முன்பு அடுத்து Page:

அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

செங்கற்பட்டு, அக். 17- செங்கற் பட்டு அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப் புக்கூட்டம் 15.10.2018 -அன்று 12.30 மணிக்கு பெரியார் படிப் பகத்தில் உற்சாகமாக நடை பெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா. குணசேக ரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் தொண் டினையும், திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து செய லாற்ற வேண்டிய அவசியம் குறித்து கருத்துரை வழங்கினார்........ மேலும்

17 அக்டோபர் 2018 18:15:06

பெரியார் பேசுகிறார் தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

பெரியார் பேசுகிறார் தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ராமாயணம், ராமன், ராமராஜ்ஜியம் தோழர் தா.பாண்டியன் எழுதிய சமுதாய விஞ்ஞானி பெரியார் பா.வே.மாணிக்க நாயக்கர் எழுதிய கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் நூல்கள் வெளியீடு நாள்: 19.10.2018 வெள்ளி, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை இடம்: பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: சி.இரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) ந.காமராசு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர்....... மேலும்

17 அக்டோபர் 2018 18:05:06

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்  கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை, அக். 17- மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரத் தில் டாக்டர் கலைஞர் அவர்க ளின் நினைவேந்தல் வீரவணக் கம் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டமாக நடைபெற் றது. 9.10.2018 அன்று மாலை 6 மணியளவில் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் டாக் டர் கலைஞர் அவர்களின் நினைவை போற்றுகின்ற அளவில் நினை வேந்தல் நிகழ்ச்சியை மதுரை புறநகர் மாவட்ட திராவிடர்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:50:05

தந்தை பெரியார் பட ஊர்வலமும் பிள்ளையார் சிலை (உடைப்பும்) கரைப்பும்

தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள அய்யா பெரியாரின் சிலைக்கு மேட்டூர் கழக மாவட்டத்தின் சார்பில் 17.9.2018 அன்று காலை 10.30 மணிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பெரியார் பட ஊர்வலம் தந்தை பெரியார் கம்பீரமாக கைத்தடியுடன் அமர்ந்திருக்கும் படம் திறந்த வேனில் ஒலி பெருக்கியுடன் அமைக்கப்பட்டு பழனி.புள்ளை யண்ணன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. தந்தை பெரியாரின்....... மேலும்

17 அக்டோபர் 2018 16:33:04

அங்கிங்கெனாதபடி உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் - கோலாகல விழா!

அங்கிங்கெனாதபடி உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் - கோலாகல விழா!

சென்னை, அக். 17 உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா அங்கிங்கெனாதபடி  கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மதுரை வண்டியூர் 23.9.2018 அன்று மதுரை வண்டியூரில் தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் மணிராஜ் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. வண்டியூர் தி.க.ரவி அனைவரையும் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மாவட்டத் தலைவர் முனியசாமி,....... மேலும்

17 அக்டோபர் 2018 16:20:04

பெரியார் பேசுகிறார்... தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

நாள்: 19.10.2018 வெள்ளி, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை இடம்: பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: சி.இரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) ந.காமராசு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர். திராவிடர் கழகம்) டாக்டர் த.அருமைக்கண்ணு ந.சங்கர் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) தொடக்கவுரை: இரா.தமிழ்செல்வன் (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) புலவர் மா.கந்தசாமி (உலகத்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:48:04

தமிழகம் முழுவதும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

தமிழகம் முழுவதும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

சென்னை, அக். 16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்  அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவகங்கை சிவகங்கையில் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி மிகுந்த எழுச்சியுடன் வீடுதோறும், வீதிதோறும் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவிப்பு, இனிப்பு வழங்கல், கழகக் கொடியேற்றம், விடுதலை வாசகர் வட்டம் தொடக்கம் எனப் பல்வேறு நிலையில் பொதுக் குழு உறுப்பினர் தலைமைக்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:48:04

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

மாநில கலந்துரையாடல் கூட்டம் * நாள்: 19.10.2018 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை * இடம்: வல்லம், தஞ்சாவூர் * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், பகுத்தறிவாளர் கழக பொன்விழா அமைப்புச் செயல்பாடுகள் இன்ன பிற * கருத்துரை: வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்) *....... மேலும்

15 அக்டோபர் 2018 17:15:05

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநிலத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா  புதுச்சேரி மாநிலத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

புதுச்சேரி, அக். 15 "தத்துவத் தலைவர்", "பகுத்தறிவு பகல வன்" தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய தன்னி கரில்லா தனிப்பெருந்தலைவர் உலகத் தலைவர் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் புதுச்சேரி மண்டல திராவிடர் கழக தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி கழக....... மேலும்

15 அக்டோபர் 2018 16:56:04

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, அக். 15- 25.9.2018 அன்று கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியர் அணி கலந்து ரையாடல் கூட்டம் கிருட்டின கிரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் ஈ.லூயிஸ்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு மருதாசலம் கூறினார். வந்திருந்திருந்த அனைவரையும் எல்.அய்.சி. சுப்பிரமணி வரவேற்று பேசி னார். கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில ப.க. ஆசிரியர் அணி அமைப்பாளர்....... மேலும்

15 அக்டோபர் 2018 16:10:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக்.10 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் 5000 ஆண்டு தமிழர் வரலாறு எனும் தலைப்பில் சிறப்புக்கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம் மையார் மன்றத்தில் நேற்று (9.10.2018) மாலை நடைபெற்றது. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தலைமை வகித்து உரையாற்றினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் பெ.ஜெகதீசன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய பொருளாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங் கினார்.

சிறப்பு விருந்தினர் முனைவர் இரா.மதிவாணனுக்கு திராவிடர் வரலாற்று ஆய்வுமய்யத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி பயனாடை அணிவித்து சிறப்பித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்.

இரா.மதிவாணன்

சிந்துவெளி எழுத்து ஆய்வு நடுவ இயக்குநர் பேராசிரியர் முனைவர் இரா.மதிவாணன் சிறப்புரையாற்றினார். திராவிடர் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகம் குறித்து அகழாய்வுகள், ஆராய்ச்சிகள்குறித்து  சிறப்புரையாற்றிய முனைவர் இரா.மதிவாணன் காட்சிப் பட விளக்கங்களுடன் ஆதாரபூர்வமான பல்வேறு தகவல்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார்.

அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

5000 ஆண்டு தமிழர் வரலாறு எனும்போது கி.மு.6000 முதல் கி.மு. 1000 வரையிலான வரலாறை 5000ஆண்டு தமிழர் வரலாறு குறித்து பார்ப்போம்.

தொல்லியல் துறை அகழ்வா ராய்ச்சியுடன் மொழி அகழ்வாராய்ச்சி செய்யப்படல் வேண்டும். தமிழ்நாட்டில் மட்பாண்டங்கள் செய்யும் குயவர்கள் பானைகளில் உருவாக்கிவரும் குறியீடு கள், பல காலமாக தமிழ்நாட்டில் சலவைத் தொழிலாளர்கள் துணிகளுக்கு இடும் குறியீடுகள், பச்சை குத்துபவர் களின் குறியீடுகள்  அனைத்தும் சிந்து வெளி நாகரிக தமிழர்களின் எழுத்துக ளைக் கொண்டுள்ளது.

மொழி அகழ்வாய்வு

வரலாறு எனும்போது, மன்னர்கள் ஆண்டார்கள் என்பதுடன் இருக்கிறது. தொல்லியல் துறை ஆய்வுகள் அகழ் வாய்வுகளில் கிடைக்கும் பொருள்க ளைக் கொண்டு இருக்கிறது. மக்களின் சமூக கலாச்சார வரலாறு அறிந்திட வேண்டுமானால், மொழி அகழ்வாய்வு தான் பயன்படுகிறது. காபூலிலிருந்து இலங்கை வரை சிந்துவெளி நாகரிக மக்களின் எழுத்துகள், முத்திரைகள் கிடைத்து வருகின்றன. திரிகோண மலையில் கல்வெட்டுகளில் சேரநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் தமிழகம் இருக்கிறது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக காபூல் முதல் ஒரிசா வரை, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை தமிழகமா கவே இருந்துள்ளது. சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களின் கயல், புலி, வில் கொடிகளை ராஜபுத் திரர்களும் கொண்டிருந்தார்கள்.  தமிழர் கள் சென்ற பகுதிகளில் எல்லாம் அதன் சுவடுகள் காணப்படுகின்றன. துறை முகம் அமைத்து, கப்பல் கட்டும் தொழிற்சாலை வைத்து சிறந்து விளங் கினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ன. அரபிக்கடல் சேரர்கள் பகுதிக்குள்ளும், வங்கக்கடல் சோழர் களின் கட்டுப்பாட்டிலும், இந்தியப் பெருங்கடல் பாண்டியர்கள் ஆளுகை யிலும் நீண்ட காலமாக இருந்துள்ளன.

தமிழ் மன்னர்கள் மூவேந்தர்கள் ஒன்றிணைந்து   போர் நடத்தி எதிரி களை முறியடித்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

திராவிட மொழி

கடற்கோளுக்கு முன்பாக பாண்டி யர்கள் ஆண்ட பகுதியாகவே இலங்கை இருந்துள்ளது. பஞ்சாப் அறிஞர் அல் லானா சிந்து எழுத்துகள் திராவிட மொழியே என்று கூறியுள்ளார். சிந்தி, தார்ரிக், டோக்ரா, காஷ்மீர், பஞ்சாபி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தமிழ் சொற்கள் இடம்பெற்றுள்ளன. எகிப்து பிரமிடுகளில் பெயர்ப்பல கையில் தமிழ் உள்ளது.

பூதன் எனும் தமிழ் மன்னன்

ரிக் வேதத்துக்கு முந்தைய காலத்தில் பூதன் எனும் தமிழ் மன்னன் மிகுந்த கொடையாளியாக இருந்துள்ளான். சிந்துவெளி நாகரிகத்தில் சிவனை கோ அவ்வன் என்று மலையப்பன் எனும் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திக் குறியீடு பண்டைய தமிழர்களால் ஓம்  என்று ஒலிக்கப்பட்டு, ஓம்புதல், காத்தல் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீட்டல் அளவை அளப்பதற்கான கோல் 11 அடியாக இருந்துள்ளது. சாலைகள் 11 அடியாக இருந்துள்ளது. குறுக்கு சந்து அய்ந்தரை அடியாக இருந் துள்ளது.

சிந்துவெளி எழுத்துகள், தமிழ் பிராமி முறை எழுத்துகள் பெரும்பாலும் ஒரேமாதிரியாக உள்ளன.

சிந்து வெளி எழுத்தாய்வு

2007ஆம் ஆண்டு முதல் சிந்து வெளி எழுத்தாய்வு நடுவம் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு பல்வேறு ஆய்வு முடிவுகளை அளித்துள்ளது.

சிந்துவெளி எழுத்தும், தமிழி எழுத்தும் தமிழர்களால் தமிழுக்காக தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை.

தமிழர் நாகரிகம்,சிநதுவெளி நாகரி கம் என்னும் பெயரில் தெற்கிலிருந்து வடக்கே பரவியது. மிகத்தொன்மையான சிந்துவெளி எழுத்து தமிழ்நாட்டில்தான் செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் (கோகங்கன் என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில்) கிடைத்துள்ளது.

கீறல் எழுத்துகள்

சிந்துவெளி எழுத்தின் மிகமிகத் தொன்மையான எழுத்துச் சான்றுகளும், கீறல் எழுத்து எனப்படும் (Graffiti)சிந்துவெளி கையெழுத்து வரிவடிவ வேறுபாடுகளும் அதன்பின்னர் தோன் றிய தமிழி (பிராமி) எழுத்து படிப்படி யாக வளர்ந்த வளர்ச்சியும், விடுபட்ட இணைப்புகளும் தமிழ்நாட்டு அகழாய் வில் கிடைத்துள்ளன. இந்த படிமுறை வளர்ச்சி சிந்துவெளியில் கிடைக்க வில்லை.

சிந்துவெளி எழுத்துக் குறியீடுகள் இன்றும் நாட்டுப்புற மண்பாண்டத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர் உள்ளிட்ட 18 வகை பல்வேறு தொழிற்பிரிவினரிடையே வெறும் அடையாள எழுத்துகளாக வழங்கி வருகின்றன.

ஒரே பொது எழுத்து

சிந்துவெளி எழுத்தும் தமிழி (தென் பிராமி) எழுத்தும் இந்தியாவின் (Pan Indian Script) ஒரே பொது எழுத்தாக நின்று நிலவின என்பது நன்கு உறுதிப் படுகிறது.

தமிழ் எழுத்து 5000 ஆண்டுத் தொன் மையுடையது. தமிழிலக்கியம் 2000 ஆண்டுத் தொன்மையுடையது. சிந்து வெளி எழுத்துகள், தமிழி எழுத்துகளில் மக்கட்பெயர்கள், மன்னர் பெயர்கள், கடல்கொண்ட குமரிக்கண்டத்து தமிழ் வேந்தர்கள் பெயர்கள் கல்வெட்டுகளி லிருந்து காணக் கிடைத்துள்ளன. தென் னாட்டிலும், வடநாட்டிலும் வழங்கும் பெயர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன.

தொன்முது நாகரிகங்களில் முன்முது நாகரிகமான சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் எனப் பின்லாந்து அறிஞர் அசுகோ பர்போலா, அறிஞர் அய்ராவதம் மகாதேவன் போன்றோர் உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளனர்.

தமிழ் எழுத்துக்களின்

வளர்ச்சி

மூன்று தமிழ்ச்சங்க வரலாற்றின்படி, முதல் தமிழ்ச்சங்க காலத்தில் ஓவிய எழுத்தும், இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் சிந்துவெளி எழுத்தும், மூன் றாம் தமிழ்ச்சங்க காலத்தில் தென்பிராமி எனப்படும் தமிழி எழுத்தும் அதிலி ருந்து வட்டெழுத்தும், சோழர் காலத் தில் இன்றைய தமிழ் எழுத்துமாக வளர்ந்த தமிழ் எழுத்துகளின் வளர்ச்சி வரலாறு தமிழ் எழுத்துகளின் சங்கிலித் தொடர்போன்று தொடர்பு அறாத 5000 ஆண்டுக்காலத் தமிழ் எழுத்தின் தொன்மையைப் புலப்படுத்துகின்றன.

இவ்வாறு  பல்வேறு அரிய தகவல் களை இரா.மதிவாணன் சிறப்புரையில் குறிப்பிட்டார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிறைவுரையாற்றினார்.

வரலாறு அறிந்தால் இன,மொழி உணர்வு வரும். தொன்மை, தொல்லியல் ஆய்வுகள் இன்னும் அதிகமாக கொண்டு செல்ல வேண்டும். பல ஆண்டு களுக்கு முன்னர் செய்த ஆதிச்சநல்லூர் அக ழாய்வு அறிக்கை இன்னமும் வெளியாக வில்லை. கீழடி அகழாய்வு அலுவலர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அசாமுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு கீழடி குறித்து அறிக்கை கொடுக்கக்கூடாது என்று தடை போட் டிருக்கிறார்கள். திராவிடம் என்பது பார்ப்பனர்களின் கண்ணை கருவேல் முள்ளாக உறுத்திக்கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் கூறியதைப்போல அனைத்து வகைகளிலும் ஆரிய, திரா விடர் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய இணை செயலாளர் பேராசிரியர் முனை வர் ஏ.தானப்பன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner