முன்பு அடுத்து Page:

பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் புதுக்கோட்டையில் இரண்டாவது கட்ட விடுதலைச் சந்தா வழங்கல்

பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் புதுக்கோட்டையில் இரண்டாவது கட்ட விடுதலைச் சந்தா வழங்கல்

புதுக்கோட்டை, நவ.22 புதுக் கோட்டையில் புதுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் இரண்டாம் கட்டமாக விடுதலைச் சந்தா வழங்கும் நிகழ்வு நடந்தது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 85-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பரிசு வழங்கும் முகத்தான் தமிழகமெங்கும் இருந்து விடு தலைச் சந்தாக்களை ஏராளமாகச் சேகரித்து வழங்குவது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக அறந்தாங்கியில் நடந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அவர் களிடம் சந்தாக்கள்....... மேலும்

22 நவம்பர் 2017 16:43:04

வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் ‘விடுதலை’ சந்தா அளிப்பு

வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் ‘விடுதலை’ சந்தா அளிப்பு

சென்னை, நவ.22 வடசென்னை மாவட்ட கழக சார்பில் ‘விடு தலை’ சந்தா சேகரிப்பு தொகை வழங்கும் நிகழ்ச்சி 19.11.2017 மாலை 6.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் துரை சக்கரவர்த்தி நிலையத்தில் நடைபெற்றது.‘விடுதலை’ ஏட்டிற்குரிய  57 ஓர் ஆண்டு சந்தாக்களும், 12 அரை ஆண்டு சந்தாக்களும் (மொத்த மதிப்பு ரூ.1,02,060) கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களிடம் வழங்கப்பட்டன. வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில், சென்னை....... மேலும்

22 நவம்பர் 2017 16:41:04

காஞ்சிபுரத்தில் ‘விடுதலை’ சந்தா சேகரிப்பு

காஞ்சிபுரத்தில் ‘விடுதலை’ சந்தா சேகரிப்பு

காஞ்சிபுரம், நவ.22 19.11.2017 சனிக் கிழமை மாலை 7.00 மணிக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங் குன்றன் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட கழகத்தினரிடம்  விடுதலை சந்தாக் களைப் பெற்றுக்கொள்ள வருகை தந்தார். காஞ்சிபுரம் மாவட்டக்கழக தி.க  தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் தலை மையில் காஞ்சி மண்டல  கழகச் செயலாளர் காஞ்சி பா.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் கி.இளைய வேள்,  மாவட்ட தி.க துணை செயலா ளர் இ.ரவிந்திரன், தோழர்....... மேலும்

22 நவம்பர் 2017 16:39:04

கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கப்பட்ட சந்தாக்கள்

கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கப்பட்ட சந்தாக்கள்

கிருட்டினகிரி, நவ. 21 கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘விடுதலை' சந்தாகள் வழங்கும் விழா 16.11.2017 அன்று மாலை 5 மணியளவில் கிருட்டினகிரி புதுப்பேட்டை வெல்கம் மகாலில் நடைபெற்றது.மாவட்ட கழகத் தலைவர் மு.துக்காராம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி அனைவரையும் வரவேற்றார்.தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன், மண்டலச் செயலாளர் கரு.பாலன், மாவட்ட இணைச் செயலாளர் சு.வனவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் அ.செ.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் ஆகியோர்....... மேலும்

21 நவம்பர் 2017 16:43:04

கல்லக்குறிச்சி, செய்யாறு கழக மாவட்டம் சார்பில் கழக துணைத் தலைவர் கவிஞரிடம் வழங்கப்பட்ட சந்தாக்கள்

கல்லக்குறிச்சி, செய்யாறு கழக மாவட்டம் சார்பில்  கழக துணைத் தலைவர் கவிஞரிடம்  வழங்கப்பட்ட சந்தாக்கள்

கல்லக்குறிச்சி, நவ, 21 கடலூரில் நடைபெற்ற பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ‘விடுதலை' சந்தாக்கள் சேர்க்கும் பணி தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுற்றுப் பயணம் செய்து சந்தாக்களைப் பெற்று வருகிறார். கல்லக்குறிச்சி, செய்யாறு கழக மாவட்டங்களில் ‘விடுதலை' சந்தாக்களை கழகப் பொறுப்பாளர்கள் அவரிடம் வழங்கினார்.விவரம் வருமாறு: கல்லக்குறிச்சி17.11.2017 அன்று மாலை 4 மணியளவில் கல்லக்குறிச்சி செல்வி உதயகுமார் இல்லத்தில் கல்லக்குறிச்சி....... மேலும்

21 நவம்பர் 2017 16:38:04

திராவிடர் மாணவர்கள் சந்திப்போம் - சிந்திப்போம் கூட்டம் பள்ளி - கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கழகத்தில…

திராவிடர் மாணவர்கள் சந்திப்போம் - சிந்திப்போம் கூட்டம் பள்ளி - கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்

தாம்பரம், நவ. 21- தாம்பரம் - குன்றத்தூரில் திராவிடர் மாணவர்கள் சந்திப்போம் - -- சிந்திப்போம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமாக கழகத்தில் இணைந்தனர்.19.11.2017 அன்று மாலை 5 மணிக்கு தோழர் திருமலை இல்லத்தில் குன்றத்தூர் திராவிடர் மாணவர்களின் சந்திப்போம் - சிந்திப்போம் கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. பெரியார் சமூகக் காப்பு அணியின் பொறுப்பாளர் கராத்தே மாஸ்டர் பரசுராமன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார்.திராவிடர் கழக....... மேலும்

21 நவம்பர் 2017 15:29:03

செந்துறையில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

செந்துறையில் நடைபெற்ற பெரியார் பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

செந்துறை, நவ. 20 அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் உருவப்பட ஊர்வலமும் பொதுக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க பெரியார் பட ஊர்வலம் செந் துறை அண்ணாநகரில் 17.9.2017 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. அலங்கரிக்கப் பட்ட தந்தை பெரியார் படம் கலைக்குழு இன்னிசை நிகழ்ச்சியுடன் வாக னங்களின் இருபுறமும் பெரியார் படம் கருத்துகள் அடங்கிய பதாகைகளுடன் இதோ....... மேலும்

20 நவம்பர் 2017 16:41:04

தந்தை பெரியார் பிறந்த நாள் - குருதிக்கொடை முகாம்

தந்தை பெரியார் பிறந்த நாள் - குருதிக்கொடை முகாம்

ஆண்டிப்பட்டி, நவ. 20 ஆண் டிப்பட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக ‘அறிவு ஆசான்’ தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாக கொள்கை திருவிழா கொண்டாடப்பட்டது.ஆசிரியர் கி.வீரமணி அவர் கள், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் வாழ்த் துக்கடிதங்களுடன் மகிழ்ச்சி பொங்க நடைபெற்றது.தேனி அரசு மருத்துவ மனைக்கு குருதி நன்கொடையாக வழங்க 16ஆம் ஆண்டு குருதிக் கொடை முகாம் (147 யூனிட்கள்) ஆண்டிபட்டியில் 21.9.2017....... மேலும்

20 நவம்பர் 2017 16:39:04

மதுரையில் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கம்

மதுரையில் பேலியோ உணவு முறை பற்றிய விளக்கம்

மதுரை, நவ.20 11.11.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் 59ஆவது நிகழ்ச்சி நடைபெற்றது.கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு) தலைமை தாங்கினார். வந்திருந்தோரை பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணியை சேர்ந்த சுப்ரமணியன் வரவேற்றுப் பேசி னார். சிறப்பு பேச்சாளர் வி.சி. வில்வம் அவர்களை அறிமுகம் செய்து விடுதலை வாசகர் வட் டத்தின் செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் அறிமுக....... மேலும்

20 நவம்பர் 2017 16:36:04

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பட ஊர்வலம் - பொதுக்கூட்டம்

  குடந்தை, நவ. 20 28.10.2017 அன்று குடந்தையில் தந்தை பெரியார் பட ஊர்வலம் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது. படஊர்வலம் குடந்தை காந்தி பூங்காவிலிருந்து கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் ரெட்டிப்பாளையம் சகோதரிகளின் தப்பாட்டம், சடையார்கோவில் குழந்தைகளின் கோலாட்டத்துடன் கழகத் தோழர்களின் ஒலிமுழக்கத்துடன் நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. தஞ்சை மண்டல தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்........ மேலும்

20 நவம்பர் 2017 16:28:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சோழமாதேவி, நவ. 10 தாராபுரம் கழக மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் சோழமாதேவியில் திரா விடர் கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் 1.11.2017 அன்று மாலை 6 மணியளவில் எழுச்சியோடு நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு தாராபுரம் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் "சிலம்பாட்ட வீரர்" நா.மாயவன் தலைமை தாங்கினார்.கூட்டத்தின் துவக்கத்தில் மதுரை மண்டல கழக மாணவரணிச் செயலாளர் பொன்.அருண்குமார் தந்தை பெரியார் சமூகத்திற்கு ஆற்றிய அருந்தொண்டை பட்டிய லிட்டு உரையாற்றினார்.

இரா.பெரியார் செல்வம் உரை

நிகழ்வில் எழுச்சியோடு பங்கேற்ற, கழகத்தின் தலைமை நிலையப் பேச்சாளர் மானமிகு.இரா.பெரியார் செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றியதாவது;

மக்கள் அனைவரும் கட்சி, ஜாதி, மதம் என்ற பெயரால் பிரிந்து கிடக்காமல் ஒற்றுமையோடும், சமத்துவத்தோடும் வாழவேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பு என்பது எல்லாத் துறைகளிலும் ஊடுருவி வருகிறது.நாங்கள் எதையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் அல்லர், எனக்கு மனிதப்பற்றை தவிர வேறு எந்தப் பற்றும் கிடையாது என்று சொன்ன தந்தை பெரியாரின் கொள்கை அடிப் படையில்  சமூகப் பிரச்சினைகளை பார்ப்பவர்கள் நாங்கள்!

சிறந்த குடியரசுத் தலைவராக விளங்கியவர் "விஞ்ஞானி" அப்துல்கலாம்  அவரோடு யாரையும் ஒப்பிடமுடியாது! அப்படிப்பட்ட அப்துல்கலாம் அவர்களின் நினைவிடத்தில் பகவத்கீதை புத்த கத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன? பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் போன்ற பொய்க் கதைகளைத் தாங்கிப் பிடித்து, மத்தியிலே ஆளுகின்ற பிஜேபி அரசு தேவாசுரப் போரை நாட்டிலே நடத்திக் கொண்டிருக்கிறது. 

மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி ஆகிய இரு திட்டங்களும் மக்களுக்கு சொல்லொண்ணாத் துயரை ஏற்படுத்தி நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சியை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சமூகநீதிக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விரோதமாகவும், சிறுபான்மை மக்களுக்கெதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்திய பிஜேபி அரசு தங்கள் ஆட்சியின் அவலங்களை மக்களிட மிருந்து மறைப்பதற்காக  பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி மடைமாற்றம் செய்து கொண்டிருக் கிறார்கள். தற்போது நாடு மிகப் பெரிய அச்சுறுத் தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

ஆகவே நம்மை எது பிரிக்கிறதோ அதை அலட்சியப்படுத்துங்கள்! நம்மை எது ஒன்றாகச் சேர்க்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!  தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி உரிமை, பதவி உரிமை ஆகிய வற்றைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார்! எனவேதான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் பொருள் பொதிந்த நிலையில் நாடெங்கிலும் பிரச் சாரக் கூட்டங்களாக  நடத்தப்படுகிறது.

மதவெறி என்பது மாய்க்கப்படவேண்டும்! மத வெறித்தனம் வீழ்த்தப்படவேண்டும்! மனிதநேயத் தோடு, சகோதரத்துவத்தோடு, சமத்துவத்தோடு பழகுகின்ற உணர்வை மக்கள் மத்தியில் ஒவ்வொரு வரும் உருவாக்கவேண்டும்! பக்தி என்பது வேறு! மதம் என்பது வேறு! இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பிக் கொண்டு சதித்திட்டங்களை உருவாக்குகின்ற இன்றைய அரசாங்கத்தின் போக்கை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

மந்திரமல்ல! தந்திரமே!

கூட்டத்தின் துவக்கத்தில் "மந்திரமல்ல! தந்தி ரமே! என்ற பகுத்தறிவு விளக்க நிகழ்ச்சியை பழனி அழகிரிசாமி அவர்கள் செய்முறை விளக்கமாக நடத்திக் காட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு மக்களி டையே சிறப்பான வரவேற்பிருந்தது.

பங்கேற்றோர்

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், தாராபுரம் கழக மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், செயலாளர் வழக்குரைஞர் நா.சக்தி வேல், அமைப்பாளர் கி.மயில்சாமி, கழக பொதுக் குழு உறுப்பினர் நா.சாமிநாதன், தாராபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கவிஞர் ச.ஆறு முகம், கோவை மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், மடத்துக்குளம் ஒன்றிய கழகச் செயலாளர் பழ.நாகராசு, உடுமலை நகர கழகத் தலைவர் க.காஞ்சிமலையன், உடுமலை முருகேஸ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் சோழமாதேவியைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந் திரளாகப் பங்கேற்றிருந்தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner