Banner
முன்பு அடுத்து Page:

பெரியார் 1000 போட்டியை சிறப்பாக நடத்த பல்வேறு மாவட்டங்கள் முடிவு

பெரியார் 1000 போட்டியை சிறப்பாக நடத்த பல்வேறு மாவட்டங்கள் முடிவு

வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட கழகத்தின் கலந்துறவாடல் கூட்டம் 20.7.2014 அன்று மாலை 4 மணிக்கு வேலூர் சத்துவாச்சாரி பெரியார் படிப்பகத்தில் மாவட்ட தலைவர் வி.சடகோபன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க.சிகாமணி, மாவட்ட அமைப்பாளர் ச.கி.செல்வநாதன் முன்னிலை வகித்தனர். விடுதலை சந்தா மாவட்ட ஒதுக்கீட்டினை ஒரு வாரத்திற்குள் நிறைவு செய்வது எனவும், பெரியார் 1000 வினா _ விடைப் போட்டியினை மாவட்டம் முழுவதும் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளி 5000....... மேலும்

23 ஜூலை 2014 15:36:03

50 ஆண்டுகளாக பெரியார் பாதையில் பயணிக்கும் கொள்கை குடும்பம்

50 ஆண்டுகளாக பெரியார் பாதையில் பயணிக்கும் கொள்கை குடும்பம்

டி.ஏ.ஜோதி - யசோதா ஆகியோரின் பொன்விழாவில் தமிழர் தலைவர் வாழ்த்து 20.7.2014 அன்று காலை 11 மணிக்கு காஞ்சிபுரம், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நினைவில் வாழும் பெரி யார் பெருந்தொண்டர் டிஏஜி அவர்களின் இள வலும், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் டிஏஜி அசோகன் அவர் களின் சிறிய தந்தையாரும் டிஏ ஜோதி _ யசோதா ஆகியோரின் பொன்விழா நிகழ்ச்சி தமிழர் தலைவரின் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட தி.க.தலைவர் டிஏஜி....... மேலும்

22 ஜூலை 2014 16:15:04

சென்னை பெரியார் திடலில் கழகப் பொறுப்பாளர்களுக்கு களப்பணி பயிற்சி முகாம்

சென்னை பெரியார் திடலில் கழகப் பொறுப்பாளர்களுக்கு களப்பணி பயிற்சி முகாம்

சென்னை பெரியார் திடலில் இன்று (20.7.2014) காலை சரியாக 10 மணியளவில் வடசென்னை, தென்சென்னை, ஆவடி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம் ஆகிய அய்ந்து மாவட்டங்களைச் சேர்ந்த கழகப் பொறுப்பாளர்களுக் கான களப்பணி பயிற்சி முகாமினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை கடவுள் மறுப்பு கூறினார். கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, மாநில மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள....... மேலும்

20 ஜூலை 2014 17:26:05

துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்

துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்

வேலூர் மாவட்ட கழக அமைப்பாளர் கருப்புச்சட்டை மா.சீ.பாலன் அவர்களின் துண்டறிக்கைப் பிரச்சாரம் பாரீர்நன்றி சொல்வீர்... பல ஆயிரம் ஆண்டு காலமாக நம் முன்னோர்கள் சொன்ன வார்த்தை.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? பொட்டப்புள்ள படிச்சு என்ன செய்யப் போகிறாள்? என்று பெண்களை ஏளனமாகவும், அலட்சியமாகவும் பேசி அவர்களை கல்வி கற்கவிடாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்தனர் நமது முன்னோர்கள். இக்கொடுமையினை கண்டு எரிமலையாய் கொதித்தெழுந்த பகுத்தறிவு தந்தை பெரியார், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை....... மேலும்

19 ஜூலை 2014 15:19:03

புதுச்சேரி கழக சார்பில் இலவச மோர் பந்தல்

புதுச்சேரி கழக சார்பில் இலவச மோர் பந்தல்

புதுச்சேரி, ஜூலை 17_ புதுவை மாநில திரா விடர் கழகம் சார்பில் 6.7.2014 அன்று காலை 11 மணியளவில் வெம்பா சீரப்பாளையம் அய்டிஅய் அருகில், ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் முகாமில் கலந்து கொள்பவர்க ளுக்கு இலவசமாக மோர் வழங்க ஏற்பாடு செய் யப்பட்டு வழங்கப்பட்டது. மோர் வழங்கும் நிகழ்ச் சிக்கு புதுவை மண்டல தி.க. தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழ கன், மாநில தி.க. இளை ஞரணி செயலாளர் இரா........ மேலும்

17 ஜூலை 2014 17:17:05

பெரியார் பெருந்தொண்டர் கோட்டூர் வீ.பாலசுப்ரமணியம் - ருக்மணியம்மாள் நினைவு கல்வி ஊக்கப்பரிசு

பெரியார் பெருந்தொண்டர்  கோட்டூர் வீ.பாலசுப்ரமணியம் - ருக்மணியம்மாள் நினைவு கல்வி ஊக்கப்பரிசு

கோட்டூர், ஜூலை, 17_ திராவிடர் கழக முன்னோ டியும், பெரியார் பெருந் தொண்டருமாகிய, மறைந்த கோட்டூர்  வீ. பாலசுப்ரமணியம்_-ருக் மணியம்மாள் நினைவாக, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளிகளில், அர சுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவர் களுக்கு, 2013_-2014 கல்வி ஆண்டுக்கான கல்வி ஊக் கப்பரிசு வழங்கப்பட்டது. சூலை 9- அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற எளிய விழாவில், 10ஆம் வகுப்பு,....... மேலும்

17 ஜூலை 2014 17:00:05

தமிழக மூதறிஞர் குழுவில் இணைப்பேராசிரியர் ப.தாமரைக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு

தமிழக மூதறிஞர் குழுவில் இணைப்பேராசிரியர் ப.தாமரைக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு

சென்னை, ஜூலை 15_ சென்னை பெரியார் திடலில் 12.7.2014 சனி மாலை 6.30 மணி அள வில் நடைபெற்ற தமிழக மூதறிஞர் குழு கூட்டத் தில் கலந்து கொண்டு திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத் தந்தை தமிழறிஞர் கால்டுவெல் லின் 200ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா என்ற பொருளில் சிறப்புரை ஆற்றிய சென்னை மாநி லக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பா.தாமரைக்கண்ணன் அவர்கள் தமிழறிஞர் கால்டு வெல் அவர்கள்....... மேலும்

15 ஜூலை 2014 17:07:05

பெரியார் 1000 வினா விடைப் போட்டிகளில் அதிக மாணவர்களை பங்கேற்கச் செய்ய முடிவு

பெரியார் 1000 வினா விடைப் போட்டிகளில் அதிக மாணவர்களை பங்கேற்கச் செய்ய முடிவு

திருத்துறைப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் ஆயக்காரன்புலம், ஜூலை 15_ திருத்துறைப்பூண்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 12.7.2014 அன்று மாலை 6 மணியளவில் ஆயக்காரன்புலம், காசிவீரம்மாள் திருமண அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் புரவலர் பெரியார் பெருந் தொண்டர் மா.மீனாட்சி சுந்தரம் தலைமை ஏற்றார். தொழிலதிபர் வேதாரண் யம் ஆர்.எஸ்.மணி, வணி கர் சங்கத் தலைவர் எஸ். எஸ்.தென்னரசு, கல்விக் கொடையாளர் வி.எஸ்........ மேலும்

15 ஜூலை 2014 16:30:04

கோவை மண்டல கழகப் பொறுப்பாளர்களுக்கு களப்பணி பயிற்சி முகாம்

கோவை மண்டல கழகப் பொறுப்பாளர்களுக்கு களப்பணி பயிற்சி முகாம்

மேட்டுப்பாளையம் அன்னபூர்ணா ஓட்டல் அரங்கில் இன்று (12.7.2014) காலை 10 மணியளவில் கோவை, திருப்பூர், தாராபுரம், மேட்டுப்பாளையம், நீலமலை ஆகிய அய்ந்து மாவட்டங்களைச் சேர்ந்த கழகப் பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சி முகாமினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர் வெள்ளியங்கிரி கடவுள் மறுப்பு கூறினார். கோவை மண்டல தலைவர் டாக்டர் கவுதமன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் சண்முகம், மண்டல செயலாளர் புலியகுளம் வீரமணி, கோவை....... மேலும்

12 ஜூலை 2014 15:10:03

சுயமரியாதைச் சுடரொளி நல்லாசிரியர் தண்டபாணி இறுதி நிகழ்வில் கலந்து கொண்டோர் விவரம்

சுயமரியாதைச் சுடரொளி நல்லாசிரியர் தண்டபாணி இறுதி நிகழ்வில் கலந்து கொண்டோர் விவரம்

சுயமரியாதைச் சுட ரொளி, மேனாள் மாவட்ட தி.க. தலைவர், நல்லாசிரியர் த.தண்டபாணி அவர்கள் 8.7.2014 அன்று மறை வுற்றார். இதையொட்டி இரங்கல் கூட்டம் (வீர வணக்க கூட்டம்) 9.7.2014 அன்று 11.30 மணி முதல் 12.45 மணி வரை நடை பெற்றது. இரங்கல் உரை கூட்ட தலைவராக திண்டிவனம் மாவட்ட தி.க. தலைவர் க.மு.தாஸ் பொறுப்பேற்று நடத்தி தந்தார். அவ்வமயம் நல்லாசிரி யர் த.தண்டபாணி அவர் களின் சிறப்புகளை நினைவு கூர்ந்து....... மேலும்

10 ஜூலை 2014 16:26:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை மாநகர் செல்லூரில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு பட்டிமன்றம்

மதுரை, பிப்.5-மதுரை மாநகர் செல்லூரில்  திராவிடர் கழகத்தின் சார்பாக,தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு  திராவிட ருக்கு எதிரான பண் பாட்டுப் படையெடுப் புக்கு மூல காரணம் சமூக ரீதியாலா? அரசி யல் ரீதியாலா ? எனும் தலைப்பில் பட்டிமன் றம் 20.1.2012 வெள்ளிக் கிழமை மாலை நடை பெற்றது. நிகழ்வுக்கு திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர்  இரா.திருப்பதி  தலைமை தாங்கினார். தி.க. பகுதி செயலாளர் நா.விடுதலை ராசா  வர வேற்றார்.

பகுத்தறிவா ளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தொடக்க உரையாற்றினார்.  பட்டி மன்றத்தின் நடுவராக திராவிடர் கழகத்தின் சட்டத்துறை தலைவர் வழக்கறிஞர் கி.மகேந் திரன் பொறுப்பேற்று நடத்தினார். சமூக ரீதி யால் என்னும் தலைப் பில் தலைமைக் கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகனும், கழக சொற்பொழி வாளர் அ.வேங்கை மாறனும் சிறப்பாக உரையாற்றினர். அரசியல் ரீதியால் என்னும் தலைப்பில் கழக சொற் பொழிவாளர்கள் இரா.பெரியார் செல்வ னும், என்.ஆர்.எஸ்.பிராட் லாவும்  சிறப்பாக உரை யாற்றினர். மக்கள் திர ளாகத் திரண்டு பட்டிமன் றத்தைக் கேட்டனர்.  நிகழ்வில் தி.க.தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா, தி.க. மண்டலத்தலைவர் வே. செல்வம், செயலாளர் மீ.அழகர்சாமி,  நெல்லை மண்டல தலைவர் பொறி யாளர் சி.மனோகரன்,தி.க. புறநகர் மாவட்ட தலை வர் மா.பவுன்ராசா, பெ. தனசேகரன், இளைஞர் அணி செயலாளர் இராசா, அமைப்பாளர் இரா.முத் தையா, தி.க. மாவட்ட அமைப்பாளர்  ந.முரு கேசன், ப.க. மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, புறநகர் மாவட்டத் தலைவர் அ.மன்னர் மன் னன், . ந.இராசேந்திரன், ச.நாகராசன், வழக்கறி ஞர் பி.கே.இராசேந் திரன்,க.சிவா, வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி ,புதூர் பாக்கியம்,அனுப் பானடி பவுன்ராசா, ந.இராஜேந் திரன், இரா.இளங்கோ, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அஜீதா, ராக்கு தங்கம், நாக லெட்சுமி, லிங்கம், ந. சண்முகம், மு.பாண்டி, சாக்ரடீசு, ராசா சேகர், பழனி, மகேந்திரன் மற் றும் பலர் கலந்து கொண் டனர். புதுவை மாநில மறுமலர்ச்சி தி.மு.கழக பொறுப்புக்குழு உறுப் பினரும், பெரியார் அறி வியல் மன்ற நிறுவன ருமான தோழர். தூ.சட கோபன் அவர்களின் துணைவியார் திருமதி. ச.திலகவதி அவர்கள் 29.12.2011அன்று இயற்கை எய்தியதை அடுத்து நடைபெற்ற படத்திறப்பு அஞ்சலி நிகழ்வில், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் துரை.சந்திர சேகரன் மற்றும் அவ ரதுமனைவியார், புதுவை மாநில பொறுப் பாளர் கே.குமார் மற் றும் பல திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்