முன்பு அடுத்து Page:

வெளிமாநிலங்களிலும் வெண்தாடி வேந்தரின் பிறந்த நாள் விழாக்கள்!

 வெளிமாநிலங்களிலும் வெண்தாடி வேந்தரின் பிறந்த நாள் விழாக்கள்!

சென்னை, செப்.21 உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.2017) மகாராட்டிரா, கருநாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் 17.9.2017 அன்று இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவரம் வருமாறு: மும்பை தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது ஆண்டு பிறந்த....... மேலும்

21 செப்டம்பர் 2017 15:35:03

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் மக்களை நாடி, மருத்துவம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா

 உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் மக்களை நாடி, மருத்துவம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி, செப்.20 பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி, ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் இணைந்து ஏழை, எளிய மக்கள்  பயன் பெறும் வகையில் 17.09.2017 அன்று காலை 9 மணியளவில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள பெரி யார் மணியம்மை மருத்துவ மனையில் பல்வேறு இலவச மருத்துவ முகாம்களை நடத் தியது. இம்மருத்துவ முகாமிற்கு பெரியார்....... மேலும்

20 செப்டம்பர் 2017 15:26:03

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

  மாநாடுபோல் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை, செப். 18- உலகத் தலைவர் தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள்விழாவை யொட்டி சென்னை திருவல் லிக்கேணி (அய்ஸ் அவுஸ்) சேக்தாவூத் தெருவில் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் நேற்று (17.9.2017) மாலை மாபெரும் பொதுக் கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை யில் நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அய்ஸ் அவுஸ் பகுதியை இணைக்கின்ற பெசன்ட் சாலையின்....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:15:03

சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்றுவதா?

சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்றுவதா?

மத்திய பா.ஜ.க. அரசையும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும் கண்டித்துநெய்வேலியில் திராவிடர் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலி, செப்.18 சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளதைக் கண்டித்து இன்று (18.9.2017) காலை நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவறீர் துரை.சந்திரசேகரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று,....... மேலும்

18 செப்டம்பர் 2017 15:02:03

வாழ்க்கை இணை ஏற்பு விழா

வாழ்க்கை இணை ஏற்பு விழா

திருத்துறைப்பூண்டி, செப். 16 திருத் துறைப்பூண்டி கழக மாவட்ட தலைஞாயிறு ஒன்றிய தலைவர் அய்.பாஸ்கரன் - பானுபிரியா இல்ல திருமண விழா 9.9.2017 அன்று தலைஞாயிறு திருமண அரங்கில் மாவட்ட செயலாளர் ச.பொன்முடி தலைமையிலும் நகர தலைவர்  சு.சித்தார்த்தன் முன்னிலையிலும் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடைபெற்றது. இத்திருமண விழாவில் தி.குணசேகரன் உறுதிமொழி கூற திராவிடர் கழக தோழர்கள் முன்னிலையில் உறவினர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருமண விழா நடைபெற்றது. அனைவரையும்....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:21:04

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா: பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு - கட்டுரைப் போட்டி …

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா:  பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு  பேச்சு - கட்டுரைப் போட்டி

ஓமலூர், செப். 16 மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம் 10.9.2017 அன்று மாலை 5 மணி யளவில் ஓமலூர் முரளி தங்கும் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோவி.அன்புமதி தலைமை தாங்கினார். மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் த.மதியழகன் வரவேற்புரையாற்றினார். சேலம் மண்டல திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் த.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருஷ் ணமூர்த்தி, மேட்டூர் மாவட்ட....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:19:04

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள்  சந்திப்புக் கூட்டம்

உற்சாகமாக நடைபெற்ற திராவிடர் மாணவர்கள்  சந்திப்புக் கூட்டம் பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு திராவிடர் மாணவர் கழக புதிய  நிர்வாகிகள் நியமனம் திருச்சி, செப்.16 பாரதிதாசன் பல்கலைக் கழக திராவிடர் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 11.09.2017 அன்று மாலை 6.30 மணிக்கு மாநகர கழக தலைவர் சி. மருதை இல்லத்தில் நடைபெற்றது. மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும்,  தமிழர் தலைவர் அவர்களது தொண்டினைப் பற்றி யும், கருத்துக்களை பகிர்ந்து....... மேலும்

16 செப்டம்பர் 2017 16:18:04

தமிழக அரசுகளால் நவோதயா நிராகரிக்கப்பட்டது கொள்கை முடிவு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறைய…

தமிழக அரசுகளால் நவோதயா நிராகரிக்கப்பட்டது கொள்கை முடிவு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யட்டும்

சட்டமன்றத்தில் நவோதயா ஏற்க மாட்டோம் என தீர்மானம் போடுங்கள்கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை, செப். 15- 1986ஆம் ஆண்டு முதல் தமிழக அரசுக ளால் நவோதயா நிராகரிக்கப் பட்டது அரசின் கொள்கை முடிவாகும், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறை யீடு செய்யட்டும், உடனே சட் டமன்றத்தை கூட்டி நவோதயா பள்ளிகளை ஏற்க மாட்டோம் என தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என கண்டனப் பொதுக்கூட்டத்தில் தமிழர்....... மேலும்

15 செப்டம்பர் 2017 16:36:04

அண்ணா பிறந்த நாள் தஞ்சையில் தமிழர் தலைவர் மரியாதை!

அண்ணா பிறந்த நாள் தஞ்சையில்  தமிழர் தலைவர் மரியாதை!

அண்ணாவின் 109 ஆம் பிறந்த நாளான இன்று (15.9.2017) தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நீலமேகம் (தி.மு.க.), கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு, தஞ்சை மண்டல தலைவர் ஜெயராமன், செயலாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத்....... மேலும்

15 செப்டம்பர் 2017 15:24:03

தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடப்படும் கலந்துரையாடலில் முடிவு

தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடப்படும் கலந்துரையாடலில் முடிவு

திருப்பத்தூர், செப்.15 11.09.2017   திங்கள் மாலை 5.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்  அகிலா எழிலரசன் அவர்கள்  இல்லத்தில் அவரது தலைமையில்  கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. தந்தை பெரியார் அவர் களின் 139--ஆம் ஆண்டு பிறந்த நாளை மிகவும் எழுச்சியோடும், சிறப்போடும் கொண்டாட இக் கூட்டத்தில் முடிவுகள் மேற் கொள்ளப்பட்டது. தந்தை பெரியார்  படங் களை கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஆங்காங்கே வைத்து மாலை அணிவித்தும், சிலை களுக்கு மாலை....... மேலும்

15 செப்டம்பர் 2017 15:22:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தூத்துக்குடி, மே 17- விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தந்தை பெரியார் படிப் பகம், தமிழர் தலைவர் நூலகம் அன்னை மணியம்மையார் புத்தக விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.

தமிழர் தலைவர் எழுதிய வாழ்வி யல் சிந்தனைகள் பாகம் 12, அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் 5, உலகத் தலை வர் பெரியார் பாகம் 5 ஆகிய நூல்கள் இவையாவும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியார். மய்யக் கட்ட டத்தில் 6.5.2017 பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்றது விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செ. இராசா தலைமை தாங்கி நடத்தினார். மருத்துவர் செ.வெற்றிவேல் (திமுக மருத்துவரணி மாநிலத் துணைத் தலைவர்) அவர்கள் அன்னை மணியம்மையார் புத்தக விற் பனை நிலையத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியாரின் கருத்துக்களை  பேசினார். அப்போது திராவிடர் கழகத் தின் சார்பில் தந்தை பெரியார் டி.வி. தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.

அடுத்த நிகழ்ச்சியாக தமிழர் தலை வர் நூலகத்தை பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள் திறந்து வைத்து அய்யாவின் சேவைகளையும், தேவைகளையும் தெளி வாக விளங்கிப் பேசினார். கூட்டத்தில் சிலர் எழுப்பிய வினாக்களுக்கும் சரியா கப் பதில் கூறி விளக்கம் தந்தார். அவர் கள் தம் உரையிலும் பெரியார் டி.வி. தொடங்கப்பட வேண்டும் என்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து தந்தை பெரியார் படிப் பகத்தை பேராசிரியர் ஞா.இராசமாணிக் கம் அவர்கள் திறந்து வைத்து பெரியார் மய்யம் சிறந்த முறையில் அமைக்கப் பட்டிருப்பதாகவும், மேல்தளத்தில் திராவிட இயக்கத்தின் வரலாறுகளை விளக்கும் விதத்தில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அதைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைந் ததாகவும் தெரிவித்தார்கள்.

தொடர் நிகழ்ச்சியாக நூல்கள் வெளியீட்டு விழா சிறப்புடன் தொடங் கியது. அய்யாவின் அடிச்சுவட்டில் நூலினை பெரியார் மய்யம் அமைக்கப் பட தானாக முன்வந்து ஒரு லட்சம் நன்கொடை வழங்கியவரும் நெல்லை மாநகரத் தலைவருமான பி.இரத்தின சாமி  வெளியிட கழகத்தோழர்கள் பெற் றுக் கொண்டனர். அவர்கள் உரையாற் றும்போது தான் வழங்கிய நன்கொடையினை தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சு.காசி அவர்கள் சரியாகப் பயன்படுத்தி யதையும் பெரியார் மய்யத்தைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார்.

அடுத்து உலகத் தலைவர் பெரியார் நூலினை தமிழ் மாநிலக் காங்கிரஸ் பொறுப்பாளரும் முன்னாள் ஒட்டப் பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.சோ.வேலுச்சாமி வெளியிட முதல் நூலை மாவட்டத் தலைவர் சு.காசி பெற் றுக் கொண்டார். அவர்கள் உரையில்: பெரியாரின் உழைப்பையும் சாதி அறவே ஒழிக்கப்பட வேண்டும் என வும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து வாழ்வியல் சிந்தனைகள் நூலினை புலவர் அ.இளங்கோ பாண்டி யன் வெளியிட கழகத் தோழர்கள் பெற் றுக் கொண்டனர். அவர்  உரையாற்றும் போது: தனது மகன்களுக்கு இனநலப் பெரியார், லெனின், தமிழ்இனவேந்தன் எனப் பெயரிட்டிருப்பதாகவும் தனது 15 வய தில் அவரது சொந்த ஊரான நாட்டார் குளத்தில் தந்தைபெரியார் உரையாற்றிய தாக நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து தலைமைக் செயற்குழு உறுப்பினர்  சீ.டேவிட் செல்லத்துரை முன்னிலை உரை நிகழ்த்தினார். பெரி யார் உலகம் அமைக்கும் பணி பற்றி யும், டி.வி. பெரியார் தொடங்குவதில் உள்ள இன்னல்களையும் எடுத்துக் கூறி எப்படியும் டி.வி.  தொடங்கப்படும் எனவும் கூறி மகிழ்ந்தார். தொடர்ந்து முன்னிலை பொறுப்பேற்ற பெரியாரடி யான் அவர்கள் பேசும் போது விடுதலை இதழை அதிகப்படுத்த வேண்டும், பெரியாரியல் பயிற்சி நமது மய்யத்தில் நடத்தப்பட வேண்டுமென ஆலோசனை களை வழங்கினார்.

தலைமைப் பொறுப்பேற்ற செ. இராசா அவர்கள் தனது குடும்பத்தில் நிகழ்ந்த சில தகவல்களை எடுத்துக் கூறி சாதி ஒழிந்த சுதந்திரம் வரவேண்டும் எனவும் கூறினார்.

இறுதியாகச் சிறப்புரையாற்றிய நெல்லை மண்டலத் தலைவர் மா.பால் இராசேந்திரம் அவர்கள் வெளியிடப் பட்ட நூல்களில் உள்ள தகவல்களையும் அய்யாவின் தொண்டைப்பற்றிம் தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கடின உழைப்பைப் பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்டத் தலைவர் காசி, மாவட்டச் செயலாளர் இராசேந்திரன், அரியமுத்து, பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழர் தலைவர் நூலகத்திற்கு நிறைய நூல்கள் வழங்கி சிறப்பித்தார்கள். கூட்டத்தில் நெல்லை மாவட்டத் தலைவர் காசி அவர்கள் கலந்து கொண்டதுடன் ரூ. 2000- இரண்டாயிரம் கட்டட நிதி வழங் கினார்.

முன்னாள் மாவட்டத் தலைவர் வ.தமிழரசி அவர்களும் அவர்தம் துணைவருமான வசந்தகுமார் அவர்க ளும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடி யாத நிலை குறித்து தொலைபேசி மூலம் தகவல் தந்ததுடன் கூட்டச் செலவுக்காக ரூ.5000 அய்யாயிரம் கொடுத்து உதவினார்கள்.

நெல்லை மண்டல இளைஞரணிச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தோழர் களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார் கள். கூட்டத்தில் கோவில்பட்டி தோழர் களுடன் தென்காசி நெல்லை, திருச் செந்தூர் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட உறுப்பினர்கள் மேல்மாந்தை பெ.காலாடி பொதுக்குழு உறுப்பினர், துவ ரந்தை முத்துராசு, திருச்செந்தூர் இரா. சேகர், ஆசிரியர் சிவசங்கரன், தி.மு.க அன்பழகன், இளைஞரணித் தலைவர் இல. கார்த்திகேயன், செயலாளர் ஆ.கந்த சாமி, அமைப்பாளர். த.செல்வராசு, அய்யம் பெருமாள், வளர்மதி பெரி யார்தாசன், செந்தில் ஆறுமுகம், பொ.செல்வராசு, இரா.ஆழ்வார், எல்அய்சி  குமரேசன், மனோகரன், பொ.சாந்தி, விக்டர், பழனிச்சாமி, சுப்புராசு திருச்சி டிடிசி. மெக்கானிக் கனகராசு, ஆ. செல் வக்கனி வழக்குரைஞர் இராஜேந்திரன், மதிவாணன்,  இ.பி.சக்திவேல், பேராசி ரியர் இரா. சண்முகசுந்தரம் உட்பட கழகத் உறுப்பினர்கள் 60 பேர் கலந்து கொண்டனர் பொது மக்கள் மாணவர் கள், மாணவிகள் என சுமார் 100 கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர்.

மாவட்டத் தலைவர் சு. காசி அவர் கள் வரவேற்புரையில் வருகை புரிந்த வர்களைப் பற்றிய சிறப்புகள் பற்றி விளக்கி வரவேற்புரையாற்றினார். அனைவருக்கும் பயனாடைக்குப் பதில் நூல்கள் வழங்கப்பட்டன. ஒரு பய னாடை கூட அணிவிக்கப்படவில்லை.

கூட்ட ஏற்பாட்டிற்காக 1000 துண்டு பிரசுரங்கள், 10 தட்டிபோர்டுகள், பேனர், 15க்கு10 டிஜிட்டல் போர்டு 1, தாள் கொடிகள், 50 கழகக் கொடிகள், மைக் செட், சேர், சிற்றுண்டி போன்ற ஏற்பாடுகள் சிற்பபாகச் செய்யப்பட்டது.

இறுதியாக மாவட்டச் செயலாளார். மு.முனியசாமி நன்றி கூறக் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner