முன்பு அடுத்து Page:

திராவிடர் கழக அமைப்பு

1.  தலைவர்    -   & கி.வீரமணி 2.  துணைத் தலைவர் -  & கவிஞர் கலி.பூங்குன்றன் 3. செயலவைத் தலைவர் &-    சு.அறிவுக்கரசு 4. பொதுச்செயலாளர்கள்: 1.  துரை.சந்திரசேகரன் (பிரச்சாரம்) 2.  வீ.அன்புராஜ்    (தலைமை நிலையம், ஒருங்கிணைப்பு) 3.  இரா.ஜெயக்குமார்    (மாநில கழக அமைப்புப் பணி,     இளைஞரணி ஒருங்கிணைப்பு) 5. பொருளாளர் & வீ. குமரேசன்   கூடுதல் பொறுப்பு: வெளியுறவுத் துறை 6.  மாநில அமைப்பாளர் &  இரா.குணசேகரன் (திராவிட மாணவர் கழக ஒருங்கிணைப்பு) 7. பிரச்சார செயலாளர்       & வழக்குரைஞர் அ. அருள்மொழி கூடுதல்....... மேலும்

18 டிசம்பர் 2018 16:46:04

இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டி இருக்கிறது! தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் வே…

இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டி இருக்கிறது!  தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்  பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தியது வரவேற்கத்தக்கது

சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி சென்னை, டிச.18  தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தியது வரவேற்கத்தக்கது - இந்தியாவிற்கே வழிகாட்டியுள்ளது தமிழகம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 18.12.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவிற்குப் பிறகு  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: திராவிடர் கழக தலைமைச்....... மேலும்

18 டிசம்பர் 2018 16:46:04

மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களின் படத்திறப்பு

மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களின் படத்திறப்பு

கழகப் பொருளாளர் மறைந்த மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் (சென்னை, 18.12.2018) மேலும்

18 டிசம்பர் 2018 15:46:03

கழகப் பொருளாளர் மறைவுற்ற மருத்துவர் பிறைநுதல்செல்வி படத்திறப்பு நினைவேந்தல்

கழகப் பொருளாளர் மறைவுற்ற மருத்துவர் பிறைநுதல்செல்வி படத்திறப்பு நினைவேந்தல்

சென்னை, டிச.18 சென்னை பெரியார் திடலில் இன்று (18.12.2018) காலை நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் கழகப் பொருளாளர் மறைந்த மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களின் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து மறைந்த மருத்துவர் பிறைநுதல்செல்வி படத்தைத் திறந்துவைத்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். திமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆ.இராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்....... மேலும்

18 டிசம்பர் 2018 15:14:03

கருஞ்சட்டைப் பேரணி - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்

கருஞ்சட்டைப் பேரணி - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்

ஆபத்தான இந்துத்துவ சனாதன சக்திகளை முறியடிக்கும் ஒற்றை நோக்கத்தோடு திருச்சியில் டிசம்பர் 23 அன்று நடைபெறும் கருஞ்சட்டைப் பேரணியில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கிறார். மேலும்

18 டிசம்பர் 2018 15:14:03

நத்தமலை கொள்கையாளர் பன்னீர்செல்வம் மறைவிற்கு இரங்கல்

காட்டுமன்னார்குடி வட்டம் நத்தமலை சுயமரியாதை வீரர் க.பன்னீர்செல்வம் அவர்கள், தனது 61ஆம் அகவையில் மறைந்த செய்தி அறிந்து (27.11.2018) வருத்தமுற்றேன். க.பன்னீர்செல்வம் சிறந்த கொள்கையாளர் பண்பாளர் ஆவார். அவரின் புதுமனை யைத் திறந்து வைத்து உரையாற்றிய (17.4.1992) நினைவு பசுமையாக உள்ளது. அத்தகுப் பெருமகன் மறைவால் வருந்தும் குடும்பத்தி னருக்கும், சுற்றத்தாருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங் கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். - கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் மேலும்

17 டிசம்பர் 2018 15:32:03

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து உரத்தநாட்டில் அனைத்து கட்சியினர…

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து உரத்தநாட்டில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திராவிடர் கழகம் பங்கேற்பு

உரத்தநாடு டிச. 17 கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தென்னை விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கப்படாததை கண்டித்து, உரத்த நாட்டில் வெள்ளிக்கிழமை (டிச. 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரத்தநாடு வட்டாட்சியர் அலுவல கம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு திமுக மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமை வகித்தார். கடந்த நவம்பர் 16ஆம் தேதி தாக்கிய கஜாபுயலில் வீடு, உடமைகளை இழந் தவர்கள் குறித்த....... மேலும்

17 டிசம்பர் 2018 15:32:03

டிசம்பர் 18இல் திராவிடர் கழக

டிசம்பர் 18இல் திராவிடர் கழக

தலைமைச் செயற்குழுக் கூட்டம் நாள் : 18-12-2018 செவ்வாய்  சரியாக 10 மணி முதல் 11.30 மணி வரை இடம் :  பெரியார் திடல் (துரை. சக்ரவர்த்தி நினைவகம்),  சென்னை - 600 007. தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள், தஞ்சை, திருவாரூர் மண்டலத் தலைவர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். - கலி. பூங்குன்றன் துணைத்....... மேலும்

17 டிசம்பர் 2018 15:09:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறந்தாங்கி  மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் முடிவு

ஆலங்குடி, அக்.9 அறந்தாங்கி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரை யாடல் கூட்டம் ஆலங்குடி என்.டி.சி தனிப் பயிற்சி மய்யத்தில் 30.09.2018 ஞாயிறு காலை 11 மணியளவில் மாவட்ட பக  தலைவர் அ.தர்மசேகர் தலைமையில் நடைபெற்றது.  மண்டல திக  தலைவர் பெ.இரா வணன், மாவட்ட தலைவர் க.மாரி முத்து, மாவட்ட செயலாளர் இரா. இளங்கோ ஆகியோர் முன்னிலை வகிக்க வரவேற்புரையாற்றினார். மாவட்ட பக அமைப்பாளர் தி.குணசேகரன்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி. இரமேசு தனது உரையில், 69% இட ஒதுக்கீடு  சட்டமான போது சமூகநீதி காத்த வீராங்கனை என ஜெயலலிதாவை பாராட்டியபோது  கழகத்தை விமர்சித்த  தனது நண்பர்கள் அந்த இடஒதுக்கீட்டின் பயனால் வேலை வாய்ப்பு கிடைத்த போது நன்றி தெரிவித்தனர் என்றும், நீட் நுழைவுத்தேர்வு தமிழக மாணவர் களுக்கு ஏற்படுத்தி இருக்கிற சூழ்ச்சி களையும்  எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் முனைவர் மு.சு.கண்மணி தனது உரையில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கையில் ஜாதிக்கயிறு கட்டும் அவல நிலை இருப்பதை ஆசிரியர்கள் கண்டுணர்ந்து அவற்றை அகற்றிட முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும் மாதந்தோறும் சிந்தனைக்களம் கருத்தரங்கம் தொடங்கிடவும், மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கான மாவட்ட இலக்கை விரைந்து முடித்திடவும், உறுப்பினர் சேர்க்கையை முடித்து அக்டோபர் 19இல் தஞ்சையில் நடை பெற இருக்கும்  பொதுக்குழுவில் ஒப்படைக்கவும்  கேட்டுக்கொண்டதோடு, புதிய பொறுப்பாளர்களையும் அறிவித்தார். மாவட்ட செயலாளர் இரா.இளங்கோ தனது உரையில், சிந்தனைக்களம் கருத்தரங்கம் மாதந் தோறும் நடத்திட தனது பங்களிப்பாக  மாதம் ரூ.3000 தருவதாக  அறிவித்தார். மாவட்ட பக தலைவர் அ.தர்மசேகர் தனது ஏற்புரையில், பல்வேறு தளங் களில் உள்ள பெரியார் பற்றாளர்களை  பகுத்தறிவாளர் கழகத்தில் இணைக்க முயற்சி மேற்கொள்வோம் என்றும், அக்டோபர் மாத இறுதியில் சிந்தனைக் களம் தொடக்க விழாவினை சிறப்பாக நடத்திடுவோம் , நவம்பரில் பெரியார் 140 நாள் பிறந்த விழா பேச்சுப் போட்டியினை மாவட்ட அளவில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார். மாவட்ட பக அமைப்பாளர் தி.குணசேகரன் நன்றி சொல்ல இனிதே நிறைவு பெற்றது.

புதிய பொறுப்பாளர்கள்

1.பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் தி.குணசேகரன் 2.பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் த. கண்ணன் 3.பகுத்தறிவாளர் கழக ஆலங்குடி நகரத் தலைவர் வே.பால்ராஜ்

4.பகுத்தறிவாளர் கழக ஆலங்குடி நகரச் செயலாளர்  அன்பு  இதில் ஆலங்குடி ஒன்றிய கழக செயலாளர் துறை.குமார், அறந்தை ஒன்றிய தலைவர் த.சவுந்தரராஜன், தலைமைக் கழக சொற்பொழிவாளர் மாங்காடு மணியரசன், காரைக்குடி மாவட்ட செயலாளர் ம.கு. வைகறை, மதிமுக சி.விடங்கன், லெ.ராஜ்குமார், தா. எட்வர்ட், வீ. பால்ராஜ், கருணாகரன் பக, க.முருகேசன், திராவிட மாணவர் கழக தோழர். சவ.திராவிடநளன், ஆ. இராமையன், ஆலங்குடி நகர கழக செயலாளர் சி.சீனிவாசன், ஆசிரியர் மு.கீதா ஆகியோர் பங்கேற்று சிறப் பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner