முன்பு அடுத்து Page:

பெரியார் பேசுகிறார்... தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

நாள்: 19.10.2018 வெள்ளி, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை இடம்: பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: சி.இரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) ந.காமராசு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர். திராவிடர் கழகம்) டாக்டர் த.அருமைக்கண்ணு ந.சங்கர் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) தொடக்கவுரை: இரா.தமிழ்செல்வன் (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) புலவர் மா.கந்தசாமி (உலகத்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:48:04

தமிழகம் முழுவதும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

தமிழகம் முழுவதும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

சென்னை, அக். 16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்  அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவகங்கை சிவகங்கையில் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி மிகுந்த எழுச்சியுடன் வீடுதோறும், வீதிதோறும் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவிப்பு, இனிப்பு வழங்கல், கழகக் கொடியேற்றம், விடுதலை வாசகர் வட்டம் தொடக்கம் எனப் பல்வேறு நிலையில் பொதுக் குழு உறுப்பினர் தலைமைக்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:48:04

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

மாநில கலந்துரையாடல் கூட்டம் * நாள்: 19.10.2018 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை * இடம்: வல்லம், தஞ்சாவூர் * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், பகுத்தறிவாளர் கழக பொன்விழா அமைப்புச் செயல்பாடுகள் இன்ன பிற * கருத்துரை: வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்) *....... மேலும்

15 அக்டோபர் 2018 17:15:05

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநிலத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா  புதுச்சேரி மாநிலத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

புதுச்சேரி, அக். 15 "தத்துவத் தலைவர்", "பகுத்தறிவு பகல வன்" தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய தன்னி கரில்லா தனிப்பெருந்தலைவர் உலகத் தலைவர் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் புதுச்சேரி மண்டல திராவிடர் கழக தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி கழக....... மேலும்

15 அக்டோபர் 2018 16:56:04

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, அக். 15- 25.9.2018 அன்று கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியர் அணி கலந்து ரையாடல் கூட்டம் கிருட்டின கிரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் ஈ.லூயிஸ்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு மருதாசலம் கூறினார். வந்திருந்திருந்த அனைவரையும் எல்.அய்.சி. சுப்பிரமணி வரவேற்று பேசி னார். கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில ப.க. ஆசிரியர் அணி அமைப்பாளர்....... மேலும்

15 அக்டோபர் 2018 16:10:04

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில்

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை, அக். 15- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வெள்ள முனி அம்மன் கோவில் அருகில் பெரியார் பெருந்தொண்டர் டி.எம்.தங்கவேல் நினைவு அரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் 140-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை ஒன்றியத் தலைவர் சு.சித்திரவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் மூ.சேகர் அனைவரையும் வரவேற் றார். திராவிடர் கழகத்தின் மண்டலத் தலைவர் பெ.இராவணன்,....... மேலும்

15 அக்டோபர் 2018 16:10:04

செய்யாறில் நாள் முழுவதும் பெரியார் கொள்கை மணம் பயிற்சிப் பட்டறை - வழக்காடு மன்றம் களை கட்டியது

செய்யாறில் நாள் முழுவதும் பெரியார் கொள்கை மணம்  பயிற்சிப் பட்டறை - வழக்காடு மன்றம் களை கட்டியது

செய்யாறு, அக்.15 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எந்த கொள்கைக்காக கடைசி மூச்சு அடங்கும் வரை இந்த மக்களை சூத்திர இழி ஜாதி பட்டத்தோடு விட்டுவிட்டு போகிறேனே என்று கடைசி கூட்டத்திலும் இதனை முழங்கினார். உலகத் தலைவர் பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவை செய்யாறு திராவிட மாணவர் கழகம் சார்பில் சிறப்பாக நடத்தப் பட்டது. பயிற்சி முகாமில் செய்யாறு நகரத் தலைவர் தி.காமராசு வரவேற்புரையாற்றினார். பயிற்சி முகாமினை திராவிட மாணவர் கழக....... மேலும்

15 அக்டோபர் 2018 15:57:03

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் பங்கேற்ற மலேசியா பெரியார் பெருந்தொண்டர் முனைவர் பெரு. அ.தமிழ்மணி, கிரிதரன், எப்.காந்தராஜ் மற்றும் அமீரக தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். (திருச்சி -&12.10.2018) மேலும்

14 அக்டோபர் 2018 16:10:04

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் - பொறுப்பாளர்கள் - சுற்றுப்பயணம் மேலும்

14 அக்டோபர் 2018 13:57:01

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில கலந்துரையாடல் கூட்டம்

* நாள்: 19.10.2018 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை * இடம்: வல்லம், தஞ்சாவூர் * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், பகுத்தறிவாளர் கழக பொன்விழா அமைப்புச் செயல்பாடுகள் இன்ன பிற * கருத்துரை: வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர்....... மேலும்

13 அக்டோபர் 2018 16:37:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானத்தை 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றியது பெரியார் நாடு (உரத்தநாடு)

உரத்தநாடு அக்.8 அக்டோபர் 6 தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தை பெரியார் நாடாம் உரத்தநாடு 24 மணி நேரத்திற்குள் நிறை வேற்றிக் காட்டியது.

உரத்தநாடு ஒன்றியம் மண்டலக் கோட்டை பெ. கணேசன் & பாக்கியம் ஆகி யோர் மகன் சுரேந்திரனுக்கும், மண்டலக் கோட்டை பெ. தீர்த்தான் - & சீதை ஆகியோரின் மகள் வசந்திக்கும் 7.10.2018 காலை 11 மணிக்கு உரத்தநாடு வீரரெத்தின மகாலில் வாழ்க்கை இணையேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

மணவிழாவிற்கு கைம்பெண்கள் (விதவை தாய்மார்கள்) மண்டலக்கோட்டை சி. முத்தமிழ்ச்செல்வி, கி. போதும்பொண்ணு ஆகியோர் தலைமை வகித்தார்கள். வணக் கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்கள் அறிவுரை, வாழ்த்துரை வழங்கி மண விழாவை நடத்தி வைத்தார்கள். தமிழர் தலைவர் அவர்கள் தனது உரையில், கழகப் பொதுக் குழுவில் நேற்று (6.10.2018) இரவு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாக செயல் வடிவம் தந்திட்ட பெரியார் நாடாம் உரத்தநாடு தோழர்களுக்கு, குறிப்பாக மண்டலக் கோட்டை தோழர்களுக்கு மகிழ்ச்சி பொங்க பாராட்டை தெரிவித்தும் மணமக்களுக்கு அறிவுரை, வாழ்வியல் உரையும் வழங்கினார்.

நிகழ்வில், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு. காந்தி, கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சி. அமர்சிங், செயலாளர் அ. அருணகிரி, பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா. இராம கிருட்டிணன், உரத்தநாடு ஒன்றிய தலைவர் ம.இராசப்பா, செயலாளர் ஆ. இலக்குமணன், துணைச் செயலாளர் இரா. சுப்பிரமணியன், வெட்டிக்காடு பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் வாசுகி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேனாள் மாவட்டச் செயலாளர்

த. செகநாதன் 10 விடுதலை சந்தாவினை தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.

தமிழர் தலைவருக்கு திராவிட மாணவர் கழகத்தின் சிறப்பு

தஞ்சை மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர் ச. சற்குணம், நாமக்கல் எஸ்.ஆர்.வி.எஸ். கல்லூரி மாணவர் கழகத் தலை வர் அருள்செல்வம், துலாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கழகத் தலைவர் அங்குகரன், உரத்தநாடு நகர மாணவர்கழகம் சார்பில் இர. வீரமணி, மண்டலக் கோட்டை மாணவர் கழகம் சார்பில் பிரபாகரன் இரா. அரவிந்த் ஆகி யோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

நிகழ்வில், மேனாள் மாநில ப.க. துணைத் தலைவர் வடசேரி வ. இளங்கோவன் அவர்களுக்கு பெரியார் பெருந்தொண்டர் விருதினை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மேனாள் பதிவாளர் மு. அய்யாவு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பூ. சுந்தரம், ஒன்றிய திமுக பொருளாளர் ஜி.பி. இரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே. இராஜவேலு, உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ. இரவிச்சந்திரன், செயலாளர் ரெ. இரஞ்சித்குமார், தஞ்சை மாநகர செயலாளர் சு. முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் சி. மணியன், நகர இளைஞரணி தலைவர் பு. செந்தில்குமார், செயலாளர் பேபி ரெ. இரமேஷ் உள்ளிட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள், தோழர் கள் பங்கேற்றனர்.

அனைவரையும் வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலைய மேலாளர் புலவர் இரா. மோகன்தாஸ் வரவேற்றார். வடசென்னை மாவட்ட மாண வர் கழக அமைப்பாளர்  த. பர்தின் நன்றி கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner