முன்பு அடுத்து Page:

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படவேண்டும் என்ற கோரிக்கை இயக்கத்தை ஆசிரிய…

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படவேண்டும் என்ற  கோரிக்கை இயக்கத்தை ஆசிரியரும் - வைகோவும் தொடங்கவேண்டும்!

நீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழாவில் பேராசிரியர் அ.இராமசாமி உரை சென்னை, டிச.15 தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலே செயல்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, ஒரு இயக்கத்தை அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களும், சகோதரர் வைகோ அவர்களும் தொடங்கவேண்டும் என்றார் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய தலைவர் முனைவர் அ. இராமசாமி அவர்கள். நீதிக்கட்சியின் 102 ஆம் ஆண்டு நிறைவு விழா 20.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா....... மேலும்

15 டிசம்பர் 2018 14:34:02

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...

ஏன் அவர் பெரியார்? பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்...

வழக்குரைஞர் கிருபா முனுசாமி 1938-இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கூடிய பெண்கள் கூட்டத்தைப் பார்த்து “என் மனம் நிலைகொள்ளா மகிழ்ச்சி யடைகிறது” என்றார் தந்தை பெரியார். அதுபோல, ஏன் அவர் பெரியார்? என்பதை, பெரியார் திடலில், அதுவும் பெரியாரின் பிறந்த நாளன்று பேசுவதை எண்ணும் போது என் மனமும் நிலைகொள்ளா மகிழ்ச்சி யடைகிறது. சென்னை பெரம்பூரில் பெண் தலைவர் ஒருவர் தலைமையிலும், பெரியார் தலைமை யிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெறுகிறது. கடுமையான....... மேலும்

15 டிசம்பர் 2018 12:52:12

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 10 மணி         - நெய்குன்னம் சு. நடராசன் இல்லத்தில் இரங்கல் காலை 11 மணி         - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்     படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்  - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை    திருமண வரவேற்பு : திருவாளர் மோகன் - சரோஜா இளங்கோவன்  குடும்பத்தினர் மாலை 4.30 மணி  ....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 11 மணி - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்   பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்    படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்   - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை     திருவாளர் மோகன் - சரோஜா இணையர்  குடும்ப மணவிழா வரவேற்பு மாலை 4.30 மணி     - திருச்சி பெரியார் மருந்தியல்   கல்லூரியில்  விளையாட்டு விழா நிகழ்ச்சி மாலை 6 மணி  - தந்தை....... மேலும்

13 டிசம்பர் 2018 14:53:02

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

நாட்டில் மத மறுப்பு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாள்தோறும் நடைபெறுவது இருட்டடிக்கப்படுவது ஏன்? ஜாதி, மதமறுப்புத் திருமண இணையர்க்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்! 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, டிச.13 ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டியதுதான் - அதே நேரத்தில் ஆணவக் கொலைகளை விளம்பரப்படுத்தி, ஜாதி மத மறுப்புத் திருமணங்களை இருட்டடிப்புச் செய்து, பொய் சொல்லி தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் காட்டியதுடன்....... மேலும்

13 டிசம்பர் 2018 13:59:01

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

நாகரிகமான சமுதாயத்தைப் படைப்பதே பெரியாருக்குக் காட்டும் மரியாதை ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஆ.இராசா உணர்ச்சி உரை சென்னை, டிச.12 ஜாதி ஒழிந்த நாகரிகமான சமுதா யத்தைப் படைப்பதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள். சென்னை பெரியார் திடலில் 26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி - தீண் டாமை ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:40:03

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

தந்தை பெரியாரின் தனிச் செய லாளரும், பெரியார் பெருந்தொண்ட ருமான மானமிகு தி.மகாலிங்கம் அவர்கள் 25.11.2018 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவர்தம் நினைவை போற்றும் வகையில் வரும் 15.12.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.,பி.எல். இந்நிகழ்ச்சியில் கழகக் குடும்பத்தினர்,....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அ…

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர்  மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள்  கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து

சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரி, டிச. 11 கடந்த 9.12.2018 அன்று பொன்னேரி தோழர் செல்வி இல்லத்தில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பொருள்: தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24, ஓசூர் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வது, டிசம்பர் இறுதியில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொன்னேரியில் பொதுக் கூட்டம் நடத்துதல். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: வி.பன்னீர்செல்வம், நகர செயலாளர் மு.சுதாகர், ஒன்றிய....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் உரை

சென்னை, டிச.6 ஜாதி ஒழிந்த சமுதாயம், சமத்துவ சமுதாயம் சமைப்பதே ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு

26.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: நோய் நாடி, நோய் முதல் நாடவேண்டும்!

பெரியார் ஏன் சண்டை போட்டார்? நாங்கள் ஏன் இராமாயணத்தைப்பற்றி பிரச்சாரம் செய்கிறோம்? என்று நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்கிறோம் - டெங்குவைப் பரப்புகின்ற கொசுவைத்தானே அழிக்கிறார்கள். குப்பைக் கூளங்களை யார் சேர்த்து வைத்திருக்கிறார்களோ, அங்கே சென்றுதானே அபராதம் போடுகிறார்கள். அங்கேதானே கொசு முட்டை இடுகிறது - ஆகவேதான், நோய் நாடி, நோய் முதல்நாடக் கூடிய  அந்த அடிப்படை என்பதை வைத்துத்தான் இந்தப் பணிகளை செய்துகொண்டிருக்கின்றோம்.

எனவே, அடிப்படையை நீங்கள் தகர்க்கக் கூடிய அளவிற்கு வாய்ப்புகளைப் பெறவேண்டும்.

இப்பொழுது சிலர் என்ன சொல்கிறார்கள் என் றால், இன்றைக்கும் திராவிடர் கழகத்துக்காரர்கள் பார்ப்பனர் களைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று. பார்ப்பனர்கள் எல்லாம் கறி சாப்பிட ஆரம்பித்து விட் டார்கள்; தண்ணி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறார்கள்.

வைதீகப் பார்ப்பானை நம்பினாலும் நம்பலாம்; லவுகீக பார்ப்பானை நம்பக்கூடாது''

அதிலேயும் பார்த்தீர்களேயானால், பெரியாரும், அம் பேத்கரும் எவ்வளவு விழிப்பாக இருந்தார்கள் என்றால்,

பெரியார் சொன்னார், வைதீகப் பார்ப்பானை நம்பி னாலும் நம்பலாம்; லவுகீக பார்ப்பானை நம்பக்கூடாது'' என்றார்.

அதாவது, ஆச்சார அனுஷ்டானத்தோடு, நாமம் போட்டுக்கொண்டு, பஞ்ச கச்சகம் கட்டிக்கொண்டு, நம்ம வீட்டிலும் சாப்பிடுவான் என்பவர்களை நம்பாதீர்கள் என்றார்.

இதே வார்த்தையைத்தான் அம்பேத்கர் அவர்களும் சொன்னார்,

I will believe on Orthodox Brahmin but not heterodox  Brahmin

இது அம்பேத்கர் அவருடைய வார்த்தை.

நீதிக்கட்சி ஆட்சி காலத்தில், தேர்தலில் ஒரு வைதீக அய்யர் நின்றார்; இன்னொருவர் கறி தின்கிற அய்யர் நின்றார். அவர் சொன்னார், நான் உங்களோடு பழகுகிறவன்தானே என்று.

இந்த இருவரில் யாருக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பெரியாரிடம் கேட்டார்கள்.

நாமம் போட்ட அய்யருக்கே வாக்களியுங்கள் என்றார்.

என்னங்க அய்யா, இப்படி சொல்கிறீர்கள். இன்னொ ருவர் நம்மோடு பழகுகிறவர். நம்மோடு கறி தின்பவர் ஆயிற்றே; நீங்கள் அவருக்கு வாக்களிக்கவேண்டாம் என்று சொல்கிறீர்களே என்றனர்.

அதனால்தான் சொல்கிறேன், அவன் கையில் இருப்பது என்ன ஆயுதம் என்று பளிச்சென்று தெரிகிறது. அந்த ஆபத்தை நாம் சமாளிக்க முடியும். ஆனால், இவனுடைய கைகளில் இருப்பது என்ன ஆயுதம் என்று நமக்குத் தெரியாது. ஆகவே, இவனை சமாளிப்பது அவ்வளவு சுலபமல்ல என்றார்.

இன்றைக்கு ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன

இன்றைக்கும் வடநாட்டில், தாழ்த்தப்பட்டோர், ஒடுக் கப்பட்டோர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அதை ஒப்பிடும்பொழுது நம் மாநிலத்தில் குறைவுதான். ஒரு 120 ஆணவக் கொலைகள் நடைபெற்று இருக்கின்றன என்றால், ஜாதி ஒழிப்புத் திருமணங்களும், ஜாதி மறுப்புத் திருமணங்களும் ஏராளமாக நடைபெற்று இருக்கின்றன.

நன்றாகப் போய்ச் சேருகின்ற கார் செய்தியாக முடியாது. விபத்து ஏற்படும் கார்கள்தான் செய்தியாகின்றன. அந்த விபத்தும் ஏற்படக்கூடாது என்பதுதான் நமது எண்ணம்.

ஜாதி என்பது 5 ஆயிரம் ஆண்டு சங்கதி; இதனு டைய அஸ்திவாரத்தை நாம் ஆட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில்தானே ஜாதிப் பட்டம் கிடையாது.

இவர்கள் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள், நம்முடைய குடும்பத் தோழர்கள், இதே கட்சியில், வேறு மாநிலங்களில் ஜாதி பட்டத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அதற்காக ஜாதியை நம்புகிறவர்கள் என்று அர்த்தம் கிடையாது. அந்தப் பெயர்கள் பாரம் பரியமாக வந்து விட்டது. அதனால்தான் அங்கே ஜாதிப் பட்டம்.

இங்கே பார்த்தீர்களேயானால், பாலகிருஷ்ணன்தான், முத்தரசன்தான். அங்கே பார்த்தீர்களேயானால், நம்பூ திரி பாட். அவர் ஜாதி ஒழிப்புக்காரர்தான். கம்யூனிஸ் டாகத்தான் இருந்தார்.

ஏ.எஸ்.கே.அய்யங்கார்

இங்கே ஏ.எஸ்.கே.அய்யங்கார் அவர்கள், தந்தை பெரியாருக்கு மிகவும் வேண்டியவர். அய்யாவைப்பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார். பிறகு அவர் ஏ.எஸ்.கே. என்று பெயரை மாற்றிக் கொள்ள வந்தார். பரவாயில்லை, உங்கள் கருத்துபற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும், அதனால், உங்கள் பெயரை மாற்றினாலும் பரவாயில்லை, மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, உங்களைப்பற்றி தவறாக நினைக்கமாட்டோம் என்றார்.

வடநாட்டில் பார்த்தீர்களேயானால், எல்லா தலைவர் களின் பெயர்களிலும் ஜாதிப் பட்டம் இருக்கும். ஏனென் றால், அங்கே திராவிட இயக்கம் கிடையாது; சுயமரியாதை இயக்கம் கிடையாது; பெரியார் அங்கே பிறக்கவில்லை.

இங்கே இயல்பாகவே நம்முடைய தோழர்கள் என்ன ஜாதி என்றுகூட தெரியாது.

அப்படிப்பட்ட நிலையில், பார்ப்பனர்கள் இன் றைக்கு மாறிவிட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருக் கிறார்களே, ஆனால், உண்மை நிலை என்ன?

இன்றைக்கு டுவிட்டர் காலம், முகநூல் காலம், வாட்ஸ் அப் காலம். இன்றைய இளைஞர்கள் அதில்தான் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள்.

Smash Brahminical Patriarchy

பார்ப்பன ஆதிக்கத்தை நொறுக்குங்கள் என்று பதாகையுடன், மூன்று பெண்கள் உள்ளனர். பார்ப் பனர்கள் ஜாதி ஆதிக்கத்தைப் பயன்படுத்தி, தலித்து களான எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் வட நாட்டில், குஜராத்தில் பெண்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை சொல்கிறார்கள்.

டுவிட்டர்காரனுக்கு மிரட்டல்கள்!

சபரிமலையில் இன்றைக்குப் பெண்கள் செல்லக் கூடாது என்பதன் அடிப்படையே, Brahminical Patriarchy - இது பார்ப்பன ஆதிக்கத்தினுடைய அடிப்படை என்று சொல்லி, மூன்று பெண்கள், ஒரு பதாகையைப் பிடித்துக்கொண்டு Smash Brahminical Patriarchy  நின்ற படத்தைப் போட்டுவிட்டார்கள். அப்படி போட்ட டுவிட்டர்காரனுக்கு மிரட்டல்கள். அவன் வெளிநாட்டுக்காரன்தானே, வியாபாரம் செய்பவன் தானே - நான் மூன்று முறை, நான்கு முறை மன்னிப்புக் கேட்டுவிட்டேன் என்கிறார்.

இன்றைக்கு இங்கு பிராமணர்களுடைய ஆதிக்கமே இல்லையா? Brahminical Patriarchy னுடைய விஷ மம் இல்லையா? நீதிமன்றத்தில் ஜாதி இல்லையா? உச்சநீதிமன்றத்தில் ஜாதி இல்லையா? மருத்துவத்தில் ஜாதி இல்லையா? எந்த இடத்தில் ஜாதி இல்லை.

மண்டல் அறிக்கையில்...

மண்டல் அறிக்கையில், மண்டல் அவர்கள் மிக அருமையாக எழுதியிருக்கிறார்.

வடநாட்டில் ஜாதிப் பட்டம் எல்லாம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அவை ஒழிந்ததினால்தான், கம்யூனல் ஜி.ஓ. வெற்றி பெற்றது. அதற்குக் காரணம் பெரியாருடைய சுயமரியாதை இயக்கம் வந்ததினால்தான். அம்பேத்கர் இயக்கம் ஓரளவிற்கு செய்ததினால், இந்த இரண்டு பகுதிகளில் மட்டும்தான் வந்தது. மற்ற பகுதிகளில் அது போய்ச் சேரவில்லை.

பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், மலைவாழ் மக்களும் உணர்வுகளே இல்லாத அளவிற்கு ஆக்கப்பட்டார்கள். பயம் வேறு என்று இப்படி வரிசை யாக எழுதிக்கொண்டே வரும்பொழுது,

தமிழ்நாட்டைப் பற்றி ஒரு வார்த்தை சொல்கிறார், அதைத்தான் இராசா அவர்கள் அந்த வார்த்தையை சொன்னார்.

The battle was spot in the minds of the people

தெருவில் நடக்கவில்லை இந்த சண்டை; மூளைக்குள் சண்டை நடந்தது. அந்த மூளைக்குள் சண்டை போட்டார் பாருங்கள், பெரியார். இதை சொல்லும்பொழுது நண்பர்களே, பிராமணிசம் என்கிற ஒரு சிஸ்டத்தைத்தான் சொல்கிறார்களே தவிர, தனிப்பட்ட நபர்களை அல்ல.

பிராமணிசம் என்றால் என்ன? என்பதைச் சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.

What Congress and Gandhi have done to the untouchables

இது அம்பேத்கர் அவர்கள் What Gandhi and Congress have done to the Untouchables என்று 1944 ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் இது.

இந்தப் புத்தகமே ஒரு பொக்கிஷம் எங்களுக்கு. ஏனென்றால், இது பெரியாருடைய புத்தகம். அவர் விலைக்கு வாங்கி, அதிலுள்ள பக்கங்களில் அடிக் கோடிட்டு இருப்பார். இந்தப் புத்தகத்தின் பின்பகுதியில், மிக எளிதாக கூட்டங்களில் சொல்வதற்காக, இந்தப் பக்கத்தில் இந்தத் தகவல் இருக்கிறது என்று பெரியாருடைய கைப்படவே எழுதியிருப்பார். அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து, நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

இதை முழுமையாகப் படிக்கக் கூடிய வாய்ப்பை எனக்கு அரசாங்கம் கொடுத்தது, மிசா காலத்தில் ஓராண்டு சிறையில் இருக்கும்பொழுது.

சென்சார்டு என்று முத்திரை குத்தித்தான் சிறைச் சாலைக்குள் இந்த புத்தகத்தை  கொடுத்து அனுப் பினார்கள். அன்றைய காலகட்டத்தில் இந்த புத்தகம் விலை குறைவுதான். 1944 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம்.

பக்திப் போதையைக் கிளப்பிவிடுகிறார்கள்....

What is Brahminism?
Brahminical Patriarchy
என்றால், பார்ப்பன வம்சாவளி, பார்ப்பனத் தன்மை இன்றைக்கும் இருக் கிறது. இதனுடைய வெளிப்பாடுதான், கேரளாவில் பினராயி ஆட்சியை ஒழிக்கவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறுகின்ற முற்போக்கு ஆட்சியை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது முதல் அனைத்தையும் கொண்டு வந்துவிட்டார்கள். இந்த ஆட்சி நிலைத்தால், அவர்களுக்கு வழியில்லாமல் போய்விடும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று நினைத்தார்கள், அதற் காக பக்தி என்ற போதையைக் கிளப்பிவிட்டால், எல்லோரும் ஏமாறுவார்கள் என்று நினைத்துத்தான் அங்கே அவர்கள் பக்தியைப் பயன்படுத்துகிறார்கள்.

Historically they [Brahmins] have been the most inveterate enemy of the servile classes (Shudras and the Untouchables) who together constitute about 80 per cent of the total Hindu population. If the common man belonging to the servile classes in India is today so fallen, so degraded, so devoid of hope and ambition, it is entirely due to the Brahmins and their philosophy. The cardinal principles of this philosophy of Brahmanism are five:
(1) graded inequality between the different classes;
(2) complete disarmament of the Shudras and the Untouchables;
(3) complete prohibition of the education of the Shudras and the Untouchables;
(4) ban on the Shudras and the Untouchables occupying places of power and authority;
(5) ban on the Shudras and the Untouchables acquiring property.
(6) complete subjugation and suppression of women

இதன் தமிழாக்கம் வருமாறு:

வரலாற்று ரீதியாக பார்ப்பனர்கள் அவர்களாலேயே பிரிக்கப்பட்ட சூத்திரர் மற்றும் தீண்டத்தகாதவர்களுக்குக் கடுமையான எதிரிகள் ஆவார்கள்.  ஆனால் இவர்கள் யாரை எதிரி என்று கூறுகிறார்களோ அவர்கள் இந்து மக்கள் தொகையில் 80 விழுக்காடு உள்ளனர். இன்று இந்தியாவில் பெரும்பாலான இந்துக்கள் அதாவது பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட மக்கள், துன்பத்திலும், வறுமையிலும், அடிமைகளாகவும், கூலிகளாகவும்  வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பார்ப்பனர்கள் கொண்டுவந்த பார்ப்பனியக் கொள்கைகள் மட்டுமே காரணமாகும். பார்ப்பனர்களில்

பார்ப்பனியக் கொள்கையில் முக்கியமான அய்ந்து தத்துவங்கள்!

பார்ப்பனியக் கொள்கையில் முக்கியமான 5 தத்துவங்கள் வருமாறு:

பல்வேறு பிரிவு மக்களை சமமாக நடத்தக்கூடாது.

சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எக்காரணம் கொண்டு நட்புறவு வைக்கக் கூடாது. சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைப்பதை தடை செய்யவேண்டும்.

சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் அதி காரம் செல்வதை எக்காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது.

சூத்திரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் சொத்துக்களை வாங்குவதையும், பொது இடங்களில் குடியிருக்கவும் அனுமதிக்கக் கூடாது.

பெண்களுக்கு எக்காரணம் கொண்டு சுதந்திரம் கொடுக்கக் கூடாது; அவர்களை அடக்கியே வைத் திருக்கவேண்டும்.

இன்றைக்கு அடிமை ஜாதிகளில் இருக்கின்ற ஒரு சாதாரண மனிதன், இவ்வளவுக் கேவலப்படுத்தப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்டு, கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றால், இதற்கு ஒரே காரணம், பார்ப்பனர்களும், அவர்களுடைய தத்துவங்களும்தான் என்று மிகத் தெளிவாக அம்பேத்கர் அவர்கள் சொல்கிறார்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்து இரண்டு பேரையும் சண்டை போட விடுகிறார்கள் சிலர். ஆனால், அம்பேத்கர் இணைத்தார். அடிமை ஜாதிகள் என்கிற வார்த்தையை போட்டார். பெரும்பான்மை அவர்கள்தான்.

எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்

நண்பர்களே, இப்பொழுது உங்களுக்குப் புரிந்தி ருக்கும். அம்பேத்கர் அவர்கள் சொன்னது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக - இன்றைக்கு சுதந்திரம் வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன.

ஜாதி ஒழிப்பிற்காக நாம் போராடி, இத்தனை உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.

ஆகவே நண்பர்களே, உங்களை வேண்டிக் கொள் வதெல்லாம், எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

போர் முறையில், நண்பர்களை எதிரிகளாகக் கருதுவது, எதிரிகளை நண்பர்களாகக் கருதுவது சரியல்ல. அது மிகவும் ஆபத்தானது.

அதேநேரத்தில், இன்றைக்குப் பெரிய வாய்ப்பு என்னவென்றால், இன்றைக்கு இந்த மேடையில், தோழர் பாலகிருஷ்ணன், தோழர் முத்தரசன், நாங்கள் எல்லோரையும் பார்த்தீர்களேயானால், திராவிட இயக்க மும் சரி, கம்யூனிஸ்ட் இயக்கமும் சரி - கருப்பும் - சிவப்பும் எப்பொழுதும் ஒன்றாகும்.

கருப்பு சிவப்பாகுமே தவிர, ஒருபோதும் காவி ஆகாது!

கருப்பு சிவப்பாகுமே தவிர, ஏற்கெனவே பாளை யங்கோட்டையில் ஒரு அம்மையாருக்கு பதில் சொல்லி யதைப்போல, ஒரு போதும் காவி ஆகாது.

ஆகவே, இதை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். ஜாதி ஒழிப்பு என்பது மனிதநேயத்தை வளர்ப்பது.

எனவேதான், ஜாதியை மறந்துவிடுங்கள்; ஜாதியை துறந்து விடுங்கள், ஜாதியை வெளிப்படையாக அடை யாளம் காட்டவேண்டியதைவிட, மனப்பான்மை உள்ளே இருக்கிறதே, அதை  ஒழியுங்கள்.

மூளையை மாற்றக் கூடிய சம்மட்டி தந்தை பெரியாருடைய சம்மட்டி, பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களுடைய சம்மட்டி. இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

மனிதநேயம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்!

இரண்டு தத்துவங்களும் ஜாதி ஒழிப்புப் புரட்சியை உண்டாக்கி,

ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம் -

சம வாய்ப்புள்ள ஒரு சமுதாயம் -

மனிதநேயம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக் குவதுதான் - அங்கே நாம் மலர்வளையம் வைத்தோமே, அந்த ஜாதி ஒழிப்புத் தோழர்களுடைய பணியைத் தொடர்வது - இலக்கை முடிப்பது.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner