முன்பு அடுத்து Page:

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், பிப்.20 தஞ்சாவூரில் இன்று (20.02.2019) காலை 10.30 மணியளவில் தஞ்சை திலகர் திடலில் வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாடுகளை முன்னிறுத்தி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்   திலகர் திடலில் உள்ள பந்தலில் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டு நிகழ்வுகள் குறித்தும் தற்போது எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் செய்திகளை பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் பொதுச் செயலாளர்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:15:05

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை  தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

கோவையில் நடைபெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் அழைப்பிதழை திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வழங்கினார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன். (20.2.2019, பெரியார் திடல்) மேலும்

20 பிப்ரவரி 2019 17:08:05

திராவிடர் கழக மாநாட்டு நன்கொடைகள்

திராவிடர் கழக மாநாட்டு நன்கொடைகள்

காரைக்குடி திராவிட மணி சார்பில் ரூ.ஒரு லட்சத்தினை என்னாரெசு பிராட்லா தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சிறீவில்லிபுத்தூர், 17.2.2019) இராஜபாளையம் இல.திருப்பதி மாநாட்டுநிதியாக ரூ.30 ஆயிரம், விடுதலை ஆதவன் ரூ.10 ஆயிரம், வானவில் மணி ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சிறீவில்லிப்புத்தூர், 17.2.2019) திராவிடர் கழக தொழிலாளரணி சார்பில் திருவெறும்பூர் சேகர் ரூ. ஒரு லட்சத்தினை மாநாட்டுநிதியாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 20.2.2019) சென்னை மண்டலச் செயலாளர் கொடுங்கையூர் கோபால், மாநாட்டு நிதியாக....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:53:04

அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட ‘பெரியார் 1000’ தேர்வு! வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பரிசு…

அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட ‘பெரியார் 1000’ தேர்வு!  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் பரிசுகள்!

சென்னை.பிப். 20 ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தஞ்சை இரா. பெரியார் செல்வன் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையைத் தூண்டும் வகையில் பேசி, பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற இருபால் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஆவடி மாவட்டம் அயப் பாக்கத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டிலும் கடந்த 4.2.2019 ஆம் தேதி பெரியார் 1000 வினாவிடைப்....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:59:03

சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் நாடெங்கும் சாம்பல்!

சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் நாடெங்கும் சாம்பல்!

சென்னை, பிப்.20 நம்மை சூத்திரன் என்றும், வேசி மக்கள் என்றும் இழிவுபடுத்தும் மனுதர்மம் 7.2.2019 அன்று தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தினரால் எரிக்கப்பட்டது. அவ்விவரம் வருமாறு: ஈரோடு 07.02.2019 வியாழன் முற்பகல் 11 மணியளவில் ஈரோடு பேருந்து நிலையம் முன்பு திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் ஒன்று கூடி மனுதர்மத்தை ஒலி முழக்கத்துடன் எரிக்க முயன்ற போது 28 தோழர்கள் ஈரோடு மாநகர காவல்துறையினரால் கைது....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:58:03

கழகக் களத்தில்...!(22,16,17.2.2019)

22.2.2019 வெள்ளிக்கிழமை ‘பெரியாரியல் அறக்கட்டளை சொற்பொழிவு’ சென்னை: * நேரம்: காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை * இடம்: அறை எண் 48, நவீன குளிரூட்டப்பட்ட அரங்கு,  டவர் கிளாக் கட்டடம், இந்திய வரலாற்றுத் துறை,  சென்னை பல்கலைக்கழகம் *  தலைப்பு: ‘பெரியாரின் நடைமுறைத் தத்துவம்’ * உரையாற்றுபவர்:  பேராசிரியர் முனைவர் எஸ்.பன்னீர்செல்வம், மேனாள் தலைவர், இந்திய வரலாற்றுத்துறை, சென்னை பல்கலைக்கழகம் * அழைப்பு: பேராசிரியர் எஸ்.எஸ். சுந்தரம், தலைவர் இந்திய வரலாற்றுத் துறை,....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:50:03

சமுக நீதி மாநாட்டிற்கான கடைவீதி வசூல்

சமுக நீதி மாநாட்டிற்கான கடைவீதி வசூல்

காரைக்கால் மண்டலத்தில் சமுக நீதி மாநில மாநாட்டிற்கான கடைவீதி வசூல் பணியில் காரைக்கால் மண்டல இளைஞர் அணியின் தலைவர் நாத்திக பொன்முடி, மண்டல இளைஞர் அணியின் செயலாளர் பெரியார் கணபதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மண்டல துணை தலைவர் பதி.செயசங்கர், பொதுக் குழு உறுப்பினர் அன்பானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். மேலும்

20 பிப்ரவரி 2019 15:44:03

ஒழுங்கு நடவடிக்கை

கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வந்த திராவிடன் என்பவர் கழகக் கொள்கைக்கு விரோதமாகவும், கழக நிலைப்பாட்டினைப் புரியாமலும் சமூக வலைதளங்களில் தான் தோன்றித்தனமாக பதிவு செய்து வருவதால் கழகத்தின் கட்டுப்பாடு கருதி அவர் கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார். கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக தோழர் நா. பஞ்சமூர்த்தி நியமிக்கப்படுகிறார். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் முகவரி:  நா. பஞ்சமூர்த்தி, வேகாக்கொல்லை, குறிஞ்சிப்பாடி வழி - 607302 கைப்பேசி: 9367631024 மேலும்

19 பிப்ரவரி 2019 16:17:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாழ்வில் நான் மகிழ்ச்சியாகவும் -நிம்மதியாகவும் இருப்பதற்குக் காரணமே

தந்தை பெரியாருடைய பகுத்தறிவுக் கொள்கைகள்தான்

திண்டுக்கல், அக். 8- என்னுடைய வாழ்வில் நான் மகிழ்ச்சி யாகவும், நிம்மதியாகவும் இருப்பதற்குக் காரணமே தந்தை பெரியாருடைய பகுத்தறிவுக் கொள்கைகள்தான் என்றார் இனமுரசு சத்யராஜ் அவர்கள்.

29.9.2018 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டில் இனமுரசு சத்யராஜ் அவர்கள் உரையாற்றினார்:

அவரது உரை வருமாறு: இன்றைய பெரியார் பிஞ்சுகள்

நாளைய ஆசிரியர்கள்

இன்றைய பெரியார் பிஞ்சுகள் நாளைய ஆசிரியர்கள் என்று ஏன் சொன்னேன் என்றால், தம்பி செவ்வியனாகட்டும், பழனியில் இருந்து வந்த கவிநிஷாவாகட்டும் அவ்வளவு அருமையாகப் பேசினார்கள்.

குறிப்பாக அபிநயா அவர்கள் பேசிய விஷயம் மிகவும் யோசிக்கப்படவேண்டிய விஷயமாகும். அவர் வெளிநாடு செல்வதுபற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த மாநாட்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தைப்பற்றி பேசும்பொழுது, எனக்கு சினிமாவில் வருவதுபோன்ற ஒரு பிளாஷ் பேக் ஞாபகத்திற்கு வருகிறது.

ஆசிரியர் அய்யா அவர்கள் சொன்னார்கள், 18 வயதிற் குப் பிறகுதான் வாக்குரிமை இருக்கிறது; 18 வயதிற்குப் பிறகுதான் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்கள் என்று. அப்படியென்றால், 18 வயது வரைக்கும் ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கு அவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனை இருக்காது. அதனால், ஒரு குழந்தை பிறந்தவுடன், இந்த ஜாதி, இந்த மதம் என்று நாம் முத்திரை குத்தக்கூடாது. அவர்கள் வளர்ந்த பிறகு, அவர்களாகப் பார்த்து முடிவு செய்துகொள்ளட்டும் என்று சொன்னார்கள்.

ஒரு பிளாஷ் பேக்

எனக்கு  ஞாபகத்திற்கு வந்தது

இதைக் கேட்கும்பொழுது எனக்கு ஒரு பிளாஷ் பேக் ஞாபகத்திற்கு வந்தது. என்னுடைய சகோதரி அமெரிக்காவில் இருக்கிறார். என்னுடைய சகோதரியும், மைத்துனர் இருவரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்.

அவர்களுடைய வீட்டில் பிறந்து வளர்கின்ற குழந்தைகளுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்காது இல்லையா! அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு 5 வயது நிறைவடைந்ததும்தான் அவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.

அமெரிக்காவில் 7 வயது நிறைவடைந்த பிறகுதான் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள். ஆகவே, 5 வயதாகின்ற அந்தக் குழந்தைக்கு வீட்டில் என்ன சொல்கிறார்களே  அதுதான் அந்தக் குழந்தைக்குத் தெரியும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத வீட்டில் வளர்கின்ற குழந்தைக்கு, கடவுள் நம்பிக்கை இருப்பதற்கு வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தை...

என்னுடைய தங்கச்சி குடும்பத்தினர் இந்தியா வந்தனர். இது நடந்தது 25 ஆண்டுகளுக்கு முன்பு.

நான், என்னுடைய அம்மா, சகோதரி குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து சென்னையிலிருந்து மகாபலிபுரம் சென்றிருந்தோம். அப்படி செல்லும்பொழுது, வழியில் உள்ள கட்டடங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தாள். ஏனென்றால், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தை ஆகையால், இங்கே உள்ள கட்டடங்கள் அந்தக் குழந்தைக்குப் புதிதாகவும், அதிசயமாகவும் இருந்தது. அப்படி பார்த்துக்கொண்டே வருகின்றபொழுது, ஒரு கோவிலைப் பார்த்திருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு சரியாகத் தமிழ்ப் பேசத் தெரியாது. அதைப் பார்த்துவிட்டு,

பாட்டிம்மா, பாட்டிம்மா

What is this Building? என்று

என்னுடைய அம்மா சொல்கிறார்கள்,

That is Temple என்று.

Temple Means? என்று கேட்டது அந்தக் குழந்தை.

என்னுடைய அம்மாவிற்குக் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர் ஆகையால், கொஞ்சம் கோபமடைந்து,

‘‘Temple means, in that building, there is one statue.’’ என்று சொன்னார்.

Ok. What is the statue?

No, No If you go to the statue, You ask something, the statue will give.

உடனே அந்தக் குழந்தை, ‘‘How?’ என்று கேட்டது.

Oh! It is so funny. How? என்று அந்தக் குழந்தை கேட்டது.

statue means it is a Toy. So funny.

அந்தப் பொம்மையிடம் போய் நீ எது கேட்டாலும் கிடைக்கும் என்று என்னுடைய அம்மா சொன்னார்.

உடனே அந்தக் குழந்தை ‘So funny’ என்று சொன்னது.

ஏனென்றால், அந்தக் குழந்தை 5 வயதிலேயே ஜாதி, மதம், மூடநம்பிக்கைக்குள்ளே எல்லாம் போகாததால், அதற்கே தெரிகிறது.

ஒரு வீடு, வித்தியாசமான வீடு. அதற்குள் ஒரு பொம்மை இருக்கிறது. அதனிடம் சென்று நான் கேட்டால், அது கொடுக்கும் என்று சொல்கிறார்களே,

Who made this toy? என்று கேட்டாள்.

நம்மைப் போன்ற மனிதர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பொம்மையை உள்ளே செய்து வைத்திருக்கிறார்கள்.

Oh! This is so much more funny  என்றது அந்தக் குழந்தை.

நாமே ஒரு பொம்மையை செய்துவைத்து, அந்த பொம்மையிடம் இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டால், அது கொடுக்குமா? பரவாயில்லையே, நன்றாக இருக்கிறதே! என்று சொல்லிவிட்டு, பிறகு அதைப்பற்றி மறந்துவிட்டது.

நாங்களும் மகாபலிபுரம் சென்று, சுற்றிப் பார்த்துவிட்டு, வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது, ஒரு பொம்மைக் கடை இருந்தது.

‘‘இஃப் ஆஸ்க் எனிதிங்

த டாய் வில் கிவ்?’’

ஆங்கிலத்தில், என்னிடம், மாமா, மாமா எனக்கு அந்தப் பொம்மைக் கடைக்குச் சென்று ஒரு பொம்மை வாங்கிக் கொடுங்கள் என்று சொன்னாள்.

நானும் ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தேன்.

அந்த பொம்மையைக் கையில் வைத்துக்கொண்டு, ‘‘இஃப் ஆஸ்க் எனிதிங் த டாய் வில் கிவ்?’’ என்று கேட்டாள்.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை எந்த அளவிற்கு சுய சிந்தனை உள்ளவராக இருக்கிறாள் என்பதைப் பாருங்கள்.

அய்ந்து வயதிலேயே அந்தக் குழந்தை ஒரு ஆசிரியராகத்தான் இருந்திருக்கிறாள்.

ஏனென்றால், என்னுடைய தங்கச்சி வீட்டில், நிச்சயமாக கடவுள் மறுப்புக் கொள்கைகளை அய்ந்து வயதிற்குள் அந்தக் குழந்தைக்கு சொல்லிக் கொடுத்திருக்கமாட்டார்கள்.

அப்படியென்றால், இந்த மாநாட்டில் போடப்பட்ட மிகப்பெரிய தீர்மானம் ஒன்று என்னவென்றால்,

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு வரும் வரையில், எந்தக் கருத்தையும் அவர்கள்மேல் திணிக்கக்கூடாது. அப்படி திணித்தால் நிச்சயமாக குழப்பம் வரும்.

தீவிர கடவுள் நம்பிக்கையுள்ள

குடும்பத்தில் பிறந்தவன்தான்

நான் தீவிர கடவுள் நம்பிக்கை உள்ள குடும்பத்தில் பிறந்தவன்தான். குறிப்பிட்ட மதம், குறிப்பிட்ட ஜாதி என்று கருதப்படுகின்ற குடும்பத்தில் பிறந்தவன்தான்.

இங்கே சின்ன வயதுப் பிள்ளைகள் நிறைய இருக் கிறீர்கள். ஒவ்வொரும் ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பீர்கள். அதுபோன்று நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகள்!

நான் ஆறு வயதாக இருக்கும்பொழுது அரசிளங்குமரி என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அந்தத் திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். அவர்கள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டை பாடுகிறார்,

‘‘சின்னப்பயலே சின்னப்பயலே

சேதி கேளடா

நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா

எண்ணிப் பாரடா-நீ

எண்ணிப் பாரடா

 

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அதுதாண்டா வளர்ச்சி

ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ

தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்

காலம் தரும் பயிற்சி-உன்

நரம்போடுதான் பின்னி வளரணும்

தன்மான உணர்ச்சி

 

மனிதனாக வாழ்ந்திட வேணும்

மனதில் வையடா-தம்பி

மனதில் வையடா

வளர்ந்து வரும் உலத்துக்கே-நீ

வலது கையடா-நீ

வலது கையடா

 

தனியுடைமைக் கொடுமைகள் தீரத்

தொண்டு செய்யடா-நீ

தொண்டு செய்யடா!

தானாய் எல்லாம் மாறும் என்பது

பழைய பொய்யடா-எல்லாம்

பழைய பொய்யடா!

 

வேப்பமர உச்சியில் நின்னு

பேய் ஒன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும்போதும்

சொல்லி வைப்பாங்க -உன்

வீரத்தைக் கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட

நம்பி விடாதே-நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே-நீ

வெம்பி விடாதே!

 

மேற்கண்ட பாடலில் ஒரு வரி வரும்,

வேப்பமர உச்சியில் நின்னு

பேய் ஒன்னு ஆடுதுன்னு

விளையாடப் போகும்போதும்

சொல்லி வைப்பாங்க -உன்

வீரத்தைக் கொழுந்திலேயே

கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின்

மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக் கூட

நம்பி விடாதே-நீ

வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து

வெம்பி விடாதே-நீ

வெம்பி விடாதே!

என்று எம்.ஜி.ஆரே சொல்கிறாரே, அது கரெக்ட்தான். அப்படியென்றால், பேய், பிசாசு, சாமி, பூதம் என்பதெல்லாம் கிடையாது என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தால்,

என்னால், சுயமாகச்

சிந்திக்க முடியவில்லை!

எல்லோரும் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஏம்பா, கன்னத்தில் போட்டுக் கொள், கன்னத்தில் போட்டுக்கொள், சாமி கும்பிடு, சாமி கும்பிடு என்று மறுபடியும் இந்தப் பக்கம் இழுக்கிறார்கள். அப்பொழுது என்னால், சுயமாகச் சிந்திக்க முடியவில்லை. இது ஆறு வயதில்!

ஒரு 10, 15 வயதில் இன்னொரு எம்.ஜி.ஆர். படத்தைப் பார்க்கச் சென்றேன். அந்தப் படத்தில், சூப்பரான டயலாக்; இதைவிட பகுத்தறிவு விசயத்தை சொல்லவே முடியாது.

தலைவர் படத்தில், ஒரு பெண் சென்று கொண்டி ருக்கிறார். அந்தப் பெண்ணை பாலியல் வன்முறை செய்வதற்காக நான்கு பேர் முயற்சிப்பார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள், அந்த நான்கு பேரிடமும் சண்டை போட்டு, அந்தப் பெண்ணை காப்பாற்றி விடுவார்.

திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி!

அந்தப் பெண்ணுடைய அம்மா, எம்.ஜி.ஆரிடம் வந்து, ‘‘நல்ல நேரமாகப் பார்த்து ஆண்டவனா பார்த்து உங்களை அனுப்பி வைத்தார்’’ என்பார்கள்.

என்னை அனுப்பி வைத்தது ஆண்டவன் என்றால், எனக்கு முன் நான்கு பேரை அனுப்பி வைத்தாரே அவர் யார்? என்று கேட்பார்.

இதைவிட பகுத்தறிவு கருத்தை எளிமையாக எப்படி சொல்வது?

இதுபோன்ற வசனங்களையெல்லாம் கேட்டுவிட்டு, வீட்டிற்கு வந்தால், மறுபடியும் வெள்ளிக்கிழமை அந்தக் கோவில், செவ்வாய்க்கிழமை இந்தக் கோவில் என்று சொல்கிறார்கள்.

குடும்பத்தினர் போட்டுத்தான் அமுக்கிறார்கள். நீ இந்த மதத்தைச் சார்ந்தவன்; இந்த ஜாதியைச் சார்ந்தவன்; இதுதான் உன்னுடைய குலதெய்வம் என்று சொல்லி அமுக் கிக் கொண்டே இருக்கிறார்கள். அதிலிருந்து வெளியே வர முடியவில்லை.

முதன்முதலாக திராவிடர் கழக கூட்டத்திற்குச் சென்றேன்!

கோயம்புத்தூர் ராம்நகரில் நாங்கள் குடியிருந்தோம். அப்பொழுது எனக்கு 17 வயது;  நான் பிஎஸ்.சி. படித்துக் கொண்டிருந்தேன். அங்கே திராவிடர் கழகக் கூட்டம் நடைபெற்றது. நாம் தினமும் கோவிலுக்குப் போகிறோம், மொட்டை அடிக்கிறோம். ஆனால், இவர்கள் கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்களே, அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று அந்தக் கூட்டத்திற்குச் சென்றேன்.

தஞ்சாவூரில் இருந்த வந்த கருப்புச் சட்டைக்காரர் ஒருவர், ஒரு சொம்பை அந்தக் கூட்டத்தில் கொடுத்து அனுப்பினார். எல்லோரும் சொம்புக்குள் கையை விட்டு நன்றாகத் தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு என்மேல் குற்றம் சொல்லக்கூடாது என்றார்.

சொம்பும் கூட்டத்தினரிடையே ஒரு ரவுண்டு வந்தது. என்னிடமும் வந்தது. நானும் அந்த சொம்புக்குள் கையை விட்டுப் பார்த்தேன். அது காலி சொம்புதான்.

பிறகு அந்த சொம்பு கூட்டத்தின் மேடையில் இருந்த அவரிடம் கொடுக்கப்பட்டது.

குங்குமம் கொட்டியது

அந்த சொம்பை கீழே வைத்துவிட்டு, ‘‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை’’ என்று சொல்லிவிட்டு, அந்த சொம்பில் கையை விட்டு எடுத்து ஆட்டினார்; கையிலிருந்து குங்குமமாகக் கொட்டியது. மறுபடியும் அந்த சொம்புக்குள் கையைவிட்டுப் பார்த்தால், குங்குமம் கிடையாது.

இதெல்லாம் மேஜிக் என்று சொல்லி, தலையை சுற்றி வீசி விட்டார்.

ஒரு டம்ளர் தண்ணீரை வாங்கி, அந்தக் கூட்டத்தினரி டையே விட்டார். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூட்டத்தைப் பார்த்து சொன்னார்.

எனக்கு அன்றைக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது. எல்லாவிதமான மூடநம்பிக்கைகளும் இருந்தது.

வாயிலிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்தார்

அந்த டம்ளரில் உள்ள தண்ணீரை  நானும் நன்றாக பார்த்தேன்.

அந்த டம்ளர் தண்ணீரை அவர் குடிப்பதற்கு முன்,  ‘‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை’’ என்று சொல்லிவிட்டு, ‘‘ஏவ்’’ என்று சொல்லி, வாயிலிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்தார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது எப்படி என்று கேட்டோம்.

அடுத்தமுறை இப்படி இங்கே யாராவது வந்து இதுபோன்று செய்தால்,

எங்களுக்கு சின்ன லிங்கம் வேண்டாம்; ஒரு ஸ்கூட் டரோ, காரோ வாயிலிருந்து எடுத்துக் கொடுத்தீர்கள் என்றால், எங்களுக்குப் பயன்படுமே என்று சொல்லுங்கள் என்றார்.

மறுபடியும் எனக்குப் பொறி தட்டியது; ஆகா, இவர் சொல்வது, யோசிக்கவேண்டிய விஷயமாக இருக்கிறதே என்று நான் நினைத்தேன்.

சபரிமலைக்கு என்னை அனுப்பினார்கள்

கூட்டம் முடிந்து வீட்டிற்கு வந்தால், எங்களுடைய சொந்த பந்தங்கள் எல்லாம் சபரிமலைக்குக் கிளம்ப ஆயத்தமாக இருக்கிறார்கள். என்னுடைய அம்மா, என்னை நீயும் கிளம்புடா என்று சொல்லி, எனக்கு இருமுடி கட்டி என்னை அனுப்பி வைத்தார்கள்.

இதுதான் இந்த மாநாட்டினுடைய மிகச் சிறப்பான தீர்மானமாகும். நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தை சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.

நான் வேறு மதத்தில் பிறந்திருந்தால், அதனுடைய சம்பிரதாயங்கள் இருந்திருக்கும். இன்னொரு மதத்தில் பிறந்திருந்தால், அந்த மதத்தினுடைய சம்பிரதாயம் இருந்திருக்கும்.

இதில் சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால், மதம் என்பதைத் தாண்டி, மூடநம்பிக்கை - பகுத்தறிவுக்குத் தடையாக இருக்கின்ற விஷயம். அதைத்தான் நான் சொல்ல வருகிறேன்.

பெரியார் பிஞ்சுகளிடம் கற்றுக்கொள்வதுபோன்று ஆகிவிட்டது

பெரியார் பிஞ்சுகள் மாநாட்டிற்கு வரும்பொழுது, இங்கே வருகின்ற பிஞ்சுகளுக்கு நாம் ஏதாவது விஷயங்களை சொல்லிக் கொடுக்கலாம் என்று வந்தால், நாம் அவர்களிடம் கற்றுக்கொள்வதுபோன்று ஆகிவிட்டது.

ஒரு முக்கியமான விஷயம், இந்த உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்,

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,

எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும்,

பணக்காரனாக இருந்தாலும்,

ஏழையாக இருந்தாலும்,

நல்லவனாக இருந்தாலும்,

கெட்டவனாக இருந்தாலும்,

நாத்திகனாக இருந்தாலும்,

ஆத்திகனாக இருந்தாலும்,

எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும்,

எந்த நடிகருடைய ரசிகராக இருந்தாலும்

எல்லோரும் ஆசைப்படுகிற ஒரு விஷயம். நாம் சந்தோசமாக இருக்கவேண்டும்; நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான்.

நம்முடைய பயணமே மகிழ்ச்சியை நோக்கிய பயணம் தான். அந்த மகிழ்ச்சி எங்கே இருந்து வருகிறது என்பதை நான் யோசித்துப் பார்க்கிறேன்.

என்னுடைய 30 வயது வரையில் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவன்தான் நான்!

நான், என்னுடைய 30 வயது வரைக்கும் சகலவிதமான மூடநம்பிக்கைக்கு ஆட்பட்ட ஒரு நபராகத்தான் இருந் தேன். தந்தை பெரியார் அவர்களுடைய புத்தகங்களைப் படித்து, இதுபோன்ற கூட்டங்களைக் கேட்டு, பலவிதமான நண்பர்கள் பேசியதன்மூலமாகத்தான். ஏனென்றால், உடனே நாம் கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளியே வந்துவிட முடியாது. நம்முடைய பிசினஸ் பார்ட்னர் அல்லவா! அவரிடம் நிறைய பிசினஸ் டீலிங் பேசியிருக்கிறேன். கடவுளே, நீ என்னை எஸ்.எஸ்.எல்.சி.யில் பாஸ் செய்துவிட்டால், உன்னுடைய உண்டியலில் காசு போடுகிறேன். இதை செய்தால், நான் உன்னுடைய கோவிலுக்கு வந்து மொட்டை போடுகிறேன் என்றெல்லாம் அவரிடம் நிறைய பிசினஸ் டீலிங் இருப்பதால், அவரை உடனே கழற்றிவிட்டுவிட முடியாது.

அதனால், யோசிக்கிறேன், யோசிக்கிறேன். ஏனென்றால், திடீரென்று கடவுள் இல்லை என்று நான் சொல்லி, ராத்திரி வந்து கடவுள் கண்ணைக் குத்திவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்து யோசித்துப் பார்த்து,

வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறது;

நேரம் நிறைய மிச்சமாகிறது

கடவுள் இல்லை, அப்படி ஒரு கற்பனை கருத்தியல் இல்லை என்கிற முடிவுக்கு வந்தவுடன், வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறது. நேரம் நிறைய மிச்சமாகிறது. அதுதான் இதில் முக்கியம்.

நான் இந்து மதம் என்று கருதப்பட்ட மதத்தில் பிறந்தவன் என்பதினால் சொல்கிறேன். ராகுகாலம், எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம், அஷ்டமி, நவமி என்றெல்லாம் இல்லாமல், காலையில் எழுந்தோமோ, நம்முடைய அறிவுக்கு எட்டிய வேலையை செய்தோமா - சம்பாதித்தோமா என்று இருக்கவேண்டும்.

வெள்ளிக்கிழமை நான் ஒரு கோவிலுக்குச் செல்ல வேண்டும்; என்னுடைய மனைவி இன்னொரு கோவி லுக்குச் செல்லவேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்கொண்டு, வேறு வேலைகளை செய்ய முடியாமல் இருந்தது நான் ஆத்திகனாக இருந்தவரைக்கும்.

நாம் பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்க்காமல், ஜோதிடம், ஜாதகம், கடவுளுக்கு வேண்டுதல் வைப்பது - ஒரு மாயையான நம்பிக்கைக்குள் போகிறோமே அது மிகவும் தவறு.

அளவிற்கு மீறிய நம்பிக்கை என்பது தவறு!

எல்லோரும் என்ன சொல்வார்கள் என்றால், கடவுள் நம்பிக்கை இருந்தால், மனதிற்கு ஒரு நிம்மதி இருக்கிறது; நமக்கு ஒரு நம்பிக்கை வருகிறது; நமக்குப் பக்கத்தில் ஒரு சக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கையோடு இறங்கலாம் என்று சொல்கிறார்கள்.

அது அப்படி கிடையாது. அளவிற்கு மீறிய நம்பிக்கை என்பது தவறு. என்னையே உதாரணமாக சொல்கிறேன்.

நான் ஒரு 10 ஆண்டுகளுக்குமுன்புவரை நான் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தேன். கடைசி ஒரு இரண்டு, மூன்று ஆண்டுகளாக, நான் கதாநாயகனாக நடித்த படம் ஓடவில்லை. நான் என்ன முடிவு செய்யவேண்டும்? நான் கதாநாயகனாகவே நடிப்பேன் என்று அடம் பிடிப்பதா? அல்லது தொடர்ந்து திரைத்துறையில் இருக்கவேண்டும் என்றால், என்ன செய்யவேண்டும்? குணசித்திர கதாபாத்திரங்களுக்கு வந்துவிடலாமா? என்கிறபொழுது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கும்; ஒரு திமிர் இருக்கும்.

100 படங்களில் நடித்த பிறகு, நாம் குணசித்திர வேடங்களில் நடிப்பதா? மறுபடியும் கதாநாயகனாக நடிக்கலாம்; சொந்தப் படம் எடுக்கலாம் என்று நினைத்து, ஒரு ஜோசியக்காரரிடம் சென்று என்ன செய்யலாம் என்று கேட்டால்,

ஜோதிடரோ, ‘‘உங்களுக்கு டைம் நன்றாக இருக்கிறது; நீங்களே ஒரு சொந்தப் படம் எடுங்கள்’’ என்று சொன்னால்,

100 படங்களில் சம்பாதித்த பணமும் போய்விடும். உண்மையிலேயே தெருவுக்கு வந்துவிடுவோம்.

தாநாயகனாக நடித்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் நிறைய சம்பாதித்திருக்கிறேன்

அஜித், விஜய், சூர்யா போன்ற பல இளம் கதாநாயகர்கள் எல்லாம் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் நம்மைவிட இளமையாக இருக்கிறார்கள்; நம்மைவிட நன்றாக டான்ஸ் ஆடுகிறார்கள். அன்றைக்கு நாம் ஆடியதுதான் டான்ஸ். இன்றைக்கு இவர்கள் எல்லாம் பிரமாதமாக டான்ஸ் ஆடுகிறார்கள். இவர்களுக்கு நடுவில் நாம் போட்டி போட்டு, டான்ஸ் ஆடி, லவ் சீனில் நடித்து, கதாநாயகிக்குப் பூ கொடுத்து தாக்குப் பிடிக்க முடியுமா? என்றால், நிச்சயமாக முடியாது.

அப்படியென்றால் என்ன செய்வது?

நாலு காசு பார்க்கவேண்டும் என்றால், தினமும் சூட்டிங் செல்லவேண்டும்; பிசியாக இருக்கவேண்டும் என்றால், நாம் குணசித்திர வேடங்களில் நடித்தால்தான் முடியும் என்று நினைத்து இறங்கியதினுடைய விளைவுதான், இந்த 10 ஆண்டுகளில், கதாநாயகனாக நடித்ததைவிட நிறைய சம்பாதித்திருக்கிறேன்.

தந்தை பெரியாருடைய பகுத்தறிவுக் கொள்கைகள்தான்

இதற்குக் காரணம், தந்தை பெரியாருடைய பகுத்தறிவுக் கொள்கைகள்தான். நான் உண்மையை சொல்கிறேன்.

ஏனென்றால், நான் அடம்பிடித்திருந்தேன் என்றால் என்னாகி இருக்கும்? அளவு கடந்த நம்பிக்கையும் தவறு; குருட்டு நம்பிக்கையும் தவறு; முரட்டு நம்பிக்கையும் தவறு. நாம் சுணங்கிப் படுப்பதும் தவறு.

நமக்கு ஒரு கஷ்ட, நஷ்டம் வரும்பொழுதுதான், நாம் கோவிலுக்குச் செல்வதோ, ஜோசியரிடம் செல்வதோ, சாமியாரிடம் செல்வதோ இருக்கும். அப்படி செல்கையில், அவர் எதுவும் சொல்லாமல் இருந்தால், அவருக்கு நாம் காசு கொடுக்கமாட்டோம்.

அவர் என்ன சொல்வார் என்றால், நாம் சிக்கலில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு, ‘‘சார் உங்களுக்கு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வரையிலும் டைம் சரியில்லை. அது வரைக்கும் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருக்கவேண்டும்’’ சொல்வார்.

நாம் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்

அடுத்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதிவரையிலும் நாம் எந்த வேலையும் செய்யமாட்டோம். ஏனென்றால், ஜோதிடர் சொல்லிவிட்டார் அல்லவா! எதிலாவது கை வைத்தால், நீ ஆள் குளோஸ் என்று சொல்லிவிட்டார் அல்லவா!

பிப்ரவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு, ‘‘சார் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நீங்கள் அடித்தீர்கள் என்றால், கோல்தான் சார்’’ என்று சொன்னவுடன்,

நாம் என்ன செய்வோம், சொந்தப் படம் எடுப்போம். அவ்வளவுதான்!

சூழ்நிலை கருதி, நாம் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.

சில பேர் சொல்கிறார்கள், ‘‘சார், நீங்கள் இயற்கையை நம்புகிறீர்கள்; நாங்கள் கடவுளை நம்புகிறோம்; அவ்வளவுதானே வித்தியாசம். இயற்கையை நீங்கள் நம்புகிறீர்களோ, இல்லையா?’’ என்கிறார்கள்.

அய்யா, இயற்கையை நம்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும், அது இயற்கைதான். சூரியன் உதிக்கிறது; நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும், அது உதிக்கும். மழை வருகிறது,  நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும் மழை வரும். காற்று அடிக்கிறது,  நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும் காற்று அடிக்கும். அது இயற்கை. ஆனால், அந்த இயற்கையை, நீ பியூட்டி பார்லருக்கு அழைத்துச் சென்று, பூச்சூட்டி, பொட்டு வைத்து கடவுளாக நீ மாற்றினாய் என்றால், நீ குழம்பி விடுவாய். இதை நன்றாக நீ புரிந்துகொள்.

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner