முன்பு அடுத்து Page:

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

உரத்தநாடு பெரியார் மாளிகையில் 21.4.2017 அன்று தமிழர் தலைவர் எழுதிய வாழ்வியல் சிந்தனை தொகுதி 12 நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஒன்றிய தி.மு.க செயலாளர் மு. காந்தி, நூலை வெளியிட மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பெற்றுக் கொண்டார். (செய்தி 4ஆம் பக்கம் காண்க) மேலும்

23 ஏப்ரல் 2017 16:04:04

மாங்கொல்லை முழக்கம்!

மாங்கொல்லை முழக்கம்!

கவிஞர் கலி. பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம் அந்த மயிலை மாங்கொல்லையில்தான் பாபு ஜெகஜீவன்ராம் முழங்கினார் (1978). வாரணாசி என்ற காசியில் சம்பூர்ணானந்து சிலையை  இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவிருந்த பாபு ஜெகஜீவன் ராம் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்த சில நிமிடங்களுக்குள்ளேயே சம்பூர்னானந்து சிலை கங்கை நீரால் கழுவப்பட்டது. கங்கை நீரைக் கொண்டு அந்தச் சிலையைக் கழுவியவர்கள். காசி பல்கலைக் கழக மாணவர்கள். எதற்காக? பாபு ஜெகஜீவன்ராம் தாழ்த்தப்பட்டவராம்; ஒரு தாழ்த்தப்பட்டவர் உயர்....... மேலும்

23 ஏப்ரல் 2017 16:04:04

அரிய தகவல்களை, புத்தகங்களை பாதுகாக்க விரும்புவோர் பெரியார் ஆவணக்காப்பகத்துக்கு அளியுங்கள்!

அரிய தகவல்களை, புத்தகங்களை பாதுகாக்க விரும்புவோர் பெரியார் ஆவணக்காப்பகத்துக்கு அளியுங்கள்!

புத்தகர் விருதுகளை அளித்து தமிழர் தலைவர் உரை 'புத்தகர் விருது'களை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். எஸ்.எஸ்.ஆர்.லிங்கம் சார்பில் அவர் மகன்கள் சங்கரநாராயணன் உள்ளிட்ட நால்வர் மற்றும் நூலகர் ஆய்வாளர் ரெங்கையா முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். (21.4.2017) சென்னை, ஏப்.22 சென்னை புத்தகச் சங்கமத்தின் சிறப்புப் புத்தகக் காட்சி சென்னை பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று 21.4.2017 துவங்கி 25.4.2017....... மேலும்

22 ஏப்ரல் 2017 16:25:04

'விடுதலை'க்கு நன்கொடை

'விடுதலை'க்கு நன்கொடை

விழுப்புரம் மாவட்ட முன்னாள் இளைஞரணித் தலைவரும், இனிய விடியல் நிறுவனம் மற்றும் கல்வி அறக்கட்டளைத் தலைவருமாகிய ச.பழனிவேல் மற்றும் அறக்கட்டளை செயலாளர் சி.செந்தில்குமார் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கி வாழ்த்து பெற்றார்கள். அறக்கட்டளை சார்பில் புதிதாக துவங்கப்பட உள்ள நிர்மல் வித்யா மெட்ரிகுலேசன் பள்ளி நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை தமிழர் தலைவர் அவர்களிட மிருந்து சென்னை புத்தகச் சங்கம துவக்க விழாவில் பெற்றுக்....... மேலும்

21 ஏப்ரல் 2017 17:36:05

சுயமரியாதைத் திருமண முறை - மதச்சார்பற்ற தன்மை

சுயமரியாதைத் திருமண முறை - மதச்சார்பற்ற தன்மை

உலகமெல்லாம்உள்ளபகுத்தறிவாளர்கள்சந்திக் கும் பிரச்சினை சடங்குகள் மறுப்பு ஆகும்.ஒவ்வொரு மதத்திற்கும் ஓராயிரம் சடங்குகளை வைத்திருக்கின்றார்கள். அந்தச்சடங்குகள் மூலமே தங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் இவர்கள் என அடையாளம் காட்டுகின்றார்கள். கால மெல்லாம் ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை ‘ என முழங்கினாலும் மேலை நாடுகளில் நாத்திகர்களுக்கென தனிக்கல்லறைகள் இல்லை. ஆத்திகர்கள் அடக்கம் செய்யப்படும் கல்லறைப் பகுதிகளிலேயே நாத்திகர்களும் அடக்கம் செய்யப்படும் நிலை, ஆத்திகர்களுக்கு கடைசிச்சடங்குகள் செய்யும் மதவாதிகளே நாத்திகர்களுக்கும் செய்யும் நிலை. என்னதான்....... மேலும்

21 ஏப்ரல் 2017 17:11:05

'விடுதலை'க்கு நன்கொடை

'விடுதலை'க்கு நன்கொடை

விழுப்புரம் மாவட்ட முன்னாள் இளைஞரணித் தலைவரும், இனிய விடியல் நிறுவனம் மற்றும் கல்வி அறக்கட்டளைத் தலைவருமாகிய ச.பழனிவேல் மற்றும் அறக்கட்டளை செயலாளர் சி.செந்தில்குமார் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 வழங்கி வாழ்த்து பெற்றார்கள். அறக்கட்டளை சார்பில் புதிதாக துவங்கப்பட உள்ள நிர்மல் வித்யா மெட்ரிகுலேசன் பள்ளி நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை தமிழர் தலைவர் அவர்களிட மிருந்து சென்னை புத்தகச் சங்கம துவக்க விழாவில்....... மேலும்

21 ஏப்ரல் 2017 15:57:03

நன்கொடை

நன்கொடை

துரை.முத்துகிருட்டிணன்-மு.ருக்மணி ஆகியோரின் பெயரனும், மு.தியாகராஜ்-அனிதா ஆகியோரின் மகனுமான இராகுல் தியாகராஜ் 7ஆம் ஆண்டு பிறந்த நாள் (12.7.2017) மகிழ்வாக வும், தங்களின் அமெரிக்கப் பயணத்தை முன் னிட்டும் திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங் கினர். நன்றி! வாழ்த்துகள்! மேலும்

20 ஏப்ரல் 2017 17:24:05

பெங்களூருவில் அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்த நாள் விழா

பெங்களூருவில் அம்பேத்கர் - பாரதிதாசன் பிறந்த நாள் விழா

பெங்களூரு, ஏப். 20- கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவி ஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் கரு நாடக மாநிலத் தலைவர் மு.சானகி ராமன் தலைமையில் மாநிலத் துணைத் தலைவர்கள் வீ.மு.வேலு, தங்கம் இராமச்சந்திரன், பு.த.கஜபதி முன்னிலையில் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் படத் தினை அனிதா ஆனந்தவேலன், பாவேந்தர் படத்தினை தங்கம், பிரேம்குமார் துணைவியர்....... மேலும்

20 ஏப்ரல் 2017 17:22:05

ஆம்பூரில் நடைபெற்ற கழக குடும்ப மணவிழா முனைவர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!

ஆம்பூரில் நடைபெற்ற கழக குடும்ப மணவிழா முனைவர் துரை.சந்திரசேகரன் நடத்தி வைத்தார்!

திருப்பத்தூர், ஏப். 20- திருப்பத்தூர் கழக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெற்றி கொண்டான் - ஆ.பாரதி ஆகியோர் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 19.2.2017 அன்று காலை 9 மணியளவில் ஆம் பூர் கமலாராசன் திருமண மண்ட பத்தில் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.சி.எழிலரசன் தலை மையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரையாற் றினார். தருண் அசோக் வரவேற்புரை ஆற்றினார்........ மேலும்

20 ஏப்ரல் 2017 17:19:05

தென்காசியில் நடைபெற்ற இளைஞரணி மாணவரணி கலந்துரையாடல் கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற இளைஞரணி மாணவரணி கலந்துரையாடல் கூட்டம்

தென்காசி, ஏப். 20- தென்காசி மாவட்ட இளைஞரணி மாண வரணி கலந்துரையாடல் கூட் டம் நெல்லை மண்டல மாண வரணி செயலாளர் அ.சவுந் தரபாண்டியன் தலைமையில் கீழப்பாவூர் பெரியார் திடல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்புரை யாக மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் கூட்டத்தின் நோக்கங்களைப் பற்றியும், இளைஞருணி மாண வரணி வருகிற ஜூலை மாதம் நடைபெறும் குற்றாலம் பெரி யாரியல் பயிற்சி பட்டறைக்கு அதிகமானவர்களை சேர்ப்பது எனவும் தென்காசி மாவட்டத் தில்....... மேலும்

20 ஏப்ரல் 2017 17:16:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற

“அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5” நூல் வெளியீடு

காரைக்குடி, ஜன. 9- தமிழகம் முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் வெளியீட்டு விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:

எடப்பாடி

“அய்யாவின் அடிச்சுவட்டில்” பாகம் 5, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, எடப்பாடி நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு 18.12.2016 அன்று காலை 9.30 மணியளவில் எக்சலண்ட் காமர்ஸ் இன்ஸ்டிடியூட், கடைவீதி (சிட்டி யூனியன் வங்கி மேல் மாடி) எடப் பாடியில் நடைபெற்றது.

மேட்டூர் மாவட்ட செயலாளர் கா.நா.பாலு அவர் கள் தலைமை ஏற்க, நகர கழக தலைவர் ஆர்.எம். சண்முக சுந்தரம் வரவேற்புரையாற்ற மண்டல தலை வர் சி.சுப்பிரமணியன், மேட்டூர் மாவட்ட தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கை.முகிலன், பொதுக்குழு உறுப்பினர் பெ.சவுந்திர ராசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் ஆ.சத்திய நாதன், நகர துணைத் தலைவர் ப.இராமலிங்கம் ஆகி யோர் முன்னிலையில் நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. மீனவர் இளைஞர் பேரவை மாநில தலைவர் டி.செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.  தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் நூலினை வெளி யிட்டு சிறப்புரையாற்றினார்.

முதல் நூல் பெற்றவர் பொறியாளர் எம்.குமரேசன் மேலும் நூலைப் பெற்றுக்கொண்டவர்கள்: ஆசிரியர் ப.கந்தசாமி (மகுடஞ்சாவடி), எம்.காமராஜ் (பெரியார் படிப்பகம்), ஆ.ஜெயபால் (காடையாம்பட்டி ஒன்றிய தலைவர்), எஸ்.நாகராஜன் (நகரத் தலைவர் அ.இ.கா), நந்தகோபால் (அ.இ.கா, செட்டிப்பட்டி), புவனேசுவரி (மேட்டூர்), பழனிச்சாமி (அ.கோ.தொ), லோகேஸ்வரன் (பூலாம்பட்டி ரோடு), ஜெயராமன் (மணி டிரேடர்ஸ்), பாவிருசன் (எடப்பாடி), கே.வெங்கடேசன் (பத்திர எழுத்தர்), என்.சுந்தர் (நங்கவள்ளி ஜவுளிக்கடை), பா.அன்புமணி பாபு (செவ்வாய்பேட்டை), பா.சிந் தனை ரமேஷ்குமார் (வெள்ளாண்டி வலசு), பா.எழில் செல்வராஜ் (பிரெய்ன் ஓ பிரெய்ன்), கோ.பாபு (சேலம்), டி.இராஜேந்திரன் (திமுக தாவார் தெரு), கே.மாணிக்கம் (திமுக வார்டு செயலாளர்), எம்.பி. ஆறுமணி (கிளைச் செயலாளர், திமுக), எஸ்.முனுசாமி (எ) ராஜா (திமுக தேவூர்), ஏ.பி.பழனிச்சாமி (திமுக அம்மா பாளையம்), கே.எம்.எஸ்.வீராசாமி (திமுக ஏரி ரோடு), கா.ரா.குணசேகரன் (பொதுச் செயலாளர், அமைப்பு சாரா தொழிற்சங்கம்), கே.சரவணன் (திமுக சித்தார்), கோ.பூபதி (பா.ம.க, காவேரிப்பட்டி), கே. இளங்கோ (சேலம்), கே.அங்கப்பன் (புதூர்), அமுதன் எழுத்தாளர் (க.புதூர்)

நிறைவாக நகரச் செயலாளர் சா.ரவி நன்றி கூறினார்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 43-ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் அய்யாவின் அடிச்சுவட்டில் 5-ஆம் பாகம் வெளியீட்டு விழா குடியாத்தம் புவனேசுவரிப்பேட்டை ஓவிஸ் அழகு நிலையத்தில் 24.12.2016 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்சியில் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார் தலைமை தாங்கினார், வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன் முன்னிலை வசித்தார்.

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் படத்தினை வேலூர் மகளிரணி செயலாளர் ச.கலை மணி பழனியப்பன் திறந்துவைத்தார். தமிழர் தலைவர் எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ நூலினை தலைமை செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா. குணசேகரன் அவர்கள் வெளியிட குடியாத்தம் முன் னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க வி.ஜி.தனபால் அவர்கள் பெற்றுக் கொண்டார். குணசேகரன் அவர்கள் தன்உரையில், ஒவ்வொரு இல்லத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய புத்தகம் இது. நம் சமுதாயத்திற்கு தந்தைபெரியார் அவர்கள் உழைத்த உழைப்பு, சாகும் வரை தன் மூத்திரச்சட்டியை சுமந்து சூத்திர இழிவைப் போக்க பாடுபட்டு என்றும் அவருடைய கொள்கை தேவைப்படுகின்ற வகையில் வாழ்ந்த சமூக சீர்திருத்த செம்மல் தந்தைபெரியார் என்று கூறினார். நூலினைப் பெற்றுக்கொண்ட முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் தம் உரையில், தமிழர் தலைவர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் நான்கு பாகங் களும் படித்துவிட்டேன் இப்பொழுது 5ஆம் பாகம் படிக்கும் வாய்ப்பை வழங்கிய தோழர்களுக்கு வாழ்த் துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இந் நிகழ்ச்சியில் பெரியார் மருத்துவரணி செயலாளர் பழ ஜெகன்பாபு, மாவட்ட ப.க செயலாளர் இர.அன்பரசன் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செய லாளர் க.அருள்மொழி, மாவட்ட ப.க அமைப்பாளர் மா. அழகிரிதாசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் அ.நடராஜன், இலக்கிய அணி செயலாளர் தி.மு.க சீனி.ஜெயசந்திரன், திமுக தலைமை கழக பேச்சாளர்  தா.பாரி, மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி, மாநகர தலைவர் நெ.கி.சுப்பிரமணி, மாநகர ப.க செயலாளர் அ.மொ.வீரமணி, போளூர் ப.க பன்னீர், நகர தலைவர் வி.மோகன், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ச.இரம்யா, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் தி.அனிதா தாரணி, பகுத்தறிவா ளர் கழகம் சாந்தகுமார், பகுத்தறிவாளர் கழக சங்கர், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் வ.இரவிக்குமார், மின்வாரியத்துறை பிரபாகரன், நகர மகளிர் பாசறை தலைவர் சி.லதா, ஒன்றிய மகளிர் பாசறை தலைவர் பெ.இந்திரா, ஆசிரியர் சகுவரதன், ரோட்டரி சங்கம் கோபிநாத். வி.சிவா, ந.பாலசுந்தரம், தே.அ.புவியரசு, தே.அ.ஓவியா மற்றும் கழக தோழர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டனர். இறுதியில் மாணவரணி சந்தீப் நன்றி கூறினார்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை நகர திராவிடர் கழகம் சார்பில் 19.12.2016 அன்று மாலை 6.30 மணிக்கு பந்தல்குடி சாலை இந்தியன் வங்கி அருகில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 84ஆவது பிறந்த நாள் விழாவும், ‘அய்யாவின் அடிச் சுவட்டில்’ நூல் அறிமுக விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ப.க.புரவலர் ந.ஆனந்தம் தலைமையில் மாவட்ட தலைவர் விடுதலை தி.ஆதவன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் வெ.முரளி வரவேற்புரையாற்றி னார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பா. இரா சேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ச.சண்முக சுந்தரம், தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர் மு.கலைவேந்தன் ஆகியோரது உரைக்குப்பின் மாநில ப.க.துணை தலைவர் கா.நல்லதம்பி அவர்கள் ‘அய்யா வின் அடிச்சுவட்டில்’ நூல் அறிமுக உரையாற்றினார். விழாத் தலைவர் ந.ஆனந்தம் அவர்கள் நூலினை வெளியிட முதல் பிரதியினை திமுக கலை இலக்கியப் பேரவை மாவட்டத் தலைவரும், மாவட்ட ப.க. அமைப்பாளருமான பா.அசோக் அவர்கள் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ அய்ந்தாம் பாகத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மாவட்ட திமுக இலக்கிய அணித் தலைவர் பி.மாணிக்கம், தமிழ்ப்புலிகள் இயக் கப் பொறுப்பாளர் மு.கலைவேந்தன், நா.நாராயணன், பெ.இரவி, சு.பாண்டி, பா.இராமசந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் நூல் பிரதியைப் பெற்றுக் கொண் டனர். நிறைவாக தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் இரா.அன்பழகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் விடுதலை தி.ஆதவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்தினர்.

மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட ப.க.தலைவர் சு.பாண்டி, செயலாளர் பூ.பத்மநாதன், மாவட்ட துணைத் தலைவர் அ.தங்கசாமி, நகர கழக செயலாளர் இரா.முத்தையா, இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர் மற்றும் கழகத் தோழர்கள், தமிழ்ப்புலிகள் இயக்கத் தோழர்கள், தோழமை இயக் கத்தினர் ஆகியோர் பெருமளவில் பங்கேற்று சிறப்பித் தனர். நகர கழக செயலாளர் இரா.முத்தையா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

நன்கொடை

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி - வெற்றிச்செல்வி இணையரது பேத்தியும், ம.கயல்விழி - அரிகிருஷ்ணன் இணையரது மகளுமான பெரியார் பிஞ்சு க.அ.சம் யுக்தாவின் அய்ந்தாம் ஆண்டு பிறந்த நாள் (20.12.2016) மகிழ்வாக மாவட்ட இளைஞரணித் தலைவர் ம.கதிர வன் ரூ. 500 அய்நூறு திருச்சி நாகம்மையார் குழந்தை கள் இல்ல நிதியாக நன்கொடை வழங்கினார். வாழ்த் துகள்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் மா.உதயகுமார் அவர்களது 26ஆவது பிறந்த நாள் (23.12.2016) மகிழ்வாக அவரது இணையர் ஜனனி அவர்கள் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதியாக ரூ. 1000 நன்கொடை வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 43 ஆவது ஆண்டு நினைவுநாள், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 84 வது பிறந்தநாள் விடுதலை வாசகர் வட்ட துவக்க விழா ஆகிய முப் பெரும் நிகழ்ச்சிகள் கூறைநாடு பெரியார் படிப்பகத்தில் 24.12.2016 மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் எஸ்.எம். ஜெகதீசன் தலைமை யேற்க, மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரை யும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் க.அருள்தாஸ் இயக்க பாடல்களை பாடினார். விடுதலை வாசகர் வட்ட தலைவர் நா.சாமிநாதன், மாவட்ட துணைச் செயலாளர் கட்பீஸ் கிருஷ்ணமூர்த்தி,  பெரியார் தொண்டர் மா.க.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தலைமைக் கழக சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி அன்பழகன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழர் தலைவரின் அய்யாவின் அடிச்சுவட்டில்(பாகம் 5) நூலில் வெளிவந்துள்ள பல்வேறு முக்கிய செய்திகளை விளக்கி, நூலின் சிறப்பை எடுத்துக்காட்டியதோடு தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆகியோரின் வாழ்நாள் தொண்டறப் பணியை அருமையான வகையில் எடுத்துரைத்தார்.

நாகை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளர் நிவேதா முருகன்  தமிழர் தலைவரின் அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் 5) நூலினை வெளியிட பெரியார் தொணடர் மா.க.கிருட்டிணமூர்த்தி முதல் பிரதியை பெற்றுகொண்டார்.

அவரைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் எஸ்.எம். ஜெகதீசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் நா.சாமிநாதன், திமுக நகர செயலாளர் செல்வராஜ்,  பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் அ.சாமிதுரை, குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகை யன், செயலாளர் கு. இளமாறன், சீர்காழி ஒன்றிய தலைவர் கடவாசல் ஆ.ச.குணசேகரன், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி இளங்கோவன், செம்பை ஒன்றிய செயலாளர் கனகலிங்கம், நகர தலைவர் தியாகராஜன், துணைத்தலைவர் சீனி.முத்து, செம்பை ப.க தோழர் ஜீவன்ராஜ், ஆய்ப்பாடி கணேசன், தோழர் பி.எம்.ஜி.மணிவேல், நத்தம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வின்சென்ட் (திமுக), திமுக நகர பொருளாளர் பிரபாகரன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ்,  திமுக செம்பை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிறீதர், அஞ்சல் துறை நா.இராஜேந்திரன் மற்றும் பல்வேறு தோழர்கள் நூலினைப் பெற்றுகொண்டனர்.

நகர செயலாளர் அரங்க.நாகரெத்தினம், கொள்ளி டம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரெங்கன், குத்தாலம் ஒன்றிய துணைச்செயலாளர் தி.சபாபதி, நகர துணைச் செயலாளர் என்.எஸ்.மாசேதுங், மாவட்ட இளைஞ ரணி தலைவர் முகில்வேந்தன், செயலாளர் மதியழகன், இரெ.புத்தன், தங்க.செல்வராஜ், தி.அண்ணாதுரை, கோ.இராமலிங்கம், ஆர்.அப்பாவு, என்.கல்யாண சுந்தரம், என்.இரவி, உ.ஆனந்தராஜ், க.காசிநாதன், எம்.சேட்டு, எம். நாகப்பன், வெ.அன்பழகன், பா.சவுந்தரராசன், ஆர்.சுரேஷ்குமார், டி.சவுந்தரபாண்டி யன், ரா.பிரவீன், அ.விடுதலை வேந்தன், குருநாதன்  மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித் தனர். மாலை 5 மணிக்கு பெரியார் படிப்பகத்திலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பெரியார் சிலையை அடைந்தது. மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ்  தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். நகர துணைத்தலைவர் சீனி.முத்து நன்றி கூற இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner