முன்பு அடுத்து Page:

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

தமிழர் தலைவருக்கு வரவேற்பு

புதுச்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு மாநில தலைவர் சிவ. வீரமணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. (16.2.2019) விழுப்புரம் வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை மண்டல தலைவர் க.மு. தாஸ் மாவட்டத் தலைவர் சுப்பராயன், பழனிவேலு மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (16.2.2019) விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை  மாவட்ட தலைவர் இல.திருப்பதி, மாவட்டச் செயலாளர் விடுதலை ஆதவன்,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:56:02

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று உரையாற்றினார். (மதுரை 16.2.2019)   மேலும்

17 பிப்ரவரி 2019 14:54:02

உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்!

உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்!

தோழர்களே, கழக ஆர்வலர்களே! மாநாட்டுப் பணிகள் வேக வேகமாக உற்சாகத்துடன் நடைபெறுகின்றன - மிக முக்கிய தேவை பொருள் வசூல் நன்கொடைத் தொகைகள் உடனடியாகக் குவியட்டும்! திரட்டும் தோழர்கள் பணிமுடித்து எம்மிடம் வந்து தந்து, கடமையாற்றிடுவதில் கண்ணுங்கருத்துமாய் இருங்கள்! நாட்கள் குறைவு - நேரில் சந்திப்பவர்கள் உடனடி நன்கொடை வசூலை முடித்து அளித்து உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்!   உங்கள் தோழன், தொண்டன், கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் மேலும்

17 பிப்ரவரி 2019 13:59:01

சைதை எம்.பி. பாலுவிற்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

சைதை எம்.பி. பாலுவிற்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

தனது 87ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் பெருந் தொண்டர் சைதை எம்.பி. பாலு தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/& நன்கொடை வழங் கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாலுவிற்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். (சென்னை & 14.2.2019)     மேலும்

16 பிப்ரவரி 2019 16:16:04

தமிழர் தலைவருக்கு கோ. கருணாநிதி பயனாடை

தமிழர் தலைவருக்கு  கோ. கருணாநிதி பயனாடை

கழக வெளியுறவுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட கோ.கருணாநிதி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். (சென்னை & 14.2.2019) மேலும்

16 பிப்ரவரி 2019 16:16:04

உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்!

தோழர்களே, கழக ஆர்வலர்களே! மாநாட்டுப் பணிகள் வேக வேகமாக உற்சாகத்துடன் நடைபெறுகின்றன - மிக முக்கிய தேவை பொருள் வசூல் நன்கொடைத் தொகைகள் உடனடியாகக் குவியட்டும்! திரட்டும் தோழர்கள் பணிமுடித்து எம்மிடம் வந்து தந்து, கடமையாற்றிடுவதில் கண்ணுங்கருத்துமாய் இருங்கள்! நாட்கள் குறைவு - நேரில் சந்திப்பவர்கள் உடனடி நன்கொடை வசூலை முடித்து அளித்து உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்!   உங்கள் தோழன், தொண்டன், கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம் 16.2.2019 சென்னை மேலும்

16 பிப்ரவரி 2019 15:47:03

வாழ்விணையர் ஏற்பு விழா

நாள்: 17.2.2019. ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி இடம்: டான்பாமா மண்டபம், இரயில் நிலையம் அருகில், சிவகாசி மணமக்கள்: ச.சுந்தரமூர்த்தி - பா.சீனியம்மாள் தலைமை: எஸ்.பி.மணியம் (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: இல.திருப்பதி (மாவட்டத் தலைவர்) விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்) வாழ்விணையர் ஏற்பு நிகழ்வை நடத்தி வைப்பவர் தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நன்றியுரை: து.நரசிம்மராஜ் (நகர செயலாளர்) விழைவு: மா.சர்க்கரை - கணபதியம்மாள் (சிவகாசி) விழா மேடையில் செயல் விளக்க நிகழ்ச்சி "மந்திரம் என்பது ஏதுமல்ல... அனைத்தும்....... மேலும்

15 பிப்ரவரி 2019 16:35:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதி அடையாளம் - பார்ப்பனர்களை அடையாளம் காட்டுவதால்

இந்து மதம் என்ற போர்வையில் பாதுகாப்பையும், ஆதிக்கத்தையும் தேடுகிறார்கள்

சென்னை, டிச.4 ஜாதி அடையாளத்தால் பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்படுவதால், இந்துப் பெரும்பான்மை என்று சொல்லி தங்களுக்கான பாதுகாப்பையும், ஆதிக்கத்தையும் தேடுகிறார்கள் பார்ப்பனர்கள் என்று நுட்பமான கருத்தினை வெளிப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு

26.11.2018 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: மிகுந்த உணர்ச்சிபூர்வமான எங்களுடைய மறைந் திருந்த துன்பம், துயரம் ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சூழல்கள் இவைகளையெல்லாம் மீண்டும் கிளறி, அவைகளையெல்லாம் நினைவுபடுத்தி, அந்தப் புண்களை, காலம் ஆற்றியிருக்கிறது என்ற அளவில் ஓரளவு இருந்தாலும், இன்னமும் நாம் அடைந்த இலக்கை விட, பெற்றதைவிட, பெறவேண்டியது எவ்வளவு அதிகம் என்பதை இங்கு சிறப்பாக எடுத்துரைத்து, அருமையானதொரு உரையாற்றிய பாராட்டுதலுக்கும், பெருமிதத்திற்கும் உரிய அருமைத் தோழர் திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் அருமைத் தோழர் ஆ.இராசா அவர்களே,

எப்பொழுதும் இராசாதான் - இராஜா அல்ல!

அவர் எப்பொழுதும் இராசாதான் - இராஜா அல்ல. எல்லோரும் அவருடைய பெயரை உச்சரிக்கும்பொழுது கவனத்தில் கொள்ளவேண்டும். வடக்கே சென்றபொழுது கூட இராசாதான். அங்கே இராஜா என்று எழுதப் படவில்லை. அவரை குற்றவாளிக் கூண்டிலே வைத்தபொழுது, அவர் போடுகின்ற கையெழுத்தும் அப்படித்தான்.

எனவே, எல்லா தோழர்களும் இதை முதலில் தெரிந்து கொண்டு, அவருடைய பெயரை எப்பொழுது, எங்கு உச்சரித்தாலும் இராசா என்று சொல்லுங்கள். இராசா என்று சொல்வதில் இருக்கின்ற பாசம், உறவு, அதிலிருக்கின்ற கொள்கைத் தெளிவு, அதைவிட எதையும் தாங்கும் இதயம் - இவை அத்தனையும் இருக்கும். இராஜா என்று சொல்லிவிட்டால், இது எதுவுமே இருக்காது. ஆகவேதான், தயவு செய்து எனது முதல் வேண்டுகோளாக இதனை வைக்கிறேன்.

என்னை ஆசிரியர், ஆசிரியர்' என்று சொல்கிறார்கள், ஆகவே, ஆசிரியராக வகுப்பில் ஏதாவது சொல்ல வேண்டாமா?

ஆகவே, அந்த உணர்வில் இருக்கக்கூடிய தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருமைச் சகோதரர் ஆ.இராசா அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் - இவருடைய காலத்தில் பல்வேறு புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று சொல்லக்கூடிய அளவில், தெளிவானவர். அந்தத் தெளிவை மிக அருமையாகச் சமாளித்து பதில் சொன்னார். அதுதான் மிக முக்கியமானது.

நாளைக்கு அவர்களுடைய கூட்டத்தில் விவாதம் செய் வார்கள். மற்ற இயக்கம் போன்று கிடையாது அவர்களு டைய இயக்கம். அவர் பேசியதற்கு விவாதம் செய்வார்கள்.

மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது

அருமையாகச் சொன்னார்,  பல நேரங்களில் நாம் மாற்று நிலை  எடுத்திருக்கிறோம்; பிறகு மாறியிருக்கிறோம். மாறுவோம், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பதையே அவர்கள் அடிப்படையாக வைத்தார்கள்.

ஆனால், நாம் எல்லோரும் பொது நிலைக்கு ஒன்று சேரவேண்டும். அதுவும் ஜாதி ஒழிப்பிற்கு இப்பொழுது ஒரு தனிக் கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். மீண்டும் ஜாதிப் பாம்பு - இவ்வளவு பெரிய அடி வாங்கிக்கொண்டு, அதனுடைய நச்சுப் பல்லை நீட்டிக் கொண்டிருக்கிறது. அதன் ஜாதிப் பல்லை - தீண்டாமை என்று அது காட்டிக் கொண்டிருக்கக்கூடிய அதன் பல்லை பிடுங்கவேண்டும். பிடுங்குவதற்கு நாம் அத்தனை பேரும் ஒன்றாக நிற்க வேண்டும்.

ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குக் காட்டுகின்ற மிகப்பெரிய மரியாதை

அரசியல் கூட்டணிகள் என்பது பிறகு. இது கொள்கைக் கூட்டணி- லட்சியக் கூட்டணி - ஜாதி ஒழிப்புக் கூட்டணி என்று  அவர்கள் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். இதை விட அந்த ஜாதி ஒழிப்பு வீரர்களுக்குக் காட்டுகின்ற மிகப்பெரிய மரியாதை வேறு கிடையாது என்பதை இந்த நேரத்தில் சொல்லி, அதற்காக அவரைப் பாராட்டுகின்றேன். அந்தக் கருத்தை ஏற்பதோடு, அவர் முன்மொழிந்ததாகக் கொண்டு, நாங்கள் வழிமொழிகிறோம் திராவிடர் கழகத்தின் சார்பில். அதையேதான் தோழர் முத்தரசன் அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொன்னதோ, அந்தக் கருத்தை எப்பொழுதுமே அவர்கள் பெற்றிருக்கக் கூடியவர்கள்.

ஒரு பெரிய திருப்பம் என்னவென்றால், இந்த மாநாட்டில் - நாமெல்லாம் ஒரு குடும்பம். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள், அந்த உரிமை நமக்கு இருக்கிறது. ஒரு காலத்தில், இவர்களையெல்லாம் வைத்து விவாதம் செய்யும்பொழுது, திராவிடர் கழகப் பணிகளில், எதிரிகளை சமாளிப்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும்கூட, இவர்களிடம், வருணமா? வர்க்கமா? என்றெல்லாம் சொன்னார். இப்பொழுது அதெல்லாம் கிடையாது. வருணம், வர்க்கம் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரையில், வரு ணத்தைப் பொறுத்துதான் வர்க்கமே அமைகிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகத் தெளிவான ஒரு சூழல்.  இன்றைக்குக் கொஞ்சம் நஞ்சம் இருப்பதை சேர்ந்து ஒழிப்போம்.  இருட்டறையில் உள்ளதடா உலகம்

ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே

என்று கேட்கக்கூடிய அந்தக் கேள்வி மிகவும் பொருள் பதிந்த கேள்வியாக இருந்தது. அத்தகைய தோழர் முத்தரசன் அவர்களே, - இவர்கள் எல்லாம் சமூகப் போராளிகள்.

அதுபோல, என்றென்றைக்கும் மிக அழகான, தெளிவான, ஆழமான கொள்கைகளைச் சொல்லக்கூடிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரும், பாசத் திற்கும், அன்பிற்கும் உரிய சகோதரர் பேராசிரியர் சுப.வீ. அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அருமையான தகவல் களை எடுத்துரைத்த அறிமுக உரையாற்றிய கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் அன்பு ராஜ் அவர்களே,

நிகழ்ச்சியில் இணைப்புரை வழங்கிய வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் குமாரதேவன் அவர்களே,

இந்நிகழ்வில் முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய மானமிகு தோழர்களே, நன்றியுரை கூற இருக்கக்கூடிய தோழர் மணியம்மை அவர்களே,

சிறந்த ஆன்றவிந்த கொள்கைச் சான்றோர்கள், ஜாதி ஒழிப்புப் போராளிகள் என்ற பெருமையோடு இருக்கக்கூடிய அவையினரே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வலியோடு வந்தேன் - வலிமையோடு திரும்புகிறேன்!

வலியோடு வந்தேன் - வலிமையோடு திரும்புகிறேன் என்று சொல்லத் தகுந்த அளவிற்கு - இன்றைக்கு ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தியிருக்கிறோம்.

அப்படிப்பட்ட ஜாதி ஒழிப்பு வீரர்கள் வரிசையில், இன்றைக்கு இரண்டு மரணங்கள் இரண்டு இடங்களில் நடந்திருக்கிறது. திராவிட இயக்கத்தினுடைய குறிப்பிடத்தக்க வரலாற்றில்  இடம்பெற வேண்டிய ஒன்று.

பேராசிரியர் அய்ராவதம் மகாதேவன்  மறைவு ஆராய்ச்சி உலகத்திற்கு ஒரு பெரிய இழப்பு

இங்கே நம்முடைய சகோதரர் சுப.வீ. அவர்கள் சொன் னார்கள். நம்முடைய பேராசிரியர் அய்ராவதம் மகாதேவன் அவர்கள்.

திராவிட நாகரிகம் - சிந்துவெளி நாகரிகம் என்பதை யெல்லாம் எடுத்துச் சொல்லி, கீழடி ஆய்வுகளை விரிவாக்காமல் தடுப்பதற்குக் காரணமே, திராவிட நாகரி கத்தினுடைய தொடக்கமே இது என்று நாளைக்கு நிரூபித்து விடுவார்களோ என்பதற்காகத்தான் - ஆரியம் பல்வேறு வகையில், டில்லி சூழ்ச்சி செய்துகொண்டிருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில், பிறப்பால் பார்ப்பனராக இருந் தாலும், அய்ராவதம் மகாதேவன் அவர்கள், ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, அவர்கள் சிறந்த கருத்துகளை சொன்னார்கள். பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களை அவர் நிறைவேற்றியபொழுது பாராட்டினோம். இதே இடத் திலேகூட, அவரை அழைத்துப் பாராட்டினோம், நன்றியை தெரிவித்தோம். அப்படிப்பட்ட ஒருவர் மறைந்தது அவரு டைய குடும்பத்திற்கு மட்டுமல்ல; ஆராய்ச்சி உலகத்திற்கு ஒரு பெரிய இழப்பு என்று சுப.வீ. அவர்கள் சொன்னதையும் ஒரு தீர்மானமாகவும்,

தந்தை பெரியாரின் தனிச் செயலாளர் தோழர் மகாலிங்கம் மறைவு

அதே நேரத்தில், தந்தை பெரியாரோடு ஏறத்தாழ 40 ஆண்டுகாலம் தனிச் செயலாளராக இருந்தவர்  நாகையைச் சேர்ந்த தோழர் மகாலிங்கம் அவர்களாவார்கள். மிகவும் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தவர். தந்தை பெரியாரின் கடைசி காலத்தில், புலவர் இமயவரம்பன், மகாலிங்கம் ஆகிய இருவரும் இருந்தார்கள். நாங்கள் எல்லாம் ஒன்றாகப் பயணித்தவர்கள். அப்படிப்பட்ட அவர்கள் இறுதிவரையில் மிகத் தீவிரமான உணர்வு படைத்தவர் - ஒரே தலைமை - ஒரே கொள்கை - ஒரே கொடி - ஒரே கட்சி - ஒரே இயக்கம் என்ற தீவிரமான உணர்வோடு இருந்த ஒரு எளிய தோழர்.

வாழும்போது மட்டுமல்ல, மறைந்தும் பயன்படக்கூடியவர்கள் நம்முடைய தோழர்கள்!

ஜாதி மறுப்புத் திருமணம், கலப்புத் திருமணம், காதல் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தவர். அப்படிப்பட்ட அவர், திராவிடர் கழகத்தின் அறக்கட்டளை உறுப்பினராக கடைசிவரையில்இருந்தவர்.அப்படிப்பட்டவர்நேற்று மறைந்தார் என்பதை வேதனையோடு இந்த அரங்கத்தில் தெரிவிப்பதோடு, எங்களுடைய தோழர்கள் மறைவிலும் கூட பயன்படவேண்டும் என்று நினைக்கக் கூடிய தோழர்கள். வாழும்போது மட்டுமல்ல, மறைந்தும் பயன் படக்கூடியவர்கள் நம்முடைய தோழர்கள் என்பதற்கு அடையாளம் - அவருடைய உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடுக்கவேண்டும் என்று அவர்கள் ஆணையிட்டு, நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் முன்னிலையில், இன்று முற்பகல் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு அவருடைய உடலை அளித்தார்கள். அப்படிப்பட்ட இருவருக்கும் நம்முடைய வீர வணக்கத்தைத் தெரிவித்து, மகாலிங்கம் அவருடைய பெயரையும் இப்பொழுது சொன்னதால், அவருக்கு வீர வணக்கம் செலுத்த அனைவரும் ஒரு நிமிடம் மீண்டும் எழுந்து நிற்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

(அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் வீர வணக்கம் செலுத்தினர்).

உலக அளவில் தந்தை பெரியாருடைய போராட்டம்!

தோழர்களே, அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அற்புதமான கருத்தை இங்கு எல்லா தோழர்களும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள் வைக்கத்தில் தொடங்கி நடந்திருந்தாலும்கூட, அரசியல் சட்ட எரிப்பு, அதை எப்படி மத்திய அரசு மிரட்டியது - இதற்கென்றே ஒரு தனிச் சட்டத்தை மத்திய அரசில் உருவாக்கினார்கள். அதன்மூலம், உலக அளவில் தந்தை பெரியாருடைய போராட்டம் - நியூயார்க் டைம்ஸ்' போன்ற பத்திரிகைகளில் எல்லாம் வெளியானது.

இதில் இன்னொன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் - இந்த சட்டம் கொண்டு வந்தது பெரியாருக்காக என்று சொன்னாலும், அது எவ்வளவு விசித்திரமான ஒன்று - அதனுடைய விளைவு என்னவென்றால், உலகில் உள்ள ஜனநாயக நாடுகளில் அரசியல் சட்டம் இருக்கிறது. ஆனால், மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று மிகக் கடுமையாகப் பேசினார். அரசியல் சட்டத்தை அம்பேத்கர் அவர்கள் உருவாக்கி யிருந்தாலும், என்னை நீங்கள் ஒரு வாடகைக் குதிரையாகப் பயன்படுத்தினீர்களே தவிர, எனக்கு எங்கே சுதந்திரம் கொடுத்தீர்கள். அதனைக் கொளுத்துவதற்கும் நான்தான் முதல் ஆளாக இருப்பேன் என்று ஆந்திர மாநில சட்டமன்ற மசோதா கொண்டு வரும்பொழுது, அவர் பேசியது பதிவாகி இருக்கிறது.

அதைத்தான் இங்கே நம்முடைய சகோதரர் இராசா அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெற்றபொழுது, அய்யா ஒன்றைச் சொன்னார்.

இதுவரையில் இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லாத ஒரு ஜாதியைப் பாதுகாக்கின்ற அரசியல் சட்டம் என்பதை உலகத்திற்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று நான் விரும்பினேன். எங்களுடைய போராட்டத்தில் எங்களைக் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பியிருந்தால் இது உலகத்திற்குத் தெரிந்திருக்காது. இங்கே மட்டும்தான் தெரிந்திருக்கும், பத்திரிகையாளர்கள் இருட்டடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாடாளுமன்றத்தைவிட, முன்னாலேயே ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து, பிறகு நிரந்தரமாக அதை சட்டப் புத்தகத்தில் ஏற்றியிருப்பதின் மூலமாக, அரசியல் சட்டத்தை ஒப்புக்கொள்ளாத மக்கள் இந்தியாவில், எதிர்க்கிறவர்கள், எரிப்பவர்கள் இருக்கி றார்கள் என்பதை உலகத்திற்கு இந்த அரசாங்கம் சட்டப் பூர்வமாகத் தெரியப்படுத்துகிறது'' என்றார்.

ஏனென்றால், அரசியல் சட்டத்தைக் கடைப்பிடிக்காத வர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் சட்டத்தை எரிக்கிறவர்களுக்கு இந்தத் தண்டனை என்று சொன்னது இருக்கிறதே, அது எவ்வளவு பெரிய புத்திசாலித்தனம்?

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி 6 இல்!

ஆனால், அதைப்பற்றி பெரியார் அவர்கள் கவலைப் படவில்லை என்றெல்லாம் இங்கே சொன்னார்கள்; அதை நான் மீண்டும் சொல்லப் போவதில்லை. அதைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு'' தொகுதி 6 இல், இவை அத்தனையும் வெளிவந்து இருக்கிறது. அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தீர்களானால், தெளிவாக தெரிந்துகொள்ளலாம் நீங்கள்.

ஜாதி எவ்வளவு மோசமான தன்மை என்பதைப்பற்றி இங்கேசொன்னார்கள்.பணக்காரராகஇருந்தவர்ஏழை களுக்காகப் பேசினார். அதுமட்டுமல்ல, அவர் பாதிக் கப்பட்ட ஜாதியில்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக் காகத்தான் பேசினார். அவர் ஆணாக இருந்து பெண்களின் உரிமைக்காகப் பேசினார் என்று அருமைத் தோழர் இராசா அவர்கள் சொன்னார்கள். மற்ற தோழர்களும் அந்தக் கருத்தை மய்யப்படுத்தினார்கள்.

சென்னை வானொலி இயக்குநருக்கு ஏற்பட்ட சந்தேகம்!

இதே கருத்தினை, பெண்ணுரிமையைப்பற்றி  பேசும் பொழுது - வானொலியில் இயக்குநராக ஒரு அம்மையார் இருந்தார். தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழாவிற்கு உரையை வெளியிடுவதற்காக பதிவு செய்ய அழைத்திருந்தார்கள். பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகள்'' என்பதுதான் தலைப்பு. பெண் ஏன் அடிமையானாள்? என்று அய்யா அவர்கள் சொன்ன கருத்துகளையெல்லாம் எடுத்துச் சொன்னேன்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த லீலா என்ற அந்த அம்மையார், நீண்ட நாள்களாக சென்னை வானொலியில் பணியாற்றியவர். என்னுடைய உரையை பதிவு செய்து விட்டார்கள்.

அந்த அம்மையார் என்னிடம் வந்து, அய்யா ஒரு அய்ந்து நிமிடம் அமருங்கள்; உங்களிடம் சில சந்தேகங் களைக் கேட்கவேண்டும் என்றார்.

மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் பேசியதில் சந்தேகம் வந்தால்தான், அந்தக் கருத்துகள் சேரவேண்டிய இடத்தில் சேருகின்றது என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டு, என்ன சந்தேகம் கேளுங்கள் என்றேன்.

தந்தை பெரியார் அவர்கள் இவ்வளவு தீவிரமாக சொல்லியிருக்கிறாரே, பூனைகளால் எலிகளுக்கு விடுதலை வருமா? ஆண்களால் பெண்களுக்கு விடுதலை வருமா? என்றெல்லாம் இவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கிறாரே! பெண்கள் தங்களின் உரிமைக்காக அவர்களே போராட வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே - உலகத்தில் வேறு யாருமே பெண்ணுரிமையைப்பற்றி பேசியதில்லை. ஆனால், பெரியார் அவர்கள் ஒரு ஆணாக இருந்துகொண்டு, அவரால் எப்படி பெண்ணுரிமையைப்பற்றி பேச முடிந்தது? என்று எனக்கு ஒரு பெரிய குழப்பம் மனதில் இருக்கிறது.

ஆண்களால், உங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்காதீர்கள் என்று சொல்கிறார். அதை ஆணாக இருக்கும் ஒரு பெரியார்தானே சொல்கிறார். அதற்கு நீங்கள் எப்படி விளக்கம் சொல்கிறீர்கள், அதுபற்றி எனக்கு விளக்கிச் சொல்லுங்களேன்'' என்றார்.

சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார்!

உடனே நான், அது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. பெரியாரைப் பொறுத்தவரையில், அவர் தன்னை ஆண் என்றோ, பெண் என்றோ கருதவில்லை. ஒரு மனிதன் என்று கருதி, தான் ஒரு சமுதாய விஞ்ஞானியாக - நோய் நாடி நோய் முதல்நாடக் கூடிய அளவிற்கு, சமூக விஞ்ஞானியாகப் பார்க்கிறார். விஞ்ஞானிக்கு பால், இனம், இடம், சூழல் எதுவுமே கிடையாது. அவர் எந்தப் பார்வையில் பார்க்கிறாரோ அதைத்தான் சொல்லவேண்டும். அவர்தான் சமுதாய விஞ்ஞானி. அப்படிப்பட்ட சமுதாய விஞ்ஞானியான தந்தை பெரியார் அவர்களுடைய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், இதே இடத்தில், இந்த மண்டபம் இந்த அளவிற்கு அழகாகவோ, விரிவாகவோ இல்லை. பழைய இராதா மன்றம், பல தோழர்களுக்கு அது தெரியும். அதில் தான் அய்யாவினுடைய கடைசி மாநாடு நடைபெற்றது. 45 ஆண்டுகளுக்கு முன்பு - 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9 ஆகிய நாள்களில்.

தந்தை பெரியாரால் தொலைநோக்கோடு கொண்டுவரப்பட்ட தீர்மானம்!

அந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார் - ஜாதி ஒழிப்பைப்பற்றி - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் - கடைசி கட்ட போராட்டங்கள் என்று வரும்பொழுது, ஒரு மூன்று, நான்கு தீர்மானங்களை முன்பே எழுதி, சட்டப்பூர்வமாக அது சரியாக இருக்குமா? என்று முக்கியமான சட்ட வல்லுநர்களை வேண்டுமானாலும் கேளுங்கள் என்று அந்தத் தீர்மானங்களை என்னிடம் கொடுத்தார்.

அதேபோன்று அவர் சொல்லியதுபோன்றே, அந்தத் தீர்மானங்களைக் கொண்டு போய் சட்ட வல்லுநர்களிடம் காட்டினேன். அவர்களும், சட்டப்பூர்வமாக தாராளமாகக் கொண்டு வரலாம். இது செயல்படுத்தப்படவேண்டும் என் றார்கள்.

இன்றைக்கு உடனடியாக இது செயல்படவில்லை என்றாலும், நாளைக்காவது இது வரும் என்கிற தொலை நோக்கோடு நான் கொண்டு வருகிறேன் என்று அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

அந்தத் தீர்மானம் எவ்வளவு ஆழமான தீர்மானம் என்றால், இங்கே சொன்னார்கள், அரசியல் சட்டம் 17 ஆவது விதியில், தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அது எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும், அது சட்டப்படி குற்றம் என்று இருக்கிறது.

அய்யா அவர்களுடைய சட்ட ஞானம், உலக அறிவு, அவருடைய சமுதாயக் கவலை, தொலைநோக்கு எந்த அளவிற்கு இருந்திருக்கும்.

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள தீண்டாமை என்ற இடத்தில் ஜாதி!

ஜாதி என்கிற வார்த்தை அரசியல் சட்டத்தில் எத்தனை இடத்தில் இருக்கிறது என்று என்னிடம் கேட்டார்.

நான் உடனே 18 இடங்களில் ஜாதி என்று இருக்கிறது என்றேன்.

உடனே அய்யா சொன்னார், அரசியல் சட்டத்தில் இருக்கின்ற  தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்கிற வார்த்தையை எடுத்துவிட்டு, ஜாதி  ஒழிக்கப்பட்டு விட்டது என்று போட்டால், எந்த ரூபத்தில் ஜாதி இருந்தாலும், பூணூல் போட முடியாது; ஜாதி சின்னத்தைக் காட்ட முடியாது. என்னுடைய ஜாதி என்று சொல்ல முடியாது என்று வரும் என்றார்.

ஒரு சந்தேகம் எழுந்தது. அய்யா அப்படி என்றால், இட ஒதுக்கீட்டில், ஜாதி அடிப்படையில், சமூக ரீதியாக வும், கல்வி ரீதியாகவும் என்பதற்கு அடையாளம் ஜாதி தான் என்று இருக்கிறதே - அப்படி என்றால், ஜாதி  ரீதியாக இருக்கக்கூடியது என்பது இருக்காதே - அதை நிறுத்தவேண்டுமே என்றோம்.

உடனே அய்யா அதற்கு மிகத் தெளிவாக விளக்கம் சொன்னார். நாம் ஒன்றும் உலகம் இருக்கின்ற வரையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கவில்லை. சமமாக வருகின்ற வரையில்தான் இட ஒதுக்கீடு வேண்டும் என்று முதலில் கேட்கிறோம்.

இரண்டாவது, தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று போட்டுவிட்டு, ஷெட்யூல்டு காஸ்ட், ஷெட்யூல்டு டிரைப் ஆகியோர் முன்னேறாத காரணத்தினால், தனியே அவர்களுக்கு சலுகை உண்டு என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறது அல்லவா! அது முரண்பாடு இல்லை அல்லவா! அதேபோன்று குறிப்பிட்ட ஆண்டுகள் வரைக்கும், இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு இருக்கும் என்று தானாகவே நோட் போட்டு இரண்டு வரி எழுதினால், தீர்ந்து போகுமே! இதில் என்ன பெரிய பிரச்சினை? என்றார்.

இன்னொன்றையும் பெரியார் சொன்னார், குறிப்பாக இதற்கு முரண்பாடாக சில பேர் திருத்தி விடுவார்கள். Caste include Untouchability ஒரு வரியில் விளக்கம் போடவேண்டும் என்றார். அய்யா அவர்கள் அந்தத் தீர்மானத்திற்கு விளக்கம் சொன்னார் இதே மேடையில்.

ஒருவன் தொடக்கூடியவனா? தொடக்கூடாதவனா? என்று எது தீர்மானிக்கிறது?

ஒருவன்  கீழ்ஜாதியா? மேல்ஜாதியா? என்று எது தீர்மானிக்கிறது?

தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதற்குப் பதில்...

ஜாதிதானே தீர்மானிக்கிறது. ஆகவேதான், அது தெளிவில்லை. இந்திய அரசியல் சட்டத்தில், தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதற்குப் பதில் ஜாதி என்பது ஒழிக்கப்பட்டுவிட்டது என்றால், கிளையை வெட்டவில்லை, நாம் வேரையே வெட்டுகிறோம் என்று அழகாகச் சொன் னார்.

பெரியாருடைய பேரேட்டில் நட்டக் கணக்குக் கிடையாது

ஆகவே, நம்முடைய  அடுத்த இலக்கு என்னவென்றால், சட்டபூர்வமான போராட்டங்கள் நடக்கவேண்டும். அந்த சட்டபூர்வமான போராட்டம், இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கு, நாளைக்கு இல்லாவிட்டாலும், அதற்கு மறுநாள். எப்படி ஒரு காலத்தில் பெரியார் சொன்னதையெல்லாம், இன்றைக்கு உச்சநீதிமன்றம் உள்பட ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

நாம்தான் கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொன் னோம். இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், கோவிலுக்குப் போகவேண்டாம் என்று சொல்கிறார்கள்.

அய்யப்பன் அவர்களுடைய கனவில் வந்து, வருமானம் குறைந்து போய்விட்டதே என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

ஆக, அவர்கள் என்ன ரூபத்தில் வந்தாலும், பெரியாருடைய பேரேட்டில் நட்டக் கணக்குக் கிடையாது, அதுதான் மிக முக்கியம்.

இப்படி போனாலும் அந்த உரிமை; அந்தப் பக்கம் போனாலும், கோவிலுக்குப் போகவில்லை என்றால், அர்ச்ச கனுக்கு வேலை கிடையாது. எல்லோரும் கோவிலுக்குப் போகவில்லை என்றால், நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தம் அல்லவா!

ஆகவே, மனித உரிமை என்கிற அடிப்படையில் வருகின்றபொழுது இந்தக் கட்டம் வரும் என்று தெளிவாகச் சொன்னார்.

அதுமட்டுமல்ல, பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப்பற்றி மற்ற நண்பர்களும், இராசா அவர்களும் இங்கே அழகாக சொன்னார்கள்.

பெரியாருக்கும் - அம்பேத்கருக்கும் ஒரே கருத்துதான்!

பெரியாரும், அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் இருக்கின்ற மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்பதில் - எந்த ஒரு மேற்கோளை எடுத்து, கீழே அம்பேத்கர் என்று போட்டிருப்பதை, பெரியார் என்று போட்டால், அதேதான் இருக்கும். அதேபோன்று, பெரியார் என்று போட்டிருப்பதை, அம்பேத்கர் என்று போட்டால், அதேதான் இருக்கும். ஒரே கருத்துதான் இருவருக்கும்.

ஒரே ஒரு செய்தி - இதோ என்னுடைய கைகளில் இருப்பது ஒரு சிறிய நூல்.

ரானடே - காந்தி - ஜின்னா ஆகியோரைப்பற்றி  அம் பேத்கர் அவர்கள் ஒரு கருத்தைப் பேசி, அதனுடைய மொழியாக்கம்தான் இந்த நூல்.

இந்து மதம் என்பதே இல்லாத ஒன்று!

அய்யோ இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்கிறார்களே, அவர்கள் ஏன் ஒன்று சேருகிறார்கள்? மெஜாரிட்டிக்காக சேருகிறார்கள்; முதலில் ஜாதியை சொல்லிப் பார்த்தார்கள்; அவர்கள் சிறுபான்மை ஆனதால், அவர்களை அடையாளம் பார்த்துவிட்டார்கள். இவன் மட்டும் தனியாக ஆகிவிட்டான் என்பதால், அதற்கு மதம் தேவை - பெரும்பான்மை தேவை. ஆகவே, இந்து, இந்து என்று சொல்கிறார்கள்.

இந்து மதம் என்பதே இல்லாத ஒன்று. இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், பெரியவாள் சொன்னதை எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த நூலில்,

அம்பேத்கர் பேசுகிறார்!

பிராமணர்களின் நான்கு வருணக் கொள்கையே எல்லாத் தோல்விகளுக்கும், இந்து சமூக சீரழிவிற்கும் முழுப் பொறுப்பாகும். இந்து மத, இந்து சமூகக் கோட்பாடுகளே, இந்து சமூகத்தை ஒழுக்கமற்றதாக ஆக்கியது என்று நான் கூறுவதால், உங்களில் சிலரது மனம் புண்படலாம்.

உலகில் எந்த சமூகத்திலாவது நெருங்காதவர்கள், நிழல் படக்கூடாதவர்கள், பார்க்காதவர்கள் என்று சில வகுப்பினர் இருக்கிறார்களா?

எந்த சமூகத்திலாவது குற்றப் பரம்பரையினர் என்று ஒரு மக்கள் பிரிவு உண்டா?

எந்த சமூகத்திலாவது ஆடை அணியக்கூட அறியாத, காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் உண்டா? இவர்கள் நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக் கிலோ!''

ஆனால், உண்மை என்ன? குற்றச்சாட்டை மறுக்க முடியுமா? மனம் புண்படலாம், மனம் புண்படலாம் என்று சொல்கிறார்களே,  புண்படாமல் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடியும். புற்றுநோயை வெட்டி எறிந்தால்தான், உயிர் பிழைக்க வைக்க முடியும். ஆணவக் கொலை என்றால் கொலை செய்வது. இது அறுவை சிகிச்சை செய்வது. மோடிக்கே பிடித்த வார்த்தை சர்ஜிகல் ஆபரேசன்தானே.

வெள்ளை மகாவிஷ்ணு என்றால், இன்னும் அதிக விலைக்குப் போவார்!

கருப்பர்கள்கூட அப்படி கிடையாது. பார்க்கக்கூடாதவர் கள்; தொடக்கூடாதவர்கள் என்று இருக்கிறார்களா? நாயைக்கூட கட்டிப் பிடிக்கிறார்கள்; பன்றி மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லி, அதைப் பெருமை யாக நினைக்கிறார்கள். வெள்ளை மகாவிஷ்ணு என்றால், இன்னும்  அதிக விலைக்குப் போவார். ஆக, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்,

இந்துக்கள் ஓட்டு போய்விடுமோ என்று அரசியல் கட்சிகள் ஏன் நினைக்கவேண்டும்?

எங்கள் இந்து மதத்தைப்பற்றி பேசுகிறீர்களே? என்று சிலர் புரியாமல் கேட்கிறார்களே, ஏன் பயப்படவேண்டும்? இந்துக்கள் ஓட்டு போய்விடுமோ என்று அரசியல் கட்சிகள் ஏன் நினைக்கவேண்டும்.  இதனுடைய அடிப்படையை எண்ணிப் பாருங்கள்.

மனிதநேயத்தைப்பற்றி நினைக்கின்ற தலைவர்கள் இரண்டு பேரும். தந்தை பெரியாரும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களும்.

அதனால் வேதனைப்பட்டுக் கேட்கிறார்கள், ஏண்டா, எங்கள் ஆட்களை குற்றப் பரம்பரையினர் என்கிறாயே என்று.

அய்யாதான் சொன்னார், நியாயமாக குற்றப் பரம்பரை என்று சொன்னால், பார்ப்பான்தான்; அவன்தான் வாழ்க் கையில் பிறவிக் குற்றப் பரம்பரை என்றார். அதனை ஆதாரப்பூர்வமாகவும் சொன்னார். எதையுமே அவர் மேலெழுந்தவாரியாக சொல்ல மாட்டார்.

குற்றப்பரம்பரையினரை, சீர்மரபினராக்க திராவிட இயக்கத்தால்தான் முடியும்!

திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று கேட்கி றார்களே, திராவிட இயக்கத்தினுடைய ஆட்சியில்தானே அது அடியோடு துடைக்கப்பட்டது. இல்லை என்று சொல்ல முடியுமா?

இன்னுங்கேட்டால் நண்பர்களே, குற்றப்பரம்பரை என்கிற வார்த்தையைக்கூட மாற்றி, அவர்களை உயர்த்தி சிறப்பான வார்த்தையைக் கொடுத்த பெருமை, நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதுதான். இந்தத் தகவல் நிறைய பேருக்குத் தெரியாது. அவர்களுக்கு என்ன வார்த்தை கொடுத்தார் தெரியுமா? சீர்மரபினர் என்று.

குற்றப்பரம்பரையினரை, சீர்மரபினராக்க ஒரு திராவிட இயக்கத்தால்தான் முடியும். திராவிட இயக்கம் தேவை என்பதற்கான அடையாளம்தான். அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கின்ற தோழர்கள்தான் இந்த மேடையில் அமர்ந் திருக்கின்றவர்கள். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்துகள் கிடையாது.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner