முன்பு அடுத்து Page:

சென்னையில் 27.4.2019 சனியன்று திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக்…

சென்னையில் 27.4.2019  சனியன்று  திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக் கூட்டம்

நாள் : 27.4.2019 சனியன்று காலை சரியாக 10 மணி இடம் : பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொருள்: கழகத்தின் எதிர்காலப் பணி திட்டமிடுதல் மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட கழக தலைவர் செயலாளர்கள் மட்டும் அவசியம் பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறோம். சட்டத் துறையினரும் கலந்து கொள்க! - & கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் மேலும்

23 ஏப்ரல் 2019 16:42:04

"நான் நிறையப் புத்தகங்களைப் படித்ததால்தான்; இன்னும் நிறையப் புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்றே தெரிந…

அறிஞர் சாக்ரட்டீசின் அனுபவத்தைக் குறிப்பிட்டு, கவிஞர் நெல்லை ஜெயந்தா உரைவீச்சு! சென்னை. ஏப். 23 சென்னை புத்தகச் சங்கமத்தில் மூன் றாம் நாள் உரையரங்கில் கவிஞர் நெல்லை ஜெயந்தா வாசிப்பைச் சுவாசிப்போம்! என்ற தலைப்பில் தன்னு டைய வாசிப்பு அனுபவங்களை சுவையாகப் பகிர்ந்து கொண்டார். பொதுவாக இன்றைய இளைய சமுகத்திடம் வாசிப்புத் திறன் குறைந்துகொண்டே செல்கிறது என்கின்ற ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது. அதில் ஓரளவு உண்மையிருக்கலாம். ஆனால், புத்தகங்களின்....... மேலும்

23 ஏப்ரல் 2019 15:54:03

கவுரா இல்லத் திருமண விழா - தமிழர் தலைவர் வாழ்த்து

கவுரா இல்லத் திருமண விழா - தமிழர் தலைவர் வாழ்த்து

ராஜசேகரன் & -கவுமாரீஸ்வரி மகன் கவுதம் ஜீனாவுக்கும், சிவானந்தம் & பத்மாவதி மகள் உமாசிறீக்கும் இணையேற்பு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். (சென்னை 22.4.2019) மேலும்

22 ஏப்ரல் 2019 16:22:04

டிஜிட்டல் உலகம் எதிர்காலத்தில் நம்மையும் ஒரு ரோபோவாக மாற்றிவிடும்! திறன்பேசியை ஆக்கத்திற்கு பயன்படுத…

டிஜிட்டல் உலகம் எதிர்காலத்தில் நம்மையும் ஒரு ரோபோவாக மாற்றிவிடும்! திறன்பேசியை ஆக்கத்திற்கு பயன்படுத்தலாம் - புத்தகங்களைப் படிக்க வேண்டும்!

சென்னை புத்தகச் சங்கமத்தில் நடைபெற்ற அர்த்தமுள்ள விவாத அரங்கம்! கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் விவாதத்தில் பங்கேற்றவர்களுக்கும், நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளருக்கும் இயக்கப் புத்தகங்களைக் கொடுத்து சிறப்பு செய்தார். சென்னை, ஏப்.22, சென்னை புத்தகச் சங்கமத்தின் இரண்டாம் நாள் மாலைநேரக் கருத்தரங்கில் இளம் படைப் பாளிகள், வாசகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இன்றைய இளைய சமுகம் புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடினர். சென்னை....... மேலும்

22 ஏப்ரல் 2019 15:00:03

புத்தகத் திருவிழா, திரைப்படத் திருவிழா, குழந்தைகள் திருவிழா மூன்றும் ஒன்றாகச் சங்கமித்த சென்னை புத்த…

புத்தகத் திருவிழா, திரைப்படத் திருவிழா, குழந்தைகள் திருவிழா மூன்றும் ஒன்றாகச் சங்கமித்த சென்னை புத்தகச் சங்கமம்!

சென்னை, ஏப்.21  உலக புத்தக நாளை ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றி, அதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை நேசிக்க வைப்ப தற்காக தொடங்கப்பட்டது சென்னை புத்தகச் சங்கமம். நேற்று (20.4..2019) சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் 7 ஆவது சென்னை புத்தகச் சங்க மத்தைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கலந்து கொண்ட நீதியரசர், அபிராமி ராமநாதன், வரியியல் அறிஞர் இராசரத்தினம் ஆகியோருக்கு தமிழர் தலைவர்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:39:04

எஸ்கேஅய் என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு வல்லம், ஏப்.20 ஆசியாவிலேயே முதல் முறையாக முற்றிலும் மாணவி யர்களே தயாரித்த எஸ்கேஅய்  என்எஸ் எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள் 21.04.2019 ஞாயிறு காலை 10 மணி அளவில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழக திறந்தவெளி மைதானத்திலிருந்து விண் ணில் செலுத்தப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:36:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறந்தாங்கி: படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர்

அறந்தாங்கி, பிப்.12 தலைமை - கொள்கை - இயக்கம் இந்த மூன் றுக்கும் எடுத்துக்காட்டானவர்தான் இங்கே படமாக இருக்கின்ற பெரியார் பெருந்தொண்டர் அய்யா கண்ணுச்சாமி அவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

படத்திறப்பு - நினைவேந்தல் உரை

11.1.2019 அன்று அறந்தாங்கியில் மறைந்த பெரியார் பெருந் தொண்டர் கண்ணுச்சாமி அவர்களின் படத்தினை திறந்து   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மிகுந்த துன்பத்திற்கும், துயரத்திற்கும் இடையே சங்கடப்பட்ட ஒரு சோகமான சூழ்நிலையில், உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய இந்த நிகழ்வாக, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஒரு கொள்கை வீரர்; இறுதிவரை தன்னுடைய லட்சியப் பாதையை மாற்றிக் கொள்ளாத முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு அய்யா கண்ணுச்சாமி அவர்களுடைய நினைவேந்தல் - அவருக்கு வீர வணக்கம் செலுத்துதல், அதேபோல, அந்தக் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லுதல் இவைகளையெல்லாம் உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பாக தலைமையேற்று இருக்கக்கூடிய இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களே,

அய்யா கண்ணுச்சாமி அவர்களுடைய படத்திறப்பு நிகழ்வில், நேரிடையான சோகத்திற்கு ஆளாகி இருக்கக்கூடிய சரோஜா அம்மையார் அவர்களே,

அவருடைய கொள்கை உறவுக் குடும்பம் ஒரு பக்கம்; ரத்த உறவுக் குடும்பம் மறுபக்கம் என்று சொல்லக்கூடிய அளவில், ரத்த உறவான பேரன், பேத்திகள் உள்பட அனைத்து உறவினர் பெருமக்களே,

இந்நிகழ்வில் கொள்கை உறவுகளாக இங்கே வந்து அவருக்கு வீர வணக்கம் செலுத்த வந்திருக்கின்ற மண்டல தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு இராவணன் அவர்களே,

அறந்தாங்கி மாவட்டத் தலைவர் செயல்வீரர் மாரிமுத்து அவர்களே, மாவட்டச் செயலாளர் இளங்கோ அவர்களே, புதுகை மாவட்டத் தலைவர் அறிவொளி அவர்களே, புதுகை மாவட்டச் செயலாளர் தோழர் வீரப்பன் அவர்களே, திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கிய ராஜ் அவர்களே, மாநில அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம் அவர்களே, சிவகங்கை மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி அவர்களே, பட்டுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பேராவூரணி தோழர் சிதம்பரம் அவர்களே, சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்வமணி அவர்களே, காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் வைகறை அவர்களே, ஓய்வூதிய சங்க மாவட்டத் தலைவர் பெரியவர் சுப்பையா அவர்களே, நகரத் தலைவர் பெரியவர் பன்னீர்செல்வம் அவர்களே, மாவட்ட இளைஞரணி செயலாளர் யோகராஜா அவர்களே, புதுக்கோட்டை மாவட்டத்தின் மேனாள் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான அய்யா புஷ்பநாதன் அவர்களே, கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களே, காரைக்குடி மாவட்ட துணை செயலாளர்  பழனிவேல் அவர்களே, பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களே, வந்திருக்கின்ற அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே, இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, அய்யா கண்ணுச்சாமி அவர்க ளுடைய நட்பு, அவருடைய தொண்டறம் இவைகளைப் பாராட்டி, அவருக்கு வீர வணக்கம் செலுத்தவேண்டும் என்று வந்திருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

91 ஆம் வயதில்

மறைந்திருக்கின்றார்

அய்யா முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்  இன்றைக்குப் படமாகவும், பாடமாகவும் நமக்கு அமைந்திருக்கக்கூடிய கண்ணுச்சாமி அவர்கள், தன்னுடைய 90 வயதைத் தாண்டி, 91 ஆம் வயதில் மறைந்திருக்கின்றார்.

ஒரு நிறைவு வாழ்வு வாழ்ந்திருக்கிறாரே என்பதற்காக, நாம் அவருடைய இழப்பை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. காரணம் என்னவென்று சொன்னால், இப்படிப்பட்ட கொள்கையாளர்கள் எத்தனை ஆண்டுகாலம், எத்தனையோ தியாகத்தை, எதிர்ப்பையெல்லாம் பெரியார் தொண்டர்களாக இருக்கின்ற காரணத்தினால், கருப்புச் சட்டை அணிந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் ஏற்றிருக்கிறார்கள்.

இளைய தலைமுறை இன்றைக்கு சிறப்பாக வந்து கொண் டிருக்கின்றது என்பது நமக்கெல்லாம் நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒன்றாக இருந்தாலும், அவர்கள் போட்ட பாதைதான், அவர்கள் ஏற்படுத்திய அஸ்திவாரம்தான் நாம் இந்த மேடையை அலங்கரித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருக்கின்றோம்.

இத்தனைப் பகுதிகளிலிருந்து அவரைப் பாராட்ட, அவரு டைய  தொண்டை நினைவுகூர வந்திருக்கிறார்கள்.

நான் குறிப்பாக, அம்மா அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும்; இந்தக் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் இங்கே நான் வந்திருக் கிறேன்.

என்னுடைய உடல்நலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக...

இங்கே நண்பர் இராவணன் அவர்கள் சொன்னதைப்போல, கழகப் பொதுச்செயலாளர், தலைமை நிலையத்தைச் சேர்ந்த வர்கள்தான் தேதி கொடுப்பார்கள். மருத்துவர்களும், மற்றவர் களும் என்னுடைய சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொள்ள சொன்னவுடன், எனக்கு அலைச்சல் ஏற்படக்கூடாது; உடல்நலம் பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் அப்படி சொன்னவுடன், மிகக் கடுமையாக, ‘‘தேதியை நீங்கள் கொடுக்காதீர்கள்; நீங்கள் எல்லோருக்கும் தலையாட்டி விடுகிறீர்கள்; ஆகவே, இனிமேல் உங்களுடைய தேதியை நாங்கள்தான் கொடுப்போம்'' என்று சொல்லி,  நான் சுற்றுப்பயணம் செய்யவேண்டிய தகவல்கள் எல்லாம் தலைமைக் கழகத்திற்குத்தான் தெரியும். எனக்கு எந்த நிகழ்ச்சி என்றைக்கு என்றுகூட தெரியாது. நான் பணியாற்றிக் கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய அய்யா கண்ணுச்சாமி அவர்கள் மறைந்தார் என்ற தகவலைக் கேட்டபொழுது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

ஏனென்றால், நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் வரும்பொழுதுகூட சொல்லிக்கொண்டே வந்தார். இறப்பதற்கு முதல் நாள்கூட, அவர் என்னிடம் பேசினார் என்று சொன்னார்.

அதுதான் இயல்பு - இயற்கை. உறங்குவது போல சாக்காடு; உறங்கி விழிப்பது போலவும் பிறப்பு என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப்பில், இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டதே என்கிற அதிர்ச்சி.

பொதுநல தொண்டராக, மக்கள் தொண்டராக, தொண்டறம் செய்யக்கூடிய செம்மலாக...

அவர் நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார்; அவருடைய குடும்பம் நமக்கு ஒத்துழைக்கிறது என்பது மட்டுமல்ல, இயக்கத்திற்கு மட்டுமல்ல, இந்த அறந்தாங்கியைப் பொறுத்தவரையில், எல்லா பொதுக்காரியங்கள், பொது நிகழ்வுகள், பள்ளிகள் போன்றவைகளாக இருந்தாலும், அய்யா கண்ணுச்சாமி அவர்கள் நல்ல பொதுநல தொண்டராக, மக்கள் தொண்டராக, தொண்டறம் செய்யக்கூடிய செம்மலாக அவர்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்ததினால், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட சான்றோர்கள், அவர்களை இன்றைக்கும் மதித்து, அவருடைய தொண்டிற்கு தலைவணங்கக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், அவருடைய உழைப்பினால் சொத்து களை சேர்த்து வைத்திருந்தாலும், எந்த சொத்து அவருடைய சொத்தாகவே இருக்கும் என்பதை அய்யா அவர்கள் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

சொத்தை பொதுவாக ஆக்கினால்தான்...

நாம் எவ்வளவுதான் சொத்து சேர்த்திருந்தாலும், அந்த சொத்து கடைசி வரையில் அவருடைய சொத்தாக இருக்கவேண்டும் என்றால், அந்த சொத்தை பொதுவாக ஆக்கினால்தான், அந்த சொத்து அவருடைய சொத்தாக இருக்கும்.

இல்லையென்றால், அடுத்ததாக மகன் சொத்து; அடுத்ததாக பேரன் சொத்து; இவர்கள் யாராவது அந்த சொத்தை விற்றுவிட் டால், வாங்கியவருடைய சொத்து என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கும்.

ஆனால், பொதுக் காரியம் செய்யும்பொழுது, அவருடைய சொத்தாகவே இருக்கும் என்பார்.

அந்த எண்ணத்தில்தான் நம்முடைய அய்யா கண்ணுச்சாமி அவர்கள் பொதுக்காரியத்தில் ஊறிப் போனவர். என்னை அழைத்து வந்து, அய்யா நங்கள் இந்த இடத்தை எழுதிக் கொடுக்கிறோம். இதில், படிப்பகம் வரவேண்டும்; நம்முடைய அறக்கட்டளைக்குப் பயன்படக்கூடிய அளவில், இந்த இடம் பயன்படவேண்டும் என்று சொன்னார்.

அவருக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டவுடன், அவரை சென்னைக்கு வரச் சொன்னேன். கிட்டத்த 20 ஆண்டுகள் இருக்கலாம். நான் பார்க்கின்ற டாக்டரிடமே அவரை அழைத்துச் சென்றேன். ஏனென்றால், நல்ல அனுபவம் உள்ள ஒரு டாக்டர் அவர். அரசு மருத்துவமனையில் தலைமை அதிகாரியாக இருந்தவர். அவரிடம் இவரை அழைத்துச் சென்று, டாக்டர் எங்கள் இயக்கத்தில் மிகவும் முக்கியமானவர் அய்யா கண்ணுச்சாமி அவர்கள் என்று சொன்னேன்.

இவரை பரிசோதித்துவிட்டு, மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்தார்.

அய்யா கண்ணுச்சாமி அவர்களைப் பார்க்கும்பொழுது நான், அய்யா மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு வருகிறீர்களா? என்று கேட்பேன்.

நான் கடைபிடித்து வருகிறேன் என்று சொல்வார்.

15, 20 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் சரியில் லாமல் ஆகி, பின்பு குணமானார்.

யாரையும் இணையாக சொல்லவே முடியாத அளவிற்கு எடுத்துக்காட்டானவர்

ஆனாலும், முதுமை அவருக்கு வந்தாலும்கூட, அவருடைய கொள்கை உறுதி என்பதற்கு யாரையும் இணையாக சொல்லவே முடியாத அளவிற்கு ஓர் எடுத்துக்காட்டானவர்.

அதனால்தான், எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், நான் இங்கே வந்ததே அவருக்கு இறுதி மரியாதையை செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.

தலைமை நிலையத்தில், என்னிடம் வருத்தத்தோடு சொன் னார்கள்; நீங்கள் ஒப்புக்கொண்டீர்களே, எப்படி போய்விட்டு வருவீர்கள்?அறந்தாங்கி இவ்வளவு தூரம் இருக்கிறதே? உடனே நீங்கள் சென்னைக்குத் திரும்பவேண்டுமே என்றார்கள்.

ரத்தத்தைவிட கெட்டியானது

கொள்கை உறவு!

எனக்கு என்னதான் கஷ்டங்கள் ஏற்பட்டாலும், அய்யா கண்ணுச்சாமி அவருக்கு மரியாதை செலுத்தவேண்டும். எங்களுக்கு உறவு என்றால், எங்களுக்கு ரத்த உறவு என்பது முக்கியமல்ல; கொள்கை உறவுதான் மிகவும் முக்கியமானது.

தண்ணீரைவிட ரத்தம் கெட்டியானது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஆனால், பெரியார் தொண்டர்களாகிய நாங்கள் ஒன்றை சொல்கிறோம்,

‘‘ரத்தத்தைவிட கெட்டியானது ஒன்று இருக்கிறது; அதுதான் கருப்புச் சட்டை; அதுதான் கொள்கை உறவு; அதுதான் லட்சிய உறவு.''

போர்ப் படைத்தளபதி போன்றவர்கள்

இப்பொழுது போர் நடந்துகொண்டிருக்கிறது; ஒரு புதிய சமுதாய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது நாட்டில்; இந்த சமுதாய போராட்டத்தில், அய்யா கண்ணுச்சாமி அவர்கள் எல்லாம் போர்ப் படைத்தளபதி போன்றவர்கள்; அவர்கள் நேரி டையாக போரில் இறங்க முடிகிறதோ இல்லையோ?  வழிகாட்டக் கூடியவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் நீண்ட நாள் வாழவேண்டும் என்று நினைத்தோம் நாங்கள். 90 வயது தாண்டிய பெரியார் பெருந்தொண்டர்களின் பட்டியலில், அய்யா கண்ணுச்சாமி அவர்கள் சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அவருக்கு சிறப்பு செய்தோம். மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

விழாவில் பங்கேற்ற பெரியார் பெருந்தொண்டர்கள் விழா முடிந்து பத்திரமாக இல்லத்திற்குச் சென்றார்களா என்பதை நம்முடைய பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் தனிக் கவனம் செலுத்தினார். தோழர்களும் அவருக்குப் பக்க பலமாக பணியாற்றினார்கள்.

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு

பாராட்டு விழா!

விழாவிற்கு வரும்பொழுது 90 வயதில் தடி ஊன்றியோ, ஒருவரை பிடித்துக்கொண்டே வந்தவர்கள், விழா முடிந்து திரும்பிப் போகும்பொழுது, தனியாகவே நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு 10 வயது குறைந்தது போல் அவர்கள் எண்ணினார்கள். நாங்கள் எதற்காக அந்த விழாவினை நடத்தினோமோ, அந்த நோக்கம் நிறைவேறியது.

தந்தை பெரியார் அவர்களிடம், லட்சியத் தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று கேட்டபொழுது,

புத்தருடைய மூன்று வாசகங்களை சொல்லி, அதற்கு விளக்கம் சொன்னார்.

புத்தர் என்றால், வேறொன்றுமில்லை. வடநாட்டு சுற்றுப் பயணம் செய்யும்பொழுது அய்யா சொன்னாராம், புத்தர் என் றால், எவன் புத்தியைப் பயன்படுத்தினாலோ அவன்தான் புத்தன் என்றாராம்.

யார் யார் புத்தியைப் பயன்படுத்துகிறீர்களோ அவர்கள் அத்துணை பேரும் புத்தன்தான்!

இலங்கை பவுத்த சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் நான் அய்யாவை ஒப்பிட்டு, 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற புத்தர் என்று பேசினேன்.

நான் பேசிய பிறகு அய்யா உரையாற்றத் தொடங்கும்பொழுது அதற்குப் பதில் சொன்னார். என்னை மட்டும் புத்தன் என்று சொல்லாதீர்கள்; நான் மட்டுமா புத்தன். யார் யார் புத்தியைப் பயன்படுத்துகிறீர்களோ அவர்கள் அத்துணை பேரும் புத்தன் தான் என்றார்.

நாங்கள் வடநாட்டு சுற்றுப்பயணம் செய்யும்பொழுது, டில்லிக்குச் சென்றிருந்தோம்.

ஒரு செய்தியாளர் அய்யா பெரியாரிடம், ‘‘அய்யா நீங்கள் மதத்தை ஏற்காதவர்கள்; ஆனால், புத்தரை ஆதரிக்கிறீர்களே? அது புத்தம் மதம் அல்லவா?'' என்றார்.

அது மதமல்ல; மார்க்கம்; அது நெறி. பகுத்தறிவு நெறி. கடவுளை ஒப்புக்கொள்ளாதவர்கள்; ஆத்மாவை ஒப்புக்கொள்ளாதவர்கள்; ஜாதியை ஏற்றுக்கொள்ளாதவர்கள்; பெண்ணடிமையை நீக்கிய வர்கள் என்றார்.

அப்படி என்றால்,

புத்தம் சரணம் கச்சாமி,

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்று சொல்லி, கீழே விழுந்து எழுந்திருக்கிறார்களே அய்யா, அது சடங்கல்லவா? அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்கிறீர்கள்? என்று ஆங்கில பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதை நான்தான் அய்யா அவர்கள் தமிழில் சொன்னதை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்னேன் 1958 ஆம் ஆண்டு.

தந்தை பெரியாரின்

அருமையான விளக்கம்

அய்யா அவர்கள் பளிச்சென்று சொன்னார்; நீங்கள் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

புத்தம் சரணம் கச்சாமி  என்றால், ஒரு தலைமையிடம் உன்னை ஒப்படைத்துக் கொள்!

தம்மம் சரணம் கச்சாமி என்றால், அந்தக் கொள்கைக்கு விசுவாசமாக நடந்துகொள். தம்மம் என்றால், கொள்கை.

சங்கம் சரணம் கச்சாமி என்றால், அந்த இயக்கத்திற்குத் துரோகம் செய்யாமல் இருக்கவேண்டும்.

மூன்றுக்கும் எடுத்துக்காட்டானவர்தான்

அய்யா கண்ணுச்சாமி!

தலைமை - கொள்கை - இயக்கம் இந்த மூன்றுக்கும் எடுத்துக்காட்டானவர்தான் இங்கே படமாக இருக்கின்ற அய்யா கண்ணுச்சாமி அவர்கள்.

அவருக்குத் தலைவர் தந்தை பெரியார்;

அவருக்குக் கொள்கை சுயமரியாதைக் கொள்கை. கருப்புச் சட்டையை இந்த வயதிலும் அணிந்துகொண்டு கம்பீரமாக நடந்தவர்.

அடுத்ததாக, இயக்கம். இயக்கத்தில் யார் செயல்படு கிறார்களோ, அவர்களுக்கு எல்லா வகையிலும் ஊக்கமளித்தார். அதனுடைய விளைவுதான், அவருக்குப் பிறகும் பயன்பட வேண்டும் என்பதற்காக, இயக்கத்திற்கு, பெரியார் அறக்கட் டளைக்கு  அவர்கள் எழுதிக் கொடுத்த இடம் இங்கே இருக் கிறது. சென்ற முறை கூட்டத்திற்கு இங்கே வந்தபோதுகூட, அதையெல்லாம் பார்வையிட்டு, திட்டமிட்டு, அங்கே கட்டடம் கட்டவேண்டும் என்று முடிவு செய்து, அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டோம்.

கண்ணுச்சாமி நினைவு படிப்பகம்

ஒரே ஒரு குறைபாடுதான்; அய்யா கண்ணுச்சாமி அவர்களை வைத்து அந்தக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டவேண்டும் என்று நினைத்தோம். அதுமட்டும்தான் இப்பொழுது நடக்காத சூழல் ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும், அவருடைய நினைவைப் போற்றவேண்டும் என்பதற்காக, பெரியார் நிலையமாக அந்த அமைப்பு உருவானாலும், கண்ணுச்சாமி நினைவு படிப்பக மாகதான் அந்தக் கட்டடம் இடம்பெறும். விரைவில் அந்தக் கட்டடப் பணிகள் இங்கே தொடங்கும்.

என்றென்றைக்கும் வாழக்கூடியவர்!

ஆகவே, கண்ணுச்சாமி அவர்கள், இந்த வட்டாரத்தைப் பொறுத்தவரையில், நம்மைப் பொறுத்தவரையில், அறந்தாங் கியைப் பொறுத்தவரையில் என்றென்றைக்கும் வாழக்கூடியவரே தவிர, அவர் மறைந்தவரில்லை; மறைந்தவராக ஒருபோதும் மாறமாட்டார்; அவர் நிறை வாழ்வு வாழ்ந்திருக்கிறார் என்பதை நினைத்து ஆறுதல் அடையுங்கள் என்பதை எடுத்துச் சொல்லி உங்களிடமிருந்து அவசரமாக நான் விடைபெற வேண்டியவனாக இருக்கிறேன்.

இந்தக் குறுகிய கால அறிவிப்பில், இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள்; உங்கள் எல்லோருக்கும் நன்றி.

ஒரே ஒரு வேண்டுகோள் இந்தக் குடும்பத்திற்கு - அய்யா கண்ணுச்சாமி அவர்கள் இருந்த நேரத்தில், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எப்படியெல்லாம் அவர்கள் அன் போடு இயக்கத்தோடு உறுதியாக இருந்தார்களோ, அதுபோல, அம்மையார் அவர்கள் கருப்பு சேலை அணிந்து கொண்டு வந்தி ருக்கிறார்கள். அதேபோல, பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இந்த இயக்கத்திற்கும், உங்களுக்கும் அய்யா அவர்கள் இருந்தபொழுது என்ன தொடர்பு இருந்ததோ, அதே தொடர்பு நீடிக்கவேண்டும். அவர்களை நாங்கள் எப்படி கவனித்தோமோ, அதே அன்பை இயக்கத் தலைமை உங்களிடம் காட்டும்.

கொள்கை உறவாக

என்றைக்கும் நீடிக்கும்

எல்லா வகையிலும், அந்தக் குடும்பத்தினுடைய உறவு, கொள்கை உறவாக என்றைக்கும் நீடிக்கும் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விரைவில் அந்தக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். அய்யா இல்லை என்றாலும், அம்மையார் இருக்கிறார்; மற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தினர் முன்னிலையிலும், இயக்கக் கொள்கை உறவுகள் முன்னிலையிலும் விரைவில் அந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறி விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வாழ்க கண்ணுச்சாமி அவர்கள்!!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலுரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner