முன்பு அடுத்து Page:

நல்ல காற்றை உள்வாங்கி கெட்ட காற்றை வெளியேற்றுவதுதான் சுவாசிப்பது''

நல்ல காற்றை உள்வாங்கி கெட்ட காற்றை வெளியேற்றுவதுதான் சுவாசிப்பது''

எது தேவையோ அதை ஏற்று தேவையற்றதை வெளியேற்றுங்கள்! பெரியாரை சுவாசிப்பது என்றால் அதன் பொருள் இதுதான் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப்  பணித் தோழர் கூட்டமைப்பினர் கூட்டத்தில் தமிழர் தலைவர் வாழ்வியல் உரை திருச்சி, ஜூலை 19  தூய காற்றை உள்வாங்கி, கெட்ட காற்றை வெளியேற்றுவது போல் தேவையான கருத்துகளை ஏற்று, தேவையற்றவைகளை வெளியேற்றுவதுதான்  பெரியாரியல் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரது உரை வருமாறு: 14.7.2018 அன்று....... மேலும்

19 ஜூலை 2018 15:33:03

திராவிடர் கழக செயலவைத் தலைவர் - கழகத் தோழர்கள் உரை

திராவிடர் கழக செயலவைத் தலைவர் - கழகத் தோழர்கள் உரை

வடசென்னை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் காமராசர் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம் காங்கிரசில் இருந்துகொண்டே பார்ப்பனர்களை எதிர்த்தவர் காமராசர் சென்னை, ஜூலை 18 வடசென்னை மாவட்ட கழக இளை ஞரணி சார்பில், கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 116 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள், காங்கிரசில் இருந்துகொண்டே பார்ப்பனர்களை எதிர்த்தவர் காமராசர் என்று சுட்டிக் காட்டிப்....... மேலும்

18 ஜூலை 2018 17:35:05

சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறையின் 122ஆவது கலந்துரையாடல் கூட்டம் - விருது பெற்ற கழக மகளிர…

* நாள்: 21.07.2018 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், ஈ.வெ.கி சம்பத் சாலை, சென்னை-7 * வரவேற்புரை: பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்) * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * முன்னிலை: கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, கனகா, வளர்மதி, அஜந்தா, நாகவள்ளி, நூர்ஜஹான், பண்பொளி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, வனிதா, ஜெயந்தி, ராணி, இளைய ராணி, வழக்குரைஞர் மணியம்மை,....... மேலும்

18 ஜூலை 2018 16:30:04

மும்பையில் காமராசர் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவிப்பு

மும்பையில் காமராசர் சிலைக்கு கழகத் தோழர்கள்  மாலை அணிவிப்பு

மும்பையில் உள்ள கல்வி வள்ளல் காமராசர் சிலைக்கு மும்பை திராவிடர் கழகத் தோழர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். (15.7.2018) மேலும்

16 ஜூலை 2018 14:41:02

பெரியாரியப் பயிற்சிப் பட்டறை - குற்றாலம்

நாள்: 2.8.2018 முதல் 5.8.2018 முடிய நான்கு நாள்கள் இடம்: வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம் விண்ணப்பப்படிவம் 1.    பெயர்     : 2.    ஆண் / பெண்    : 3.    பிறந்த நாள்     : 4.    கல்வித் தகுதி   : 5.    பிறதிறன்கள்    : 6.    பெற்றோர் விவரம்    : 7.    முழு முகவரி   : 8.    கழக உறுப்பினரா? ஆதரவாளரா?  : 9.    பரிந்துரை செய்பவர் பெயர் - முகவரி   : 10.   நுழைவு நன்கொடை ரூபாய் நூறு மட்டும்    : 11.   ஏற்கெனவே குற்றாலம்....... மேலும்

16 ஜூலை 2018 14:41:02

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு விழா

நான்: 26.7.2018 வியாழன் மாலை 4 மணி இடம் சுயமரியாதை சுடரொளிகள் சீர்காழி சொ.நடராசன், அன்பு.ராசப்பா நினைவரங்கம், பெரியார் சாலை, கடவாசல், சீர்காழி தொடக்க நிகழ்ச்சி: பெரியார் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி வரவேற்புரை கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) தலைமை ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை வீ.மோகன் (மாநில விவசாய அணி செயலாளர்) எஸ்.எம்.ஜெகதீசன் (திருவாரூர் மண்டலத் தலைவர்) ஞான.வள்ளுவன் (மாவட்ட ப.க.தலைவர்) நா.சாமிநாதன் (மாவட்ட அமைப்பாளர்) மா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட துணைச் செயலாளர்) சாமி. ஆனந்தன் (திராவிடர் கழகம், கடவாசல்) சிலை திறந்து வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர்....... மேலும்

16 ஜூலை 2018 14:41:02

கழக துணைத் தலைவர் தலைமையில் தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

   கழக துணைத் தலைவர் தலைமையில்  தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், ஜூலை 15, தர்மபுரி மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டலத்திற் குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பத்தூர் கே.கே.சி. எழிலரசன் இல்லத்தில் 11.7.2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்தின் நோக்கமான 28.7.2018 அன்று மத்தூரில் நடைபெற உள்ள மண்டல இளைஞரணி மாநாடு குறித்து இதுவரை நடந்துள்ள பணிகளையும் இனி செய்ய....... மேலும்

15 ஜூலை 2018 15:00:03

கழக துணைத் தலைவர் தலைமையில் தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

   கழக துணைத் தலைவர் தலைமையில்  தர்மபுரி மண்டல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர், ஜூலை 15, தர்மபுரி மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டலத்திற் குட்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பத்தூர் கே.கே.சி. எழிலரசன் இல்லத்தில் 11.7.2018 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வி.ஜி.இளங்கோ கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்தின் நோக்கமான 28.7.2018 அன்று மத்தூரில் நடைபெற உள்ள மண்டல இளைஞரணி மாநாடு குறித்து இதுவரை நடந்துள்ள பணிகளையும் இனி செய்ய....... மேலும்

15 ஜூலை 2018 15:00:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, செப். 10 நீட் தேர்வைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங் களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா திருவள்ளுவர் சிலை அருகில் 2.9.2017மத்திய அரசின் நீட் தேர்வின் துரோகத்தைக் கண்டித்து மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலைவர் பெ.இராவணன் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர்கள் புதுக் கோட்டை மு.அறிவொளி, அறந் தாங்கி க.மாரிமுத்து, மாவட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை ப.வீரப்பன், அறந்தாங்கி இரா.இளங்கோ, பொதுக்குழு உறுப் பினர் இர.புட்பநாதன், மாநில இளைஞரணி துணைச் செய லாளர் வெ.ஆசைத்தம்பி ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மாவட்டத் துணைத் தலைவர் செ.இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப் பையா, பகுத்தறிவாளர்கள் கழக மாவட்டத் தலைவர்கள் அ.சரவணன், செ.அ.தர்மசேகர்,  துணைச் செயலாளர் ச.சண்முகம், கு.கருணாகரன், மகளிரணியைச் சேர்ந்த வீரவசந்தா, ஆசிரியரணி டார்வி, நகரத்தலைவர் சு.கண் ணன், இளைஞரணியைச் சேர்ந்த ஆ.மனோகரன், கா.சரவணன், புதுக்கோட்டை ஒன்றியத் தலை வர் சாமி.இளங்கோ, மாணவரணி பெ.அன்பரசன், தலைமைக் கழகப் பேச்சாளர் வல்லவாரி மு.இரணியன், பெரியார் பெருந் தொண்டர் தி.இராசமாணிக்கம், மாநில மாணவரணி துணைச் செயலாளர் இரா.குமார், வெ.ராஜ்குமார், வெ.கருப்பையா உள் ளிட்ட திராவிடர் கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட திரா விடர்  கழகம் சார்பில் 26.8.2017 அன்று காலை 10 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் வடபுறம், அறிஞர் அண்ணாசிலை அருகில் தமி ழர்களுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை தி.ஆதவன் தலைமையில், இராசை மாவட்ட தலைவர் இல.திருப்பதி முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் வான வில் வ.மணி தொடக்க உரை யாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சு.சண்முகசுந்தரம், செயலாளர் வெ.முரளி, மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத் தறிவுப் பாசறை அமைப்பாளரும், மாவட்ட ப.க. அமைப்பாளரு மான பா.அசோக், மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி கண்டன உரையாற்றினார். சென்னை தாம்பரம் கழக தோழர் அரங்க.பொய்யாமொழி, மாவட்ட துணைத் தலைவர் அ.தங்கசாமி, திருத்தங்கல் மா.நல் லவன், விருதுநகர் ப.க.அமைப் பாளர் பெ.த.சண்முகசுந்தரம், அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர், சிவகாசி கழக இளைஞரணி சீ.மணிமாற பூபதி, அருப்புக்கோட்டை ப.க. தோழர் கவிஞர் நா.மா.முத்து, விருதுநகர் தோழர்கள் ஜெயக்குமார், அருள், மலைராசா, மு.பிச்சைமைதின் மற்றும் தோழர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர். இறுதியாக மண்டல இளைஞர ணிச் செயலாளர் இரா.அழகர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறை வுற்றது.

நாமக்கல்

நாமக்கல் கவிஞர் இராமலிங் கம் பூங்கா சாலை, ஆர்ச் முன்பு பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம், தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தலை மையில் நடைபெற்றது.

நாமக்கல் நகர தலைவர் வழக்குரைஞர் வை.பெரியசாமி வரவேற்புரையாற்றினார்.

நிகழ்வில் இந்திய கண சங்க கட்சி தலைவர் மு.பெ.முத்துசாமி, பாரதிதாசன் இலக்கிய பேரவை தலைவர் ப.சுப்பண்ணன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தம்பிராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன், மாவட்ட கழகத் தலைவர் வை. நடராசன், பொதுக்குழு உறுப் பினர் மு.பழனியப்பன், வேலூர் நகர தலைவர் கே.எஸ்.அசேன், வேலூர் நகரச் செயலாளர் எ.சுரேஷ் ஆகியோர் உரையாற் றினார்கள். குமாரபாளையம் நகர தலைவர் சு.சரவணன் நன்றி கூறினார்.

நாகர்கோவில்

காவிரி நீர் பிரச்சினையில் மாநில அரசின் துரோகம், நீட் பிரச்சினை மத்திய அரசின் சர் வாதிகாரப் போக்கைக் கண்டித்து குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆர்ப் பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் மா.மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சி.கிருஷ்ணேஸ்வரி, மண்டல செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக ஒன்றிய செய லாளர் ஆ.லிவிங்ஸ்டன், வி.சி.க. மாவட்ட செயலாளர் பூ.திருமா. வேந்தன், அமைப்பாளர் பகல வன், முற்போக்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் சுந் தரம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னைராசன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பொறி யாளர் ஜே.ரி.ஜூலியஸ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நகர கழக அமைப்பாளர் ச.நல்லபெருமாள், தொழிலாளரணி செயலாளர் ச.ச.கருணாநிதி, இளைஞரணி செயலாளர், மு. சேகர், நகர துணைத் தலைவர் கவிஞர்எச்.செய்க்முகமது,ஜினோ கழக தோழர்கள் இராஜேசு, டெனிபோஸ், ராஜேஷ், நவீன், பாரூக், தமிழ்மதி, குயின்ஸ்பாண் டியன், நெல்லை மாவட்ட கழக அமைப்பாளர் ந.குணசீலன், வி.சி.க. நிர்வாகிகள் ராஜன், சவுத்திரி, பேரறிவாளன், தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கழக தோழர்கள் முழங்கிய ஆர்ப் பாட்ட முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. ப.க.மாவட்ட செய லாளர் பெரியார் தாஸ் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner