முன்பு அடுத்து Page:

புதிய கல்விக் கொள்கை - 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள…

புதிய கல்விக் கொள்கை - 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து  எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய புதிய கல்விக் கொள்கை, - “நீட்” நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்போடு தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர் பங்கேற்ற எழுச்சிமிகு முத்தரப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 30.12.2016 அன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருவாரூர் 30.12.2016 அன்று காலை 10 மணியளவில் புதிய கல்விக் கொள்கை 2016, “நீட்” நுழைவுத் தேர்வினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர், மாணவர், பெற்றோர்....... மேலும்

20 ஜனவரி 2017 15:16:03

“தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு” விளக்கப் பொதுக்கூட்டம்

“தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு” விளக்கப் பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன. 19- திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கடைவீதியில் திராவிடர் கழ கம் சார்பில் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் 84ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவும், தை முதல் நாளே தமிழ் புத் தாண்டு விளக்கப் பொதுக்கூட் டமும் 31.12.2016 அன்று மாவட்ட தலைவர் கி.முருகையன் அவர் களின் தலைமையில் நடை பெற்றது. அனைவரையும் மாவட்ட அமைப்பாளர் ந.செல்வம் வர வேற்றார். மாவட்ட செயலாளர் ச.பொன்முடி, ஒன்றிய தலை....... மேலும்

19 ஜனவரி 2017 16:16:04

கடலூரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் அறிமுக விழா

கடலூரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் அறிமுக விழா

பெரியார் 1000 பரிசளிப்பு விழா இணைந்த முப்பெரும் விழா கடலூர், ஜன. 18- கடலூர் நகர திராவிடர் கழகம் சார்பில் 1.1.2017 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை கடலூர் - புதுப்பாளையம் திருப்பு முனை பயிற்சி அரங்கில் தமி ழர் தலைவரின் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - அய்யா வின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் நூல் அறிமுகம் - பெரியார் 1000 போட்டியில்....... மேலும்

18 ஜனவரி 2017 17:21:05

புதிய கல்விக் கொள்கை - நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் …

புதிய கல்விக் கொள்கை - நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து  எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள்

  தேசிய புதிய கல்விக் கொள்கை - “நீட்” நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்போடு தமிழ்நாடு ஆசிரியர், மாண வர், பெற்றோர் பங்கேற்ற எழுச்சிமிகு முத்தரப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் 30.12.2016 அன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: திருச்சி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரி யர் மாணவர் பெற்றோர் முத்தரப்பு....... மேலும்

18 ஜனவரி 2017 16:45:04

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சி

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சி

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தில் இரண்டாம்நாள் நிகழ்ச்சிஅடர்த்தியான நிகழ்ச்சிகள் - அறிஞர் பெருமக்களின் அரும்பெரும் கருத்துகள் அணிவகுப்பு சென்னை, ஜன.18 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 23ஆவது ஆண்டு விழா, திராவிடர் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய 2 நாள்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. இரண்டு நாள்களிலும் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்துறை அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு  அவர்களுக்கு சிறப்பு செய்யும் வண்ணம் 'பெரியார் விருது'....... மேலும்

18 ஜனவரி 2017 16:39:04

சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் - பொங்கல் விழா - பெரியார் விருது வழங்கும் விழா (16.1.20…

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இரண்டாம் நாள் விழாவில் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், எழுத்தாளர் ஜெயராணி, 'இன்ஸ்பைரிங்' இளங்கோ, இசையமைப்பாளர் எஸ்.ஏ. இராஜ்குமார் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் விருதினை அளித்து, இயக்க நூல்களை வழங்கினார்.   புதுக்கோட்டை பூபாளம் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி மேலும்

17 ஜனவரி 2017 18:06:06

வள்ளல் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜன.17 தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளான இன்று (17.1.2017) அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்ற திராவிடர் இயக்கத் தலைவர்களிடம் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவருமான வள்ளல் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின்....... மேலும்

17 ஜனவரி 2017 17:52:05

வலங்கைமானில் தெருமுனை பரப்புரைக் கூட்டம்

 வலங்கைமானில் தெருமுனை பரப்புரைக் கூட்டம்

வலங்கைமான், ஜன. 11- கும்ப கோணம் கழக மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், வலங்கைமான் கடைவீதியில் 27.12.2016 அன்று மாலை பகுத் தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரி யார் பிறந்த நாள் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர்  வே.கோவிந் தன் தலைமை ஏற்றார். ஒன்றிய பொறுப்பாளர் அய்யனான், குழந்தை ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்தை தொடங்கிவைத்து ஒன்றியத் தலைவர் நா.சந்திரசேகரன் உணர்ச் சிகரமான தொடக்கத்தை....... மேலும்

11 ஜனவரி 2017 16:09:04

தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற “அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5” நூல் வெளியீடு

தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற  “அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5” நூல் வெளியீடு

தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற “அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5” நூல் வெளியீடு காரைக்குடி, ஜன. 9- தமிழகம் முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் 5ஆம் பாகம் வெளியீட்டு விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: எடப்பாடி “அய்யாவின் அடிச்சுவட்டில்” பாகம் 5, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, எடப்பாடி நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு 18.12.2016....... மேலும்

09 ஜனவரி 2017 14:37:02

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி புத்தர் சிலை வளாகத்தை ‘பெரியார் உலகம்’ பணிக் குழுவினர் பார்வை ஆந்திராவி…

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி புத்தர் சிலை வளாகத்தை ‘பெரியார் உலகம்’ பணிக் குழுவினர் பார்வை ஆந்திராவில் பெரியார் கொள்கை முழக்கம்

ஆந்திர மாநில தலைநகர் அமராவதி புத்தர் சிலை வளாகத்தை ‘பெரியார் உலகம்’ பணிக் குழுவினர் பார்வைஆந்திராவில் பெரியார் கொள்கை முழக்கம் புத்தர் பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அமராவதியில் ஆந்திர மாநில தலைநகர் உருவாகி வருகிறது. அதற்கு முன்பே பிரம்மாண்டமான 130 அடி உயரமுள்ள புத்தர் சிலை கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைக்கப் பட்டு அந்த வளாகம் புத்தர் பற்றிய செய்திகளை விளக்கும் கூடமாக விளங்கி வருகிறது. திருச்சி - சிறுகனூரில் அமைக்கப்பட வுள்ள....... மேலும்

07 ஜனவரி 2017 16:16:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாபநாசம், டிச. 31- தமிழர் தலைவர் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” அய்ந்தாம் பாகம் நூல் அறிமுக விழா, சிந்தனைக் களம் -4 “வட நாட் டுக்காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும்” எனும் தலைப்பில் கருத்துரை ஆகிய இரு நிகழ் வுகள், குடந்தைக் கழகம், பாப நாசம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 21.12.2016 அன்று மாலை 7 மணிக்கு, பாபநாசம் நகரில்  பட்டுக் கோட்டை அழகிரி மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற் றது.

தஞ்சை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் செயலாளர் கோபு.பழனிவேல் தலைமை வகித்தார். கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் க.முருகானந்தம் வர வேற்புரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் வ.அழகுவேல் முன்னிலை வகித்தார். பாபநாசம் ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் புலவர் சுப்பு.தங்கராசு துவக்க உரை நிகழ்த்தினார்.

தமிழர் தலைவர் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் நூலினை அறிமுகம் செய்து உரையாற்றிய அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்க கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி, தமிழர் தலைவரின் வாழ்க்கை வர லாறு என்பது திராவிடர் கழ கத்தின் வரலாறு என்பதையும், அய்ந்தாம் பாகத்தில் சமூக நீதி தளத்தில் 1979இ-ல் நடைபெற்ற போராட்டம், அது தொடர்பான நிகழ்வுகள் விரிவாக பதிவு செய்யப்பட்டிருப்பதைச் சுட் டிக்காட்டி, ஒவ்வொரு திராவி டர் இல்லத்திலும் இருக்க வேண்டிய வரலாற்று நூல் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, வட நாட்டுக் காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும் எனும் தலைப்பில் சமூக நீதிக்காக நீதிக் கட்சி துவங்கி, இன்றுவரை பெரியார் இயக்கம் போராடி வந்த வர லாற்றையும், அதன் காரணமாக கல்வியில் தமிழகத்தில் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை பிரிவு மாண வர்கள் பெற்றுள்ள வெற்றியை புள்ளி விவரங்களோடு எடுத் துரைத்தார். ஆனால், மத்தியில் அரசு நிறுவனங்களில் தமிழர் களின் பங்களிப்பு மிகக் குறை வாக உள்ளதையும் ஆதாரங்க ளுடன் சுட்டிக்காட்டி, வட நாட்டவர், கல்வியில் மிகுந்த முன்னேற்றம் இல்லை என் றாலும், வேலைவாய்ப்பில் எத் தகைய முன்னேற்றம் அடைந் துள்ளார்கள் என்பதையும் எடுத் துக்காட்டி, தமிழகத்தில் கல்வி யோடு, வேலைவாய்ப்புக்கான தேர்வுகளுக்கும் நமது மாண வர்கள் உரிய வழிகாட்டுதல் பெற வேண்டியதன் அவசி யத்தை எடுத்துக்கூறினார்.

அரங்கில், பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள், தோழர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் சிற்ணீறுண்டியும் வழங்கப்பட் டது.

அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் ரூ.200 அன்பளிப்பு தந்து பலரும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியினை, பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner