முன்பு அடுத்து Page:

கா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு

கா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு

சென்னை, மே 20- ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்குரல் ஒலித்தவரும், பவுத்தம் வளர்த்து ஆரியம் வீழ்த்தியவரும், 1907ஆம் ஆண்டில் ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் தமிழ் ஏட்டைத் தொடங்கி, தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி தமிழுணர்வு வளர்த்தவருமான பெருந்தகையாளர் கா.அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் 173ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு, சேத்துப்பட்டு - பிருந்தாவன், எஸ்.எம். நகர், அண்ணல் அம்பேத்கர் திடலில் உள்ள அன்னாரது சிலைக்கு வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில்....... மேலும்

20 மே 2018 16:32:04

24.5.2018 வியாழக்கிழமை கழக பொதுக்கூட்டம்

பழனி: மாலை 7 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், ஆர்.எப்.ரோடு, பழனி * தலைமை: பழனி சு.அழகர்சாமி (நகர தலை வர்) * முன்னிலை: சி.இராதாகிருட்டிணன் (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: பழனி முத்துக்குமார் (நகர செயலாளர்) * சிறப்புரை: பெரியாரை சுவாசிப்போம்! பெருவாழ்வு வாழ்வோம்!! - முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), பெ.இரணியன் (மாவட்ட தலைவர்), நா.நல்லதம்பி (மாவட்ட....... மேலும்

19 மே 2018 16:05:04

திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை விளக்கி சுவரெழுத்து பிரச்சாரம்

திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை விளக்கி சுவரெழுத்து பிரச்சாரம்

நாகர்கோவில், மே 19 குமரி மாவட்ட திராவிடர் மாணவர் கழக கலந்துரை யாடல் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது. செயலாளர் அ.சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல செயலா ளர் கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழக செயல்பாடுகள், தந்தை பெரியார் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொண்டற....... மேலும்

19 மே 2018 16:05:04

தஞ்சையில் விடுதலை வாசகர்கள் திருவிழாவில்

விடுதலை முகவர்களுக்கு பாராட்டு தஞ்சை, மே 19 தஞ்சை மாவட்டத்தில் விடுதலை நாளேட்டினை கடைகள், சந்தாதாரர்களுக்கு நேரடியாக நாள்தோறும் விநியோகம் செய்யும் முகவர்களுக்கு கழகத் தலைவர் நேற்று (18.5.2018) சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். அவர்கள் பெயர் வருமாறு: நியூ அவுசிங்யூனிட் செந்தில்குமார், உரத்த நாடு சிவக்குமார், கீழவீதி பாலசுப்ரமணி, மன் னார்குடி ஜஹபர்சாதிக், கும்பகோணம் ரமேஷ், கொன்றைக்காடு கருப்பையா, மதுக்கூர் கணேசன், புலவன்காடு கோபால்,  வடசேரி கஜேந்திரன், சீனிவாசபுரம் கண்ணதாசன், ரெட்டிபாளையம் சாலை....... மேலும்

19 மே 2018 16:05:04

விடுதலை' முகவர்களுக்கு விடுதலை' ஆசிரியர் பாராட்டு!

விடுதலை' முகவர்களுக்கு விடுதலை' ஆசிரியர் பாராட்டு!

விடுதலை' முகவர்களுக்கு விடுதலை' ஆசிரியர் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். கழக துணைத் தலைவர் விடுதலை' பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் விடுதலை' பெயர் பொறிக்கப்பட்ட பையினை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் விடுதலை' பணியாளர்கள் (தஞ்சை, 18.5.2018). மேலும்

19 மே 2018 15:07:03

'விடுதலை' 'விடுதலை' 'விடுதலை'

  'விடுதலை' 'விடுதலை' 'விடுதலை'

* வீதி நாடகம் * கருத்தரங்கம் * முகவர்களுக்குப் பாராட்டு * வாசகர்கள் கேள்விகள் * 'விடுதலை விருது' * தொகுப்பு: மின்சாரம்   தஞ்சை 'விடுதலை' வாசகர் திருவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய "தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை" என்ற புதிய புத்தகத்தை நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி முதல்வர் பேராசிரியர் இளமுருகு வெளியிட மேனாள் அரசு வழக்குரைஞர் கி.குப்புசாமி,....... மேலும்

19 மே 2018 14:56:02

திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தை காப்போம்!! பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டு விளக்க தெருமுனை…

திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தை காப்போம்!!  பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டு விளக்க தெருமுனைப் பிரச்சாரம்

அம்மையாண்டி பட்டுக்கோட்டையில் மே-29 இல் திக்கெட் டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம்!- இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளை ஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 16.05.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் அம்மை யாண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். கோவிலூர்பாலம் பட்டுக்கோட்டை மே-29 இளைஞர் எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 16. 05. 2018 அன்று மாலை....... மேலும்

18 மே 2018 15:38:03

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் மாணவர்கள் திரளாக பங்கேற்போம்!

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் மாணவர்கள் திரளாக பங்கேற்போம்!

புளியங்குடி, மே 17  தென்காசி மாவட்ட திராவிடர் மாணவர் கழக கலந்துரையாடலில் கூட்டம் 5.5.2018 அன்று மாலை 6.30 மணிக்கு புளியங்குடியில் உற்சாகமாக நடைபெற்றது. மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் அ.வ.சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியாரின் கொள்கைகள் மாணவர்களிடம் முழுமையாக பரவியுள்ள தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால் விளைந்த பயன் களையும்....... மேலும்

17 மே 2018 16:16:04

நான் சிறுவனாக இருந்தபோது மிதிவண்டியில் வந்து ஒலி பெருக்கி இல்லாமல் பேசிய ஊர் இது! பாப்பிரெட்டிப்பட்…

நான் சிறுவனாக இருந்தபோது மிதிவண்டியில் வந்து ஒலி பெருக்கி இல்லாமல் பேசிய ஊர் இது!  பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் படிப்பக கட்டடத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை

பெரியார் படிப்பக கட்டடத்தையும், சுயமரியாதை சுடரொளிகள் படத்தினையும் பொதுமக்கள் வெள்ளத்திடையே கழகக் கொள்கை முழக்கத்திற்கிடையே தமிழர் தலைவர் திறந்து வைத்தார். தருமபுரி, மே 17- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், - அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் பெரியார் படிப் பகம், தமிழர் தலைவர் வீரமணி நூலகம் மற்றும் சுய மரியாதை....... மேலும்

17 மே 2018 16:16:04

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் நான்காவது சொற்பொழிவு

இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் நான்காவது சொற்பொழிவு

மறைமலையடிகள் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆதாரபூர்வ ஆய்வுரை சென்னை, மே17 இராமாயணம்-இராமன்- இராமராஜ்யம் நான்காம் நாள் சொற்பொழிவில் கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும் எனும் தலைப்பில் நேற்று (16.5.2018) மாலை சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார். மத்தியில் ஆளும் பாஜக இராமராஜ்யம் என்று கூறிக்கொண்டு, இராமாயணத்தையும், இராமனையும் மதரீதியில் அரசியல் லாபங்களுக்காக இராமராஜ்ய....... மேலும்

17 மே 2018 16:00:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோரிக்கடவு, மே 13 பழனி கழக மாவட்டம், கோரிக்கடவில், திராவிடர் கழகத்தின் சார்பில் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெரி யார் திடலில் 24.4.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் ச.பாலசுப்பிரமணியன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்துவக்கத்தில் பழனி சு.அழகிரிசாமி அவர்கள் மந்திரமா? தந்திரமா? நிகழ்வை நடத்தினார். மாவட்ட இளை ஞரணி தலைவர் பி.கொடியரசு அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.திராவிடச்செல்வன், மண்டல இளைஞரணி செய லாளர் குண.அறிவழகன், மாவட் டத் தலைவர் பெ.இரணியன் ஆகியோர் உரையாற்றினர். தொடக்கவுரையாக பொன்.அருண்குமார் (மண்டல மாண வரணி செயலாளர்) மிகச்சிறப் பான உரை நிகழ்த்தினார்.

மறைந்த கழகத் தொண்டர் ஒட்டன்சத்திரம் கா. சக்திவேல் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து, தலைமை கழக சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா சிறப்புரையாற்றினார். இன்னும் பெரியார் ஏன் தேவைப் படுகிறார், தமிழர் தலைவரின் அரிய பணிகள், அம்பேத்கரும், பெரியாரும் எப்படிப்பட்ட தலைவர்கள் என்பதையெல்லாம் சிறப்பாக எடுத்துரைத்தார்.

இறுதியாக கன்னிமுத்து நன்றி கூறினார். பல்வேறு கட்சி தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு செய் தார்கள். கூட்டத்தில் தாராபுரம் மாவட்டத் தலைவர் கிருட்டி ணன், மாவட்ட அமைப்பாளர் மயில்சாமி, கணியூர் ராமசாமி, தாராபுரம் காந்தி, கணியூர் நாகராஜன், கணியூர் ஆறுமுகம், தாராபுரம் சண்முகம் மற்றும் பழனி மாவட்ட துணைச் செயலாளர் ஜே.ஜோசப் மாவட்ட துணைத்தலைவர் அங்கப்பன், சமூகநீதி பாதுகாப்பு பேரவை இரா. சசிக்குமார், விக்ரம் தமிழ்ச்செல்வன், ஆ.கருப்புச்சாமி, ஆயக்குடி நாகராசு, பழனி தனசேகர், ப.க. மாவட்ட துணைச் செயலாளர் வீரக்குமார், ஆசிரி யர்கள் அருண், குலோத்துங்கன், காட்டுத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner