முன்பு அடுத்து Page:

ஜெர்மனியையடுத்த மாநாடு அமெரிக்காவில்- அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் டாக்டர் சோம.இளங்கோவன் அழைப்பு

ஜெர்மனியையடுத்த மாநாடு அமெரிக்காவில்- அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் டாக்டர் சோம.இளங்கோவன் அழைப்பு

சென்னை, ஆக. 22 ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டையடுத்து 2019இல் அமெரிக்காவில் நடைபெறும், அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என்று பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவன் 20.8.2017 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:இது ஒரு பொன் மாலைப் பொழுது. மிகவும் மகிழ்ச்சி பொங்கும் நாள்.நமது மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் ஜெர்மனியில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு தனது /வயதைக் கோடிட்டு, பெரியார் தொண்டர்களின்....... மேலும்

22 ஆகஸ்ட் 2017 15:04:03

தந்தை பெரியார் பிறந்தநாளில் சமத்துவபுரங்களில் மரக்கன்றுகள் நடப்படும் மத்தூர் கலந்துரையாடலில் தீர்மா…

 தந்தை பெரியார் பிறந்தநாளில் சமத்துவபுரங்களில் மரக்கன்றுகள் நடப்படும் மத்தூர் கலந்துரையாடலில் தீர்மானம்

மத்தூர், ஆக.20 மத்தூர் ஒன்றிய கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 17. 8. 17. வியாழன் மாலை 5 மணியளவில்  இந்திரா காந்தி இல்லத்தில் ஒன்றிய தலைவர் கி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நகர தலைவர் சி.வெங்ககடாசலம் வரவேற்றார். கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அகிலா எழிலரசன், மாவட்ட இணை செயலாளர் அரங்க.இரவி, நகர அமைப் பாளர் பொன்.விஸ்வநாதன், அ.சவுந்தரி, மு.வீரமணி, பொன்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன்,  தலைமை....... மேலும்

20 ஆகஸ்ட் 2017 15:01:03

'மனிதநேய நண்பர்கள் குழு’ சார்பில் நடைபெற்ற விழாவில் மருத்துவர்கள் எஸ்.காமேசுவரன், மோகன் காமேசுவரன்…

'மனிதநேய நண்பர்கள் குழு’ சார்பில் நடைபெற்ற விழாவில்   மருத்துவர்கள் எஸ்.காமேசுவரன், மோகன் காமேசுவரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டு

சென்னை, ஆக.16 பல்வேறு துறைகளில் சாதனைகளை செய்து சிறப்புகள், விருதுகள் பெறும் தமிழர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ’மனிதநேய நண்பர்கள் குழுÕ சார்பில் பாராட்டிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.மருத்துவ வல்லுநர்கள் எஸ்.காமேசுவரன், மோகன் காமேசுவரன் ஆகியோர் பல்வேறு விருதுகளையும், பாராட்டு களையும் பெற்றுள்ளனர். மனித நேய நண்பர்கள் குழுவின் சார்பில் மருத்துவ வல்லுநர்கள் எஸ்.காமேசுவரன், மோகன் காமேசுவரன் ஆகியோருக்கான பாராட்டு விழா திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை பெரியார்....... மேலும்

16 ஆகஸ்ட் 2017 15:37:03

மேலூர் அண்ணா நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழக உரிமை மீட்பு பிரச்சாரக் கூட்டம்

 மேலூர் அண்ணா நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழக உரிமை மீட்பு பிரச்சாரக் கூட்டம்

மேலூர், ஆக. 15 11.8.2017 அன்று மேலூர்கழகமாவட்டம் அண்ணா நகரில் மாநில உரிமை மீட்பு பிரச்சார தெருமுனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் ஜெ.எஸ். மோதிலால் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று பேசினார் மதுரை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.மணிராஜ். அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டலச் செய லாளர் மா.பவுன்ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் மேலூர் கழக மாவட்டத் தலைவர் த.ம.எரி மலை, உசிலம்பட்டி மாவட்ட கழக செயலாளர் ரோ.கணேசன்,....... மேலும்

15 ஆகஸ்ட் 2017 15:58:03

சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல்

சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல்

சென்னை, ஆக.15 சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 13.8.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்பட கழகப் பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர். மேலும்

15 ஆகஸ்ட் 2017 15:50:03

இலால்குடி (கழக) மாவட்ட தொடர் பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டங்கள்

இலால்குடி (கழக) மாவட்ட தொடர் பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டங்கள்

வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, ஆசிரியர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். அமைப்பு:     மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பு:     கூட்டம் ஆரம்பமாகும் முன்பு மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மானமிகு. மு.அட்டலிங்கம்.ஏற்பாடு:    இலால்குடி (கழக) மாவட்ட திராவிடர் கழகம் மேலும்

13 ஆகஸ்ட் 2017 16:06:04

‘நீட்’ புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை விளக்கி கருத்தரங்கம் நடத்தப்படும்: ப.க. ஆசிரியரணி தீர்மான…

 ‘நீட்’ புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை விளக்கி கருத்தரங்கம் நடத்தப்படும்: ப.க. ஆசிரியரணி தீர்மானம்

மன்னார்குடி, ஆக. 13 பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணியின் கலந்துரையாடல் கூட்டம் 6.8.2017 அன்று மாலை 6 மணியளவில் மன் னார்குடி பெரியார் படிப்பகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ப.க. மாநில துணைத் தலைவர் வடசேரி வ.இளங்கோவன் தலை மை வகித்தார். மன்னை நகர ப.க.தலைவர் கோவி.அழகிரி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஆர்பிஎஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், ப.க.மாவட்டத் தலைவர் த.வீரமணி, மாவட் டச் செயலாளர் வை.கவுதமன், ப.க.மாவட்டப்....... மேலும்

13 ஆகஸ்ட் 2017 16:02:04

கும்மங்குளத்தில் அலைபேசி வெளிச்சத்தில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

 கும்மங்குளத்தில் அலைபேசி வெளிச்சத்தில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

கும்மங்குளம், ஆக. 12 அறந் தாங்கி கழக மாவட்டம் ஆலங் குடி அருகில் உள்ள கும்மங்குளம் கிராமத்தில் தந்தை பெரியார் 138ஆவது பிறந்த நாள் திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் 6.8.2017 அன்று மாலை 6 மணிக்கு நடை பெற்றது. சோம.நீலகண்டன் மந்திரமா? தந்திரமா? நிழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார். மழை கொட்டியது, மின்சாரம் தடைப் பட்டது. கட்டட வராண்டாவில் நடத்தலாம் என ஏற்பாடு செய்து பொதுமக்கள் சிறிய அலைபேசி மூலம் வெளிச்சம்....... மேலும்

12 ஆகஸ்ட் 2017 15:57:03

“காமராசரின் அருமையும் பெருமையும்”

  “காமராசரின் அருமையும் பெருமையும்”

திட்டக்குடி, ஆக.12 திட்டக்குடி நகர திராவிடர் கழக சார்பில் 5.8.2017 அன்று மாலை 6 மணி முதல் 9.15 மணி வரை பிரச் சாரக்கூட்டம் மாவட்ட அமைப் பாளர் புலவர் வை. இளவரசன் தலைமையில் பேருந்து நிலை யத்தில் நடை பெற்றது. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் வெ.அறிவு வரவேற்புரையாற்றினார். ‘காமராசரின் அருமையும், பெரு மையும்’ எனும் தலைப் பில் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராசர் ஆகியோரின் தொண்டினை நினைவூட்டும் வகையில் கழகப் பொதுச்....... மேலும்

12 ஆகஸ்ட் 2017 15:54:03

‘நீட்’ தேர்வைக் கண்டித்து எழுச்சியுடன் நடைபெற்ற தமிழக உரிமை மீட்புப் பரப்புரை பொதுக்கூட்டங்கள்

   ‘நீட்’ தேர்வைக் கண்டித்து எழுச்சியுடன் நடைபெற்ற தமிழக உரிமை மீட்புப் பரப்புரை பொதுக்கூட்டங்கள்

மொடச்சூர் கோபி நகரப் பகுதியைச் சேர்ந்த மொடச்சூரில் 21.7.2017 அன்று மாலை 6 மணியளவில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழகச் செயலாளர் ந.சிவலிங்கம் அவர்கள் தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார். விடுதலை பெ.இராசமாணிக்கம் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாவட்டத் தலைவர் இரா.சீனிவாசன், வழக்குரைஞரணி மாவட்ட அமைப்பாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் ஆகியோர் முன்னுரை வகித்து உரையாற்றினர். மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி தமது....... மேலும்

10 ஆகஸ்ட் 2017 16:04:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செய்தியாளர்களிடம்
தமிழர் தலைவர் பேட்டி

தஞ்சாவூர், மே 14 தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டியில் பெரியாரியல் பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் டில்லியில் 41 நாள்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்ட பொ.அய்யாக் கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினருக்கு அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று (13.5.2017) தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழர் தலைவர்

டில்லியில் தொடர்ந்து இந்த நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், பட்டினியால் மடிந்து கொண்டிருக்கக் கூடிய விவசாயிகளுடைய உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும், விவசாயத்துக்குரிய வாழ்வா தாரமான நீர்நிலைகளிலே குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே காவிரி டெல்டா பிரச்சினையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கேற்ப அமைக்கப்பட வேண்டும்.

அதுபோலவே, விளைபொருள்களுக்கு விவசாயி களுக்குக் கட்டுப்படியான விலைகள் தெளிவாக வர வேண்டும்.

மற்ற துறைகளிலே இருக்கக் கூடியவர்களுக்கெல்லாம் பெருமளவுக்கு சம்பளங்கள் ஏராளமாக கிடைக்கக்கூடிய சூழ்நிலையிலே விவசாயியுடைய நிலை, உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சுவதில்லை என்பதைப் போல நடந்துகொண்டிருக்கிறது என்பதை எல்லாம் எடுத்துக்காட்டுவதற்காக தொடர்ந்த ஓர் அறப்போராட் டத்தை, வன்முறை இல்லாத ஓர் அறப்போராட்டத்தை தங்களை வருத்திக்கொண்டு அனைத்திந்திய விவசாயிகள் நதிகளுடைய இணைப்புக்காக, நிறைய 200 விவசாயிகளை அழைத்துப்போய் இரவு,பகல் பாராமல், வெய்யில், மழை பாராமல், மிகப் பெரிய அளவுக்கு செய்தது, அதற்கு மற்றவர்களெல்லாம்கூட, உடனடியாக வராவிட்டாலும், அவ்வப்போது பல்வேறு கட்சிகள் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள் என்றால், பக்கத்திலே இருக்கிற பிரதமர்  கண்டு கொள்ளவில்லை.

அவர்கள் டில்லிக்கு சென்றதே பிரதமர் போன்றவர் களை சந்தித்தால்தான், மத்திய அரசின்மூலம்தான்  தேசிய வங்கிகளிலே வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய முடியும் என்பதற்காக, அவர்களுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும், மத்திய அரசு செயல்பட வேண்டும், அதை வலியுறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை தோழர் அய்யாக்கண்ணு அவர்கள், தங்களை வருத்திக்கொண்டு விவசாயிகளை அழைத்துக் கொண்டு போனார்கள்.

ஆனால், 41 நாள்கள் போராடிய நிலையிலே பிரதமர் அவர்களை சற்றும் மதித்து நடந்துகொள்ளவில்லை, தமிழகத்திலிருந்து வந்திருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல, விவசாயிகள். இந்திய நதிநீர் இணைக்க வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் தங்கள் கருத்து இன்னதுதான் என்று சொல்லுவதற்குக் கூட அவர்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியையும் பறித்தது என்று சொல்வார்கள்.

அதுபோல, இவர்களையெல்லாம் தேசவிரோதிகள் பட்டியலிலே, ஏதோ மற்றவர்களுடைய, பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கெல்லாம் இவர்கள் இருக்கிறார்கள் என்று பொய்யான குற்றச்சாட்டை காவிக்கட்சியினர்  பொறுப் பற்று பேசுவது, இவர் பெரிய ரோல்ஸ்ராய் கார் வைத்திருக்கிறார் என்பது போன்று அவமானப்படுத்துவது போன்ற காரியங்களை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

அதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பதில் சொல் கிறார்கள் என்று சொன்னால், இந்த விவசாய பூமியான, டெல்டாவிலேதான் அதற்குரிய பதில் என்பதற்குத்தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இது வெறும் பாராட்டுக் கூட்டமல்ல, அடுத்தபடியாக அவர்கள் நடத்தக்கூடிய அந்தப் போராட்டத்துக்கான ஆயத்தக்கூட்டம். அவர்களை ஆயத்தப்படுத்துவது, விவசாயிகளுக்கு மக்கள் பலமிருக்கிறது. மக்கள் போராட் டம் வெடிக்கின்ற நேரத்திலே, அரசு பிறகு, தானே வந்து பங்கேற்கக்கூடிய அளவிற்கு, கவனத்தை ஈர்க்கக்கூடிய பணியை நீங்கள் தொடருங்கள்.

நீங்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறீர்கள். எனவே, உங்கள் பணி தொடரட்டும். உங்களுக்கு பக்க பலமாக கட்சி பேதமில்லாமல், ஜாதி, மத பேதமில்லாமல், விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய நம்முடைய இனத்தின் பண்பாட்டுக்கேற்ப உழைப்பவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்றுவற்கு, விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு என்பதை வலியுறுத்துவதற்குத்தான் தஞ்சை மண்ணிலே, இந்த டெல்டா பகுதியிலே, காவிரி மண்ணிலே இந்தக் கூட்டம் போடப்பட்டிருக்கிறது.

அய்யாக்கண்ணு அவர்களையும், அவர்களோடு சென்றவர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். ஊக்கப் படுத்த வேண்டும். 200 விவசாயிகள் மட்டுமில்லை, நாடே அவர்கள் பின்னால் இருக்கிறது. கட்சி பேதமில்லாமல் என்று காட்டுவதற்காகத்தான், அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையிலே, திராவிடர் கழகம் இந்தப்பணியை செய்திருக் கிறது. ஒத்தக் கருத்துள்ள அத்தணை பேரையும் ஒருங்கிணைத்திருக்கிறது. இது ஒரு துவக்கம். முடிவல்ல.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர் களிடம் குறிப்பிட்டார்.

வெற்றி அல்லது வீர மரணம்!
அய்யாக்கண்ணு பேட்டி

செய்தியாளர்: தமிழ்நாடே உங்களுக்கு ஆதரவை அளித்து வருகிறது. அடுத்த கட்டப் போராட்டம் குறித்து...?

பொ.அய்யாக்கண்ணு: வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந் தாலும் ஏசும், வையகம் இதுதானடா என்பது விவசாயி களுக்குத்தான் பொருந்தும். எங்களுடைய உரிமை களுக்காகப் பேசினால், எங்களைத் தீவிரவாதிகள் என் கிறார்கள். எங்களுடைய உரிமைகளைக் கேட்கக்கூடாது என்கிறார்கள். எங்கே போய் நாங்கள் கேட்பது? யாரிடம் கேட்பது? தேர்தல் வந்தால் இந்த நாட்டினுடைய முதுகெலும்பு நாங்கள். தேர்தல் போய்விட்டால், இந்த நாட்டினுடைய அடிமைகள் நாங்கள்.

உச்சநீதிமன்றம் காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு  ஏழு முறை சொல்லியது. இந்தியப் பிரதமர் கேட்டாரா? நான் ஆட்சிக்கு வந்தால், இரண்டு மடங்கு லாபம் தருகின்ற விலையை விவசாய விளை பொருட் களுக்குத் தருகிறேன் என்று சொன்னாரே, கொடுத்தாரா? இல்லை, நதிகளை எல்லாம் இணைப்பேன் என்று சொன்னாரே, இணைத்தாரா? ஆனால், அவர் சொன்னதை யெல்லாம் நாங்கள் கேட்கக்கூடாது. ஏன் என்று கேட்டால், நாங்கள் எல்லாம் அப்சல் குருவுக்கு வேண்டியவர்கள். நாங்கள் இந்த நாட்டினுடைய துரோகிகள், அடுத்த வாரம்  கண்டிப்பாக இந்த பிஜேபிகாரன் சொல்லப்போகிறான், பாகிஸ்தான் ஏஜென்ட் என்று எங்களை சொல்லப் போகிறான். ஏனென்றால், 21ஆம் தேதி டில்லி போகிறோம். இந்தியாவில் இருக்கின்ற எல்லா விவசாயிகளையும் அழைக்கின்றோம். மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். வெற்றி அல்லது வீர மரணம் என்று வருவோம் டில்லியிலிருந்து.

எங்களுடைய கோரிக்கையாகிய நதிகளை இணைக்க வேண்டும், லாபகரமான விலையைக் கொடுக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும்  60 வயது அடைந்து விட்டால், மகன் இருந்தாலும், மகள் இருந்தாலும், பட்டா நிலம் இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, லட்சக் கணக்கான ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்துவந்த காவிரித் தண்ணீரை கொடுக்க வேண்டும் என்பதற்கு பாடுபடுவோம், பாடுபடுவோம் என்று கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு செய்தியாளர்களிடம் விவசாய சங்கத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner