முன்பு அடுத்து Page:

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும…

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும் போராட்டம்!

விருதுகள் அளித்தும் - படங்கள் திறந்தும் - திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சென்னை, ஜன.17 நாட்டில் நடப்பது சமுகநீதிக்கும், சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா 16.1.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி....... மேலும்

17 ஜனவரி 2019 16:08:04

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாடு, ஜன.17 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 16-.01-.2019 அன்று காலை உரத்தநாட்டில் எருமைமாட்டு ஊர்வலம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கடும் உழைப்பும், கட்டிப்பாலும், கெட்டித் தயிரும், தரும் எருமைமாட்டை கருப்பு என்பதால் புறக்கணிக்கும் புல்லர்களுக்கு புத்தி புகட்ட திராவிட....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன்: க.ப. அறவாணன் அவர்களின் வாழ்விணையர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள். மேலும்

17 ஜனவரி 2019 15:47:03

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில், திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோருக்கு பெரியார் விருதினை'' வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, குவைத் செல்லப்பெருமாள், மலேசியா அன்பழகன், த.க.நடராசன், தாயம்மாள் அறவாணன் ஆகியோர் உள்ளனர்....... மேலும்

17 ஜனவரி 2019 15:19:03

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு  மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்தவற்றை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதை பாராட்டி  தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான தூய்மை விருதினை பள்ளி முதல்வர் க.வனிதாவிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார். மேலும்

14 ஜனவரி 2019 17:07:05

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்  தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக்கழக பதிவாளர் பேரா. சொ.ஆ.தனராஜ், பெரியார் தொழில் நுட்ப வணிகக்காப்பகத்தின் முதன்மை  செயல் அலுலவர் பேரா. எஸ்.தேவதாஸ் மற்றும் கல்விப்புல முதன்மையர் பேரா பி.கே.சிறீவித்யா ஆகியோர்  முன் னிலை வகிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி அவர்கள் தலைமை வகிக்க கூட்டு  பணியாளர் நலமன்ற சார்பாக பணி யாளர்களுக்கு உறியடி போட்டி,....... மேலும்

14 ஜனவரி 2019 17:03:05

'விடுதலை'க்கு விடுமுறை

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் (15.1.2019, 16.1.2019) விடுமுறை.  வழக்கம்போல் 17.1.2019 அன்று விடுதலை வெளிவரும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! - ஆசிரியர் மேலும்

14 ஜனவரி 2019 15:01:03

மதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள் விழா

மதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள் விழா

மேலஅனுப்பானடி, ஜன.13 மதுரை மேலஅனுப்பானடியில் 13.12.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சுயமரியாதை நாளாக எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவுக்கு பகுதி செயலாளர் பொ.பவுன்ராசு தலைமை வகித்தார். அனைவரையும் வரவேற்றார் பகுத்தறிவாளர் கழகம் சுப.முருகானந்தம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினார்கள். தொடக்கத்தில் மாவட்ட அமைப்பாளர்....... மேலும்

13 ஜனவரி 2019 16:19:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாராபுரம்,  ஜூன் 6 குடந்தை மாநாட்டிற்கு புற்றீச லென அணிவகுப்பதென தாராபுரம் மாவட்ட மாணவர் கழகக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

வருகின்ற சூலை 8 ஆம் தேதியன்று கும்பகோணத்தில் கழக வரலாற்றுச் சிறப்புகளின் ஒரு பகுதியாக எழுச்சியோடு நடைபெறவுள்ள திராவிடர் மாணவர் கழக பவளவிழா மாநில மாநாடு குறித்து தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 03.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தாராபுரம் காமராஜபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில் கழகத்தின் மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஆ.பிரபாகரன் தலைமை தாங்கினார். கோவை மண்டல மாணவரணிச் செயலாளர் ரா.சி.பிரபாகரன் வரவேற்றார்.திராவிடர் மாணவர் கழக மாநில அமைப்பாளர் செந்தூரபாண்டி,மாவட்ட தலைவர் க.கிருஷ் ணன்,துணைச் செயலாளர் க.சண்முகம், மண் டல இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக அமைப்பாளர் உரை

நிகழ்வில்  பங்கேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்து கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் குறிப்பிட்டதாவது; வருகின்ற சூலை 8 அன்று குடந்தையில் நடைபெறவுள்ள மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டில் மாணவர்களும்,கழகத் தோழர்களும் பெருவாரியாகப் பங்கேற்று வரலாறு படைக்கவேண்டும் என்பதை தெரிவிப்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.நீட்தேர்வின் ஆபத்தை முதன் முதலாக எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்த இயக்கம் திராவிடர் கழகம்! தற்போது நீட்தேர்வால் மாணவர்களும், பெற் றோர்களும் பல சோதனைகளைச் சந்தித்து வருகின்றனர்.மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் கல்வியில் கைவைத்து மதரீதியிலான கருத்துக்களை மத்திய அரசு புகுத்தியும்,புகுத்தவும் முயன்று வருகிறது.தமிழகத்திற்கு வரும் ஆபத்துக்களை தடுக்கக் கூடிய ஒரே ஆயுதமாக கட்சிகளுக்கு அப்பாற் பட்டு நம்முடைய தமிழர்தலைவர் அவர்கள் விளங்குகின்றார்.பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற அரிமா முழக்கத்தோடு தமிழர் தலைவர் அறிவித்துள்ள குடந்தை மாநாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்களை பங்கேற்கச் செய்வதோடு, மாநாடு தொடர்பாக மாவட்டத் திற்கு கொடுக்கப்பட்டுள்ள நிதி இலக்கையும் சிறப்பாக நிறைவேற்றித்தரும் வகையில் மாவட் டப் பொறுப்பாளர்கள் எழுச்சியோடு களப்பணி யாற்றிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கழக அமைப்புச் செயலாளர் உரை

கூட்டத்தில் கலந்துகொண்டு நிறைவுரை யாற்றிய கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் அவர்கள் குறிப்பிட்டதாவது;

இன்றளவில் நாடு மிகவும் சிக்கலான சூழ்நிலையில் இருந்து வருகிறது.தமிழகத்தில் கலாச்சார பண்பாட்டு சீர்கேடுகளை பலவழி களில் திணிக்கும் வேலையை பிரதமர் மோடி செய்து வருகிறார். மாணவர்களுக்கு கல்வியே இருக்கக்கூடாது! என்ற அபாயகரமான சூழல் நிலவி வருகிறது.இவைகளை  விரட்டியடிக்க மாணவர் கழகத் தோழர்கள் ஆயத்தமாக வேண் டும்! குடந்தை மாநாட்டை நல்ல முறையில் விளம்பரம் செய்து பெருவாரியான மாணவர் களை திரட்டவேண்டும் இவ்வாறு அவர் உரையாற்றினார்.

மாநாட்டு நிதி: குடந்தை மாநாட்டு நிதியாக தாராபுரம் கழக மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன் ரூ.1000/=, தாராபுரம் நகர கழக இளைஞரணி அமைப்பாளர் ஆ.முனீஸ்வரன் ரூ.150/= ஆக ரூ. 1,150/= கழக அமைப்பாளரிடம் வழங்கப்பட்டது.

பயனாடை கழக அமைப்பாளர் அவர்களுக்கு மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன் அவர்களும், தாராபுரம் இராதா பெரியார்நேசன் அவர்களும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். கணியூரில் நடைபெற்ற மகளிர் எழுச்சி மாநாட் டின் வெற்றிக்கு உழைத்த கழக  அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், தாராபுரம் கழக மாவட்ட துணை செயலாளர் க.சண்முகம், மாநில மாணவரணி துணை செயலாளர் ஆ.பிரபாகரன்,மண்டல மாணவரணி செயலாளர் ரா.சி.பிரபாகரன்,உடுமலை நகர தலைவர் போடிபட்டி காஞ்சிமலையன்,உடுமலை முரு கேஸ்(பக),தாராபுரம் நகர தலைவர் மு.சங்கர், தாராபுரம் நகர  இளைஞரணித் தலைவர் இரா.சின்னப்பதாஸ்,அமைப்பாளர் ஆ.முனீசு வரன்,கணியூர் துரையரசன் ஆகியோருக்கு கூட்டத்தில் கழக அமைப்பாளர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கழகக் கொடியேற்றம்

கூட்டத்திற்கு முன்பாக தாராபுரம் பூளவாடி பேருந்து நிறுத்தத்தில் தாராபுரம் நகர கழக இளைஞரணியின் சார்பில் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கழக அமைப்பாளர் அவர்கள் கழகக் கொடியினை எழுச்சியோடு ஏற்றி வைத்தார்.கழகத் தோழர்கள் முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner