முன்பு அடுத்து Page:

தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவை ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவாக நடத்துவோம்! தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம் போச்சம்பள்ளி, அக். 23 தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.10.2018 அன்று காலை 11 மணியளவில் போச்சம்பள்ளி ஜெயலட்சுமி திருமண மண்டபத்தில் மிகுந்த எழுச்சியோடு வெகு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தருமபுரி மண்டல தலைவர் வீ.சிவாஜி தலைமை வகித்துப் பேசினார். தருமபுரி மண்டல செயலாளர் கோ.திராவிடமணி அனைவரையும் வரவேற்றுப்....... மேலும்

23 அக்டோபர் 2018 15:00:03

பெரியார் பேசுகிறார்'' 50 ஆவது கூட்டத்தில் இயக்க நூல்கள் வெளியீடு

பெரியார் பேசுகிறார்'' 50 ஆவது கூட்டத்தில் இயக்க நூல்கள் வெளியீடு

தஞ்சை 19.10.2018 தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளருமான டி.கே.ஜி.நீலமேகம் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றார் -  பாவேந்தர் கலைக்குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி - தஞ்சை நகர மன்ற முன்னாள் தலைவர் இறைவனின் (தி.மு.க.) 80 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் - தஞ்சையை சேர்ந்த பி.டெக் படித்த மாணவர் மு.சவித்ரு பென்சில், கரிக்கோல்மூலம்....... மேலும்

21 அக்டோபர் 2018 14:16:02

தஞ்சை : மாநில கலந்துரையாடலில் தமிழர் தலைவரின் வழிகாட்டுதல்

தஞ்சை : மாநில கலந்துரையாடலில் தமிழர் தலைவரின் வழிகாட்டுதல்

கருப்புச்சட்டை அணியாத பகுத்தறிவாளரையும் ஒன்று சேர்த்து பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாட்டை பலப்படுத்துங்கள்!   தஞ்சை, அக்.20- 19.10.2018 காலை 10.30 மணி அளவில் தொடங்கிய மாநில பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையை அடுத்த வல்லத்தில் பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. புரவலர் தமிழர் தலைவரின் உரை புரவலர் தமிழர் தலைவர் கூட்டத்தில்  வழிகாட்டும்  நெறியுரையாக....... மேலும்

20 அக்டோபர் 2018 16:19:04

மரக்காணம் ஒன்றியத்தில் கிளைக் கழகம் அமைப்பதற்கான கலந்தாய்வு

மரக்காணம் ஒன்றியத்தில் கிளைக் கழகம் அமைப்பதற்கான கலந்தாய்வு

மரக்காணம், அக். 20 மரக்காணம் ஒன்றியத்தில் கிளைக்கழகம் அமைப் பதற்கான கலந்தாய்வு கூட்டம் 16.10.2018 அன்று காலை 10 மணி யளவில் மரக்காணம் நல்லார் விஜயலட்சுமி மகாலில் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் தலைமையில் திண்டிவனம் மாவட்ட தலைவர் மு.கந்தசாமி அவர்களின் முன்னிலை யிலும் நடைபெற்றது. மேற்கண்ட கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்: ஜெகதீஸ்வரன், செய லாளர்: சூலிகோரி சுரேஷ், துணைத் தலைவர்: மதிவாணன், பொருளாளர்: அம்சராஜ், நகரத் தலைவர்:....... மேலும்

20 அக்டோபர் 2018 15:27:03

திண்டிவனம் கழக மாவட்ட கலந்துரையாடல்

திண்டிவனம் கழக மாவட்ட கலந்துரையாடல்

திண்டிவனம், அக்.20 திண்டிவனம் திராவி டர் கழக மாவட்டத் தலைவர் மு.கந்தசாமி தலைமையிலும் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் முன்னிலையிலும் 8.10.2018 அன்று மாலை 3.30 மணியளவில் தந்தை பெரியார் படிப்பகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். (6.10.2018 அன்று தஞ்சையில் நடை பெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் நகரத் தலைவர் செ.பரந்தாமன் அவர் களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திண்டிவனம் திரா விடர்....... மேலும்

20 அக்டோபர் 2018 15:27:03

அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் எழுச்சியோடு பெரியார் பட ஊர்வலம்

அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் எழுச்சியோடு பெரியார் பட ஊர்வலம்

நீடாமங்கலம், அக். 19 பட்டுக்கோட்டை கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் நகரம் சார்பாக 28.9.2018 அன்று மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் கடைத் தெருவில் தந்தை பெரியார் பட ஊர்வலம் நீடாமங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் இருந்து தந்தை பெரியார் உருவப்படம் ஒரு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு கொள்கை முழக்கத்தோடு கடைவீதியில் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் பங்கேற்க ஊர்வல மாகப் புறப்பட்டு இரவு 7 மணியளவில் பெரியார்....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநாட்டில் கழகக் கொடி ஏற்றப்பட்டபோது...

குடந்தை மாநாட்டுப் பேரணி 8.7.2018 ஞாயிறு பிற்பகல் 4.30 மணிக்குத் தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாட்டு மேடையரு கில் நிறைவுற்றது. காண்போர் கண் சிமிட்டாது காணும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியான அணிவகுப்பு.

திண்டுக்கல் பெருமாள் தப்பாட்டக் குழுவினரின் பறை இசை கிடுகிடுக்க வைத்தது.

டி.ஆர்.வினோத் குழுவினரின் சிலம் பாட்டம் தனிச் சிறப்பு (தமிழர்களின் இந்த வீரக்கலை நசிந்துவிட்ட நிலையில் திரா விடர் கழகம் இதற்குப் புத்துயிர் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் சென்னை பெரியார் திடலில் இதற்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. சின்னஞ்சிறு இருபால் பிள்ளைகள் வெகு நேர்த் தியாக இந்தக் கலையில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்).

கடவுள் பக்தி - சக்தி என்று மக்களை ஏமாற்றும் மாயையான பூசாரிகள் அரி வாள்மீது ஏறி நிற்கும் அந்த வித்தையை கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு அரிவாள் மீது ஏறி நின்று அசத்தினர் சிறுவர்களும், கழக தோழர் களும். சோம.நீலகண்டன், சே.கவுதமன், இரா.யோகராஜ் ஆகிய பட்டுக்கோட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் மக்கள் கூடி நின்று பேரணியைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் இதைச் செய்து காட்டினர். வேடிக்கை பார்த்த சிறுவர்களும், இளை ஞர்களும் கைதட்டி ஆரவாரித்தனர்.

சடையார்கோயில் வெ.நாராயணசாமி குழுவினரின் பெரியார் பிஞ்சுகளின் பகுத் தறிவுப் பாடலுடன் கூடிய கோலாட்டம் தனிச்சிறப்பு!

பேரணியின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சுகளும், மகளிர் அணியினரும் கழகக் கொடிகளுடன் அணிவகுத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரி யாக பதாகைகளுடன் கழகத் தோழர்கள் வரிசைக்கு இருவராக தொடக்கம் முதல் இறுதிவரை கொள்கை முழக்கமிட்டுச் சென்றனர்.

வழி நெடுக ஊர் மக்கள் திராவிடர் கழகத்தின் இந்த அணிவகுப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். தொடக்கம் முதல் இறுதி வரை பொது மக்களை இரு பக்கங் களிலும் காண முடிந்தது.

பல இடங்களில் அணிவகுப்பில் சென் றவர்களுக்குக் குடிநீர் வழங்கினார்கள்.

காஞ்சி சங்கரா திருமண மண்டபம் அருகில் தொடங்கிய பேரணி ஆர்சி. தொடர்வண்டி நிலைய சாலை, காமராசர் சாலை, தலைமை அஞ்சலக சாலை, நாகேசுவரன் தெற்கு வீதி வழியாக கடலங்குடித் தெருவில் அமைந்திருந்த மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.

மலையில் புறப்பட்ட தண்ணீர், நீர் வீழ்ச்சியாக, ஆறாகப் பெருக்கெடுத்து கடலில் சென்று சங்கமம் ஆவது போல் இருந்தது கருஞ்சட்டைப் பேரணி.

இந்தப் பேரணி குறித்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், அதன் துணைத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு, கொக்கூர் முருகையன் போன்ற மூத்த பெரியார் பெருந்தொண்டர்களிடம் கேட்ட போது, கழக வரலாற்றில் நாங்கள் செல் லாத மாநாடு இல்லை, பங்கேற்காத ஊர் வலங்கள் இல்லை என்றாலும் இந்த அளவுக்கு மாணவர்களும், இளைஞர்க ளும் பல்லாயிரக்கணக்கில் அணிவகுத்து வந்த காட்சியை இந்த ஊர்வலத் தில்தான் கண்டோம் என்று பெருமையுடன் குறிப்பிட்டனர்.

காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேரணி குறித்துக் கேட்டபோது அவர் மனந்திறந்து பாராட்டினார். தொடக்கத்தில் எப்படி பேரணி புறப்பட்டதோ, அதே நேர்த்தியைக் கடைசி வரை காண முடிந் தது. ஒரு சிறு அசம்பாவிதமுமின்றி மிகுந்த கட்டுப்பாட்டுடன் பேரணி சென்றது வியக்கத்தக்கது.

இடையில் மதுக் கடைகள் இருந்தால் பல கட்சி ஊர்வலங்களில் அந்த இடத் துக்கு வரும்போது ஊர்வலத்தில் ஒரு முறிவு ஏற்படும். இந்தப் பேரணியில் அந்த பேச்சுக்கே இடமில்லை என்று மனந் திறந்து பாராட்டினார்.

அச்சிட்டுக் கொடுக்கப்பட்ட பேரணி முழக்கங்களை ஆட்டோக்கள் மூலம் ஒருவர் எடுத்துச் சொல்ல ஊர்வலத்தினர் அதனை தொடுத்து முழங்கினர்.

மாநாட்டில் நேர்முகமாக வர வாய்ப்பு இல்லாத பொது மக்கள் திராவிடர் கழகத் தின் இந்த முழக்கங்கள் மூலம் அதன் கொள்கையை அறியும் வாய்ப்பாக இது அமைந்திருந்தது.

இரு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டில் கழகத் தலைவர் அழைத்து வரப்பட்டார். பொது மக்களும், வியாபாரிகளும் கைய சைத்தும், வணக்கம் கூறியும் மகிழ்ந்தனர். பலர் சால்வைகளை அணிவித்தனர். கருஞ்சட்டைக் கடலில் தமிழர் தலைவர் மிதந்து வந்தார்.

பேரணிக்கு திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் கோவை ஆ.பிரபா கரன் தலைமை வகித்தார். மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூர்ப்பாண் டியன் கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் சென்னை நா.பார்த்திபன், திருவாரூர் நா.பொன்முடி, தஞ்சை அண்ணா மாதவன், ஈரோடு ப.வெற்றிவேல், கடலூர் ச.வீரமணி, அரிலூர் கா.பெரியார் செல்வன், மதுரை சித்தார்த் தன், தஞ்சை வே.தமிழ்ச்செல்வன், தஞ்சை ந.காவியன், குடந்தை அ.இரவீந்திரன்,

பட்டுக்கோட்டை பி.செல்வேந்திரன், பட் டுக்கோட்டை ப.பரமசிவம், தென்காசி நோ.மனோஜ்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

ஈரோட்டுப் பூகம்பம்

பேரணி மாநாட்டு மேடையை அடை வதற்கு முன்னதாகவே மாலை 5 மணிக்கு முரசொலி முகிலன் குழுவினரின் ஈரோட் டுப் பூகம்பம் பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி அறிவுக்கு நல்ல விருந்தாக அமைந்தி ருந்தது. பாடல்களை பாராட்டி தோழர்கள் கலைக் குழுவினருக்கு அன்பளிப்புகளைக் குவித்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner