முன்பு அடுத்து Page:

தகடூர் தமிழ்ச்செல்வியின் பணி நிறைவு, 60ஆம் ஆண்டு மணி விழா, தமிழர் தலைவர் வாழ்த்து!

தகடூர் தமிழ்ச்செல்வியின் பணி நிறைவு, 60ஆம் ஆண்டு மணி விழா, தமிழர் தலைவர் வாழ்த்து!

தருமபுரி, ஜூன் 28, மாநில பகுத்தறிவாளர் கழக செயல் தலைவரும் பி.எஸ்.என்.எல். சப் டிவிசனல் பொறியாளருமான தோழர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களின் அரசு பணி விடைபெறும் விழா மற்றும் தமிழ்ச்செல்வி - ஊமை ஜெயராமன் மணிவிழா 27.6.2017 அன்று மாலை 6 மணியளவில் தருமபுரி வின்சென்ட் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்....... மேலும்

28 ஜூன் 2017 15:28:03

குன்னூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி!

குன்னூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி!

குன்னூர், ஜூன் 28- நீலமலை மாவட்டம் குன்னூரில் பெள்ளி கவுடர் அரங்கில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.6.2017, 25.6.2017 சனி, ஞாயிறு இரு நாட்களும் சிறப்பாக நடந்தது. கொள்கை ஆர்வத்துடன் கோவை மண்டல கழக மாண வர்களும், இளைஞர்களும் பட்டறையில் பங்கு பெற்றனர். 35 ஆண்களும் 19 பெண் தோழர் களுமாக 54 பேர் முகாமில் கலந்து கொண்டு பலன் பெற்ற னர். 20 பட்டதாரிகள், பட்டயம் பெற்றோர் 4 பேர்,....... மேலும்

28 ஜூன் 2017 15:09:03

சுந்தரபெருமாள்கோயில் அ.மா.கணபதி மறைவு

சுந்தரபெருமாள்கோயில் அ.மா.கணபதி மறைவு

குடந்தை, ஜூன் 27 குடந்தை கழக மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் சுந் தரப்பெருமாள்கோயில் திரா விடர் கழக தலைவரும், தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி அறிவித்த போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்று சிறை சென்றவருமான  பெரி யார் பெருந்தொண்டர்.அ.மா.கணபதி 24.6.2017 அன்று இரவு இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந் துகிறோம். எந்தவித சடங்குகள் இன்றி அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. தலைமைச் செயற்குழு உறுப்பினர்  ராசகிரி கோ.தங்கராசு அவர்கள் தலை....... மேலும்

27 ஜூன் 2017 14:43:02

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய இணையமும் - இனநலனும் சிறப்புக்கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய இணையமும் - இனநலனும் சிறப்புக்கூட்டம்

மதுரை, ஜூன் 27 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 'இணையமும் இனநலனும்' என்னும் தலைப்பில் சிறப்புக்கூட்டம் 24.06.2017 சனிக்கிழமை மாலை 6.20 மணிக்கு, மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சுப.முருகானந்தம் இன்றைய நிலையில் இணையத்தின் தேவைபற்றிக் குறிப்பிட்டு வரவேற்றார். சிறப்புக் கூட்டத்திற்கு  நீதியரசர் பொ.நடராஜன் (ஓய்வு), மதுரை மண்டல கழகச் செயலாளர் மா.பவுன்ராசா,....... மேலும்

27 ஜூன் 2017 14:42:02

தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டம்

 தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டம்

சென்னை - பெரியார் திடலில் 23.6.2017 அன்று நடைபெற்ற தமிழக மூதறிஞர் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் "தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகம் கல்வெட்டுகள் அகழாய்வுகள்" எனும் தலைப்பில் உரையாற்றிய மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியும், தொல்லியல் ஆய்வறிஞருமான முனைவர் டி.எஸ். சிறீதர் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பிக்கின்றார். உடன்: தமிழக மூதறிஞர் குழுவின் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி முனைவர் ஏ.கே........ மேலும்

25 ஜூன் 2017 16:10:04

குளு குளு குன்னூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

 குளு குளு குன்னூரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

கோவை மண்டல திராவிடர் கழகம் சார்பில்  குன்னூர் - நீலகிரி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்க கட்டடத்தில்  24.6.2017 காலை 10.30 மணியளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முதல் வகுப்பு தொடங்கியது. கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் நகேந்திரன், மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். "பெரியார் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வகுப்பைத்....... மேலும்

25 ஜூன் 2017 14:04:02

கோவையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

நீலமலை மாவட்டம், குன்னூரில் இன்று துவங்கவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாம்,நாளை நடைபெறவுள்ள பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (24.06.2017) காலை ஆறு மணியளவில் தன் வாழ்விணையர் மோகனா வீரமணியுடன் கோவை தொடர்வண்டி நிலையம் வந்திறங்கிய தமிழர் தலைவருக்கு திராவிடர்கழகத்தின் கோவை மண்டலச் செயலாளர்  ம.சந்திரசேகர் தலைமையில் தோழர்கள் புடைசூழ  உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர்கழகத்தின் கோவை மாவட்ட  தலைவர் சிற்றரசு, செயலாளர் செந்தில்நாதன்,....... மேலும்

24 ஜூன் 2017 14:55:02

பெரியார் பெருந்தொண்டர் ஆ.சுப்பிரமணியன் உடல் அடக்கம்

பெரியார் பெருந்தொண்டர் ஆ.சுப்பிரமணியன் உடல் அடக்கம்

நீடாமங்கலம், ஜூன் 23 நீடா மங்கலம் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பி னருமான ஆ.சுப்பிரமணியன் அவர்கள் 76 ஆவது வயதில் 16.6.2017 அன்று இரவு 11 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி நிகழ்வு 17.6.2017 அன்று மாலை 4 மணி யளவில் அவரது இல்லத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு தலைமைச் செயற்குழு உறுப் பினர் இராஜகிரி கோ.தங்கராசு தலைமையேற்று....... மேலும்

23 ஜூன் 2017 15:09:03

மாட்டுக்கறிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து தெருமுனைக் கூட்டம்

மாட்டுக்கறிக்கு தடை விதித்த  மத்திய அரசை கண்டித்து தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூன் 23 தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் மாட்டுக்கறிக்கு தடை விதித்த மத்திய பி.ஜே.பி.அரசை கண் டித்து 20.6-17 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சை சாந்தி கமலா திரையரங்கம் அருகில் தெரு முனைக் கூட்டம் நடை பெற்றது. மாநகரத் தலைவர் பா.நரேந் தன் தலைமை வகித்து உரை யாற்றினார்.  மாநகர விடுலை வாசகர் வட்ட செயலாளர் மீ.அழ கர்சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் இராஜவேல், மாவட் டத்....... மேலும்

23 ஜூன் 2017 15:07:03

சுயமரியாதைச் சுடரொளிகள் குருசாமி - லட்சுமி இல்ல மண விழா

சுயமரியாதைச் சுடரொளிகள் குருசாமி - லட்சுமி இல்ல மண விழா

சோழங்கநல்லூர், ஜூன் 23 நாகை மாவட்ட கொட்டாரக்குடி சுயமரியாதை சுடரொளி குருசாமி _ லட்சுமி ஆகியோர் பேரனும் மருதுபாண்டியன் - திலகவதி ஆகியோரது மகன் ம.சோழன், கன்னியாகுமரி கல்லூட்டம் எப் ராகிம் -  ஜெயந்தி ஆகியோரது மகள் சுனித்தாகோமல் ஆகி யோரது ஜாதி மறுப்பு வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா சோழங்க நல்லூர் லெட்சுமி மகால் திருமண மண்டபத்தில் 16.6.2017 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணைச்....... மேலும்

23 ஜூன் 2017 15:07:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரம்பலூர், மே 13- விடுதலை வாசகர் வட்டம் 4ஆவது கூட் டம் 8.5.2017 அன்று மாலை 5.30 மணிக்கு பெரம்பலூர் குணகோமதி மருத்துவமனை யில் நடைபெற்றது. சா. கோவிந்தசாமி தலைமையிலும் டாக்டர் கு.குணகோமதி முன் னிலையில் நடைபெற்ற கூட் டத்தில் சி.பிச்சைப்பிள்ளை வர வேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் முதல் நிகழ் வாக அ.ஆதிசிவம் வாழ்வியல் சிந்தனைகள் நூலின் சிறப்பு அம்சங்களை எடுத்து கூறினார். கூட்டத்தின் தலைவர் சா. கோவிந்தசாமி நூல் வெளியிட சிறப்புரையாளர் முன்னாள் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி அ.வேணு கோபால் பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து சா.தங்கப் பிரகாசம், பெ.அண்ணாதுரை, பெ.துரைசாமி, அ.ஆதிசிவம், பெ.நடராசன், சி.தங்கராசு, டாக் டர் குணகோமதி, வை.சித்தார்த்தன், க.ராஜாகென்னடி, ந.ஆறுமுகம், அ.சின்னசாமி, சுந்தராஜன், சி.பிச்சைப் பிள்ளை, சி.இராசு, சா.கோவிந்தசாமி ஆகியோர் பெற்று கொண்டனர்.

அ.வேணுகோபால் அவர் கள் பொதுவுடைமை கொள்கை யும் சமூக முன்னேற்றமும் என்ற தலைப்பில் பொதுவுடை மையின் நோக்கம் மற்றும் அதன் சாதனைகளை விளக்கி னார். விவசாயிகளின் நலன், அரச ஊழியர் நலன் மற்றும் மகப்பேறு விடுப்பு, தொழிலா ளர் நல வாரியம், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, சேலம் உருக்காலை திருச்சி பெல், விவசாய கொத்தடிமை ஒழிப்பு ஆகிய செய்திகளை விரிவாக கூறினார். அ.பொன் மலர் நன்றி கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner