முன்பு அடுத்து Page:

தகடூர் தமிழ்ச்செல்வியின் பணி நிறைவு, 60ஆம் ஆண்டு மணி விழா, தமிழர் தலைவர் வாழ்த்து!

தகடூர் தமிழ்ச்செல்வியின் பணி நிறைவு, 60ஆம் ஆண்டு மணி விழா, தமிழர் தலைவர் வாழ்த்து!

தருமபுரி, ஜூன் 28, மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவரும் பி.எஸ்.என்.எல். சப் டிவிசனல் பொறியாளருமான தோழர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களின் அரசு பணி விடைபெறும் விழா மற்றும் தமிழ்ச்செல்வி - ஊமை ஜெயராமன் மணிவிழா 27.6.2017 அன்று மாலை 6 மணியளவில் தருமபுரி வின்சென்ட் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்....... மேலும்

28 ஜூன் 2017 15:28:03

குன்னூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி!

குன்னூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி!

குன்னூர், ஜூன் 28- நீலமலை மாவட்டம் குன்னூரில் பெள்ளி கவுடர் அரங்கில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.6.2017, 25.6.2017 சனி, ஞாயிறு இரு நாட்களும் சிறப்பாக நடந்தது. கொள்கை ஆர்வத்துடன் கோவை மண்டல கழக மாண வர்களும், இளைஞர்களும் பட்டறையில் பங்கு பெற்றனர். 35 ஆண்களும் 19 பெண் தோழர் களுமாக 54 பேர் முகாமில் கலந்து கொண்டு பலன் பெற்ற னர். 20 பட்டதாரிகள், பட்டயம் பெற்றோர் 4 பேர்,....... மேலும்

28 ஜூன் 2017 15:09:03

சுந்தரபெருமாள்கோயில் அ.மா.கணபதி மறைவு

சுந்தரபெருமாள்கோயில் அ.மா.கணபதி மறைவு

குடந்தை, ஜூன் 27 குடந்தை கழக மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் சுந் தரப்பெருமாள்கோயில் திரா விடர் கழக தலைவரும், தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று சிறை சென்றவருமான  பெரி யார் பெருந்தொண்டர்.அ.மா.கணபதி 24.6.2017 அன்று இரவு இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந் துகிறோம். எந்தவித சடங்குகள் இன்றி அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. தலைமைச் செயற்குழு உறுப்பினர்  ராசகிரி கோ.தங்கராசு அவர்கள் தலை....... மேலும்

27 ஜூன் 2017 14:43:02

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய இணையமும் - இனநலனும் சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய இணையமும் - இனநலனும் சிறப்புக்கூட்டம்

மதுரை, ஜூன் 27 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 'இணையமும் இனநலனும்' என்னும் தலைப்பில் சிறப்புக்கூட்டம் 24.06.2017 சனிக்கிழமை மாலை 6.20 மணிக்கு, மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சுப.முருகானந்தம் இன்றைய நிலையில் இணையத்தின் தேவைபற்றிக் குறிப்பிட்டு வரவேற்றார். சிறப்புக் கூட்டத்திற்கு  நீதியரசர் பொ.நடராஜன் (ஓய்வு), மதுரை மண்டல கழகச் செயலாளர் மா.பவுன்ராசா,....... மேலும்

27 ஜூன் 2017 14:42:02

தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டம்

 தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டம்

சென்னை - பெரியார் திடலில் 23.6.2017 அன்று நடைபெற்ற தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் "தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகம் கல்வெட்டுகள் அகழாய்வுகள்" எனும் தலைப்பில் உரையாற்றிய மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியும், தொல்லியல் ஆய்வறிஞருமான முனைவர் டி.எஸ். சிறீதர் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பிக்கின்றார். உடன்: தமிழக மூதறிஞர் குழுவின் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி முனைவர் ஏ.கே........ மேலும்

25 ஜூன் 2017 16:10:04

குளு குளு குன்னூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

 குளு குளு குன்னூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

கோவை மண்டல திராவிடர் கழகம் சார்பில்  குன்னூர் - நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க கட்டடத்தில்  24.6.2017 காலை 10.30 மணியளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முதல் வகுப்பு தொடங்கியது. கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் நகேந்திரன், மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "பெரியார் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வகுப்பைத்....... மேலும்

25 ஜூன் 2017 14:04:02

கோவையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

நீலமலை மாவட்டம், குன்னூரில் இன்று துவங்கவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாம்,நாளை நடைபெறவுள்ள பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (24.06.2017) காலை ஆறு மணியளவில் தன் வாழ்விணையர் மோகனா வீரமணியுடன் கோவை தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய தமிழர் தலைவருக்கு திராவிடர்கழகத்தின் கோவை மண்டலச் செயலாளர்  ம.சந்திரசேகர் தலைமையில் தோழர்கள் புடைசூழ  உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர்கழகத்தின் கோவை மாவட்ட  தலைவர் சிற்றரசு, செயலாளர் செந்தில்நாதன்,....... மேலும்

24 ஜூன் 2017 14:55:02

பெரியார் பெருந்தொண்டர் ஆ.சுப்பிரமணியன் உடல் அடக்கம்

பெரியார் பெருந்தொண்டர் ஆ.சுப்பிரமணியன் உடல் அடக்கம்

நீடாமங்கலம், ஜூன் 23 நீடா மங்கலம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பி னருமான ஆ.சுப்பிரமணியன் அவர்கள் 76 ஆவது வயதில் 16.6.2017 அன்று இரவு 11 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி நிகழ்வு 17.6.2017 அன்று மாலை 4 மணி யளவில் அவரது இல்லத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு தலைமைச் செயற்குழு உறுப் பினர் இராஜகிரி கோ.தங்கராசு தலைமையேற்று....... மேலும்

23 ஜூன் 2017 15:09:03

மாட்டுக்கறிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து தெருமுனைக் கூட்டம்

மாட்டுக்கறிக்கு தடை விதித்த  மத்திய அரசை கண்டித்து தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 23 தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் மாட்டுக்கறிக்கு தடை விதித்த மத்திய பி.ஜே.பி.அரசை கண் டித்து 20.6-17 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை சாந்தி கமலா திரையரங்கம் அருகில் தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது. மாநகரத் தலைவர் பா.நரேந் தன் தலைமை வகித்து உரை யாற்றினார்.  மாநகர விடுலை வாசகர் வட்ட செயலாளர் மீ.அழ கர்சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இராஜவேல், மாவட் டத்....... மேலும்

23 ஜூன் 2017 15:07:03

சுயமரியாதைச் சுடரொளிகள் குருசாமி - லட்சுமி இல்ல மண விழா

சுயமரியாதைச் சுடரொளிகள் குருசாமி - லட்சுமி இல்ல மண விழா

சோழங்கநல்லூர், ஜூன் 23 நாகை மாவட்ட கொட்டாரக்குடி சுயமரியாதை சுடரொளி குருசாமி _ லட்சுமி ஆகியோர் பேரனும் மருதுபாண்டியன் - திலகவதி ஆகியோரது மகன் ம.சோழன், கன்னியாகுமரி கல்லூட்டம் எப் ராகிம் -  ஜெயந்தி ஆகியோரது மகள் சுனித்தாகோமல் ஆகி யோரது ஜாதி மறுப்பு வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா சோழங்க நல்லூர் லெட்சுமி மகால் திருமண மண்டபத்தில் 16.6.2017 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணைச்....... மேலும்

23 ஜூன் 2017 15:07:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருட்டிணகிரி, மே 14- கிருட்டிணகிரி மாவட்டம் கிருட்டிண கிரி நகரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் பகுத்தறி வுப் பாதையில் பெண்கள் என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கமும் தமிழர் தலைவர்ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 12 நூல் வெளியீட்டு விழா 7.5.2017 அன்று மாலை 5 மணிக்கு கிருட்டிணகிரி வெங்கடேஷ்வர கூட்டரங்கில் விடுதலை வாசகர் வட்டத்தலைவர் வெ.நாராயணமூர்த்தி தலைமை யில் மிகுந்த எழுச்சியோடு வெகு சிறப்பாக நடைபெற் றது. வாசகர் வட்டச் செயலாளர் கா.மாணிக்கம் அனை வரையும் வரவேற்று பேசினார்.

மாவட்டத் தலைவர் மு.துக்காராம், மாவட்டச் செயலாளர் கோ.திராவிடமணி, மாவட்ட இணைச் செய லாளர் சு.வனவேந்தன், மாவட்ட துணைத் தலைவர்கள் தா.சுப்பிரமணியம், த.அறிவரசன், மாவட்ட துணைச் செயலாளர் அ.செ.செல்வம், நகர தலைவர் மே.மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தருமபுரி மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவர் தகடூர் தமிழ் செல்வி, சென்னை மண்டல (மாணவரணி) செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் கருத்துரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கலந்து கொண்ட மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளரும் கிருட்டிண கிரி நகர மன்றத்தின் மேனாள் தலைவர்பி.பரிதாநவாப் அவர்கள் பேசியதாவது:-

தந்தை பெரியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதை எப்பொழுதும் வெகு மகிழ்வோடு நான் பங்கேற்று இருக்கிறேன். இந்த நிகழ்விலும் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

அன்பு சகோதரர் மாவட்ட கழகச் செயலாளர் கோ.திராவிடமணி அவர்கள் ஒரு கருத்தை குறிப்பிட்டார்கள். கிருட்டிணகிரி நகரில் தந்தை பெரியார் சிலை இல்லை என்று தெரிவித்தார். இது நம் அனைவருக்கும் பெரும் குறையாகவுள்ளது. அடுத்து அமையப்போகும் திமுக ஆட்சியில் கண்டிப்பாக கிருட்டிணகிரி நகரில் தந்தை பெரியார் சிலை வைக்க திமுக முழு ஒத்துழைப்பை வழங்கும். தந்தை பெரியார் சிலை திறக்க தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களையும் அழைத்து நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்துவோம் என்று உணர்ச்சி பெரு மிதத்தோடு தெரிவித்தார்.

கிருட்டிணகிரி மாவட்ட திமுக வீரத்தமிழரணி துணை அமைப்பாளரும் தொழிலதிபருமான நீல்கிரிஸ் அ.முரு கன் அவர்கள் தந்தை பெரியார், தமிழர் தலைவர் முத் தமிழறிஞர் டாக்டர் கலைஞர், தளபதி முக.ஸ்டாலின் ஆகியோர் மீது பேரன்பு கொண்டவர் அ.முருகன் வாழ் வியல் சிந்தனைகள் நூல் பாகம் 12 பெற்றுக்கொண்டு பேசினார்.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி அவர்கள் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் பாகம் 12அய் பெற்றுக் கொண்டு பேசினார்.

திராவிடர் கழகப்பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி அவர்கள் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் பாகம் 12 வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் மாவட்ட திமுக வர்த்தகரணி துணை அமைப்பாளர் நீல்கிஸ் அ.முருகன் பெற்றுக்கொண்டார்.

பகுத்தறிவுப் பாதையில் பெண்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி அவர்கள் கருத்த ரங்க சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது: பகுத்தறிவுப் பாதையில் பெண் கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் என்று போட்டதால் பெண்கள் வர அச்சப்படுகிறார்கள். ஆனால் ஆயிரம் விளக்கு பூசை என்று போட்டால் ஆயிரத்தில் ஒன்றாக கலந்து கொள்வோம் என்று வருவார்கள். அதே போல பட்டிமன்றம், பட்டிமன்ற தலைப்பு குடும்பத்தில் அதி காரம் படைத்தவர் கணவனா? மனைவியா? இதுபோல பல பெண்களை மடமையாக்கும் மூளையை மழுங்கடிக் கும் இன்னும் பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் அதிக அளவில் பங் கேற்கின்றனர். ஆனால் இங்கு பகுத்தறிவுப் பாதையில் பெண்கள் என்று தலைப்பு. பெண்கள் எப்பொழுதும் அடிமையாக இருப்பதையே அதிகம் விரும்புகின்றனர்.

நகை, புடவை இவைகளுக்கு பெண்கள் அதிக முக் கியத்துவம் அளித்து அடிமையாக்கி விடுகின்றனர்.

புத்தகம் தான் அறிவை விசாலமாக்கும். புத்தகம் தான் ஒரு பெண்ணை உரிமைக்குரியவர் ஆக்குகிறது. மலாலா என்ற முஸ்லிம் சிறுமியை மதகுருமார்கள் துப் பாக்கியில் சுட்டனர். குரானில் பெண்கள் படிக்கக்கூடாது என்று எங்கும் இல்லை என்று மலாலா என்ற சிறுமி கூறியதற்கு முஸ்லிம் மதகுருமார்கள் அந்த சிறுமியை சுட்டனர். மதம் மடமையை போதிக்கும் ஆனால் புத்தகம் அறிவை வளர்க்கும். அதே போல புராண இதி காசங்களிலும் இராமாயணம், மகாபாரதத்திலும் பெண் களை மிகவும் கேவலமாகவும் அடிமைத்தனமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

அட்சய திரிதியை நாளன்று நகை வாங்கினால் குபே ரன் ஆவர்கள் என்று மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்கின்றனர். நகை வியாபாரிகள் இது யாருக்கு நல் லது? நகை கடைக்காரனுக்கு  நல்லது. நமக்கு நட்டம் தான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளுவதில்லை மூடநம்பிக்கையில்.

தமிழ் இலக்கியத்தில் 44 பெண்கள் தமிழ் கவிஞர்களாக இருந்ததாக கணக்கு சொல்லப்படுகிறது. இன்னும் அதிக மாகக் கூட இருந்திருக்கலாம். சங்க காலத்தில் அவ்வை யார் சொன்னது. அறம் செய்ய விரும்பு! ஆறுவது சினம் என்று பெண்கள் எப்பொழுதும் நுணுக்கமாக சிந்திக்க கூடியவர்கள். அவ்வை மூன்று வகை ஒரு வகை. அவ்வை புறநானுறு கால அவ்வை. இரண்டாவது அவ்வை சங்க கால அவ்வை தான் அதியமான் ஆண்ட தகடூர் அவ்வை. அவ்வை என்றால் அறிவுடையவள் என்று பொருள். சங்க காலத்திலிருந்து பெண்கள் அறிவு கூர்மையுள்ள வர்களாக இருந்து இருக்கின்றனர். இந்து மதத்தில் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகம் என்று ஒரு புதுக்கவிதை சொல்கிறது. இப்படி ஆயிரம் சந்தேகப்படுபவர் எப்படி கடவுளாகக் இருக்க முடியும். மகாபாரதத்தில் கிருஷ்ணன் லீலைகள் பல விதம். இப்படிப்பட்ட கடவுள்களை நாம் வணங்கலாமா? இவர்களை கடவுளாக ஏற்று கொண்டவர்கள் எப்படி ஒழுக்கமானவர்களா மனு தர்மத்தில் பெண் குழந்தை பெற்று கொண்டால் விவாகரத்து செய்யலாம் என்று கூறுகிறது இந்து மதம்.

மதங்களை விட்டுவிட்டு பெண்கள் வெளியில் வர வேண்டும் நன்றாக படிக்க வேண்டும். கல்வி வேலை வாய்ப்பில் ஆண்களுக்கு சமமாக பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்றும் சினிமா டி.வி. சீரியல் கதை களை நிறுத்த வேண்டும். பெண்கள் பக்தி, சினிமா, மூடநம்பிக்கை இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு பகுத்தறிவு நெறியை பின்பற்றி வரவேண்டும் என்று கூறி சுமார் 90 மணித் துளிகள் சிறப்பான கருத்தரங்க சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாநில ப.க.துணைத் தலைவர் அண்ணா. சரவணன், தருமபுரி மண்டலச் செயலாளர் கரு.பாலன், தருமபுரி மாவட்ட அமைப்பாளர் இ.மாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம், மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் சா.ஜோதிமணி, ஓசூர் நகர தலைவர் சி.மணி, கிருட்டினகிரி நகர அமைப்பாளர் அ.கோ.இராசா, காவேரிப்பட்டணம் நகர அமைப்பாளர் ம.விஜயகுமார், கிருட்டினகிரி ஒன்றிய தலைவர் த.மாது, செயலாளர் கி.வேலன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கோ.கண்மணி, காவேரிப்பட்டணம் ஒன்றிய அமைப்பாளர் வெ.செல்வம், கிருட்டினகிரி மூத்த வழக்குரைஞர்கள் ஜி.எச்.லோகாபிராம், பி.எம். துக்காராம், ஆடிட்டர் து.அறிவுக்கண்ணு, து.இன்பவள்ளி, தருமபுரி மாவட்ட விவசாய அணி தலைவர் மு.சிசு பாலன், மேனாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தி.திருமலை செல்வம், பொன்னாகரம் சின்னராஜி, சுந்தரம், காமலாபுரம் சி.இராமசாமி, இரா.இராசா, இளம் எழுத்தாளர் மு.சி.அறிவழகன், ப.வினோ பாஜி, தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் சி.பகத்சிங், திருப்பத்தூர் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், ஓசூர் மகளிரணி தலைவர் அ.செல்வி, லதாமணி, இளம் வழக்குரைஞர் க.கா.வெற்றி, க.கா.சித்தார்த்தன், பெரியார் பிஞ்சு ம.நன்மதி, விரகூர் வ.அனுவேந்தன், சி.சுப்பிரமணி, நா.சதீஷ்குமார், செ.செந்தமிழ் பகுத்தறிவு, செ.டார்வின் பேரறிவு, ம.தமிழ்மணி, மணிமொழி, மா.வேணுகோபால், த.சக்தி வேல், ஜி.மாதையன், சே.ஆனந்தசைனி, தி.சென்னை கேசவன், தீர்த்தகிரி, திராவிடஅரசு, மா.முனியப்பன், சி.கனிமொழி, பெரியார் பிஞ்சுகள் தி.அ.அனலரசு, ஆ.ஆர்த்தி, ஆ.மணிகொடி, ஆ.அருள்மணி, ம.கதிரவன், ம.நிலவன் உள்பட கழகத்தோழர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மனுதர்மநூல் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற கல்யாணி துக்காராம், கண்மணி, அ.செல்வி, க.கா.வெற்றி ஆகியோருக்கு கழகப்பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி அவர்கள் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டினார்.

அதே போல விடுதலை வாசகர் வட்ட நிர்வாகிகளுக் கும், மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் பிரச்சார செயலா ளர் கைத்தறி ஆடை அணிவித்தார்.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி அவர்களுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் தா.திருப்பதி சார்பில் மாவட்டச் செயலாளர்  கோ.திரா விடமணி சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.

மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் மு.துக் காராம், மாவட்ட துணைத் தலைவர் து.அறிவரசன், மாநில ப.க. செயல் தலைவர் தகடூர் தமிழ்செல்வி ஆகி யோரும் பிரச்சார செயலாளருக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தனர்.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் விடு தலை வாசகர் வட்டப் பொருளாளருமான இ.லூயிசுராசு நிகழ்ச்சியை தொகுத்து இணைப்புரை வழங்கினார்.

காவேரிப்பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் சிவ.மனோகரன் அனைவருக்கும் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner