முன்பு அடுத்து Page:

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு

குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு

கழகத் தோழர்களின் உற்சாக வெள்ளம்! குடந்தை, ஜூன் 21- குடந்தையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட் டிற்கு சுவரெழுத்து பணிகள், கடைகள் தோறும் வசூல், முக்கிய பிரமுகர்களிடம் நன் கொடை வாங்குதல் உள்ளிட்ட பணிகளை கழகத் தோழர்கள் உற்சாகமாக செய்து வருகின் றனர். பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்! என்ற தலைப்பில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா....... மேலும்

21 ஜூன் 2018 15:17:03

லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

லால்குடி, ஜூன் 21- லால்குடி (கழக) மாவட்ட ப.க. கலந் துரையாடல் கூட்டம் 16.6.2018 அன்று காலை 10 மணிக்கு டோல்கேட்டில் ப.க. மாவட் டத் தலைவர் அக்ரி.சுப்ரமணி யின் வர்த்தக வளாகத்தில் மாநில ப.க. துணைத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ப.க. தலைவர் அக்ரி சுப்ரமணியன் வரவேற் புரையாற்றினார். மாவட்ட ப.க. அமைப்பினர் பொறி யாளர் முருகேசன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் சுப்....... மேலும்

21 ஜூன் 2018 15:17:03

பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம்

பெரம்பலூர், ஜூன் 19- பெரம் பலூர், மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சி.தங்க ராசு தலைமையில் 16.6.2018 அன்று மாலை 6 மணியளவில் டாக்டர் குணகோமதி மருத்துவ மனையில் நடைபெற்றது. பெ.நடராஜன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்ட கழகத்தின் நிலை, வேலை திட்டம், கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம் மற்றும் மாணவர் களை பெரும் அளவில் திரா விட மாணவர் கழகத்தில் சேர்ப் பது சம்பந்தமாக ஆலோசிக் கப்பட்டது........ மேலும்

19 ஜூன் 2018 16:21:04

கபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம…

கபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா  இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம்!

தொகுப்பு: மயிலாடன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் குருதிக் குடும்பத்தில் நடைபெற்ற அவரது பெயரன் கபிலனின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - அது கடந்த 17 ஆம் தேதி ஞாயிறு அன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி சுருக்கமாக ஒரு மணிநேரத்தில் முடிவுற்றது. இதற்குரிய சிறப்பு என்பது அழைப்பிதழ் அச்சிடப்பட வில்லை. விரிவாக எல்லோருக்கும் அழைப்புக் கொடுத்....... மேலும்

19 ஜூன் 2018 15:34:03

பேருந்தில் இந்தி மொழியா? கழக முயற்சிக்கு வெற்றி!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத்துறைக்குச்சொந்தமான நகரப் பேருந்து  - பெருந்துறையிலிருந்து கவுந்தப்பாடி செல்லும்  17/22 வழித்தடம்  பேருந்துப் பெயர்ப்ப லகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை சமூக ஊடகம்  வழியாக அறிந்தவுடன் 18.06.2018 திங்கள்  நண்பகல் 12 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்  தலைமையில், மாநில இளை ஞரணி துணை செயலாளர் தே.காமராஜ்,மாவட்ட ப.க அமைப்பாளர்  பி.என்.எம். பெரிய சாமி ஆகியோர் அரசுப் போக்குவரத்துத்....... மேலும்

19 ஜூன் 2018 15:19:03

ஈரோடு, நீலமலை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

   ஈரோடு, நீலமலை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற  திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

    ஈரோடு, ஜூன் 17 திராவிட மாணவர் கழகத் தின் ஈரோடு மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம் 9.6.2018 அன்று காலை 10.30 மணியவில் ஈரோடு பெரியார் மன்றத்திலும், நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாலை 6 மணியளவில் குன்னூர் ஆசியன் சுற்றுலா தங்கும் விடுதியிலும் துவங்கி நடைபெற்றது. நிகழ்வுகளில் எதிர்வரும் சூலை 8ஆம் தேதியன்று கும்பகோணத்தில் நடைபெறும் திராவிடர் மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இவ்விரு....... மேலும்

17 ஜூன் 2018 12:58:12

திராவிட மாணவர் மாநாடு விளக்க பிரச்சாரக் கூட்டம்

திராவிட மாணவர் மாநாடு விளக்க பிரச்சாரக் கூட்டம்

கபிஸ்தலம், ஜூன் 16- 9.6.2018 சனி மாலை 6.00 மணிக்கு குடந்தை கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் ஜூலை 8 திராவிட மாணவர் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சரியாக 6.30 மணியிலிருந்து மந்திரமா? தந்திரமா? நிகழ்வு குடந்தை ஜெயமணிகுமார் அவர்களால் நடத்தப்பட்டது.     கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வால் பொதுமக்கள் ஆங் காங்கே நின்றுகொண்டு கூட்டத்தினை கண்டனர். மந்தி ரமா? தந்திரமா? நிகழ்வு நடை பெற்றபோது மக்கள் நெருங்கி கவனித்தனர். தொடர்ந்து....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?

குடியரசுத்  தலைவரை அவமதிப்பதா?

தாழ்த்தப்பட்டோர் என்பதால் கோவிலுக்குள் நுழைய விடாமல் தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, ஜூன் 16  இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜஸ் தானில் உள்ள கோவிலுக்குள் நுழைய விடாமல்  தடுக்கப் பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் 7.6.2018 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருப்பூர் இந்தியக் குடியரசுத் தலைவர் ராஜஸ்தானில் கோவி லுக்குள் நுழைய தடுக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக....... மேலும்

16 ஜூன் 2018 16:21:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 10  யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்டோர்நல சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழியர் ஞா.மலர்க்கொடி வங்கிப் பணியை நிறைவு செய்தமைக்கும், அவரது மகன் செல்வன்.சத்தியன் ஞானசேகரன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018 காமன்வெல்த் விளையாட்டில், டேபிள் டென்னிஸ் போட்டியில் மூன்று பதக்கங்கள் வென்றதற்கும் பாராட்டு விழா ஜூன் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் அமைந்துள்ள அம்பாசிடர் பல்லவா ஓட்டலில் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றது.

விழா நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நமது பாரம்பரிய நாதசுவர இசையுடன் துவங்கியது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி வரவேற்று பேசினார்.

விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் காப்பாளருமானதிரு.டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை வகித்து பேசினார்.தனது உரையில், மண்டல் குழு பரிந்துரையை மத்திய அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதையும், நாடாளுமன்றத்தில் தங்களது குரலை எழுப்பினாலும், இன்றைய ஆட்சியாளர்கள் அதனை செவிமடுக்க மறுக்கிறார்கள் என்பதையும், தந்தை பெரியாரின் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து தாம் போராடுவதாக கூறினார்.

திராவிடர் கழகத்தின் தலைவர்  கி.வீரமணி அவர்கள், விழாவில் கலந்து கொண்டு, தோழியர் ஞா.மலர்க்கொடி அவரது மகன் ஞா.சத்தியன் ஆகிய இருவருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, சிறப்பானதொரு பாராட்டுரை வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்தில் தந்தை பெரியாரின் தியாகத்தால் பெற்றுள்ள சமூக நீதி முன்னேற்றத்தை விரிவாக எடுத்துரைத்து, ஏனைய மாநிலங்களும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை பின்பற்றி நடந்திட வேண்டும் என வட மாநிலங்களில் இருந்த விழாவிற்கு வருகை தந்த தோழர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். வாய்ப்பு கிடைத்தால், உலக அளவில் அனைவரும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு, உலக அளவில் சிறப்பான வெற்றியை பெற்றுவரும் சத்தியன், ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு என்று பலத்த கரவொலிக்கிடையே கூறினார். ஆசிரியரின் ஆங்கில உரையை கவனமுடனும், உற்சாகத்துடனும் விழாவிற்கு வருகை தந்த அனைவரும் கரவொலி மூலம் தங்களது ஒப்புதலை தெரிவித்தனர்.

யூனியன்வங்கியின் சென்னை பிராந்தியத் துணை பொது மேலாளர் பி.எஸ்.வெங்கடேஷ், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செயல் தலைவரும், பிற்படுத்தப்பட்டோர் குரல் மாத இதழின் ஆசிரியர் ஜே.பார்த்தசாரதி ஆகியோர்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தங்களது ஏற்புரையில், பாராட்டுரை வழங்கிய தமிழர் தலைவர் மற்றும் வாழ்த்துரை வழங்கிய பெருமக்களுக்கும், வருகை தந்த அனைவருக்கும் நன்றியினை தோழியர் ஞா.மலர்க்கொடி, ஞா.சத்தியன் தெரிவித்தனர்.

நல சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் நன்றியுரை நிகழ்த்தினார். தோழியர் ஜி. ராஜகவிதா விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஏ.ராஜசேகரன் (அய்.ஓ.பி), எம்.இளங்கோவன் (அய்.அய்.டி), முத்துக்குமரன் (எம்.எப்.எல்), துரைராஜ், வேம்பையன் (சி.பி.சி.எல்), ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் (அய்.சி.எப்), சுரேஷ் (எச்.வி.எப்,ஆவடி), வடமலை ராசு, பிரபாகரன் (ஜி.அய்.சி.), இ.அய்.எஸ்.சி, நிறுவன நிர்வாகிகள், யூனியன் வங்கியில் இருந்து இந்தியா முழுமையிலும் உள்ள நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக நாதசுவரம் இசை வழங்கிய தோழர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். மேலும், யூனியன் வங்கியில் பணி நிறைவு செய்த தோழர்கள் ஜூவகுமாரி, ஆல்பர்ட் ராஜ் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

விழாவிற்கு உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், ராஜஸ்தான், மகாராட்டிரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வருகை தந்த அனைத்து பிரதி நிதிகளுக்கும், நல சங்கத்தின் சார்பில் தந்தை பெரியாரின் படம், தமிழர் தலைவரால் அளிக்கப்பட்டது. மதிய உணவுக்குப் பின் நடைபெற்ற நல சங்கத்தின் பொதுக்குழுவில், அகில இந்திய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் தலைவராக கோ.கருணாநிதி, செயல் தலைவராக டாக்டர் அமிர்தான்சு, பொதுச் செயலாளராக டி.ரவிக்குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் தமிழ் நாடு பிரிவிற்கு தலைவராக கோ.கருணா நிதி, பொதுச் செயலளாராக எஸ்.நடராசன், பொருளாளராக எம்.பாக்கியராஜ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner