முன்பு அடுத்து Page:

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும…

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும் போராட்டம்!

விருதுகள் அளித்தும் - படங்கள் திறந்தும் - திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சென்னை, ஜன.17 நாட்டில் நடப்பது சமுகநீதிக்கும், சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா 16.1.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி....... மேலும்

17 ஜனவரி 2019 16:08:04

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாடு, ஜன.17 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 16-.01-.2019 அன்று காலை உரத்தநாட்டில் எருமைமாட்டு ஊர்வலம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கடும் உழைப்பும், கட்டிப்பாலும், கெட்டித் தயிரும், தரும் எருமைமாட்டை கருப்பு என்பதால் புறக்கணிக்கும் புல்லர்களுக்கு புத்தி புகட்ட திராவிட....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன்: க.ப. அறவாணன் அவர்களின் வாழ்விணையர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள். மேலும்

17 ஜனவரி 2019 15:47:03

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா

திராவிடர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில், திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோருக்கு பெரியார் விருதினை'' வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, குவைத் செல்லப்பெருமாள், மலேசியா அன்பழகன், த.க.நடராசன், தாயம்மாள் அறவாணன் ஆகியோர் உள்ளனர்....... மேலும்

17 ஜனவரி 2019 15:19:03

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு  மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கு விருது!

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சார்ந்தவற்றை சிறப்பாக செயல்படுத்தியுள்ளதை பாராட்டி  தமிழ்நாடு அரசின் மாவட்ட அளவிலான தூய்மை விருதினை பள்ளி முதல்வர் க.வனிதாவிடம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வழங்கினார். மேலும்

14 ஜனவரி 2019 17:07:05

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் கல்வி நிறுவனங்களில் தமிழர் திருநாள், பொங்கல் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்  தமிழர் திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் விழா பல்கலைக்கழக பதிவாளர் பேரா. சொ.ஆ.தனராஜ், பெரியார் தொழில் நுட்ப வணிகக்காப்பகத்தின் முதன்மை  செயல் அலுலவர் பேரா. எஸ்.தேவதாஸ் மற்றும் கல்விப்புல முதன்மையர் பேரா பி.கே.சிறீவித்யா ஆகியோர்  முன் னிலை வகிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி அவர்கள் தலைமை வகிக்க கூட்டு  பணியாளர் நலமன்ற சார்பாக பணி யாளர்களுக்கு உறியடி போட்டி,....... மேலும்

14 ஜனவரி 2019 17:03:05

'விடுதலை'க்கு விடுமுறை

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் (15.1.2019, 16.1.2019) விடுமுறை.  வழக்கம்போல் 17.1.2019 அன்று விடுதலை வெளிவரும். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்! - ஆசிரியர் மேலும்

14 ஜனவரி 2019 15:01:03

மதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள் விழா

மதுரை மேல அனுப்பானடி - ஆண்டிப்பட்டியில் எழுச்சியுடன் சுயமரியாதை நாள் விழா

மேலஅனுப்பானடி, ஜன.13 மதுரை மேலஅனுப்பானடியில் 13.12.2018 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சுயமரியாதை நாளாக எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவுக்கு பகுதி செயலாளர் பொ.பவுன்ராசு தலைமை வகித்தார். அனைவரையும் வரவேற்றார் பகுத்தறிவாளர் கழகம் சுப.முருகானந்தம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சே.முனியசாமி, மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினார்கள். தொடக்கத்தில் மாவட்ட அமைப்பாளர்....... மேலும்

13 ஜனவரி 2019 16:19:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவில்லிப்புத்தூர், ஜூன் 6  விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரில் ஆகஸ்ட் 5 ஆம் நாள் மதுரை மண்டல திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டை பேரணியுடன் மிகச்சிறப்பாக நடத்துவது எனவும், மாநாட்டில் 300 உண்மை சந்தாக்கள் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ஜூன் 2 ஆம் தேதி திருவில்லிப்புத்தூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தென்மாவட்ட பிரசாரக் குழுத் தலைவர் தே.எடிசன்ராஜா தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட இளை ஞரணி தலைவர் இரா.கோவிந்தன் வரவேற்புரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். அப்போது, திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் எனும் தலைப் பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 5 ஆம் நாள் திருவில்லிப் புத்தூரில் நடைபெற உள்ள மண்டல இளைஞரணி மாநாட்டை மிகுந்த எழுச்சி யோடு நடத்துவதற்கு பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் வகையில் மருந்தாக நாம் விடுதலை, உண்மை இதழ்களுக்கு சந்தா வழங்கி வருகிறோம்.

விருத்தாசலத்தில் மார்ச் 11 ஆம் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந் துரையாடல் கூட்டத்தில், ஆசிரியர் உண் மை இதழுக்கு இளைஞரணி சார்பில், சந்தா வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி, நடைபெற உள்ள மாநாட்டில் இளைஞரணி பொறுப்பாளர்கள் 300 உண்மை சந்தாக்கள் வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து முன்னிலை வகித்த அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டல தலைவர் மா.பவுன்ராசா, மதுரை மண்டல செயலாளர் நா.முருகேசன், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, மாநில இளை ஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், விருதுநகர் மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன், மாநில பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் கா.நல்லதம்பி, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.முனியசாமி, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் த.ம.எரிமலை, பொதுக்குழு உறுப்பினர் இரா.பகீரதன், மண்டல இளைஞரணி செயலாளர் இரா.அழகர் ஆகியோர் மாநாட்டை  சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினர்.

இதேபோல், விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, அருப்புக்கோட்டை முரளி நாராயணசாமி, மதுரை மணிராஜ், பகுத்தறிவாளர் கழகம் முத்துகணேஷ், ராஜபாளையம் நகர செய லாளர் பாண்டிமுருகன், மாணிக்கரா, ஆட்டோ செல்வம், கார்த்திகேயன், சிங்க ராசன், ரகுநாதன், முத்துக்கருப்பன், மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் சிவா, மதுரை சுரேஷ், பா.நடராசன் உள்பட பலர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கி, மாநாட்டிற்கு கூட்டத்திலேயே தங்கள் பங்களிப்பாக 62,000 அறிவித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திருவில்லிப்புத்தூரில் மதுரை மண்டல இளைஞரணி எழுச்சி மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பளித்த  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 5 ஆம் நாள் திருவில்லிப் புத்தூரில் நடைபெறும் திக்கெட்டும் பாய்வோம், திராவிடத்தைக் காப்போம் திராவிட இளைஞர் எழுச்சி மாநாட்டை இளைஞர் எழுச்சி பேரணியுடன் மிகச்சிறப்பாக நடத்துவது.

மதுரை மண்டல இளைஞரணி சார்பில் திருவில்லிப்புத்தூரில் நடைபெறும் மாநாட்டில் மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மதுரை மாநகர், மதுரை புறநகர் மற்றும் விருதுநகர் கழக மாவட்டங்கள் சார்பில் 300 உண்மை சந்தாக்கள் வழங் குவது.

மாநாட்டு விளம்பரம்

திருவில்லிப்புத்தூரில்  நடைபெற உள்ள எழுச்சி மாநாட்டில் மதுரை மண் டலத்திற்கு உள்பட்ட தோழர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்பது.

ஆகஸ்ட் 5 ஆம் நாள் திருவில்லிப் புத்தூரில் நடைபெறும் மண்டல இளை ஞரணி மாநாட்டை விளக்கி நகரின் முக்கியப் பகுதிகளில் சுவர் விளம்பரம், பேனர் விளம்பரம் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது. இந்திய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலில் அனுமதிக்காமல் தடுக்கப்பட்ட மனித உரிமைக்கு எதிரான செயலை கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பின்படி ஜூன் 7 ஆம் நாள் மதுரை, விருதுநகரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்பது. ஆகஸ்ட் 2 முதல் 5 ஆம் நாள் வரை நான்கு நாள்கள் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில், மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட பகுதியிலிருந்து ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கச் செய்வது, பயிற்சி முகாமுக்கு பொருளாதார உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குவது என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:

மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்- திருமங்கலம் குண்டாறு பா.முத்துக்கருப்பன்.

மதுரை மண்டல இளைஞரணி மாநாட்டு ஏற்பாட்டுக் குழு மற்றும் வரவேற்புக் குழு பொறுப்பாளர்கள்:

ஒருங்கிணைப்பாளர்கள்:

1. இரா.ஜெயக்குமார்  பொதுச்செயலாளர்

2. வே.செல்வம்  அமைப்புச் செயலாளர்

3. தே.எடிசன்ராஜா- தென்மாவட்ட பிரசாரக்குழு தலைவர்

4. த.சீ.இளந்திரையன்- மாநில இளை ஞரணி செயலாளர்

5. மா.பவுன்ராசா- மதுரை மண்டல தலைவர்

6. நா.முருகேசன்- மதுரை மண்டல செயலாளர்

7. மு.சித்தார்த்தன்- மாநில வழக்கு ரைஞரணி செயலாளர்

ஏற்பாட்டுக்குழுத் தலைவர் - இல.திருப்பதி  விருதுநகர் மாவட்டத் தலைவர்

ஏற்பாட்டுக்குழு செயலாளர்- விடு தலை தி.ஆதவன்- விருதுநகர் மாவட்ட செயலாளர்

பொருளாளர்  வழக்குரைஞர் இரா.பகீரதன் பொதுக்குழு உறுப்பினர்

துணைத் தலைவர்கள்: கா.நல்லதம்பி- மாநில ப.க துணைத் தலைவர் வானவில் வ.மணி- பொதுக்குழு உறுப்பினர்

துணைச் செயலாளர்கள்:  பூ.சிவகுமார்- இராஜபாளையம் நகர தலைவர்

இரா.பாண்டிமுருகன் - இராஜ பாளையம் நகர செயலாளர்

உறுப்பினர்கள்:

வா.நேரு- மாநில பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற தலைவர்

சே.முனியசாமி- மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்

அ.முருகானந்தம்  மதுரை மாவட்ட செயலாளர்

சு.தனபாலன் - மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்

த.ம.எரிமலை -  மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்

இரா.முத்துகணேஷ்

விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் வெ.முரளி

மாவட்ட துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, மாவட்ட ப.க தலைவர் பெ.த.சண்முகசுந்தரம், மாவட்ட ப.க துணை அமைப்பாளர் மா.பாரத், பொதுக் குழு உறுப்பினர் எஸ்.பி.மணியம், சிவகாசி தலைவர் மா.முருகன், செயலாளர் து.நரசிம் மராஜூ, அமைப்பாளர் பெ.கண்ணன், புரவலர் மா.சிவஞானம், சுருளி ராஜன்,மா.நல்லவன்-திருத்தங்கல் நகர அமைப்பாளர், கா.காளிராஜன், புரவலர் ந.ஆனந்தம் நகர ப.க தலைவர் சு.பாண்டி, செயலாளர் பூ.பத்மநாதன், நகர தலைவர் சு.செல்வராஜ். நகர செயலாளர் பா.இராஜேந்திரன், மாவட்ட துணைத் தலவைர் அ.தங்கச்சாமி, துணை அமைப்பாளர் பெ.சந்தானம், ஒன்றிய ப.க அமைப்பாளர் வெ.வெங்கடசுப்பையன், இரா.மிதரன், மாவட்ட ப.க அமைப்பாளர் பா.அசோக், வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் மு.சீனி, பா.நடராஜன், திருச்சுழி ஒன்றியம் தி.க.முத்தய்யா, காரியாப்பட்டி ப.க பொறுப்பாளர் சி.குமார்.

வரவேற்புக்குழு:

வரவேற்புக்குழு தலைவர்: இரா.அழகர்- மதுரை மண்டல இளைஞரணி செயலாளர்

வரவேற்புக்குழு செயலாளர்: இரா. கோவிந்தன்- விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்

துணைத் தலைவர்கள்:

க.சிவா  மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்

பா.முத்துக்கருப்பன்  மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்

துணைச் செயலாளர்கள்:

ந.ஆசைத்தம்பி  விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்

பேக்கரி கண்ணன்- மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்

உறுப்பினர்கள்

சி.பிரபாகரன்- மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர்

ச.சுந்தரமூர்த்தி- விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

ம.கதிரவன் விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்

க.திருவள்ளுவர்  அருப்புக்கோட்டை நகர இளைஞரணி தலைவர்

ஆ.கிள்ளிவளவன்- அருப்புக் கோட்டை நகர இளைஞரணி செயலாளர்

இர.இளம்பரிதி  விருதுநகர் மாவட்ட மாணவரணி தலைவர்

சு.தமிழ்மணி- விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர்

அ.பெரியார்செல்வம்- விருதுநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்

சி.மணிமாறபூபதி- சிவகாசி நகர இளை ஞரணி தலைவர்

மு.சா.கருப்பசாமி- சிவகாசி நகர இளை ஞரணி செயலாளர்

மாணிக்கராஜ்- விருநகர் நகர இளை ஞரணி தலைவர்

பா.ஜெயக்குமார்- விருதுநகர் நகர இளைஞரணி செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தின் முடிவில் மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் பா.முத்துக்கருப்பன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner