முன்பு அடுத்து Page:

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், பிப்.20 தஞ்சாவூரில் இன்று (20.02.2019) காலை 10.30 மணியளவில் தஞ்சை திலகர் திடலில் வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாடுகளை முன்னிறுத்தி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்   திலகர் திடலில் உள்ள பந்தலில் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டு நிகழ்வுகள் குறித்தும் தற்போது எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் செய்திகளை பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் பொதுச் செயலாளர்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:15:05

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை  தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

கோவையில் நடைபெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் அழைப்பிதழை திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வழங்கினார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன். (20.2.2019, பெரியார் திடல்) மேலும்

20 பிப்ரவரி 2019 17:08:05

திராவிடர் கழக மாநாட்டு நன்கொடைகள்

திராவிடர் கழக மாநாட்டு நன்கொடைகள்

காரைக்குடி திராவிட மணி சார்பில் ரூ.ஒரு லட்சத்தினை என்னாரெசு பிராட்லா தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சிறீவில்லிபுத்தூர், 17.2.2019) இராஜபாளையம் இல.திருப்பதி மாநாட்டுநிதியாக ரூ.30 ஆயிரம், விடுதலை ஆதவன் ரூ.10 ஆயிரம், வானவில் மணி ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சிறீவில்லிப்புத்தூர், 17.2.2019) திராவிடர் கழக தொழிலாளரணி சார்பில் திருவெறும்பூர் சேகர் ரூ. ஒரு லட்சத்தினை மாநாட்டுநிதியாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 20.2.2019) சென்னை மண்டலச் செயலாளர் கொடுங்கையூர் கோபால், மாநாட்டு நிதியாக....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:53:04

அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட ‘பெரியார் 1000’ தேர்வு! வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பரிசு…

அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட ‘பெரியார் 1000’ தேர்வு!  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பரிசுகள்!

சென்னை.பிப். 20 ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தஞ்சை இரா. பெரியார் செல்வன் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையைத் தூண்டும் வகையில் பேசி, பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற இருபால் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டிலும் கடந்த 4.2.2019 ஆம் தேதி பெரியார் 1000 வினாவிடைப்....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:59:03

சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் நாடெங்கும் சாம்பல்!

சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் நாடெங்கும் சாம்பல்!

சென்னை, பிப்.20 நம்மை சூத்திரன் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் 7.2.2019 அன்று தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தினரால் எரிக்கப்பட்டது. அவ்விவரம் வருமாறு: ஈரோடு 07.02.2019 வியாழன் முற்பகல் 11 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் முன்பு திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் ஒன்று கூடி மனுதர்மத்தை ஒலி முழக்கத்துடன் எரிக்க முயன்ற போது 28 தோழர்கள் ஈரோடு மாநகர காவல்துறையினரால் கைது....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:58:03

கழகக் களத்தில்...!(22,16,17.2.2019)

22.2.2019 வெள்ளிக்கிழமை ‘பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு’ சென்னை: * நேரம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை * இடம்: அறை எண் 48, நவீன குளிரூட்டப்பட்ட அரங்கு,  டவர் கிளாக் கட்டடம், இந்திய வரலாற்றுத் துறை,  சென்னை பல்கலைக்கழகம் *  தலைப்பு: ‘பெரியாரின் நடைமுறைத் தத்துவம்’ * உரையாற்றுபவர்:  பேராசிரியர் முனைவர் எஸ்.பன்னீர்செல்வம், மேனாள் தலைவர், இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம் * அழைப்பு: பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம், தலைவர் இந்திய வரலாற்றுத் துறை,....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:50:03

சமுக நீதி மாநாட்டிற்கான கடைவீதி வசூல்

சமுக நீதி மாநாட்டிற்கான கடைவீதி வசூல்

காரைக்கால் மண்டலத்தில் சமுக நீதி மாநில மாநாட்டிற்கான கடைவீதி வசூல் பணியில் காரைக்கால் மண்டல இளைஞர் அணியின் தலைவர் நாத்திக பொன்முடி, மண்டல இளைஞர் அணியின் செயலாளர் பெரியார் கணபதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மண்டல துணை தலைவர் பதி.செயசங்கர், பொதுக் குழு உறுப்பினர் அன்பானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும்

20 பிப்ரவரி 2019 15:44:03

ஒழுங்கு நடவடிக்கை

கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வந்த திராவிடன் என்பவர் கழகக் கொள்கைக்கு விரோதமாகவும், கழக நிலைப்பாட்டினைப் புரியாமலும் சமூக வலைதளங்களில் தான் தோன்றித்தனமாக பதிவு செய்து வருவதால் கழகத்தின் கட்டுப்பாடு கருதி அவர் கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார். கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக தோழர் நா. பஞ்சமூர்த்தி நியமிக்கப்படுகிறார். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் முகவரி:  நா. பஞ்சமூர்த்தி, வேகாக்கொல்லை, குறிஞ்சிப்பாடி வழி - 607302 கைப்பேசி: 9367631024 மேலும்

19 பிப்ரவரி 2019 16:17:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகில் உள்ள 600 கோடி பேருக்கும் உண்மையிலேயே'' கடவுள் நம்பிக்கை இல்லை!

திண்டுக்கல்: பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டில் இனமுரசு சத்யராஜ் உரை

திண்டுக்கல், அக். 9 இயற்கைக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை; உலகில் உள்ள 600 கோடி பேருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை  என்றார் இனமுரசு சத்யராஜ் அவர்கள்.

29.9.2018 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டில் இனமுரசு சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார்:

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சூரிய பகவானாகப் பார்த்தால்,

குழப்பம் ஏற்பட்டுவிடும்!

சூரியனை, சூரியனாகப் பார்க்கின்ற வரையில், குழப்பம் ஏற்படாது. சூரிய பகவானாகப் பார்த்தால், குழப்பம் ஏற்பட்டுவிடும். வெயில் அடித்தால், நீ குடையைப் பிடிக்கமாட்டாய்; ஏனென்றால், அவரை அவமானப் படுத்துவது என்று குடை பிடிக்காமல் விட்டு விடுவாய்.

நான் எதைப் பேசினாலும், அதை ஆசிரியர் அய்யா அவர்கள் ஏற்கெனவே பேசியிருக்கிறார்.

உலகில் உள்ள 600 கோடி பேருக்கும்

கடவுள் நம்பிக்கை இல்லை!

உலகத்தில் உள்ள 600 கோடி பேருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. யார் டாக்டரிடம் சென்று மருந்து வாங்கி உட்கொள்கிறார்களோ, அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

நான் conscious ethics - unconscious ethics என்று பேசினேன்.

யார் கண் டாக்டரிடம் சென்று கண்ணாடி போடுகிறார்களோ, அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

யார், உடற்கட்டு வரவேண்டும் என்று ஜிம்முக்குச் செல்கிறார்களோ, அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

யார், தேர்வில் தேர்வாகவேண்டும் என்று படிக்கி றார்களோ, அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.

இன்னுங்கேட்டால், நல்ல நேரம் - கெட்ட நேரம் பார்க்கின்றவர்களுக்கே கடவுள் நம்பிக்கை இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு நேரத்தின்மீதுதான் நம்பிக்கையே தவிர, கடவுள்மேல் நம்பிக்கை இல்லை.

knowingly ethics
unknowingly ethics

இதெல்லாம்பற்றி நான் பேசும்போது, ஆசிரியர் என்னிடம், நீங்கள் மிகவும் சிறப்பாகப் பேசினீர்கள் என்று சொன்னார். ஆனால், இன்னொரு தோழர் என்னிடம் சொன்னார்,

இதை ஆசிரியர் அவர்கள் knowingly ethics - unknowingly ethics என்று பேசியிருக்கிறார் என்றார்.

இன்றைக்கு நான் ஒரு புதிய விஷயத்தை சொல்லவேண்டும் என்று நினைத்து வந்திருக்கிறேன். பெரியார் அய்யா பேசாத விஷயங்கள் கிடையாது.

மூடநம்பிக்கை, ஜாதி, மதம் எல்லாம் ஒரு மனிதனுடைய மகிழ்ச்சியைக் கெடுக்கிறது. ஜாதி, மதம், மூடநம்பிக்கைகளை வைத்துத்தான் பிறப்பால் உயர்ந்தவன் - தாழ்ந்தவன்.

ஆணாகப் பிறந்தவன் உயர்ந்தவன்; பெண்ணாகப் பிறந்தவள் தாழ்ந்தவள்.

பெண்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஒப்புக் கொள்ளமாட்டீர்கள் அல்லவா!

குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவன் உயர்ந்தவன்; குறிப்பிட்ட ஜாதியில் பிறந்தவன் தாழ்ந்தவன்.

கடவுள் என்கிற கற்பனை கருத்தியலை

நாம் உடைத்தால்தான் முடியும்

இதை நாம் ஒப்புக்கொள்ள முடியுமா? என்றால், முடியாது.

ஏனென்றால், இதற்குப் பாதுகாவலாக சகலவிதமான மூடநம்பிக்கைகளையும், மதத்தையும் வைத்திருக்கிறார்கள். அந்த மதத்திற்குக் காவலாக கடவுளை வைத்திருக்கிறார்கள். அதில்தான் சிக்கல்.

அப்படியென்றால், சமூகநீதியை முன்னெடுக்க வேண்டும் என்றால், கடவுள் என்கிற கற்பனை கருத்தியலை நாம் உடைத்தால்தான் முடியும்.

கடவுள் எங்கே தோன்றியது என்று நான் யோசித்துப் பார்த்தேன்.

உலகம் தோன்றியபொழுது

மனிதனே கிடையாது

நிச்சயமாக, உலகம் தோன்றியபொழுது மனிதனே கிடையாது.

ஒரு செல் அமீபா வந்தது; இரண்டு செல் அமீபா வந்தது

அது பிரிந்து பிரிந்து நீர் வாழ்வன; கடல் வாழ்வன - முதன்முதலாக ஆமை தோன்றியது - குரங்கு தோன்றியது - குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு என்பது வரலாறு.

உலகம் தோன்றியபொழுது கடவுள் கிடையாது. ஆக, உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனே தோன்றுகிறான்.

பிறகு எப்படி சொல்கிறார்கள், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் இப்படித்தான் இருப்பான்? என்று;  உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கழித்து உருவான உனக்கு எப்படி தெரியும்? என்று நான் கேட்கிறேன்.

உலகம் தோன்றுவதற்குமுன் நீ உருவாகியிருந்தால் தானே உனக்கு அது தெரியும்.

அப்படியென்றால், கடவுள் எப்படி உருவாகி இருக்கும் என்று நானாக யோசித்தேன்.

ஒரு மனிதன் பேசத் தெரியாமல், காட்டிற்குள் காட்டுமிராண்டியாக வாழ்ந்து கொண்டிருந்தபொழுது, அவனுடைய கண்ட்ரோல் இல்லாமல் சில விஷயங்கள் நடைபெறுகின்றன.

சூரியன் வருகிறது; திடீரென்று வெளிச்சம் வருகிறது. மாலையில் சூரியன் மறைந்து, இருட்டாகி விடுகிறது.

சூரிய வெளிச்சம் வருகிறது; பிறகு இருட்டாகிறது; திடீரென்று மழை வருகிறது; காற்று வீசுகிறது; பிறகு காற்று வீசுவது நின்று விடுகிறது. அவனுக்கு மிகப்பெரிய முதல் பிரச்சினையே இருட்டுதான். சூரியன் மறைந்ததற்குப் பிறகு இருட்டானதும் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், மிருகங்கள் வந்து தன்னை தாக்கும் என்றும், இருட்டில் எங்கே செல்வது என்று தெரியாமல், மரத்தின்மீது முட்டிக்கொள்வான். அப்படி இருக்கையில்,

ஒரு பயந்த மனிதன், பகுத்தறிவு இல்லாத மனிதன் இரவு முழுவதும் அமர்ந்து,

சூரியனே வா, சூரியனே வா, சூரியனே வா

என்று விடிய விடிய கத்திக் கொண்டிருந்தால்,

எப்படியும் காலையில் சூரியன் வந்துவிடும் அல்லவா! சூரியன் வந்ததும் இவன் நினைத்துக் கொண்டான், ஆகா, நாம் அழைத்துதான் சூரியன் வந்துவிட்டது என்று நினைத்தான்.

நான்தான் உனக்கு குரு; நான் சொன்னபடியெல்லாம் நீ கேட்கவேண்டும்

கத்தி, கத்தி சிலர் சோர்வடைந்து தூங்கியிருப்பார்கள் அல்லவா. அவர்கள் என்ன நினைத்தார்கள் தெரியுமா?

அவன் கூப்பிட்டுத்தான் சூரியன் வந்திருக்கிறது என்று.

சூரியனே வா என்று சொன்னவனும், டேய், நான் அழைத்துதான் சூரியன் வந்திருக்கிறது. நீ நேரிடையாக அழைத்தால் வராது. அதனால், நான்தான் உனக்கு குரு. ஆகவே, நான் சொன்னபடியெல்லாம் நீ கேட்கவேண்டும் என்று சொல்கிறான்.

இன்னொரு பக்கம் நம் ஆள் நின்று கொண்டிருக்கிறான். பகுத்தறிவுவாதி - அந்தக் காலத்துப் பகுத்தறிவுவாதி. அவன் யோசிக்கிறான் - இருட்டானால்தானே பிரச்சினை நமக்கு. அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டே செல்கிறான்.

இரவு நேரத்தில், காட்டில் எங்கோ ஓரிடத்தில் மரங்கள் உரசி, தீப்பற்றிக் கொள்கிறது. தீப்பற்றியதும் அந்த வெளிச்சத்தில் எல்லாம் தெளிவாக அவனுக்குத் தெரிகிறது. ஓகோ, தீ இருந்தால், இருட்டில்கூட நன்றாக நாம் பார்க்கலாம் என்று அவன் தெரிந்துகொண்டான்.

சூரியன் இல்லாவிட்டாலும், நாம் தீயை வைத்து வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்து, இரண்டு கற்களை எடுத்து உரச, தீப்பிடித்தது - உடனே வெளிச்சம் வந்தது.

உலகத்திற்கு யார் முக்கியமானவர்கள்?

அந்த வம்சாவளியில் வந்தவர்கள்தான் தாமஸ் ஆல்வா எடிசன், ஸ்டீவ் ஜாக்சன், கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர்கள். அப்படியென்றால், இந்த உலகத்திற்கு யார் முக்கியமானவர்கள்? அந்த விஞ்ஞானிகள்தான் முக்கியமானவர்கள்.

நீங்கள் நன்றாக யோசித்துப் பாருங்கள், கரண்ட் என்ற ஒன்று இல்லாமல் போனால் என்னாகும்?

யாராவது ஒரு சாமியைக் கும்பிடவேண்டும் என்று சொன்னால், நம்முடைய தாமஸ் ஆல்வா எடிசனை வேண்டுமானால் கும்பிடலாம்.

எலக்ட்ரிசிட்டி என்கிற ஒரு விஷயம் இல்லாமல் இருந்திருந்தால், எல்லாம் ஆண்டவன் செயல், எல்லாம் ஆண்டவன் செயல் என்று தாமஸ் ஆல்வா எடிசனும் போய் படுத்திருந்தார் என்றால், நமக்கு கரண்ட் கிடையாது, கம்ப்யூட்டர் கிடையாது, செல்போன் கிடையாது, சினிமா கிடையாது, சினிமாவில் நடித்ததற்காக சி.எம். ஆகிற நடிகர்கள் கிடையாது.

செல்போன் இல்லாத வாழ்க்கையை இன்றைக்கு யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா?

இத்தனை பிரச்சினையும் எங்கே வருகிறது என்றால், இந்த விஞ்ஞான வளர்ச்சியினால்தான் வருகிறது. அப்படி யென்றால், இந்த விஞ்ஞானம் வளர்ந்த காலத்தில், திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு மாட்டு வண்டியில் சென்றால் நல்லாயிருக்குமா? பேருந்தில் சென்றால் நல்லாயிருக்குமா? காரில் சென்றால் நல்லாயிருக்குமா? என்று யோசிக்கிறோம் என்றால், இன்றைக்கு விஞ்ஞான வசதிகள்தான் அவ்வளவு பெரிய வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது. செல்போன் இல்லாத வாழ்க்கையை இன்றைக்கு யாராவது நினைத்துப் பார்க்க முடியுமா?

செல்போன், யாருடைய வம்சாவளியில் வந்தவர்கள் கண்டுபிடித்தது? சூரியனுக்கு இன்னொரு பக்கம் நின்று யோசித்தான் பாருங்கள் - ஆகா, தீயை உருவாக்கினால், நாம் இருட்டை விரட்டிவிடலாம் என்று நினைத்தான் பாருங்கள் - அந்த வழியில் வந்தவர்கள் கண்டுபிடித்ததுதான்.

இந்த விஞ்ஞான வளர்ச்சியை நோக்கி நாம் செயல்படவேண்டும்; விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தி செயல்படவேண்டும் என்பது மிக முக்கியம். அதுதான் இயற்கைக்கும், கடவுள் என்ற கற்பனை கருத்தியலுக்கும் இருக்கின்ற வித்தியாசம்.

இயற்கைக்கும் - கடவுளுக்கும்

சம்பந்தம் இல்லை!

திடீரென்று மழை வந்தால் வரும்;  வராது என்று சொல்ல முடியாது. மழை வந்தால், தானாக நின்று விடும். அதற்கும், கடவுளுக்கும் சம்பந்தம் கிடையாது. சூரியன் உதிக்கும்; மறையும்; மழை வரும்; நிற்கும்; காற்றடிக்கும்; நிற்கும். ஆகவே, நீ சுயமாக சிந்தித்து செயல்பட்டால்தான் நல்லது.

இன்றைக்கு மனிதனின் சராசரி வயதும் எவ்வளவு உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? மருந்து, மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள், மருத்துவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி இவை எல்லாம் சேர்ந்துதான், ஒரு மனிதனுடைய ஆயுளை நீட்டுகிறது. அவனுடைய வாழ்க்கையை சுகமாக்கி இருக்கிறது.

சாதாரண கொசுவத்திகூட விஞ்ஞான வளர்ச்சிதான். இதெல்லாம் ஆண்டவன் செயல் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் நாத்திகர்களாக இருப்பதும் ஆண்டவன் செயல்தான்.

Thank God, you made me Athiest

அய்யா, உன்னை ஆத்திகனாகப் படைத்த கடவுள், என்னை நாத்திகனாகப் படைத்துவிட்டான்.

ஏன் படைத்தான்?

அவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும்.

இவன் ஜாலியாக சுத்தட்டும் என்று.

ராகுகாலம், எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம், அஷ்டமி, நவமி, குட் பிரைடே என்றெல்லாம்  வைத்து அவர்களுடைய சிந்தனை வேறெங்கும் செல்லாமல், இதற்குள்ளேயே அவர்களை அமுக்கி வைக்கலாம் என்று ஆத்திகர்களைப் படைத்துவிட்டு,

எங்களையெல்லாம் நாத்திகர்களாகப் படைத்தான்.

அதனால்தான் சொல்கிறேன், தேங் காட், யூ மேட் மீ எத்திஸ்ட். உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்வதற்காக எழுதி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்.

நியூமராலாஜியில் கூட்டுத் தொகை 9

பொதுவாகவே நியூமராலாஜியில் கூட்டுத் தொகை 9 தான்.

9 கூட்டுத் தொகையை வைத்துத்தான் ராசி எண் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் திரைத்துறையில் முன்னுக்கு வருவார்கள் என்று சொல்கிறார்கள்.

திரைத்துறையில் முன்னுக்கு வந்தவர்களின் பட்டியலை நான் சொல்கிறேன்.

ஒன்றாம் தேதி பிறந்தவர்கள் நடிகர் திலகம் சிவாஜி, தம்பி அஜித்.

இவர்கள் இரண்டு பேரும் திரைத்துறையில் முன்னுக்கு வந்தவர்களே!

இளையராஜாவும், குஷ்புவும் 2 ஆம் தேதி பிறந்தவர்கள்.

இளையராஜா ஜூன் 2 ஆம் தேதி பிறந்தவர்; குஷ்பு 29 ஆம் தேதி பிறந்தவர்.

2 + 9 = 11 11 என்றால், 1 +1 = 2

ஆக, 2 ஆம் தேதியும் கலைக்கு உகந்த எண்ணாக இருக்கிறது அல்லவா!

மூன்றாம் தேதி பிறந்தவர்கள் நம்முடைய டாக்டர் கலைஞர் அவர்கள், நம்முடைய மதிப்பிற்குரிய ரஜினிகாந்த் அவர்கள், சத்யராஜ் ஆகிய நான்.

3 ஆம் எண்ணும் கலைக்கு உகந்த எண்ணாக இருக்கிறது அல்லவா!

மூன்றோடு நிறுத்திவிடலாம் என்றால்,

தம்பி விஜய் அவர்கள் 22 ஆம் தேதி பிறந்தவர். கூட்டுத் தொகை 4 ஆகிறது.

அப்படியென்றால், 4 ஆம் எண்ணும் கலைக்கு உகந்த எண்ணாக இருக்கிறது.

சரி இதோடு நிறுத்திவிடலாம் என்று பார்த்தால்,

நம்முடைய சரத்குமார் அவர்கள் 14 ஆம் தேதி பிறந்தவர். கூட்டுத் தொகை 5.

அப்படியென்றால், 5 ஆம் எண்ணும் கலைக்கு உகந்த எண்ணாக இருக்கிறது.

இயக்குநர் பி.வாசு அவர்கள் 15 ஆம் தேதி பிறந்தவர். கூட்டுத் தொகை 6.

அப்படியென்றால், 6 ஆம் எண்ணும் கலைக்கு உகந்த எண்ணாக இருக்கிறது.

சரி, இதோடு நிறுத்திவிடலாம் என்றால்,

நம்முடைய கமலகாசன் அவர்கள் நவம்பர் 7 ஆம் தேதியும், விஜய்காந்த் அவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தவர்கள்.

அப்படியென்றால், 7 ஆம் எண்ணும் கலைக்கு உகந்த எண்ணாக இருக்கிறது.

சரி, 8 ஆம் எண் ராசியில்லாத எண் என்று சொல் வார்களே என்று பார்த்தால்,

ஜனவரி 17 இல் பிறந்தவர்தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்குகிற இயக்குநர் சங்கர் அவர்கள் ஆகஸ்ட் 17. 17-இன் கூட்டுத் தொகை 8.

அப்படியென்றால், 8 ஆம் எண்ணும் கலைக்கு உகந்த எண்ணாக இருக்கிறது.

எஞ்சியிருப்பது ஒரே ஒரு எண்தான் அது 9 ஆம் எண்தான்.

அன்புத் தம்பி, சின்னத்தம்பி இளைய திலகம் பிரபு அவர்கள் 9 ஆம் தேதி பிறந்தவர்.

திரைத் துறையில் வெற்றி - தோல்வி

அப்படியென்றால், 9 ஆம் எண்ணும் கலைக்கு உகந்த எண்ணாக இருக்கிறது.

திரைத்துறைக்கு வந்து, 9 ஆம் எண்ணிலும் உருப்படாத போனவர்களின் பெயர்களும் எனக்குத் தெரியும். அதைச் சொன்னால், அவர்களுக்கு மரியாதைக் குறைவாக இருக்கும் என்பதினால், அவர்களுடைய பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை. திரைத் துறைக்கு வந்து தோல்வி அடைந்தவர்களும் இந்த 9 எண்ணிலும் இருக்கிறார்கள்.

ஆக, 9 எண்களிலும்  திரைத் துறையில் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள்; தோல்வி அடைந்த வர்களும் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் நான் ஏன் இங்கே சொல்கிறேன் என்பதை யோசித்துப் பாருங்கள்.

வசதியாகவும், சவுகரியமாகவும் இருக்கின்றேன் நான். இன்னும் சொல்லப்போனால்,  unconscious ethics  ஆக இருக்கிறவர்களுக்கு நான் சொல்வதைக் கேட்டால் கோபம் வரத்தான் செய்யும்.

ஒரு சமூகக் கடமையாக நம்புகிறேன்

திரைத் துறையில் இருக்கின்ற நான், நான்கு பேருக்குப் பிடிக்கின்ற மாதிரி பேசினால்தான், மக்களுக்கு என்ன பேசினால்  பிடிக்குமோ அதைப் பேசினால்தான் புத்தி சாலித்தனம் என்று அர்த்தம். இப்படி நான் பேசினால், நான்கு பேர்களுக்கு என் மேல் கோபம் வரும். அப்படி இருந்தாலும் ஏன் நான் பேசுகிறேன் என்றால், இதை ஒரு பெரியார் தொண்டனாக இருக்கும் நான், இதை ஒரு சமூகக் கடமையாக நம்புகிறேன்.

எந்தவிதத்திலும், மதத்திற்கு எதிராகவும், ஜாதிக்கு எதிராகவும், ஆண் - பெண் பாகுபாட்டிற்கு எதிராகவும், கடவுள் என்கிற கற்பனைக் கருத்தியலுக்கு, மனிதனால் உருவாக்கப்பட்ட, உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட கடவுளுக்கு எதிராகப் பேசுகிறேன் என்றால்,

பிறக்கும்பொழுதே வசதியான குடும்பத்தில் பிறந்தவன். எந்த வகையிலும் சோற்றுக்கு கஷ்டமில்லாதவன். இந்தப் பிரச்சினையை நான் பேசவேண்டிய அவசியமில்லை. திரைத் துறைக்கு வந்து, நான் நினைத்ததைவிட பல மடங்கு வெற்றி பெற்றிருக்கிறேன்.

குடும்ப ரீதியாகவும், பண ரீதியாகவும் திருப்தியாக இருக்கின்ற நான், இப்படி பேசவேண்டிய அவசியம் என்னவென்றால், நீங்களும் என்னைப் போல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதினால்தான்.

எந்த ஓட்டலிலும் சாப்பிடாமல், இந்த ஓட்டல்தான் பிரியாணி நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியுமா? நிறைய ஓட்டல்களில் சாப்பிட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட ஓட்டல் பிரியாணி நன்றாக இருக்கிறது என்று சொல்வோம். அதுபோலத்தான், இங்கே வாருங்கள், மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்; புத்தி மிகவும் தெளிவாக இருக்கும். எந்த நேரத்தில், என்ன முடிவு எடுக்கலாம் என்பதில் தெளிவாக இருக்கலாம்.

கிரியேசன் என்று ஒன்று இருந்தால், கிரியேட்டர் என்று ஒன்று இருக்கவேண்டும் என்று யாரோ சொல்கிறார்கள்.

பெரியார் திரைப்படத்தில்....

பெரியார் திரைப்படத்தில் பாடல் ஒன்று வந்திருக்கிறதே,

கடவுள் உலகத்தைப் படைத்தான் என்று ஒருவர் பாடுவார்.

அப்படியென்றால், இருக்கட்டும்; கடவுளை யார் படைத்தார் என்று பெரியாராக நடித்த நான் கேட்பேன்.

கடவுளை யாராவது படைக்க முடியுமா? அவர் சுயம்பு - தான்தோன்றி, தானாக உண்டானவர் என்று அவர் பாடுவார்.

அதற்கடுத்து நான் பாடுவேன்,

ஏனய்யா, கண்களிலேயே பார்க்காத கடவுள் சுயம்பாகவும், தான்தோன்றியாகவும், தானாக உண்டான வராக இருக்கும்பொழுது, கண்களால் பார்க்கும் உலகம் ஏன் தானாகத் தோன்றியிருக்க முடியாது என்று நான் கேட்பேன்.

அதுபோன்று, எல்லா விஷயங்களுக்கும் இங்கே பதில் இருக்கிறது. பக்தர்களுக்கு 100 கேள்விகள் என்கிற புத்தகம் இருக்கிறது, அதைப் படித்துப் பாருங்கள், மிகவும் முக்கியம் அது.

ஏனென்றால், தனி மனித மகிழ்ச்சி என்பது இந்த சிந்தனைத் தெளிவினால் வந்துவிடுகிறது. இதற்கு நடுவில், அய்யாவினுடைய கொள்கைகளும், பகுத்தறிவு சிந்தனைகளும், சமூகநீதி வளரும்பொழுதுதான், சமூக மகிழ்ச்சி என்கிற ஒன்று வருகிறது.

என்னை சுற்றியிருக்கும் சமூகம் மகிழ்ச்சியாக இல்லாதபொழுது, என்னுடைய மகிழ்ச்சி பாதிக்கப்படும்

உலகத்தில் மகிழ்ச்சியான நாடு எதுவென்றால், நார்வே நாடுதான்.

தனி மனித மகிழ்ச்சி என்பது மட்டும் முக்கியமல்ல; சமூக மகிழ்ச்சியும் முக்கியம்.

நான் நன்றாக, வசதியாக இருக்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய நண்பர்களுக்கோ, என்னுடைய உறவினர்களுக்கோ கடன் தொல்லையோ, உடல்நிலை சரியில்லை என்றாலோ - நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருந்தாலும், என்னை சுற்றியிருக்கும் சமூகம் மகிழ்ச்சியாக இல்லாதபொழுது, என்னுடைய மகிழ்ச்சி பாதிக்கப்படும்.

அப்படியென்றால், ஒரு சமூகம் மகிழ்ச்சியாக இருந்தால்தான், தனி மனித மகிழ்ச்சி அதிகமாகும். ஒரு சமூகமே மகிழ்ச்சியாக இருப்பதற்கு மிக முக்கியமான தேவை - பொருள். அந்தப் பொருளுக்கும், உனக்கும் இடையில் இருப்பது பணம். பிறப்பை காரணமாக வைத்து தடுக்கும்பொழுது...

அந்தப் பணத்திற்குத் தேவையானது - மிக முக்கியத் தேவையாக இருப்பது கல்வியும், வேலை வாய்ப்பும்.

இந்தக் கல்வியும், வேலை வாய்ப்பும் பிறப்பின் அடிப்படையில், பிறப்பை காரணமாக வைத்து தடுக்கும்பொழுது, அதனை எதிர்த்து நாங்கள் போராடுவோமா - மாட்டோமா?

வெறும் நான்கு இட்லி சாப்பிட்டால், சுமாராகத்தான் இருக்கும். சட்னியும், சாம்பாரும் தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும். மீன் குழம்பு, சிக்கன் குழம்பு தொட்டு சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். எல்லாவற்றிற்கும் பணம்தான்.

சைக்கிளில் சென்றால் ஒரு மகிழ்ச்சி.

ஸ்கூட்டரில் சென்றால், அதைவிட மகிழ்ச்சி

காரில் சென்றால், அதைவிட இன்னும் மகிழ்ச்சி யாகத்தான் இருக்கும்.

இதற்கும் பணம்தான் வேண்டும். கல்வியும், வேலை வாய்ப்பும் இருந்தால்தான், அந்தப் பணத்தை சம்பாதிக்க முடியும். மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

நம் மூளையை மழுங்கடிப்பதற்காக ஒன்றைச் சொல்வார்கள், பணம் இருந்தால், பெற்ற தாயை விலைக்கு வாங்க முடியுமா? என்று.

பெற்ற தாயை விலைக்கு வாங்க முடியாது. ஆனால், பெற்ற தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் செய்வதற்குப் பணம் வேண்டும் அல்லவா!

பெற்ற தாயின் கால்களில் செருப்பில்லாமல் நடத்திக் கூட்டிச் செல்வதைவிட, செருப்பு வாங்கி நடத்திச் சென் றால் மகிழ்ச்சி அடைவார்கள் அல்லவா!

பெற்ற தாயை நடந்து அழைத்துச் செல்வதற்குப் பதில், காரில் அழைத்துச் சென்றால், அந்தத் தாய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா!

அந்த மகிழ்ச்சிக்குப் பணம் வேண்டும் அல்லவா! அந்தப் பணத்திற்கு கல்வியும், வேலை வாய்ப்பும் வேண்டும் அல்லவா!

அதைத் தடுத்தால், மறுத்தால் நாம் கேள்வி கேட்கத்தானே செய்வோம்.

ஜாதியின் பெயரால், பாலினத்தின் பெயரால், ஆண் - பெண் என்கிற பேதத்தின் பெயரால், கல்வியையும், வேலை வாய்ப்பையும் தடுத்து, அதற்குக் காவலாக, மதத் தையும், அதற்குக் காவலாக கடவுள் என்கிற கற்பனைக் கருத்தியலையும் வைக்கும்பொழுது, அதை எதிர்த்து நாம் போராடத்தான் செய்வோம்; அதைத்தான் இந்த இயக்கமும் செய்துகொண்டிருக்கிறது.

இந்த மேடையில், இந்த ஆசிரியர்களுக்கு இடை யில், பல பிஞ்சுகள் - இவர்கள் எல்லாம் எதிர்கால ஆசிரியர் கள்தான். சமூக வலைதளங்களில் இன்றைக்கு இளைஞர்கள் உள்ளே போய் பின்னி பெடல் எடுக்கிறார்கள். விஞ்ஞானம் வளர வளர, விஞ்ஞானம் பகுத்தறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

பெரியாருடைய பகுத்தறிவு கொள்கைகள் வெற்றி பெறுகின்றன

இன்றைக்குத் தந்தை பெரியாருடைய கொள்கைகளை சமூக வலைதளங்களில் எங்கோ கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு, எத்தகைய மூடநம்பிக்கையை வளர்த் தாலும், அதையும் தாண்டி பெரியாருடைய பகுத்தறிவு கொள்கைகள் வெற்றி பெறுகின்றன. அவ்வளவு சிந்தனைத் தெளிவு. அந்தக் கோபத்தினால்தானே, பெரியார் சிலைமீது செருப்பு வீசுகிறார்கள். வேறு என்ன கோபம் அவர்களுக்கு - ஒருவர் இறந்து 40 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. ஆனால், அவரை இன்னமும் எதுவும் செய்ய முடியவில்லை என்கிற ஆத்திரம்தான் அவர்களுக்கு.

பெரியார் உயிரோடு இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார், ஏங்க, சிலைமேலே கொண்டு போய் செரு வீசுறீங்க - டைம் சொல்லுங்க, நான் வந்து நிற்கிறேன், என்மேலே வீசுங்க என்பார்.

அவ்வளவு தடவை அவர்மீது செருப்பு வீசியிருக் கிறார்கள்.

பெரியார் அவர்கள் மேடையில் உரையாற்றும்பொழுது சொல்வாராம் - ஏங்க, நல்லாத்தானே நான் பேசுகிறேன். பத்து நிமிடமாகப் பேசுகிறேன், ஒருத்தரும் செருப்பை எடுத்து வீசவில்லையே என்பாராம்.

அப்படி வீசும்பொழுது ஒரு செருப்பை வீசாதீர்கள்; இரண்டு செருப்பையும் வீசுங்கள். அப்பொழுதுதான் அது எனக்குப் பயன்படும் என்பாராம்.

பெரியார் சொன்னதை யாராலும் அழிக்க முடியாது

ஆக, அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவரின் சிலையை உடைப்பது, செருப்பை வீசும் நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள். அதனால் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

பெரியார் அவர்கள் இங்கே இருக்கிறார் - இங்கே என்பது நெஞ்சைப் பிளந்து காட்டுகின்ற பெரியார் இல்லை. அவருடைய கொள்கைகளும், சித்தாந்தங்களும், தத்துவங்களும் உள்ளே இருக்கிறது. தாடி வைத்த உருவத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அவர் என்ன சொன்னார் என்பதுதான் எங்களுக்கு முக்கியம். அவர் சொன்னதை யாராலும் அழிக்க முடியாது.

இன்றைக்கு பெரியாருடைய கனவுகள் எல்லாம் நனவாகிக் கொண்டு வருகின்றன.

சபரிமலைக்குப் பெண்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார்களே!

உலகம் முழுவதும் டெஸ்ட் டியூப் பேபி வந்துவிட்டதே!

உலகம் முழுவதும் பெரியாருடைய பகுத்தறிவு சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

கடவுளின்மேல் நம்பிக்கை இல்லாமல்தானே மாத்திரை சாப்பிடுகிறீர்கள்

நீங்கள் அறிந்தும், அறியாமலும் பெரியாருடைய தொண்டனாகத்தான் இருக்கிறீர்கள். தலைவலி, காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கிச் சாப்பிட்டாலே, கடவுளின்மேல் நம்பிக்கை இல்லாமல்தானே மாத்திரை சாப்பிடுகிறீர்கள்.

ஆகவே, unconscious ethics ஆக இருக்கிறவர்கள் எல்லாம் தயவு செய்து conscious ethics ஆக மாறுங்கள். இதை எதற்காக சொல்கிறேன் தெரியுமா? ஜாலியாக இருக்கலாம்; எந்த நேரத்தில், எந்த முடிவு எடுக்கவேண்டும் என்பதைத் தெளிவாக எடுக்கலாம். பகுத்தறிவுச் சிந்தனையோடு, டென்சன் இல்லாமல், வாழ்க்கையில் முன்னுக்கு வாருங்கள்.

சமூக நன்மைக்காகத்தான் நான் இங்கே வந்து பேசுகிறேன்.

பெரியார் அய்யா சொல்லியிருக்கிறார்,

என் புத்திக்கு எட்டியதை நான் சொல்கிறேன். நீ கேளு, படி. உன்னுடைய புத்திக்கு சரியென்று பட்டால் எடுத்துக்கொள்; அல்லது தூக்கி எறி என்று சொல்லியிருக்கிறார்.

எந்த மதத்தைச் சேர்ந்த தலைவராக இருந்தாலும் இப்படி சொல்ல முடியுமா?

உலகம் உருண்டை என்று சொன்னவர்

ஒரு கலிலியோதான்!

இவ்வளவு பேர் கோவிலுக்குப் போகிறார்களே, நீங்கள் ஒரு 10 பேர்தானே இப்படி பேசுகிறீர்கள் என்று சிலர் கேட்கலாம்.

உலகமே தட்டை என்று நம்பிக் கொண்டிருந்தபொழுது, ஒரே ஒருவர்தான் உலகம் உருண்டை என்று சொன்னார். அவர்தான் கலிலியோ!

இத்தனைக் கோடி பேர் உலகத்தில் இருந்தாலும், உலகம் உருண்டை என்று சொன்னது ஒரே ஒரு புத்திசாலிதானே!

ஆகவே, இங்கே இருப்பவர்கள் எல்லாம் கலிலியோக்கள்தான். நீங்கள் கலிலியோவாக இருந்தால், உங்களுக்கு நல்லது!

- இவ்வாறு இனமுரசு சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார்..

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner