிங்கப்பூர் செம்மொழி ஆசிரியரான இலியாஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சி சிங்கப்பூர் தேக்கா டன்லப்....... மேலும்

27 ஜூலை 2015 15:45:03

வேலூர் குடியாத்தத்தில் பச்சைத் தமிழர் காமராசர், இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்-படத்திறப்பு

வேலூர் குடியாத்தத்தில் பச்சைத் தமிழர் காமராசர், இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்-படத்திறப்பு

குடியாத்தம், ஜூலை 27_ வேலூர் மாவட்டம், குடியாத்தம் லிட்டில் பிள வர் மெட்ரிக் பள்ளியில் மாலை 5 மணியளவில் குடியாத்தம் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பச்சைத் தமிழர் கல்வி வள்ளல் காமராசர் மற் றும் தாத்தா இரட்டை மலை சீனிவாசன் ஆகி யோரின் உருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அ.நட ராஜன் தலைமை தாங்கி னார். வேலூர் மண்டலத் தலைவர் வி.சடகோபன்,....... மேலும்

27 ஜூலை 2015 15:12:03

வடசென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

வடசென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

சென்னை, ஜூலை 27_ வட சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி திரா விடர் கழகத்தின் சார்பில் காமராசரின் 113ஆவது பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. சென்னை பெரம்பூர் காந்தி சிலை அருகில் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் சுமதி கணேசன் தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் செம்பியம் கி. இராமலிங்கம் வரவேற் றார். மாவட்ட செயலா ளர் தே.ஒளிவண்ணன், சொ.அன்பு, கருங்குழி கண்ணன், கணேசன்....... மேலும்

27 ஜூலை 2015 15:11:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மே 15- பா.ஜ. தலைவர்கள் சமாதானத்தை ஏற்று கட்சியை விட்டு விலகும்  முடிவை தற்காலிகமாக ஒத்தி வைத் துள்ளதாக எடியூரப்பா நேற்று தெரிவித்தார்.

குவாரி நிறுவனத்திடம் அறக்கட் டளைக்கு நன்கொடை பெற்றது தொடர்பாக எடியூரப்பாவிடம் சிபிஅய் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் பதவி விலகல் கடிதத்தை அவரிடம் அளித்துள் ளனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியாவை புகழ்ந்து எடியூரப்பா பேசினார். நேற்று மாலை 4 மணிக்கு தனது முடிவை அறிவிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு அவர் அளித்த பேட்டி:

என்னிடம் 40 எம்எல்ஏக்கள் பதவி விலகல் கடிதம் அளித்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் 13 பேர் போனில் பேசி ஆதரவாக உள்ளதாக கூறியுள்ளனர். எனது ஆதரவாளர்களின் எண்ணிக்கை 71 ஆக உள்ளது.

எம்பிக்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். என்னை தொடர்புகொண்ட மடாதிபதிகள், பா.ஜனதா தலைவர்கள் மாநில நலனை கருத்தில் கொண்டும், நானே வளர்த்த கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உண்டு என்றும் வலியுறுத்தினர். எனவே, பா.ஜன தாவை விட்டு விலகும் எண்ணத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளேன்.

நான் மிரட்டல் அரசியல் செய் பவன் அல்ல. எனது ஆதரவாளர்கள் 6 அமைச்சர்களை அவமானப்படுத் தும் வகையில் பாஜ மாநில தலைவர், முதல்வர் கட்சி மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால் மக்களி டையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் பதவிக்கு வந்தபின் சதானந்தா ஒருமுறை கூட எம்எல் ஏக்கள் கூட்டத்தை கூட்டவில்லை. இரு தினங்களுக்கு முன் சித்ரதுர்கா எம்எல்ஏவை மிரட்டியுள்ளார். எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினால் உங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்துவதாக கூறியுள்ளார்.

எனது 40 ஆண்டு கால பொதுவாழ்க்கைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேட்டிகள் அளித்து வருகிறார். அவர் இது போன்ற நடவடிக்கைகளை கை விடவேண்டும். எம்எல்ஏக்கள் கூட் டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

என்னிடம்பதவி விலகல் கடிதம் அளித்துள்ள ஆதரவாளர்கள் மக்கள் பணிக்கு எவ்வித இடைஞ்சலும் இன்றி பணிகளை தொடரவேண்டும். பாஜவுக்கு நான் வேண்டுமா, வேண் டாமா என்பது குறித்து கட்சி மேலி டமே முடிவு செய்துகொள்ளட்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேட்டி யளித்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்