முன்பு அடுத்து Page:

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி, செப். 24 திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 4 மணி அளவில்  திருத்தணி, குறிஞ்சி இல்லத்தில் மேனாள் திராவிடர் கழகத்தின் காஞ்சி மண்டல செயலாளர் மோகன வேலு அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தை எடுத்து ரைத்திட, கழகப்பாடகர் முனைவர் பன்னீர்செல்வம் அவர்களின் கழகப் பாடல்களோடு திருத்தணி நகர செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ந.அறிவுச்செல்வன் முன்....... மேலும்

24 செப்டம்பர் 2018 17:03:05

அ.பாலசுப்ரமணியன்-நித்யா வாழ்க்கை இணையேற்பு விழா பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

 அ.பாலசுப்ரமணியன்-நித்யா வாழ்க்கை இணையேற்பு விழா  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

பட்டுக்கோட்டை, செப். 23 பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் சித்தாதிக்காடு இரா.அன்பழகன்- தர்ம வர்த்தினி இணையரின் மகனும், சென்னை எண்ணூர் பகுதிக் கழக அமைப் பாளருமான அ.பாலசுப்ரமணியனுக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் நினைவில் வாழும் இ.ப.இராஜா-செல்வி இவர்களின் மகள் நித்யாவுக்கும் 12.9.2018 அன்று பேரா வூரணி வட்ட ஓய்வூதிய அலுவலர்கள் சங்க (ஸி.ளி.கி) திருமண மண்டபத்தில் வாழ்க்கை இணையேற்பு விழா மாவட்ட கழக அமைப்பாளர் புரவலர் மல்லிகை....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:05:11

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை தமிழ்நாட்டு கல்வி இயக்கம்

4ஆம் ஆண்டு 3 நாள் மாநாடு- (செப்டம்பர் 26, 27, 28) * இடம்: முத்தமிழ் அரங்கம், இயல் இசை நாடக மன்றம் (எம்.ஜி.ஆர். ஜானகி கலைக்கல்லூரி எதிரில்) அடையாறு, சென்னை. முதல் நாள் 26.9.2018 புதன்கிழமை நேரம்: மாலை 4.30 மணி * தலைமை: முத்தமிழ் * வரவேற்பு: செந்தமிழ்வேந்தன் மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை நூல் வெளியீடு முனைவர் பொன்னவைக்கோ (துணைவேந்தர்) * தீர்மானங்கள் முன்மொழிவு: ஒப்புரவாளன் * தொடக்க உரை: பொழிலன் * முன்னிலையுரை: இராசேந்திரன் (இ.ஆ.ப.) * தீர்மானங்களை வழிமொழிந்து உரை: மேனாள் துணைவேந்தர்கள்....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:05:11

பெரியார் மருந்தியல் கல்லூரியில் திராவிட மாணவர் கழகத்தின் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

பெரியார் மருந்தியல் கல்லூரியில்  திராவிட மாணவர் கழகத்தின் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திருச்சி, செப். 23- பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாள் விழா 21.09.2018 அன்று காலை 9.00 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழக இணைச்  செயலாளர்  தோழர் கா.நிவேதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் தாளா ளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான ஞான. செபஸ்தியான் அவர்கள் தலைமை வகிக்க முதல்வர் முனைவர்....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:00:11

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

* நாள்: 25.09.2018, செவ்வாய்கிழமை மாலை 6.00 மணி * இடம்: தாம்பரம் பெரியார் நகர், சண்முகம் சாலை, பாரதி திடல் * தலைமை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: கோ. நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஆர்.டி.வீரபத்திரன், கு.ஆறுமுகம், பொழிசை கண்ணன், ஆ.இர.சிவசாமி, கெ.விஜயகுமார் * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கவிஞர் கலி.பூங்குன்றன் (துணை தலைவர், திராவிடர் கழகம்) வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம் நகர....... மேலும்

24 செப்டம்பர் 2018 10:57:10

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம்

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம்

கழகப் பொதுச் செயலாளர் சிறப்புரை திராவிட மாணவர் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு சால்வைக்கு பதிலாக விடுதலை அரையாண்டு சந்தா ஒன்றினை மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி வழங்கினார். காரைக்குடி செப்.23 காரைக்குடி கழக மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் காரைக்குடி கலைஞர் பவளவிழா மாளிகை யில் மாவட்ட மாணவர் கழக தலைவர் அய்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாணவர் கழக....... மேலும்

24 செப்டம்பர் 2018 10:57:10

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி பொதுக் குழு கூட்டம் தஞ்சையில் - 6.10.2018

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி பொதுக் குழு கூட்டம்  தஞ்சையில் - 6.10.2018

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி - பொதுக்குழுக் கூட்டம் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் 6.10.2018 மாலை 4.30 மணியளவில் தஞ்சை புதுப் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்ட பத்தில் (4.30 - 7.30 மணி வரை) நடைபெறும். பொருள்: 1. கழக மாநில மாநாடு 2. கழகப் பிரச்சாரத் திட்டங்கள் 3. அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம். அவசியம், கழகப் பொதுக்....... மேலும்

24 செப்டம்பர் 2018 09:54:09

தருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்

தருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்

தருமபுரி, செப். 22 தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா அளிப்பு நிகழ்வு. 15.9.2018  அன்று  2 மணியளவில் திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேக ரன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஒருங்கிணைப்போடு நடை பெற்றது. விடுதலை சந்தா புத்தகங்களை வழங்கிய அதே நாளில் 35 (ஆண்டு) சந்தாக்களை வழங்கிய நிலையில் செப்டம்பர் 15ஆம் நாள் மேலும் 71 சந்தாக்கள் வழங்....... மேலும்

22 செப்டம்பர் 2018 15:08:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, நவ. 10 தந்தை பெரியார் அவர்களால் தமிழ் மக்களுக்கு மானமும் அறிவும் ஏற்பட வேண்டும், தமிழர்கள் மற்றவர் களைப் போல தரணியில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக நாளும் உழைத்து உருவாக்கப்பட்ட உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலையாகும்.

இன்றைக்கு கொள்கை நோக்கமின்றி இலட்சியம் ஏதும் இல்லாமல் பல இதழ் கள் தினம் தினம் முளையிட்டுக் கொண் டிருக்கிற காலகட்டத்தில் ஒரு கொள்கை ஏடாக, இலட்சியத்துடன் 83 ஆண்டுகள் தலை நிமிர்ந்து தன் பயணத்தை பல தடைகளை தகர்த்தெறிந்து பயணிக்கிறது.

அத்தகைய விடுதலை, படிப்போருக்கு மூடநம்பிக்கையிலிருந்து ஜாதி, மத வர் ணாஸ்ரமத்திலிருந்து கடவுள் என்னும் கற்பனையிலிருந்து, அறியாமை இருளி லிருந்து, ஆண்டான் அடிமை என்னும் முறையிலிருந்து, சமூக ஏற்றத்தாழ்வுகளிலி ருந்து, பெண்ணடிமையிலிருந்து ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக இருந்துகொண்டிருக்கிறது.

சமூகநீதி, இடஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, ஜாதி ஒழிப்பு, மத அழிப்பு, பெண்ணுரிமை, பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, மனித நேயம் என்னும் அந்த வகைகளில் அறிவியல் மனப்பான் மையை வளர்த்து நாளும் கருத்துப்பிரச்சாரம் பரவ வேண்டும் எனில் என் பிறந்த நாளுக்கு சால்வைகளுக்குப் பதில் விடு தலை சந்தாவை அளியுங்கள் என்று தமிழர் தலைவர் அவர்கள் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்வுகளிலும் அறைகூவல் விடுக்கிறார். அந்த கட்டளையை நிறை வேற்ற தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் வழி காட்டுகிறது.

மாவட்ட தலைவர் இ.மாதன் தலை மையில் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி வழிகாட்டுதலின்படி மாவட்ட செயலாளர் சி.காமராஜ், மாவட்ட அமைப்பாளர் பெ.கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலை வர் தமிழ்பிரபாகரன், பொதுக்குழு உறுப் பினர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் இர.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சத்திய ராஜ், இளைஞரணி அமைப்பாளர் சிங்கம் பெரியண்ணன் ஆகியோர் ஒடசல்பட்டி, தின்னப்பட்டி, புதூர், கடத்தூர், இராணி மூக்கனூர், சந்தப்பட்டி ஆகிய பகுதிகளிலும், பொதுக்குழு உறுப்பினர் இரா.வேட்ராயன், எம்.ஆர்.என்.வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், பாப்பாரப்பட்டி நகர செய லாளர் ஆசிரியர் சுந்தரம் ஆகியோர் பாலக் கோடு பகுதிகளிலும், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு ஆகியோர் பாப்பிரெட்டிப்பட்டி, ஜங் காலைப்பட்டி, மெனசி, பொம்மிடி, பகுதிகளிலும், பொதுக்குழு உறுப்பினர் அ.தீர்த்தகிரி போன்றவர்கள் பென்னாகரம் பகுதிகளிலும், மாவட்ட ப.க. தலைவர் கதிர்செந்தில், மண்டல செயலாளர் கரு.பாலன் ஆகியோர் தருமபுரி நகர பகுதி களிலும் வீடுதோறும் விடுதலையை கொண்டு சேர்க்கும் பணியை முதல்கட்ட மாக கிராமம் கிராமமாகச் சென்று விடுதலை சந்தாவைப் பெற்று வருகின்றார்கள். விடு தலை சந்தாவுக்கு செல்லுகின்ற போது பெரியார் பெருந்தொண்டர்களையும், கழகத் தோழர்களையும் சந்தித்து வருகின்றார்கள். இது ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி மற்றவர்களும் செயல்பட வேண்டும் என்பதே விருப்பமாகும்.

தலைமைக் கழகம் இட்ட கட்டளையை தொய்வின்றி செய்துவரும் தருமபுரி மாவட் டம் அதே போல மாவட்டத்திற்கு ஒதுக் கப்பட்ட சந்தாவை ஒன்றுகூட குறையாமல் கொடுக்க கழகத் தோழர்கள் களம் கண் டுள்ளனர். தருமபுரி மாவட்டம் வழிகாட்டு கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner