முன்பு அடுத்து Page:

புதிய கல்விக் கொள்கை - 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள…

புதிய கல்விக் கொள்கை - 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து  எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய புதிய கல்விக் கொள்கை, - “நீட்” நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்போடு தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர் பங்கேற்ற எழுச்சிமிகு முத்தரப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 30.12.2016 அன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருவாரூர் 30.12.2016 அன்று காலை 10 மணியளவில் புதிய கல்விக் கொள்கை 2016, “நீட்” நுழைவுத் தேர்வினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர்....... மேலும்

20 ஜனவரி 2017 15:16:03

“தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு” விளக்கப் பொதுக்கூட்டம்

“தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு” விளக்கப் பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன. 19- திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கடைவீதியில் திராவிடர் கழ கம் சார்பில் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் 84ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும், தை முதல் நாளே தமிழ் புத் தாண்டு விளக்கப் பொதுக்கூட் டமும் 31.12.2016 அன்று மாவட்ட தலைவர் கி.முருகையன் அவர் களின் தலைமையில் நடை பெற்றது. அனைவரையும் மாவட்ட அமைப்பாளர் ந.செல்வம் வர வேற்றார். மாவட்ட செயலாளர் ச.பொன்முடி, ஒன்றிய தலை....... மேலும்

19 ஜனவரி 2017 16:16:04

கடலூரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் அறிமுக விழா

கடலூரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் அறிமுக விழா

பெரியார் 1000 பரிசளிப்பு விழா இணைந்த முப்பெரும் விழா கடலூர், ஜன. 18- கடலூர் நகர திராவிடர் கழகம் சார்பில் 1.1.2017 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை கடலூர் - புதுப்பாளையம் திருப்பு முனை பயிற்சி அரங்கில் தமி ழர் தலைவரின் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அய்யா வின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் நூல் அறிமுகம் - பெரியார் 1000 போட்டியில்....... மேலும்

18 ஜனவரி 2017 17:21:05

புதிய கல்விக் கொள்கை - நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் …

புதிய கல்விக் கொள்கை - நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து  எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள்

  தேசிய புதிய கல்விக் கொள்கை - “நீட்” நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்போடு தமிழ்நாடு ஆசிரியர், மாண வர், பெற்றோர் பங்கேற்ற எழுச்சிமிகு முத்தரப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 30.12.2016 அன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருச்சி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரி யர் மாணவர் பெற்றோர் முத்தரப்பு....... மேலும்

18 ஜனவரி 2017 16:45:04

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சி

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சி

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சிஅடர்த்தியான நிகழ்ச்சிகள் - அறிஞர் பெருமக்களின் அரும்பெரும் கருத்துகள் அணிவகுப்பு சென்னை, ஜன.18 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 23ஆவது ஆண்டு விழா, திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய 2 நாள்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. இரண்டு நாள்களிலும் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்துறை அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு  அவர்களுக்கு சிறப்பு செய்யும் வண்ணம் 'பெரியார் விருது'....... மேலும்

18 ஜனவரி 2017 16:39:04

சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் - பொங்கல் விழா - பெரியார் விருது வழங்கும் விழா (16.1.20…

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இரண்டாம் நாள் விழாவில் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், எழுத்தாளர் ஜெயராணி, 'இன்ஸ்பைரிங்' இளங்கோ, இசையமைப்பாளர் எஸ்.ஏ. இராஜ்குமார் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் விருதினை அளித்து, இயக்க நூல்களை வழங்கினார்.   புதுக்கோட்டை பூபாளம் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி மேலும்

17 ஜனவரி 2017 18:06:06

வள்ளல் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜன.17 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளான இன்று (17.1.2017) அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற திராவிடர் இயக்கத் தலைவர்களிடம் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவருமான வள்ளல் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின்....... மேலும்

17 ஜனவரி 2017 17:52:05

வலங்கைமானில் தெருமுனை பரப்புரைக் கூட்டம்

 வலங்கைமானில் தெருமுனை பரப்புரைக் கூட்டம்

வலங்கைமான், ஜன. 11- கும்ப கோணம் கழக மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், வலங்கைமான் கடைவீதியில் 27.12.2016 அன்று மாலை பகுத் தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரி யார் பிறந்த நாள் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர்  வே.கோவிந் தன் தலைமை ஏற்றார். ஒன்றிய பொறுப்பாளர் அய்யனான், குழந்தை ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தை தொடங்கிவைத்து ஒன்றியத் தலைவர் நா.சந்திரசேகரன் உணர்ச் சிகரமான தொடக்கத்தை....... மேலும்

11 ஜனவரி 2017 16:09:04

தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற “அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5” நூல் வெளியீடு

தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற  “அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5” நூல் வெளியீடு

தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற “அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5” நூல் வெளியீடு காரைக்குடி, ஜன. 9- தமிழகம் முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் வெளியீட்டு விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: எடப்பாடி “அய்யாவின் அடிச்சுவட்டில்” பாகம் 5, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, எடப்பாடி நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு 18.12.2016....... மேலும்

09 ஜனவரி 2017 14:37:02

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி புத்தர் சிலை வளாகத்தை ‘பெரியார் உலகம்’ பணிக் குழுவினர் பார்வை ஆந்திராவி…

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி புத்தர் சிலை வளாகத்தை ‘பெரியார் உலகம்’ பணிக் குழுவினர் பார்வை ஆந்திராவில் பெரியார் கொள்கை முழக்கம்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி புத்தர் சிலை வளாகத்தை ‘பெரியார் உலகம்’ பணிக் குழுவினர் பார்வைஆந்திராவில் பெரியார் கொள்கை முழக்கம் புத்தர் பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அமராவதியில் ஆந்திர மாநில தலைநகர் உருவாகி வருகிறது. அதற்கு முன்பே பிரம்மாண்டமான 130 அடி உயரமுள்ள புத்தர் சிலை கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைக்கப் பட்டு அந்த வளாகம் புத்தர் பற்றிய செய்திகளை விளக்கும் கூடமாக விளங்கி வருகிறது. திருச்சி - சிறுகனூரில் அமைக்கப்பட வுள்ள....... மேலும்

07 ஜனவரி 2017 16:16:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒகேனக்கல், டிச. 31- பெரியாரி யல் பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 28.12.2016இல் தொடங்கியது.

டிசம்பர் 28ஆம் தேதி கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பி லும், திராவிடர் கழக வரலாறு எனும் பொருள் பற்றியும், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, சுயமரியாதை இயக் கம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு, இந்துத்துவா ஆகிய தலைப் புகளிலும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இயக்க ஏடு களும், நமது நிறுவனங்களும் எனும் தலைப்பிலும், பேராசி ரியர் ப.காளிமுத்து, புராண இதிகாசப் புரட்டு பற்றியும் வகுப்பு நடத்தினர். இயக்கப் பாடல்களை அண்ணா.சரவ ணன், சுதா ஆகியோர் பாடினர். தகடூர் தமிழ்ச்செல்வி வினாடி வினா நிகழ்ச்சி நடத்தினார். யோகா பயிற்சியின் சிறப்புகள் பற்றி யோகா பயிற்றுநர் மல் லிகா பேசினார். இரவு பெரி யார் ஊடகத்துறை சார்பில் குறும் படங்களும், ஆவணப்படமும் ஒளிபரப்பப்பட்டன. மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு மாணவர்களிடையே நுண்ணறிவுச் சோதனை நடத் தினார்.

29.12.2016 இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பில் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு, பெரியாருக்குப்பின் திராவிடர் கழகம் ஆகிய தலைப்புகளில் கவிஞர் கலி.பூங்குன்றன், ‘கட வுள் மறுப்பு’, ‘சமூகநீதி’ எனும் பொருள் பற்றி முனைவர் துரை.சந்திரசேகரன், பெரியார் போற்றிய பெண்ணியம் பற்றி பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி, அறிவியலும் மூடநம்பிக்கையும் எனும் தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து ‘சாமியாடுதல் மோசடி’ பற்றி டாக்டர் கவுதமன் ஆகி யோர் வகுப்புகள் நடத்தினர்.

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை யோக வகுப்பு மல்லிகா ராசமாணிக்கம் நடத் தினார். இரவு 8.30 மணியளவில் பரபரப்பான பட்டிமன்றம் பயிற்சி மாணவர்கள் பங்கு பெற்ற நிலையில் கழக அமைப்புச் செயலாளர் ஊமை செயராமனை நடுவராகக் கொண்டு நடந்தது. தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமா? பகுத்த றிவா? எனும் தலைப்பிலான பட்டிமன்றத்தில் இனநலமே என்ற அணியில் ஆனந்த சைனி, கோவிந்தராசு, சுதா, விபிசிங் ஆகியோரும் பகுத்தறிவே எனும் அணியில் சந்தீப், ஓவியா, வீ.சிவாஜி, கனிமொழி ஆகியோரும் வாதிட்டனர். பார்வையாளர்கள் கேட்டு ரசிக்கும் வண்ணம் அவர்களின் வாதம் வரவேற்பை பெற்றது. இறுதியில் இனநலமே! என்று நடுவர் தீர்ப்புரைத்தார்.

30.12.2016 மூன்றாம் நாள் காலை முதல் வகுப்பு தமிழர் தலைவரின் தனித்தன்மைகள் எனும் தலைப்பில் வகுப்பு நடத்தினார். திராவிடத்தால் எழுந்தோம், புதிய கல்விக் கொள்கை பேராபத்து பற்றி பேராசிரியர் காளிமுத்து வகுப்பு நடத்தினார். கேள்வியும் கிளத் தலும் வகுப்பில் பயிற்சி மாண வர்கள் எழுப்பிய கேள்விக ளுக்கு சிறப்பான பதில்களை மாணவர்கள் உற்சாகம் பெறும் வண்ணம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் வகுப்பாக்கித் தந்தார். அனைவர்க்கும் சான்றி தழ்களை தமிழர் தலைவர் வழங்கி வழிகாட்டுதல் உரை யும் வழங்கினார். முகாம் சிறக்க உழைத்தவர்களுக்கு சிறப்பு செய்யப் பெற்றது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner