முன்பு அடுத்து Page:

குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பொங்கல் விழா

குடியாத்தம் லிட்டில் பிளவர் மெட்ரிக்குலேசன்  பள்ளியில் பொங்கல் விழா

குடியாத்தம், ஜன.13 குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரி குலேசன் பள்ளியில் 12-.1.-2018 அன்று  மாணவர்களின் கண்கவர் சமத்துவப் பொங்கல் விழா கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாக கொண் டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளா ளர்  வி.சடகோபன்  தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக பேராசிரியர் பா.சம் பத் குமார்  (தமிழ்த்துறை, திரு மகள் ஆலைக்கல்லூரி),   புலவர் ச.தண்டபாணி (செயலாளர், முத்தமிழ்ச் சுவைச் சுற்றம்) வருகை புரிந்து மாணவர்களுக்கு வாழ்த்துரை....... மேலும்

13 ஜனவரி 2018 14:49:02

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும் 2018 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கும்  2018 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருதுகள்

சென்னை, ஜன.11 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாக இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, சமூகத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழர்களை தெரிந்தெடுத்து தை முதல்நாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை யொட்டி பெரியார் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் மேற்கண்டுள்ளபடி பல்துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு பெரியார் விருது அறிவிக் கப்பட்டுள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய....... மேலும்

11 ஜனவரி 2018 16:03:04

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? - நூல் வெளியீடு!

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? - நூல் வெளியீடு!

  கி.மு. திராவிடமணியின் பணிவிடை விழாவில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் நூலை வெளியிட்டு உரை! ஆவடி, ஜன. 11, திருமுல்லைவாயில் பகுதி யைச் சேர்ந்த கி.மு. திராவிடமணி அவர்களின் பணிவிடை விழாவில் கலந்து கொண்ட எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்? என்ற நூலை வெளியிட்டு உரையாற்றினார். உண்மை வாசகர் வட்டத்தின் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில கருத்தியல் பரப்புரைச் செயலாளருமான கி.மு. திராவிடமணி ஆவடி டேங்க்....... மேலும்

11 ஜனவரி 2018 16:00:04

பார்ப்பனர்களுக்கு திராவிடர் இயக்கத்தின் மீது கோபம் ஏன்?

பார்ப்பனர்களுக்கு  திராவிடர் இயக்கத்தின் மீது கோபம் ஏன்?

பார்ப்பனர்களுக்கு திராவிடர் இயக்கத்தின் மீது கோபம் ஏன்? பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் துணைத்தலைவர் விளக்கம்! கொரட்டூர், ஜன. 11 பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவி ஞர். கலிப்பூங்குன்றன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் பங்கு கொண்டு பேசினர். ஆவடி கழக மாவட்டத்தில் உள்ள பாடி பகுதியில் பெரியார், அண்ணா, கலைஞர்....... மேலும்

11 ஜனவரி 2018 15:58:03

மயிலாடுதுறையில் தந்தை பெரியார் நினைவு நாள்

மயிலாடுதுறையில்  தந்தை பெரியார் நினைவு நாள்

  மயிலாடுதுறை, ஜன.10 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள் மயிலாடுதுறையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலம் நடைபெற்றது. விவரம் வருமாறு: மயிலாடுதுறை மயிலாடுதுறையில் தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு 24.12.2017 காலை 10.30 மணியளவில்  மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன், நகர் மன்ற முன்னாள் தலைவர் லிங்கராஜன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெரியார் கொள்கை முழங்க தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனைத்....... மேலும்

10 ஜனவரி 2018 15:48:03

மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ‘ஜாதி ஒழிய வேண்டும் - ஏன்?' சிறப்புக்கூட்டம்

மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில்  ‘ஜாதி ஒழிய வேண்டும் - ஏன்?' சிறப்புக்கூட்டம்

மதுரை, ஜன. 10 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக ‘ஜாதி ஒழிய வேண்டும் -ஏன்?' என்னும் தலைப் பில் சிறப்புக்கூட்டம் 25.11.2017 அன்று மாலை 6.20 மணிக்கு மதுரை யானைக் கல்லில் உள்ள ஏ.எஸ்.ஏ. அரங்கில் நடை பெற்றது. கருத்தரங்கத்திற்கு பகுத்தறிவாளர் கழகத் தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர்  செல்வ.சேகர்  அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர்....... மேலும்

10 ஜனவரி 2018 15:47:03

மகளிரால் நடத்தப்பட்ட மாபெரும் பட்டிமன்றம்

மகளிரால் நடத்தப்பட்ட மாபெரும் பட்டிமன்றம்

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் இன்றைய சூழலில் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கிறதா? இல்லையா? மகளிரால் நடத்தப்பட்ட மாபெரும் பட்டிமன்றம் மதுரை, ஜன.10 6.1.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் மதுரை ‘விடுதலை' வாசகர் வட்டத்தின் அய்ந்தாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு சரோசா நடராசன் தலைமை தாங்கினார். ராக்குதங்கம் (பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), அஜிதா (மதுரை....... மேலும்

10 ஜனவரி 2018 15:47:03

திருச்சி உலக நாத்திகர் மாநாட்டில் ஆற்றொழுக்காக அமைந்த ஆய்வரங்க அமர்வுகள்!

திருச்சி உலக நாத்திகர் மாநாட்டில் ஆற்றொழுக்காக அமைந்த ஆய்வரங்க அமர்வுகள்!

  2018 உலக நாத்திகர் மாநாட்டினையொட்டி தஞ்சாவூர் - வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்), வேந்தர் டாக்டர் கி.வீரமணி தலைமையில் சிறப்பு ஆய்வு அமர்வு நடைபெற்றது. மேடையில் முனைவர் இலக்குவன் தமிழ் (அமெரிக்கா - பன்னாட்டு மய்யம்), முனைவர் கோ.விஜயம் (நாத்திகர் மய்யம் - விஜயவாடா), கேரி மெக்லேலண்ட் (IHEU- லண்டன், இங்கிலாந்து), எலிசபெத் ஓ'கேசி (IHEU- பிரஸல்ஸ், பெல்ஜியம்), ருஸ்டம் சிங்....... மேலும்

09 ஜனவரி 2018 16:49:04

பெண் ஏன் அடிமையானாள்? புத்தக விற்பனை சாதனை

பெண் ஏன் அடிமையானாள்?  புத்தக விற்பனை சாதனை

தருமபுரி, ஜன. 9- தருமபுரி மாவட்டம், பெண் ஏன் அடிமையானாள்? புத்தக நன்கொடை ஊமை.ஜெயராமன் (அமைப்பு செயலாளர்), இ.மாதன் (மாவட்ட தலைவர்), சி.காமராஜ் (மாவட்ட செயலாளர்), பெ.கோவிந்தராஜ் (மாவட்ட அமைப்பாளர்), கரு.பாலன் (மண்டல செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்), இர.கிருஷ்ணமூர்த்தி (ப.க. துணைத் தலைவர்), கே.சின்னராஜ் (மாவட்ட தலைவர், படிப்பகம்) ராமச்சந்திரன் ஆகியோர் பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினர். அனுப்பப்பட்ட புத்தகங்கள் - 500, விற்கப்பட்டவை - 300,....... மேலும்

09 ஜனவரி 2018 15:29:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, செப். 11- கருநாடகாவில் பகுத்தறிவு பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை யடுத்து,  அவருடைய படத்திறப்பு, நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றிய பத்திரிகையாளர்கள் அப்படு கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், பகுத்தறிவாளர்கள், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை  உறுதி செய்ய வலி யுறுத்தியும், படுகொலையாளர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுடன், மூலகாரணமாக இருந்தவர்களை அடை யாளம் கண்டு தீவிரமான நடவடிக்கையை எடுக்க மத் திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்றும் வலி யுறுத்தினார்கள்.

கருநாடக மாநிலம் பெங்களூருவில் 5.9.2017 அன்று பகுத்தறிவுப் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவரு டைய வீட்டின் வாயிலில் இரு சக்கர வண்டிகளில் வந்த வர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

கருநாடக முற்போக்கு பகுத்தறிவுப் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (10.9.2017) மாலை சென்னை, பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் இணைப் புரை வழங்கினார்.

கவுரி லங்கேஷ் படத்தை 'தி இந்து' பதிப்பகக் குழு மத்தலைவர் என்.ராம் திறந்து வைத்து உரையாற்றினார்.

நக்கீரன் ஏட்டின் ஆசிரியர் நக்கீரன் ஆர்.ஆர்.கோபால், தமிழ்நாடு திட்டக்குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன், தீக்கதிர் பொறுப் பாசிரியர் அ.குமரேசன், ஜனசக்தி பொறுப்பாசிரியர் த.இந்திரஜித்  ஆகியோர் கவுரி லங்கேஷின் படுகொலைக் குக் கண்டனம் தெரிவித்து நினைவேந்தல் உரையாற்றி னார்கள்.

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் நன்றி கூறினார்.

பகுத்தறிவாளர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து கருநாடக மாநிலம் மட்டு மல்லாமல், தமிழ்நாடு, மகாராட்டிரா, டில்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், இங்கிலாந்தின் தலை நகர் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கண்டனக்குரல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

சென்னையில் நடைபெற்ற படத்திறப்பு, நினைவேந் தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், மனித நேயர்கள், மதச்சார்பின்மை, மனித உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இந்நிகழ்வுக்கான ஏற்பாட் டினை செய்துள்ளது மிகவும் ஆறுதல் அளிப்பதாக குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, விழிகள் வேணுகோபால், வா.மு.சே.திருவள்ளுவர், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தே.ஒளிவண்ணன், தாம் பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட் டத் தலைவர் தென்னரசு, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, காரைக்குடி மாவட்டச் செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி.கோபால், பெரி யார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்திய நாராயணன், சேரன்,  வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, சி.வெற்றிச் செல்வி, தங்க.தனலட்சுமி, கோ.தங்கமணி, சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, டாக்டர் மாலதி, டாக்டர் க.வீரமுத்து, பழ.சேரலாதன், கு.சோமசுந்தரம், விஜய்ஆனந்த், செந்துறை இராசேந் திரன்,  குணசேகரன், கோ.வீ.ராகவன், நயினார், மஞ்சு நாதன், ஜெயராமன், சண்முகப்பிரியன், சா.தாமோதரன், தமிழ்செல்வம், செங்கை சுந்தரம், சைதைதென்றல் உள் பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner