முன்பு அடுத்து Page:

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி, செப். 24 திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 4 மணி அளவில்  திருத்தணி, குறிஞ்சி இல்லத்தில் மேனாள் திராவிடர் கழகத்தின் காஞ்சி மண்டல செயலாளர் மோகன வேலு அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தை எடுத்து ரைத்திட, கழகப்பாடகர் முனைவர் பன்னீர்செல்வம் அவர்களின் கழகப் பாடல்களோடு திருத்தணி நகர செயலாளர் கோ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் ந.அறிவுச்செல்வன் முன்....... மேலும்

24 செப்டம்பர் 2018 17:03:05

அ.பாலசுப்ரமணியன்-நித்யா வாழ்க்கை இணையேற்பு விழா பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

 அ.பாலசுப்ரமணியன்-நித்யா வாழ்க்கை இணையேற்பு விழா  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்

பட்டுக்கோட்டை, செப். 23 பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் சித்தாதிக்காடு இரா.அன்பழகன்- தர்ம வர்த்தினி இணையரின் மகனும், சென்னை எண்ணூர் பகுதிக் கழக அமைப் பாளருமான அ.பாலசுப்ரமணியனுக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் நினைவில் வாழும் இ.ப.இராஜா-செல்வி இவர்களின் மகள் நித்யாவுக்கும் 12.9.2018 அன்று பேரா வூரணி வட்ட ஓய்வூதிய அலுவலர்கள் சங்க (ஸி.ளி.கி) திருமண மண்டபத்தில் வாழ்க்கை இணையேற்பு விழா மாவட்ட கழக அமைப்பாளர் புரவலர் மல்லிகை....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:05:11

மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை தமிழ்நாட்டு கல்வி இயக்கம்

4ஆம் ஆண்டு 3 நாள் மாநாடு- (செப்டம்பர் 26, 27, 28) * இடம்: முத்தமிழ் அரங்கம், இயல் இசை நாடக மன்றம் (எம்.ஜி.ஆர். ஜானகி கலைக்கல்லூரி எதிரில்) அடையாறு, சென்னை. முதல் நாள் 26.9.2018 புதன்கிழமை நேரம்: மாலை 4.30 மணி * தலைமை: முத்தமிழ் * வரவேற்பு: செந்தமிழ்வேந்தன் மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை நூல் வெளியீடு முனைவர் பொன்னவைக்கோ (துணைவேந்தர்) * தீர்மானங்கள் முன்மொழிவு: ஒப்புரவாளன் * தொடக்க உரை: பொழிலன் * முன்னிலையுரை: இராசேந்திரன் (இ.ஆ.ப.) * தீர்மானங்களை வழிமொழிந்து உரை: மேனாள் துணைவேந்தர்கள்....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:05:11

பெரியார் மருந்தியல் கல்லூரியில் திராவிட மாணவர் கழகத்தின் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

பெரியார் மருந்தியல் கல்லூரியில்  திராவிட மாணவர் கழகத்தின் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

திருச்சி, செப். 23- பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாள் விழா 21.09.2018 அன்று காலை 9.00 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழக இணைச்  செயலாளர்  தோழர் கா.நிவேதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் தாளா ளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான ஞான. செபஸ்தியான் அவர்கள் தலைமை வகிக்க முதல்வர் முனைவர்....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:00:11

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

* நாள்: 25.09.2018, செவ்வாய்கிழமை மாலை 6.00 மணி * இடம்: தாம்பரம் பெரியார் நகர், சண்முகம் சாலை, பாரதி திடல் * தலைமை: ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: கோ. நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஆர்.டி.வீரபத்திரன், கு.ஆறுமுகம், பொழிசை கண்ணன், ஆ.இர.சிவசாமி, கெ.விஜயகுமார் * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கவிஞர் கலி.பூங்குன்றன் (துணை தலைவர், திராவிடர் கழகம்) வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம் நகர....... மேலும்

24 செப்டம்பர் 2018 10:57:10

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம்

திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கம்

கழகப் பொதுச் செயலாளர் சிறப்புரை திராவிட மாணவர் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு சால்வைக்கு பதிலாக விடுதலை அரையாண்டு சந்தா ஒன்றினை மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி வழங்கினார். காரைக்குடி செப்.23 காரைக்குடி கழக மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் காரைக்குடி கலைஞர் பவளவிழா மாளிகை யில் மாவட்ட மாணவர் கழக தலைவர் அய்.முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாணவர் கழக....... மேலும்

24 செப்டம்பர் 2018 10:57:10

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி பொதுக் குழு கூட்டம் தஞ்சையில் - 6.10.2018

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி பொதுக் குழு கூட்டம்  தஞ்சையில் - 6.10.2018

திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி - பொதுக்குழுக் கூட்டம் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் 6.10.2018 மாலை 4.30 மணியளவில் தஞ்சை புதுப் பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்ட பத்தில் (4.30 - 7.30 மணி வரை) நடைபெறும். பொருள்: 1. கழக மாநில மாநாடு 2. கழகப் பிரச்சாரத் திட்டங்கள் 3. அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம். அவசியம், கழகப் பொதுக்....... மேலும்

24 செப்டம்பர் 2018 09:54:09

தருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்

தருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்

தருமபுரி, செப். 22 தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா அளிப்பு நிகழ்வு. 15.9.2018  அன்று  2 மணியளவில் திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேக ரன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஒருங்கிணைப்போடு நடை பெற்றது. விடுதலை சந்தா புத்தகங்களை வழங்கிய அதே நாளில் 35 (ஆண்டு) சந்தாக்களை வழங்கிய நிலையில் செப்டம்பர் 15ஆம் நாள் மேலும் 71 சந்தாக்கள் வழங்....... மேலும்

22 செப்டம்பர் 2018 15:08:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை நவ 10 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தந்தை பெரியார் அவர்களின் 139-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (9.11.2017) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் கு.கண்ணுச் சாமி.இரா.சரசுவதி,மாவட்டச் செயலாளர் இரா.இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் க.மாரி முத்து அனைவரையும் வரவேற்றார்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.செயக்குமார், தலைமைக் கழகப் பேச் சாளர்கள் முனைவர் அதிரடி க.அன்ப ழகன்,மாங்காடு மணியரசன், புதுக் கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறி வொளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனி.கவிவர்மன், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் எச்.முகம்மதுசாதிக் ஆகியோர் முன்னிலையுரையாற்றினார்கள்.


நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்: அறந்தாங்கியில் பொதுக்கூட்ட நிகழ்வில் பேசி 11-ஆண் டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம்  ஏற்பட்டிருக்கிறது.

அதற்குக்காரணம் இன் றைக்கு உள்ள நீட் தேர்வாகட்டும், பண மதிப்புக் குறைத்தல் ஆகட்டும் அனைத் திலும் மதவாதம் கலந்திருக்கிறது.

நாம் மருந்து சாப்பிடுவது என்னவோ மருந்தைக் கண்டு பிடித்தவர் நன்மைக் காகவோ, மருந்துக் கடைக்காரருக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற் காகவோ அல்ல. நமக்கு வந்துள்ள நோயைப் போக்கிக் கொள்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம்.

அனைத்துக்கும் புதுமையையும் அறிவியல் கண்டு பிடிப்புகளையும் பயன் படுத்துகிறோம். நுமக்கு ஒத்துவ ராததை எல்லாம் விட்டு விடுகிறோம். ஆனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டு களுக்கு முன் சொல்லி வைத்ததை மட்டும் முன்னோர்கள் சொல்லி வைத்தி ருக்கிறார்கள் என்று அறியாமை இருந்த காலத்தில் சொல்லி வைத்ததைப் பற்றிப் பேசுவது அறியாமை அல்லவா?

இப்போது நான் இங்கு வந்து பேசு வதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட் டிருப்பது ஒரு புறமிருக்க சரியாக 71-ஆண்டு களுக்கு முன்னால் இதே அறந்தாங்கியில் ஒரு மேசையைத் தூக்கிப் போட்டு வைத்து அப்போது சிறுவனாக இருந்த என்னை அதில் நிறுத்தி பேசச் சொன்னார்கள். தந்தை பெரியார் அவர்களின் கொள்கையைப் பற்றி அந்தச் சிறுவயதில் பேசியதையும் இப்போது உங்கள் முன்னால் மேடையில் இருந்து பேசுவதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த மேடை உருவாவதற்கு இதற்கு முன் எத்தனையோ கொள்கை வீரர்கள் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். பொம்மி யப்பன், மெய்யப்பன், அறந்தாங்கி துரையரசன், மங்கை சம்மந்தம், இராவணன் தொடங்கி இப்போதுள்ள பொதுக்குழு உறுப்பினர் கண்ணுச்சாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரது உழைப்பும் இதில் இருந்திருக்கிறது.

தந்தை பெரியார் எல்லோருக்கும் இரண்டு கால்கள் எனக்கு மட்டும் ஆறு கால்கள் என்பார். அதாவது அவர் உடல் நலம் குன்றியிருந்த நேரத்திலும் மூத்திரப் பையையும் சுமந்து கொண்டு நடந்து பேசுவார். சில நேரங்களில் இருவர் தாங்கிப் பிடித்துக் கொள்ள அய்யா அவர் களின் துணையோடு நடப்பார். அதைத் தான் மொத்தம் சேர்த்து ஆறு கால்கள் என்று நகைச்சுவையோடு குறிப்பிடுவார்.

அப்படியெல்லாம் அவர் சிரமப் பட்டுப் பிரச்சாரம் செய்ததுதான் இன்று அனைவரையும் உயர்த்தியிருக்கிறது. யார் வரலாறு எழுதினாலும் பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்றுதான் எழுதவேண்டிய அவசியம் உள்ளது.

ஒருவர் தொழில் தொடங்க வேண்டும் என்றாலோ கல்வி நிறுவனம் தொடங்க வேண்டும் என்றாலோ அரசின் விதி முறைகளையெல்லாம் கடைப்பிடித்து தான் தொடங்க முடியும். ஆனால் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால் எதுவும் வேண்டியதில்லை. கொள்கை என்னவென்று கேட்டால் சொல்லுவோம் என்பார்கள்.  அதனால் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங் கலாம் என்ற நிலை வந்துள்ளது.

ஒரே நேரத்தில் 29- பதவிகளை விட்டு விட்டு கதர்த்துணி மூட்டைகளை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு காந்தியாரின் பின்னால் பொதுத் தொண்டு செய்யப் புறப்பட்டவர் அய்யா பெரியார் அவர்கள். தந்தை பெரியாரின் கொள்கை களைக் கேட்டுச் சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கேரளாவில் அறிவித்ததோடு செயல் படுத்தியும் காண்பித்து தந்தை பெரியாரின் கொள்கையை நிறைவேற்றிக் காண்பித் திருக்கிறார்.

சமீபத்தில் மதுரைக்கு வந்த அவர் இவ்வளவு நாளும் வர்க்க பேதம் பற்றி மட்டுமே சிந்தித்துச் செயலாற்றியிருக் கிறோம். பெரியார் திடலுக்குச் சென்று வந்த பிறகுதான் வர்ண பேதம் பற்றி சிந்திக்கத் தவறியிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம். இனி அதன்படி சிந்தித்துச் செயலாற்றுவோம் என்று அறிவித்திருக்கிறார். இதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றார்.

பெரியார் பெருந்தொண்டர்கள் புதுக் கோட்டை மண்டல திராவிடர் கழகத் தலைவர் பெ.இராவணன், பொதுக்குழு உறுப்பினர் கு.கண்ணுச்சாமி, அறந்தாங்கி பன்னீர்செல்வம்,கறம்பக்குடி முத்து, கீரமங்கலம் தங்கராசு, வல்லவாரி இரணி யன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார்கள்.நகரச் செயலாளர் யோகராசு நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner