முன்பு அடுத்து Page:

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம்

வடக்குத்து, மே 24 வடக்குத்து திராவிடர் கழகம் சார்பில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம் 21.5.2018 அன்று மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் தலைமையில் நடைபெற்றது. மண்டல இளைஞரணி செயலாளர் வி.திராவிடன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் சொ.தண்ட பாணி, மண்டல மகளிரணி செயலாளர் இரமாபிரபா ஜோசப், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஞானமணி, வடக்குத்து சி.தர்மலிங்கம், மாவட்ட....... மேலும்

24 மே 2018 16:38:04

தந்தை பெரியார் 139 ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

தந்தை பெரியார் 139 ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

புதுக்கோட்டை, மே 24 புதுக்கோட்டை மாவட் டம் திருமயம் கடைவீதியில் தந்தை பெரியார் 139-ஆவது பிறந்தநாள் விழா தெரு முனைக் கூட்டம் 22.5.2018 அன்று நடை பெற்றது. இந்நிகழ்விற்கு திராவிடர் கழக மாவட் டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன் தலைமை வகித்தார். ப.க. தோழர் ஆ.க. ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். மண்டலத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட் டச் செயலாளர் ப.வீரப்பன், மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா ஆகியோர் முன்னிலை....... மேலும்

24 மே 2018 16:38:04

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக நடத்தப்பட்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 128ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்புக்கூட்டத்தில் புரட்சிக்கவிஞரின் ஒளிப்படத்தினை மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி திறந்து வைத்தார். உடன் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன், முனைவர் ஏ.தானப்பன், பி.எல்.இராமச்சந்திரன் மற்றும் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர். (சென்னை பெரியார் திடல் - 23.5.2018) மேலும்

24 மே 2018 15:56:03

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

நாகர்கோவில், மே 23- கன்னியா குமரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட சிறப்புக் கூட் டம் 14.4.2018 காலை 10 மணிக்கு நாகர்கோவில்,ஒழுகினசேரி  பெரியார் மய்யத்தில் நடந்தது. விடுதலை வாசகர் வட்ட தலைவர் முனைவர் ஜே. ரி. ஜூலியஸ் தலைமை தாங்கி னார்.  செயலாளர் ச.பழனி சங் கர நாராயணன், அமைப்பாளர் இரா.லிங்கேசன் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் பரிமள செல்வி இன்றைய காலகட்டத்தில் பெண்கள் நிலை குறித்த தலைப் பில்....... மேலும்

23 மே 2018 17:53:05

வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு

வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீடு

திருச்சி, மே 23- திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 38 ஆண்டு களாக பணியாற்றியவரும், திரா விடர் தொழிலாளர் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றிய பெல்.ம.ஆறு முகம் எழுதிய வர்ணாசிரம காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் இன்றைய பிரச்சினைக ளும், தீர்வுகளும், பெரியாரிய அம்பேத்காரிய கருத்தரங்கம் பெல் சமுதாயக் கூடத்தில் மே 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  செ.பா.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு....... மேலும்

23 மே 2018 17:53:05

அன்னை மணியம்மையார் நினைவு பொதுக்கூட்டம்

அன்னை மணியம்மையார் நினைவு பொதுக்கூட்டம்

கருங்கல், மே 23- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மை யார் நினைவு நாள் பொதுக்கூட்டம்  17.03.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு குமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் வரவேற்று பேசி னார். கிள்ளியூர் ஒன்றிய தலை வர் தெ. சாம்ராஜ் தலைமை தாங்கினார். தக்கலை ஒன்றிய தலைவர் ராஜீவ் லால், பகுத் தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ்....... மேலும்

23 மே 2018 17:16:05

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, மே 23- காரைக்குடி யில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத் தின் வன்கொடுமையிலிருந்து எஸ்.சி,எஸ்.டி,வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் ஆர்ப் பாட்டம் அய்ந்து விளக்கில் நடைபெற்றது. வி.சி.க.வடக்கு மாவட்ட செயலாளர் சங்கு.உதயகுமார் தலைமை வகித்தார். மாநில இ.அ.து.செயலாளர் சி.சு. இளைய கவுதமன் முன்னிலை வகித்தார். தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் கே.எஸ். எம்.மணிமுத்து, இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.குண சேகரன், ம.தி.மு.க.மாவட்ட....... மேலும்

23 மே 2018 17:16:05

புதுச்சேரியில் இராவண காவிய தொடர் சொற்பொழிவு

புதுச்சேரியில் இராவண காவிய தொடர் சொற்பொழிவு

புதுச்சேரி, மே 23- புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண காவிய நூல் பற்றிய 3ஆம் சொற்பொழிவு 13.5.2018 அன்று மாலை 6 மணியளவில் புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி உள் ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந. நடராசன் தலைமை தாங்கி னார். புதுச்சேரி மாநில திரா விடர் கழக தலைவர் சிவ.வீர மணி, திராவிடர்....... மேலும்

23 மே 2018 17:16:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இயக்க நூல்களின் தொகுப்புகளை தமிழர் தலைவர் வெளியிட விடுதலை வாசகர் வட்ட தலைவர் சின்னராசு மற்றும் முக்கிய பிரமுகர்களும், தோழர்களும் பெற்றுக் கொண்டனர்.

தருமபுரி, மே 16- தருமபுரியில் அன்னை மணியம்மையாரின் 99ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நூல் ஆய்வுரை மற்றும் நூல் வெளியீட்டு விழா 15.5.2018 செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் இ.மாதன் தலைமையேற்றார். விடுதலை வாசகர் வட்ட செயலாளர் மா.சுதா வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சி.காமராஜ், கே.சி.எழிலரசன் (மேனாள் தலைமை செயற்குழு உறுப்பினர்), மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி, கிருட்டிணகிரி மாவட்ட தலைவர் மு.துக்காராம், மாவட்ட செயலாளர் கோ.திரா விடமணி, மேனாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன், மண்டலத் தலைவர் பெ.மதி மணியன், சேலம் மண்டலத் தலைவர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.வேட் ராயன், அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் இரா.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன் அறிமுகவுரையாற்றினார்.

நூல் ஆய்வுரை

நமது குறிக்கோள், நமது குறிக்கோள் (தொகுதி 2) தந்தைபெரியாரும் தாழ்த்தப்பட்டோரும், தந்தை பெரி யாரின் நேர்காணல், தந்தை பெரியார் பற்றிய சில புரட்டு களும் உண்மைகளும், பெண் ஏன் அடிமையானாள்?,Lovable Life (ஆங்கில நூல்) ஆகிய நூல்கள் பற்றி ஆய் வுரைகள் செய்யப்பட்டு நூல்கள் வெளியிடப்பட்டன.

ஆய்வுரை வழங்கியோர்

முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் ஆர்.கே.கண் ணன் நமது குறிகோள் என்னும் நூலினைப் பற்றியும், நமது குறிக்கோள் (தொகுப்பு 2), ம.தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும் வழக்குரைஞருமான டி.கே.தேவ ராசன், தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்டோரும் என்ற தலைப்பில் மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா.சரவணன், தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள் பற்றி கல்வி தாளாளர் சிந்தை மு.இராசேந்திரன், தந்தை பெரியார் பற்றிய புரட்டுகளும் சில உண்மைத் தகவல் களும் பற்றி மாவட்ட ப.க. தலைவர் கதிர்.செந்தில் பெண் ஏன் அடிமையானாள் என்னும் தலைப்பில் மாவட்ட மகளிரணி தலைவர் அ.சங்கீதா, வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி ஆகியோர் நூல் ஆய்வுரையாற்றினர்.

Lovable Life நூல் வெளியீடு

மாடர்ன் ரேசனலிஸ்ட் வாசகர் வட்டத்தின் சார்பில் நூல் வெளியீட்டு விழா மாவட்ட தலைவர் க.சின்னராஜ் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஆர்.பழனி வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை திராவிடர் கழக மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர்தமிழ்செல்வி ஒருங்கிணைத்து நடத்தினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா.செந்தில் அவர்களும், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அகிலா எழிலரசன் அவர்களும் நூல் ஆய்வுரை செய்து கருத்துரையாற்றினார்.

இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூல்களை வெளியிட்டு சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியின் முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்தனர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

நூல்களை பெற்றுக் கொண்டவர்கள்

தமிழர் தலைவர் எழுதிய Lovable Life நூல் வெளியீடு

விடுதலை வாசகர் வட்ட தலைவர் கே.ஆர்.சின்னராஜ், தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்பிரமணி, வி.சி.க. மாநில அமைப்பு செயலாளர் கி.கோவேந்தன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, அரூர் ப.க. ஒன்றிய தலைவர் ச.இராஜேந்திரன், மருத்துவா செந்தில் (தி.மு.க.), வருவான் வடிவேலன் கல்லூரி மேலாளர் வினோத் வெற்றிவேல், தி.மு.க. மருத்துவரணி டாக்டர் பிரபு ராஜசேகரன், டாக்டர் முனிராஜ், ச.துரை சாமி, கவிதா, சென்றாயன், உள்ளிட்ட பலர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.

தமிழர் தலைவர் சிறப்புரை

நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரை: இயக்கத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதி புத்தக விற்பனை யாகும். அந்த காலக்கட்டத்திலேயே அறிவு புரட்சி ஏற்பட தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு பதிப்பகத்தை ஏற்படுத்தினார். அதன் வழியாக பல நூல்களை வெளி யிட்டார். 90 ஆண்டு வயதுள்ள பதிப்பகம் குடிஅரசு பதிப்பகமாகும். 500 புத்தகங்கள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. தந்தை பெரியார் அவர்களால் பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. அது அன்றைக்கு தமிழ்மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று அப்புத்தகம் 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட புத்தகத்தை பெரியார் கேட்டு வாங்கி முதன் முதலில் ஜாதி ஒழிய வேண்டும் ஏன்? என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஜாதியின் மூலத்தை தகர்க்க பாடுபட்டவர்கள் என்று சொன்னால் தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் அவர்களுமேயாவார்கள். ஜாதியை ஒழிக்காமல் தீண் டாமை ஒழியாது, இந்து மத தேக்கத்தால் மட்டுமே. ஜாதி வளர்ந்துள்ளது. மனிதர்களில் கீழ் மேல் என்ற பிறவி பேதம் கூடாது. இன்றைக்குக் கூட இந்தியாவை மனுதர்மம்தான் ஆண்டுக் கொண்டிருக்கிறது. மற்ற நாடுகளில் உள்ளது பொருளாதார பேதம் ஆனால் இந்தி யாவில் உள்ளது. வர்ணாஸ்ரம ஜாதி பேதம். இன்றைக் குக்கூட பார்ப்பனியம் வெற்றி பெற்று வருவதாக சொன்னார்கள். ஆனால் அவர்களின் திறமையால் வெற்றி பெற்றவர்கள் அல்ல சூழ்ச்சியின் காரணமாகவே வெற்றி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.

தமிழ் பேசியவனெல்லாம் தமிழனாகி விடமுடியாது. நம்மை தனிமைப்படுத்துவது ஆரியம் - நம்மை ஒன்று படுத்துவது திராவிடம். நமக்கு அறம் - பார்ப்பனர்களுக்கு தருமம், திராவிடருக்கு மனிதநேயம் - ஆரியருக்கு மனு தர்மம் என்றுள்ளது. சிறப்பாக நடைபெற்றுள்ள இந் நிகழ்ச்சிக்கு எனது பாராட்டை தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

கலந்து கொண்டோர்

தருமபுரியில் நடைபெற்ற புத்தக ஆய்வுரை மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பத்தூர், மத்தூர், ஊற்றங்கரை, ஓசூர், கிருட்டிணகிரி, சேலம், அரூர் போன்ற பகுதிகளிலிருந்து கழக நிர்வாகிகள், கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் திராவிடமணி, இணை செயலாளர் வனவேந்தன், மண்டல செயலாளர் கரு.பாலன், பெ.கோவிந்தராஜ், வீ.சிவாஜி, காமலாபுரம் கு.சரவணன், கே.மணி, க.கதிர், ஓசூர் அ.செல்வம், ச.துரைசாமி, சி.பகத்சிங், மு.சிசுபாலன், மா.முனியப்பன், த.மணிவேல், கவிதா காமராஜ், சோபியா செந்தில், திருப்பத்தூர் இளங்கோ, மு.பரமசிவம், பீம.தமிழ் பிரபாகரன், அரசம்பட்டி அறிவரசன், கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் திராவிடமணி, எல்லை தனராஜ், தே.சத்தியராஜ், ஜான்சிராணி மா.செல்லதுரை, மு.சக்கரை, மா.சென்றாயன், ந.சிவபாதம், கே.ஆர்.குமார், வழக்குரைஞர் சோழவேந்தன், மு.பிரபா கரன், மு.மனோகரன், திருப்பத்தூர் சி.தமிழ்ச்செல்வன், வி.பி.சிங், கோகிலா மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத் தைகள் கட்சியினர், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்குபெற்றனர்.

தமிழர் தலைவர் வருகையையொட்டி தருமபுரி நகரில் 15 இடங்களில் சுவரெழுத்து எழுதப்பட்டது. சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு கழக கொடிகளும் தோர ணங்களும் கட்டப்பட்டு விழாக் கோலமாக காணப் பட்டது.

 

ஆர்.கே.கண்ணன், டி.கே.தேவராசன், அண்ணா.சரவணன், அ.சங்கீதா, ந.தேன்மொழி, கதிர்.செந்தில், மு.இராசேந்திரன் ஆகியோர் நூல்களைப் பற்றி ஆய்வுரை வழங்கினார்கள்..

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner