
அய்.பி.எல். கிரிக்கெட்டு சூதாட்டத்தைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுவை விட அதிகம் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப் பதைக் கண்டித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங் களில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை நாள்: 24.05.2013, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி, இடம்:....... மேலும்
21 மே 2013 15:42:03

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு சேலம், மே 21- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 19.5.2013 அன்று மாலை 6.30 மணிக்கு, மாநகர தலைவர் பூ.வடி வேலு இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவ கர் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் களை சிறப்பாக செயல் படுத்த வேண்டும் என் றும் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால்....... மேலும்
21 மே 2013 15:37:03

மதுரை, மே 21- நீதிபதி பொ.நடராசன் எழுதிய அகலட்டும் ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட் டம் கடந்த 15.5.2013 - புதன் கிழமை - மாலை 6 மணிக்கு மதுரை பெரி யார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோ ரியா ஹாலில் நடைபெற் றது. கூட்டத்திற்கு அகச் சுரப்பியல் நிபுணர் கு. கண்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன்ராசா, திரா விடர்....... மேலும்
21 மே 2013 15:36:03

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் நடைபெறும் இப்பட்டறையில் நமது தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகளை நடத்துகிறார். பேராசிரியர்ப் பெருமக்கள் தக்க வகையில் பாடங்களை நடத்துகிறார்கள். பேச்சுப் பயிற்சி, களப் பயிற்சி, கலைப் பயிற்சி, யோகா பயிற்சி, கணினிப் பயிற்சிவரை கிடைக்க வாய்ப்புண்டு. அன்னை மணியம்மையார் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பட்டறையில் பயிற்சி பெற்றோர் இயக்கத்தின் முக்கியப் பொறுப்புகளில் எல்லாம் இருக்கின்றனர். பலர் அரசுப் பணிகளில்....... மேலும்
21 மே 2013 15:16:03

ஆங்கிலப் பயிற்சி வகுப்பு முகாமில் சிறப்பு அழைப்பாளராக துளிர் அமைப்பி0ன் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சனி கலந்துகொண்டு உரையாற்றினார் (திருச்சி, 19.5.2013). திருச்சி, மே.20- சென்னை துளிர் அமைப்பும், திருச்சி பெரியார் மெட்ரிக் பள் ளியும் இணைந்து குழந் தைகளுக்கான ஆங்கில எளிய முறை பயிற்சி வகுப்பு பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகத் தில் நேற்று (19.5.2013) மாலை நடந்தது. இப்பயிற்சி வகுப் பிற்கு பெரியார் கல்வி நிறுவனங்களின் நிரு வாகக் குழுத்....... மேலும்
20 மே 2013 15:40:03

உலக தமிழர்களின் ஆதரவால்தான் ஈழத்தமிழர்களுக்கு விடியல் ஏற்படும்! தமிழர் தலைவர்நெருக்கடி காலத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர் ஆசிரியர் மு.க.ஸ்டாலின் தஞ்சை, மே 18- உலகத் தமிழர்களின் ஆதரவால் தான் ஈழத் தமிழர்களுக்கு விடியல் ஏற்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி உணர்ச்சிப் பேருரையாற்றினார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன் எழுதிய நுநடயஅ கூயஅடைள றடைட நேஎநச ஞநசளை என்ற ஆங்கில நூலும், இலட்சியப்....... மேலும்
18 மே 2013 18:45:06

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்! மேலும் வீரர்கள் சிக்குகின்றனர் சென்னையில் 6 தரகர்கள் கைது! 13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல் மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம்....... மேலும்
18 மே 2013 17:20:05

வல்லம், தஞ். மே 17- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மின் னணு தொலைத் தொடர்பு துறை, ஒளிபரப்பு பொறியாளர் கழகம் தஞ் சாவூர் பிரிவு மற்றும் பல்கலைக்கழக இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவை சார்பாக உலக தகவல் தொலைத் தொடர்பு நாள் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மின்னணு தொலைத் தொடர்பு துறை தலைவர் பேரா. வயலட் ஜூலி வரவேற்றார். ஓளிபரப்பு பொறியாளர்கள் கழகத்தின் தஞ்சை பிரிவு முதன்மை....... மேலும்
17 மே 2013 16:57:04

ஜூன் 9: வில்லிவாக்கத்தில் புரட்சிக் கவிஞர் விழாவட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு சென்னை, மே 15- வட சென்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கடந்த ஞாயிறன்று (12.5.13) மாலை 6 மணியளவில் நடைபெற்றது. வட சென்னை மாவட்ட ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை வகித்து உரையாற்றினார். இவ்வாண்டு....... மேலும்
15 மே 2013 17:00:05

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழாவளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் சிறப்பான பல்கலைக் கழகம் நீதியரசர் மோகன்மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் பல்கலைக் கழகம் வேந்தர் கி.வீரமணி வல்லம், மே 13- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லும் சிறப்பான பல்கலைக்கழகம் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா ஆண்டான 25 ஆவது ஆண்டு வேந்தர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற....... மேலும்
13 மே 2013 17:27:05

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் உரையாற்றினார். (15.8.2012)
திண்டுக்கல், ஆக.17-கோவை, ஈரோடு, மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் அடங்கிய மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் 15.8.2012 புதன் அன்று திண்டுக்கல் - நாகல்நகர், அழகர் - மீனாட்சி மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோரை வரவேற்று திண்டுக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தி.க. பாலு பேசினார். தொடக்கவுரையினை ஆற்றிய பகுத்தறி வாளர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் வீ.குமரேசன் தன் பேச்சில் குறிப்பிட்டதாவது:- நாட்டில் சமூக சீர்திருத்தம், முன்னேற்ற மாற்றங்கள் நடைபெறுவதற்கான விதத்தில் அழுத்தம் கொடுக்கும் அணுகுமுறையினை கடைப்பிடித்தல் பெரியார் இயக்கத்தின் தனிச் சிறப்பாகும். ஜாதிவாரி கணக்கெடுப்பாகட்டும், 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து நிலைபெறுவதற்கும், ஈழத்தமிழர் இன்னல் துடைக்க டெசோ அமைப்பினை மீள் உருவாக்கம் செய்வதிலும் பெரியார் இயக்கத்திற்கும் அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் பெரும்பங்கு உண்டு.
அவரைப் புரவலராகக் கொண்டு செயல்பட்டு வரும் பகுத்தறிவாளர் கழகம் அண்மைக் காலங்களில் வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டினரிடமும், தந்தை பெரியாரின் கருத்துகளை எடுத்துச்செல்லும் உலகமய மாக்கல் பணியில் சிரத்தை எடுத்து வருகிறது.
கடவுள் இல்லை எனும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கை முழக்கத்தின் மாண்பினை, அண்மையில் சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்து உரையாற்றிய நார்வே நாட்டு மனித நேயர் சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான் வெளிப்படுத்தினார். நார்வே நாட்டு தலைநகர் ஆங்லோவில் தந்தை பெரியாரைப் போன்று ஒரு நாத்திகர் சிலையினை அமைத்து, அதன் பீடத்தில் கடவுள் இல்லை கொள்கை முழக்கத்தினை பதிவு செய்வது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாது. பெரியார் இயக்கத்தின் பணி தமிழ்நாட்டில் மகத்தான சமூகப் பங்களிப்பினை அளித்துள்ளது என பாராட்டிப் பேசினார்.
அத்தகைய பெரியார் இயக்கத்தின் ஒரு செயல்தளமான பகுத்தறிவாளர் கழகத்தின் பணி மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர மற்றும் கிராம மட்டத்திலும் மேலும் செழுமைப்பட வேண்டும், வலுப்பட வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்துவதில் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் முனைப்புடன் ஈடுபட வேண்டும். அடுத்து கூட்டத்திற்கு தலைமை வகித்த பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் வா.நேரு தமது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்திட்டங்கள் பற்றி விரிவாகப் பேசினார்.
பல்வேறு போட்டிகள்
தந்தை பெரியாரின் 134ஆம் ஆண்டு பிறந்தநாளினையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றை மாவட்டங்கள்தோறும் முனைப்புடன் நடத்திட பொறுப்பாளர்கள் திட்டமிடவேண்டும். இத்தகைய நிகழ்ச்சிகள் பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாட்டுச் சிறப்பாக இருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டமும் இந்தச் சிறப்பிற்கு உரியது எனும் நிலை உருவாக வேண்டும். விடுதலை இதழுக்கான சந்தா சேகரிக்கும் பணியில் பெரியார் இயக்கத்தின் பிற அணியினரோடு இணைந்து பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பா ளர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். மேலும் வலுவாக அந்தப் பணியினை குறிக்கப்பட்ட கால வரையறைக்குள் செய்து முடித்து, தங்களது மாவட்ட பங்களிப்பினை தலைமையிடத்திற்கு தெரிவித்திட வேண்டும். மேலும் விடுதலை இதழ் வைப்பு நிதியாக பகுத்தறிவாளர் கழகத்தின் பங்களிப்பாக ரூ.1 லட்சம் அளிக்க உறுதிமொழி அளித்ததை நிறைவேற்றிட ஒவ்வொரு மாவட்டமும் தங்களது பங்களிப்பினை உடனே அளிக்க முன்வரவேண்டும்.
பின்னர் கலந்துகொண்ட - பகுத்தறிவளார் கழகப் பொறுப்பாளர்களான மு.நாகராசன் (திண்டுக்கல்) கோபி வெ.குமாரராஜா (திருப்பூர்), அ.மன்னர்மன்னன் (மதுரை புறநகர்), ஆ.முனியன் (கோவைநகர்), ஸ்டார் சா.நாகராசன் (தேனி), உ.சிவதாணு (கன்னியாகுமரி), சு.நயினார் (நெல்லை நகர்), ச.திராவிடச்செல்வன் (பழனி), ஆகியோர் தங்களது மாவட்ட சார்பாக நடத்தப்பட உள்ள நிகழ்ச்சிகள், கூட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர். மாநிலப் பொதுச்செயலாளர் வடசேரி இளங் கோவன், மாநில துணைத் தலைவர் க.நல்லதம்பி தங்களது கருத்துகளை வழங்கினர்.
திராவிடர் தொழிலாளர் பேரவையின் தலைவர் ஆ.நாகலிங்கம் பேசும்பொழுது, பேரவையின் உறுப்பினர்கள் அனைவரும் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும் என பேரவை தீர்மானம் வடித்ததை நினைவூட்டி, வலியுறுத்திப் பேசினார். பழனி மாவட்ட கழகத்தலைவர் வீர.கலாநிதி, திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா.வீரபாண்டி, செயலாளர் ப.யாழ்புலேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன் ஆகியோர் உரையாற்றினர். திண்டுக்கல் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் எம்.செல்வம் நன்றி கூறினார்.
கலந்துரையாடல் கூட்டத்திற்கான ஏற்பாடு களை திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தீர்மானங்கள்
1.தந்தை பெரியாரின் 134ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி நடத்திட வேண்டும்.
2. விடுதலை நாளிதழ் சந்தா சேகரிப்பினை விரைவாக முடித்து, தங்களது மாவட்ட பங்களிப் பினை தலைமையிடத்திற்கு தெரிவித்திடவேண்டும்.
3. விடுதலை வைப்புநிதியாக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக உறுதி அளித்த ரூ.1 லட்சத்திற்கு தங்களது மாவட்ட பங்களிப்பினை அளித்திட வேண்டும்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்
தூத்துக்குடி மாவட்ட தலைவர் : வசந்தகுமார்,
செயலாளர் : பெரியார்தாசன்,
தென்காசி மாவட்ட தலைவர் : சி.தங்கதுரை,
செயலாளர் : கே.டி.சி.ச.குரு சாமி,
நீலமலை மாவட்ட அமைப்பாளர் : இரா.வாசு தேவன்,
விருதுநகர் மாவட்ட செயலாளர் பாண்டி முருகன், திருப்பூர் மாவட்ட செயலாளர் க.மணி வண்ணன்,
அமைப்பாளர் : கணியூர் ஆறுமுகம்.
விடுதலை வைப்பு நிதி வழங்கியோர்
ரூ.
1. வா.நேரு 5000
2. கோபி வெ.குமாரராசா 1000
3. மன்னர்மன்னன் 1000
4. ஆ.முனியன் 1000
5. ச.திராவிடச்செல்வன் 2000
இயக்க இதழ்கள் சந்தா அளிப்பு
திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோபி வெ.குமாரராசா மூலமாக விடுதலை ஓராண்டு - 2 சந்தாக்கள் ரூ.2400
விடுதலைஅரையாண்டு -3 சந்தாக்கள் ரூ.1800
உண்மை ஓராண்டு - 2 சந்தாக்கள் ரூ.520
பெரியார் பிஞ்சு ஓராண்டு - 2 சந்தாக்கள் ரூ.200
கூடுதல் ரூ.4920