முன்பு அடுத்து Page:

அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் எழுச்சியோடு பெரியார் பட ஊர்வலம்

அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் எழுச்சியோடு பெரியார் பட ஊர்வலம்

நீடாமங்கலம், அக். 19 பட்டுக்கோட்டை கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் நகரம் சார்பாக 28.9.2018 அன்று மாலை 6 மணியளவில் நீடாமங்கலம் கடைத் தெருவில் தந்தை பெரியார் பட ஊர்வலம் நீடாமங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் இருந்து தந்தை பெரியார் உருவப்படம் ஒரு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு கொள்கை முழக்கத்தோடு கடைவீதியில் ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் பங்கேற்க ஊர்வல மாகப் புறப்பட்டு இரவு 7 மணியளவில் பெரியார்....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

மனிதம் வளர்த்த தந்தை பெரியார்

மனிதம் வளர்த்த தந்தை பெரியார்

பெரம்பலூர், அக்.19 பெரம்பலூர் விடுதலை வாசகர் வட்டம் 14 ஆவது கூட்டம் மாவட்ட கழக செயலாளர் அ.ஆதிசிவம் தலை மையில் குணகோமதி மருத்து வமனை, பெரம்பலூரில் 13.10.2018 அன்று மாலை 5 மணி யளவில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக, மாவட்டச் செயலாளர் பெ.நடராஜன் அனைவரையும் வர வேற்றார். அறிமுக உரையாக வை.நாத்திக நம்பி அவர்கள் தந்தை த.ஜேம்ஸ் ஆயர் அவர் களை தனது மாணவர் மற்றும் பெரியார் பற்றாளர் என்று அறிமுகப்படுத்தினார். சிறப்பு....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

மதுரவாயல் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!

ஆவடி, அக். 19 மதுரவாயல் கிளைக் கழகத் தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளை பொதுக்கூட்டமாக நடத்தி பிரச்சாரம் செய்யவேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது. கடந்த 02.10.2018 பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டலக் கலந்துரையாடலின் தீர்மானங்களை நிறைவேற்றும் முனைப் புடன் ஆவடி மாவட்டம் தனது கிளைக் கழகங்களில் ஒன்றான மதுரவாயலில் 07.10.2018....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

மதுரவாயல் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!

ஆவடி, அக். 19 மதுரவாயல் கிளைக் கழகத் தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத் தில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாளை பொதுக்கூட்டமாக நடத்தி பிரச்சாரம் செய்யவேண்டும் என்று தீர்மானம் செய்யப் பட்டது. கடந்த 02.10.2018 பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டலக் கலந்துரையாடலின் தீர்மானங்களை நிறைவேற்றும் முனைப் புடன் ஆவடி மாவட்டம் தனது கிளைக் கழகங்களில் ஒன்றான மதுரவாயலில் 07.10.2018....... மேலும்

19 அக்டோபர் 2018 16:20:04

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

மேலும்

19 அக்டோபர் 2018 16:03:04

அரசு வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழி கட்டாயமாக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வ…

அரசு வங்கி எழுத்தர் பணிக்கு மாநில மொழி கட்டாயமாக்க வேண்டும்  பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

  சென்னை, அக்.19 அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங் களின் கூட்டமைப்பின் நிர் வாகிகள் 18.10.2018 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சென் னையில் பெரியார் திடலில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அரசு வங்கிகளில் கிளார்க் பதவிகளில் சேர்ந்திட மாநில மொழி அறிவு கட்டாயம் என்று விதியை மீண்டும் உரு வாக்கி, அந்தந்த மாநிலத்தவர் பணியில் சேர வாய்ப்பு உருவாக்கப்பட....... மேலும்

19 அக்டோபர் 2018 15:53:03

"ஏன் இன்னும் தேவைப்படுகிறார் பெரியார்?" - குவைத்தில் கருத்தரங்கம்

குவைத், அக்.19 பன்னாட்டு திமுக சார்பில் முப்பெரும் விழா குவைத், தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கில் 12.10.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா உள்ளிட்ட விழாவாக நடந்தேறியது. நிகழ்ச்சிக்கு மு.பஷீர் அகமது தலைமை தாங்கினார். பொருளாளர் சிதம்பரம் ந.தியாகராஜன் வரவேற்புரையாற்றினார். உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் ச.செல்லப்பெருமாள், வி.சி.க. முதன்மை செயலாளர் கமீ.அன்....... மேலும்

19 அக்டோபர் 2018 15:48:03

தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்

தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்

சென்னை, அக். 18 தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடத்தூர் தருமபுரி மாவட்டம் கடத்தூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா & திராவிடர் கழக பொதுக்கூட்டம் 2.10.2018 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி 8 மணியளவில் முடிவடைந்தது. பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக தலைவர் பெ.சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

தூத்துக்குடி, அக். 18 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 11ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங் கில் 22.9.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி தலைமை யேற்றார். மாவட்டத் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான், இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர். வழக்குரைஞர் ந.செல்வம் அனை வரையும் வரவேற்றார். முதலாவ தாகத் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரங்கம் நிரம்பி வழிந்தது

ரூ.10 லட்சம்

நன்கொடையாளருக்கு பாராட்டு

பத்மினி வாசுதேவன் புற்றுநோய் ஆய்வு மய்யம் அமைத்திட ரூபாய் 10 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கிய பொறியாளர் கோவிலூர் வாசுதேவன் இணையரை மேடையில் அமரவைத்து பாராட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

பத்மினி வாசுதேவன் புற்றுநோய் ஆய்வு மய்யம் அமைத்திட ரூபாய் 10 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கிய பொறியாளர் கோவிலூர் வாசுதேவன் இணையரை மேடையில் அமரவைத்து பாராட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.

சென்னை, ஜூன் 13 இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் ஆறாவது சிறப்புக்கூட்டம் நேற்று (12.6.2018) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடை பெற்றது.

இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு சொற் பொழிவு 6 சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

“கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய் மையும்“  எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு ஆறாவது சொற்பொழிவை ஆற்றினார்.

நீட் உள்ளிட்ட அனைத்துக்கும் போராட வேண்டியதாக இருக்கிறது. தந்தை பெரியார் சொன்னதைப்போல், நடக்கின்ற அனைத்தும் அரசியல் போராட்டங்கள் அல்ல, ஆரிய திராவிடப் போராட்டமே. இருவேறு பண்பாடு களுக்கு  இடையிலான போராட்டம்.

தமிழ்நாட்டின் ஹரப்பா கீழடி அகழ்வாய்வு களை மறைத்திட முயன்றார்கள். அதற்கும் போராடினோம். மாநில அரசு செய்ய முன்வந்தது. கீழடி அகர்வாராய்ச்சி செய்த ஆய்வாளர் அமர் நாத் ராமகிருஷ்ணனை வடஅமெரிக்காவில் டல்லாஸ் விழாவில் அழைத்தார்கள் என்றால், அவருக்கு  அனுமதி மறுக்கப்படுகிறது.

திராவிடம் எந்த ரூபத்திலும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். அது முடியாது. நாட்டுப் பண்ணில் திராவிட உத்கல.... என்று இருக்கிறதே அதை மாற்ற முடியுமா?

எண்ணற்ற ராமாயணங்கள் உள்ளன. லங்கேஸ்வரன் நாடகத்தில் இராவணனுக்கு சீதை மகள் என்றிருக்கிறது.

கதையில் ராமன் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கூறப் படுகிறது. ஆனால், வரலாற்று அறிஞர்களின், அகழ்வாராய்ச்சியாளர்களின் ஆய்வுகளில் இராமன் வாழ்ந்ததற் கான தடயமே இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்களுக்கு இக்கட்டான நேரத்தில் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று சங்கராச்சாரி கூறுகிறார்.

பார்ப்பனர்களுக்கான குற்றவியல் நடை முறைச் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம் எல்லாம் இராமாயணம்தான் என்கிறார்.

உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கான சந்தா தொகையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் அந்தமான் தேவா, அன்பு ஆகியோர் வழங்கினர்.

எதேச்சதிகார மோடி அய்.ஏ.எஸ். அல்லாத வர்களை இணைச் செயலாளர்களாக நியமித்து, பின்னர் கூடுதல் செயலாளர், செயலாளர் ஆக்கிவிடலாம் என்று உத்தரவு பிறப்பித் துள்ளார். யுபிஎஸ்சி நடத்துகின்ற அய்.ஏ.எஸ். தேர்வு நடைமுறைகள், அரசமைப்புச் சட்டத் தைப்பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள். அதன் உள்நோக்கம் சமூக நீதி, இட ஒதுக்கீட்டை ஒழிப்பதாகவே இருக்கிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பணியிலிருக்கும் போது பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது.  கிஜீஜீஷீவீஸீtனீமீஸீt வீஸீநீறீuபீமீs றிக்ஷீஷீனீஷீtவீஷீஸீ என்று ரங்காச்சாரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

நீட் உள்ளிட்ட தொடர்போராட்டங் களுக்கு முடிவு கட்டுவதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி  ஆட்சியை எவ்வளவு சீக்கிரம் வீட் டுக்கு அனுப்பவேண்டும் என்பதில் தான் இருக்கிறது. ஆகவே இவை யாவும் சுலபமாக மறைத்துவிடக் கூடிய பிரச்சினைகள் அல்ல என்று பல்வேறு தகவல்களை எடுத்துக் காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

பா.வே.மாணிக்கநாயக்கரின் ‘கம்பனின் புளுகும் வால் மீகியின் வாய்மையும்’ நூல், வால்மீகி இராமாயண ஆய்வாளர் தி.அமிர்த லிங்க அய்யர் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங் களை முன்வைத்து, கம்பனின் ராமன், வால் மீகியின் ராமன் மற்றும் கம்பனின் கோசலை, வால்மீகியின் கோசலை உள்ளிட்ட அனைத்து இராமாயணப் பாத்திரங்களின் வழியே கம்பன் செய்த மோசடிகளை தோலுரித்துக்காட்டினார் தமிழர் தலைவர்.

அடுத்த கூட்டம் தொடரும்

அறிவிப்புக்கு வரவேற்பு

‘கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய் மையும்’ தலைப்பில் கூட்டம் முடிந்து அடுத்ததாக கம்பனின் கூற்றுக்கு கம்பனே மறுத்துக் கூறுவதை எடுத்து விளக்கும் வகையில் அடுத்தக்கூட்டம் அமையும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்ததை யடுத்து பார்வையா ளர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

சுயமரியாதை திருமண விழா

பூ.வள்ளி - பு.மணிகண்டன் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்.

தொடக்க நிகழ்வாக எளிமையான சுயமரி யாதை திருமண விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கல்லாய் சொரத்தூர்  பூபதி- மஞ்சுளா மகள் பூ.வள்ளிக்கும், விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் புரட்சி வீரன்- நாகம்மாள் மகன் பு.மணிகண்டனுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்து வாழ்த்துரை யாற்றினார்.

இணையேற்பு விழா மகிழ்வாக விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தாத் தொகையை தமிழர் தலைவரிடம் மணமக்கள் அளித்தார்கள்.

நூல் வெளியீட்டு விழா

தமிழர் தலைவரிடமிருந்து நூல்களை பெறுகின்றனர்

 

பா.வே.மாணிக்க நாயக்கர் எழுதிய “கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்” நூலின் புதிய பதிப்பு (ரூ.50), ராவ்பகதூர் பேராசிரியர் ஏ.சக்ரவர்த்தி எழுதிய “இராவணன் வித்யா தரனா?” (ரூ.10), மு.அண்ணாமலை எழுதிய “கம்பன் கெடுத்த காவியம்” (ரூ.12), “அறிவரசன் எழுதிய யார் இந்த ராமன்?” (ரூ.20), பண்டிதர் இ.மு.சு. எழுதிய “இதிகாசங்களின் தன்மைகள்” (ரூ.20), அன்னை மணியம்மையார் எழுதிய “கந்தபுராணமும், இராமாயணமும் ஒன்றே!” (ரூ.6) ஆகிய நூல்கள் வெளியிடப் பட்டன. புத்தகங் களின் நன்கொடை ரூ.118 சிறப்புக்கூட்டத்தில் ரூ.100க்கே வழங்கப்பட்டது.

நூல்களை பெற்றுக்கொண்டவர்கள்

நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மேனாள் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன்,  சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வழக் குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் கி.தளபதிராஜ், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், புலவர் பா.வீரமணி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், மாவட்டச் செயலார் கோ.நாத்திகன், தங்க.தனலட்சுமி, சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவ சாமி, கு.சோமசுந்தரம், பழ.சேரலாதன், ஆதம்பாக்கம் சவரி யப்பன், செந்துறை இராசேந்திரன், கொரட்டூர் பன்னீர் செல்வம்,  அரிமா கு.திவாகரன், திண்டிவனம் சிறீராமுலு, அந்தமான் டான்போஸ்கோ, திராவிட மாணவர் கழகம் சீர்த்தி, தொண்டறம் உள்பட ஏராளமானவர்கள் புத்தகங்களை உரிய தொகையை அளித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

கலந்துகொண்டவர்கள்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி.வெற்றிசெல்வி, சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, பெரியார் களம் இறைவி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பாமணி யம்மை, செல்வி, கோ.வீ.ராகவன், பெரி யார் மாணாக்கன், மஞ்சநாதன்,கொடுங்கையூர் தங்கமணி, ஊரப்பாக்கம் வேமன்னா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner