முன்பு அடுத்து Page:

சைதை எம்.பி. பாலுவிற்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

சைதை எம்.பி. பாலுவிற்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

தனது 87ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் பெருந் தொண்டர் சைதை எம்.பி. பாலு தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/& நன்கொடை வழங் கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாலுவிற்கு பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். (சென்னை & 14.2.2019)     மேலும்

16 பிப்ரவரி 2019 16:16:04

தமிழர் தலைவருக்கு கோ. கருணாநிதி பயனாடை

தமிழர் தலைவருக்கு  கோ. கருணாநிதி பயனாடை

கழக வெளியுறவுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட கோ.கருணாநிதி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். (சென்னை & 14.2.2019) மேலும்

16 பிப்ரவரி 2019 16:16:04

உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்!

தோழர்களே, கழக ஆர்வலர்களே! மாநாட்டுப் பணிகள் வேக வேகமாக உற்சாகத்துடன் நடைபெறுகின்றன - மிக முக்கிய தேவை பொருள் வசூல் நன்கொடைத் தொகைகள் உடனடியாகக் குவியட்டும்! திரட்டும் தோழர்கள் பணிமுடித்து எம்மிடம் வந்து தந்து, கடமையாற்றிடுவதில் கண்ணுங்கருத்துமாய் இருங்கள்! நாட்கள் குறைவு - நேரில் சந்திப்பவர்கள் உடனடி நன்கொடை வசூலை முடித்து அளித்து உதவுங்கள் தோழர்களே! உதவாது தாமதம்!   உங்கள் தோழன், தொண்டன், கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம் 16.2.2019 சென்னை மேலும்

16 பிப்ரவரி 2019 15:47:03

வாழ்விணையர் ஏற்பு விழா

நாள்: 17.2.2019. ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி இடம்: டான்பாமா மண்டபம், இரயில் நிலையம் அருகில், சிவகாசி மணமக்கள்: ச.சுந்தரமூர்த்தி - பா.சீனியம்மாள் தலைமை: எஸ்.பி.மணியம் (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: இல.திருப்பதி (மாவட்டத் தலைவர்) விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்) வாழ்விணையர் ஏற்பு நிகழ்வை நடத்தி வைப்பவர் தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நன்றியுரை: து.நரசிம்மராஜ் (நகர செயலாளர்) விழைவு: மா.சர்க்கரை - கணபதியம்மாள் (சிவகாசி) விழா மேடையில் செயல் விளக்க நிகழ்ச்சி "மந்திரம் என்பது ஏதுமல்ல... அனைத்தும்....... மேலும்

15 பிப்ரவரி 2019 16:35:04

வடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பாரிமுனை பகுதியில் தஞ்சை மாநில மாநாட்டு நிதியாக மக்களின் பங்களிப…

வடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பாரிமுனை பகுதியில் தஞ்சை மாநில மாநாட்டு நிதியாக மக்களின் பங்களிப்பை நாடி 2 மணி நேரத்தில் ரூ.5,501 ரூபாயை திரட்டினர் (14.2.2019)

வடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பாரிமுனை பகுதியில் தஞ்சை மாநில மாநாட்டு நிதியாக மக்களின் பங்களிப்பை நாடி 2 மணி நேரத்தில் ரூ.5,501 ரூபாயை திரட்டினர் (14.2.2019) மேலும்

15 பிப்ரவரி 2019 16:18:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர் சிலைக்கு மாலை அணிவிப்பு

குடந்தை, ஜூலை 8- திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டையொட்டி குடந்தை நகரங்களில் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர் உள் ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

8.7.2018 அன்று காலை 7.30 மணியளவில் குடந்தை நகரில் திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தலைமையில், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி, மேனாள் நகர கழக செயலாளர் தி.மில்லர், மாவட்ட இளை ஞரணி தலைவர் க.சிவக்குமார், நகர திராவிடர் கழக செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை யில் கழகத் தோழர்கள் ஊர்வ லமாக சென்று பழைய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரி யார் சிலைக்கு மாநில மாண வர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்க ளும், குளம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மாநில மாணவரணி அமைப்பா ளர் இரா.செந்தூரபாண்டியனும், சி.ஆர்.சி. பணிமனை எதிரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட இளைஞரணி செய லாளர் திராவிடன் கார்த்திக், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு நகர தலைவர் பீ. இரமேசு, அறிஞர் அண்ணா சிலைக்கு மகளிரணி தோழியர் கு.அறிவுவிழி ஆகியோரும், பாலக்கரையில் உள்ள பச்சைத் தமிழர் காமராசர் சிலைக்கு மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அஜிதன் அவர்க ளும் கும்பேஷ்வரர் வீதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாவட்ட மாணவர் கழக செயலாளர் க.அரவிந்த், மகாத்மா காந்தி சிலைக்கு மாணவர் கழக  தோழர் இரா.மணிகண்டனும், மக்கள் தலை வர் ஜி.கே.மூப்பனார் சிலைக்கு எடப்பாடி நகர மாணவர் கழக  தலைவர் இரா.அஜய்பிரசாந்த், பெரியார் மாளிகையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாணவர் கழக  தோழர் கா.தமிழ்செல்வன் ஆகியோரும் தோழர்களின் முழக்கத்துடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஊர்வலத்தில் மேட்டூர் மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு, மேனாள் மாநில மாணவர் கழக செயலாளர் ம. திராவிட எழில், தஞ்சை கி.சவுந்தரராசன், க.வீரமணி, சற் குணம், ரெ.யுவராஜ், ஓவியர் க.புகழேந்தி உள்ளிட்ட கழக தோழர்கள் சென்றனர்.

மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner