முன்பு அடுத்து Page:

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி, செப். 24 திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 4 மணி அளவில்  திருத்தணி, குறிஞ்சி இல்லத்தில் மேனாள் திராவிடர் கழகத்தின் காஞ்சி மண்டல செயலாளர் மோகன வேலு அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தை எடுத்து ரைத்திட, கழகப்பாடகர் முனைவர் பன்னீர்செல்வம் அவர்களின் கழகப் பாடல்களோடு திருத்தணி நகர செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ந.அறிவுச்செல்வன் முன்....... மேலும்

24 செப்டம்பர் 2018 17:03:05

அ.பாலசுப்ரமணியன்-நித்யா வாழ்க்கை இணையேற்பு விழா பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

 அ.பாலசுப்ரமணியன்-நித்யா வாழ்க்கை இணையேற்பு விழா  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

பட்டுக்கோட்டை, செப். 23 பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் சித்தாதிக்காடு இரா.அன்பழகன்- தர்ம வர்த்தினி இணையரின் மகனும், சென்னை எண்ணூர் பகுதிக் கழக அமைப் பாளருமான அ.பாலசுப்ரமணியனுக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் நினைவில் வாழும் இ.ப.இராஜா-செல்வி இவர்களின் மகள் நித்யாவுக்கும் 12.9.2018 அன்று பேரா வூரணி வட்ட ஓய்வூதிய அலுவலர்கள் சங்க (ஸி.ளி.கி) திருமண மண்டபத்தில் வாழ்க்கை இணையேற்பு விழா மாவட்ட கழக அமைப்பாளர் புரவலர் மல்லிகை....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:05:11

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை தமிழ்நாட்டு கல்வி இயக்கம்

4ஆம் ஆண்டு 3 நாள் மாநாடு- (செப்டம்பர் 26, 27, 28) * இடம்: முத்தமிழ் அரங்கம், இயல் இசை நாடக மன்றம் (எம்.ஜி.ஆர். ஜானகி கலைக்கல்லூரி எதிரில்) அடையாறு, சென்னை. முதல் நாள் 26.9.2018 புதன்கிழமை நேரம்: மாலை 4.30 மணி * தலைமை: முத்தமிழ் * வரவேற்பு: செந்தமிழ்வேந்தன் மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை நூல் வெளியீடு முனைவர் பொன்னவைக்கோ (துணைவேந்தர்) * தீர்மானங்கள் முன்மொழிவு: ஒப்புரவாளன் * தொடக்க உரை: பொழிலன் * முன்னிலையுரை: இராசேந்திரன் (இ.ஆ.ப.) * தீர்மானங்களை வழிமொழிந்து உரை: மேனாள் துணைவேந்தர்கள்....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:05:11

பெரியார் மருந்தியல் கல்லூரியில் திராவிட மாணவர் கழகத்தின் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

பெரியார் மருந்தியல் கல்லூரியில்  திராவிட மாணவர் கழகத்தின் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திருச்சி, செப். 23- பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாள் விழா 21.09.2018 அன்று காலை 9.00 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழக இணைச்  செயலாளர்  தோழர் கா.நிவேதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் தாளா ளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான ஞான. செபஸ்தியான் அவர்கள் தலைமை வகிக்க முதல்வர் முனைவர்....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:00:11

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

* நாள்: 25.09.2018, செவ்வாய்கிழமை மாலை 6.00 மணி * இடம்: தாம்பரம் பெரியார் நகர், சண்முகம் சாலை, பாரதி திடல் * தலைமை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: கோ. நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஆர்.டி.வீரபத்திரன், கு.ஆறுமுகம், பொழிசை கண்ணன், ஆ.இர.சிவசாமி, கெ.விஜயகுமார் * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கவிஞர் கலி.பூங்குன்றன் (துணை தலைவர், திராவிடர் கழகம்) வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம் நகர....... மேலும்

24 செப்டம்பர் 2018 10:57:10

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம்

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம்

கழகப் பொதுச் செயலாளர் சிறப்புரை திராவிட மாணவர் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு சால்வைக்கு பதிலாக விடுதலை அரையாண்டு சந்தா ஒன்றினை மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி வழங்கினார். காரைக்குடி செப்.23 காரைக்குடி கழக மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் காரைக்குடி கலைஞர் பவளவிழா மாளிகை யில் மாவட்ட மாணவர் கழக தலைவர் அய்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாணவர் கழக....... மேலும்

24 செப்டம்பர் 2018 10:57:10

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி பொதுக் குழு கூட்டம் தஞ்சையில் - 6.10.2018

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி பொதுக் குழு கூட்டம்  தஞ்சையில் - 6.10.2018

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி - பொதுக்குழுக் கூட்டம் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் 6.10.2018 மாலை 4.30 மணியளவில் தஞ்சை புதுப் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்ட பத்தில் (4.30 - 7.30 மணி வரை) நடைபெறும். பொருள்: 1. கழக மாநில மாநாடு 2. கழகப் பிரச்சாரத் திட்டங்கள் 3. அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம். அவசியம், கழகப் பொதுக்....... மேலும்

24 செப்டம்பர் 2018 09:54:09

தருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்

தருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்

தருமபுரி, செப். 22 தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா அளிப்பு நிகழ்வு. 15.9.2018  அன்று  2 மணியளவில் திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேக ரன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஒருங்கிணைப்போடு நடை பெற்றது. விடுதலை சந்தா புத்தகங்களை வழங்கிய அதே நாளில் 35 (ஆண்டு) சந்தாக்களை வழங்கிய நிலையில் செப்டம்பர் 15ஆம் நாள் மேலும் 71 சந்தாக்கள் வழங்....... மேலும்

22 செப்டம்பர் 2018 15:08:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, நவ. 14 கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சி - "கருத்துச் சுதந்திரம் காப்போம்" கருத்தரங்கத்துடன் மாநில தலைவர் மு.சானகிராமன் தலைமையில், பெங்களூரு பெரியார் மய்யத்தில்,  தமிழர் தலைவர் கி.வீரமணி அரங்கில் 12.11.2017 அன்று காலை 11 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது. மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். இந்திய தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் - பெரியார் பெருந்தொண்டர் முத்துசெல்வன் முன்னிலை வகித்தார்.

‘‘கருத்துச் சுதந்திரம் காப்போம்'' என்ற தலைப்பில் கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிரான மோடி அரசின் அடாவடித்தனம், சமுதாய இழிவுகளை துடைத்து கருத்துச் சுதந்திரம் காத்திட விடுதலையும், திராவிடர் கழகமும் ஆற்றிய பங்கு பணிகள், கவுரிலங்கேஷ், கல்புர்கி, பன்சாரே, தபோல்கர் மீது ஏவப்பட்ட படுகொலைகள் பற்றியும் விளக்கி சிறப்புரையாற்றினார்.

‘குழந்தைகள் நலம் காப்பு' எனும் பொருளில் வழக் குரைஞர்கள் சே.குணவேந்தன், ஜெ.அருண் கதிரவன் பேசினார்கள். முன்னதாக செல்வி கலையரசி ராஜா கழகக் கொடியினை ஏற்றிவைத்தார். தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்து பேசிய பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகரனிடம், ‘விடுதலை', ‘உண்மை', ‘பெரியார் பிஞ்சு,  தி மாடர்ன் ரேசனலிஸ்டு' ஆகிய ஏடுகளுக்கு சந்தாக்களை கழக நிர்வாகிகள் வழங்கினர்.

வழங்கப் பெற்ற சந்தா விவரம்

‘விடுதலை' 30 ஆண்டு சந்தா, ‘உண்மை' 10 ஆண்டு சந்தா, ‘பெரியார் பிஞ்சு' 4 ஆண்டு சந்தா, ‘மாடர்ன் ரேசனலிஸ்டு' 13 ஆண்டு சந்தா.

தங்கம்- இராமச்சந்திரா அறக்கட்டளை சார்பில் பொதுச் செயலாளருக்கு சிறப்புகள் செய்யப்பட்டன. தோழர்கள் தங்கம்  - இராமச்சந்திரன் பெரியார் மய்யத்துக்கு பாத்திரங் கள் வழங்கினர். மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ தோழர்கட்கு மதிய உணவு அளித்தார்.

விடுதலை சந்தா வழங்கும் நிகழ்வில் கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர் சு.வனவேந்தன், ஓசூர் ஒன்றிய செயலாளர் ம.சின்னசாமி, பெரியார் பெருந் தொண்டர், மாநில துணைத் தலைவர் வி.மு.வேலு, தங்கம் ராமச்சந்திரா, வழக்குரைஞர் பிரிவு செயலாளர் அருண், கதிரவன், சிவாஜி நகர் பிரிவு செயலாளர் மலர்முருகேசஷ் பாண்டியன், சுப்பிரமணியன், தென் மண்டல தலைவர் கவிஞர் வீ.ரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் ராஜாராம், பிரபாவதி, பிரேம்குமார், கே.எஸ்கார்டன் ஆனந்தன், மாநில துணை செயலாளர் வே.நடராசன், கிருபாநிதி, கே.ஆர்.புரம் செயலாளர் ஈ.ஜிபுரா தலைவர் சண்முகம்,  தர்மபுரி மாவட்ட காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமசாமி, எலக்ட்ரானிக் சிட்டி ராஜா, மதியழகன், கலையரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாநில பொருளாளர் ஜெயகிருட்டிணன் நன்றி கூறினார். வந் திருந்த அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner