Banner
முன்பு அடுத்து Page:

திருவெறும்பூரில் நடந்த தி.க. கலந்துரையாடல் கூட்டம்

திருவெறும்பூரில் நடந்த தி.க. கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி, மே.24- திருச்சி மாவட்ட  தி.க. கலந்துரையாடல் கூட்டம் திருவெறும்பூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் நேற்று (23.5.2013) மாலை 6 மணியளவில் நடைபெற்றது.  இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் தலைமை வகித்தார்.  மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர், மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் ச.கணேசன், மாநகரத்  தலைவர் சி.மருதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.காமராசு நன்றி கூறினார். தீர்மானம் அய்.பி.எல். சூதாட்ட கிரிக்கெட்டை தடை செய்ய வலியுறுத்தி....... மேலும்

24 மே 2013 16:11:04

* சென்னையில் பேச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

* சென்னையில் பேச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

* கணினி - இணையதள பயிற்சியும் உண்டு தஞ்சை வல்லத்தில் நடந்த கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு வல்லம், மே 24- திராவிடர் கழக சொற்பொழி வாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 23.5.2013 வியாழன் பகல் 12 மணி முதல் 2.15 மணி வரை தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி கடவுள் மறுப்புக் கூறினார். கழகப் பொதுச் செயலாளர்....... மேலும்

24 மே 2013 16:09:04

கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய துண்டறிக்கை

கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய துண்டறிக்கை

குன்னூரில் கழகத் தோழர்கள் கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய துண்டறிக்கையினை ஏராளமான பொதுமக்களுக்கு இன்று (24.5.2013) வழங்கினர். மேலும்

24 மே 2013 16:08:04

திண்டுக்கல்லில் கழகப் பொதுக்குழு: ஆயத்தப் பணிகள் தீவிரம்!

திண்டுக்கல்லில் கழகப் பொதுக்குழு: ஆயத்தப் பணிகள் தீவிரம்!

திண்டுக்கல், மே 23- திண்டுக்கல் மாவட்ட திரா விடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகல் நகர் ரவுண்டானா அருகில் உள்ள டி.எஸ்.அழகர் மீனாட்சிபவனத்தில் 19.5.2013 ஞாயிறு காலை 10.30 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத் திற்கு தென் மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன் ராஜா தலைமை வகித்தார். வழக்கறிஞர் கொ.சுப்ரமணியம், வழக்கறிஞர் சுப. ஜெகநாதன், மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டி யன், மாவட்ட செயலாளர் ப.யாழ்புலேந்திரன், மாநில திராவிடர் தொழிலாளரணி செயலாளர்....... மேலும்

23 மே 2013 16:19:04

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)

இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே! (தமிழர்கள்)சிந்துவெளி - திராவிட நாகரிகம் என்பதில் பெருமிதமடைகிறேன்!திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய நிகழ்ச்சியில் தமிழர் தலைவர், ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆகியோர் ஆதாரங்களுடன் விளக்கம்! ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்தார். அ.ராமசாமி எழுதிய “A History of Ancient Tamil Civilization” நூலை தமிழர் தலைவரிடம் வழங்கினார். சென்னை, மே 22- இலங்கையின் பூர்வீக குடிகளான நாகர்கள் திராவிடர்களே (தமிழர்களே!) என்றும், சிந்துவெளி....... மேலும்

22 மே 2013 15:58:03

குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

தந்தை பெரியார் அவர்களின் தனிச்செயலாளர் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவகம் திறப்பு விழாவினை சிறப்பாக நடத்த குடந்தை கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு குடந்தை, மே 22- குடந்தை மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம்   19.05.2013 ஞாயிற் றுக்கிழமை மாலை 6 மணியளவில் குடந்தை பெரியார்   மாளிகையில்  நடைபெற்றது. கூட் டத்திற்கு குடந்தை மாவட்ட திரா விடர் கழக தலைவர் வை.இளங் கோவன் தலைமையேற்றார். தலைமை செயற்குழு உறுப் பினர்....... மேலும்

22 மே 2013 15:43:03

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அய்.பி.எல். கிரிக்கெட்டு சூதாட்டத்தைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுவை விட அதிகம் போதையூட்டக் கூடியதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப் பதைக் கண்டித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஊட்டும் வகையில் வரும் 24ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங் களில் திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை நாள்: 24.05.2013, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி, இடம்:....... மேலும்

21 மே 2013 15:42:03

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், தொடர்பிரச்சாரம், கருத்தரங்கம்

சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், தொடர்பிரச்சாரம், கருத்தரங்கம்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு சேலம், மே 21- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 19.5.2013 அன்று மாலை 6.30 மணிக்கு, மாநகர தலைவர் பூ.வடி வேலு இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவ கர் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங் களை சிறப்பாக செயல் படுத்த வேண்டும் என் றும் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால்....... மேலும்

21 மே 2013 15:37:03

அகலட்டும் - ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட்டம்

அகலட்டும் - ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட்டம்

மதுரை, மே 21- நீதிபதி பொ.நடராசன் எழுதிய அகலட்டும் ஆரியமாயை நூல் திறனாய்வுக் கூட் டம் கடந்த 15.5.2013 - புதன் கிழமை - மாலை 6 மணிக்கு மதுரை பெரி யார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோ ரியா ஹாலில் நடைபெற் றது. கூட்டத்திற்கு அகச் சுரப்பியல் நிபுணர் கு. கண்ணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தென்மண்டல பிரச்சாரக் குழு தலைவர் தே.எடிசன்ராசா, திரா விடர்....... மேலும்

21 மே 2013 15:36:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நமது விழிகளைத் திறந்த பிறகே தன் விழிகளை மூடினார் தந்தை பெரியார்.

அந்த அறிவு ஆசான் உடலால், உயிரால் மறைந்து, 37 ஆண்டுகள் ஓடிவிட்டன!

ஊட்டிய உணர்வுகளும், நிலை நிறுத்திய கொள்கை லட்சியங்களும் ஓங்கி உலகளாவிப் பரவிய வண்ணம் உள்ளன.

அவரால் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வேர் பிடித்து, கிளைத்து, பூத்துக் காய்த்து, கனிந்த பலன் களாகி, திராவிடர் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளன. நாளும் தொடரு கின்றது.

அதன் சிறப்பான விளைவுகள் சமூகத் துறையில் மட்டுமல்ல; அரசியலும்கூட பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் தலையெடுக்க முடியாத வண்ணம் தடுத்து நிறுத்தி,

சூத்திரர்களின் ஆட்சி சொக்கத் தங்கமெனப் பிரகாசிக்கின்றது; அதனை ஒழித்திடவே தமது சூழ்ச்சி அஸ்திரங்களால் முயலுகின்றனர்!

மனுதர்மத்திற்கு மீண்டும் உயிரூட்ட வானத்திற்கும், பூமிக்குமாய் அலைகின்றது ஆரியம்!

சில தக்கைகள் மிதந்து வந்தால் அதையே தாம் கரையேறக் கிடைத்த மிகப்பெரிய கப்பல்களைப் போல் நம்பி ஓடிப் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.

காகித ஊடக ஓநாய்களின் பூணூல் புலம்பல்கள் புறப்பட்டுக் கிளம்பி, விட்டேனா பார் இந்த சூத்திரர் ஆட்சியை! என்று வேதம் ஓதி சத்ரு சங்கார யாகத்தை ஸ்பெக்ட்ரம் உருவில் நடத்திப் பார்க்கின்றனர்.

ஏவுகணை யுகத்தில் யாகக் கணையா?

ஏவுகணை யுகத்தில் யாகக் கணைகள் என்ன செய்யும் என்று அறியாப் பேதைகள் அவர்கள்!

பகுத்தறிவு ஏவுகணை, பாசறையில் பயிற்சி பெற்ற படையின் முன்னே, தார்ப்பாசூரர்களின் தகிடு தத்தம் ஒருபோதும் பலிக்காது!

மறுக்கப்பட்ட கல்வி, திறக்கப்பட்ட மடை வெள்ளமாகக் கரை புரண்டு ஓடி வருவதனால், சூத்திர சமுதாயம் இன்று பல்கலைக் கழக துணைவேந்தர்களாகி, கல்வியை கனகச்சிதமாக அனைவருக்கும் அளிக்கும் அருமையான பணி செய்கின்றனர்!

பூணூல் வேலிக்குள் சிக்கிக் கிடந்த அறிவு ஜீவி வேலை வாய்ப்பு அவாளுக்கு மட்டுமே என்ற நிலை மாற்றப்பட்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா என்று உலகெங்கும் குப்பன் மகன் சுப்பனும், காத்தான் மகள் கருப்பாயியும் கணினி பொறியாளர்களாக விண்வெளிக் கலம் போல உலகெங்கும் வெற்றி உலா வருகின்றனர்!

பெரியார் மறைய மாட்டார்!

பெரியார் மறையவில்லை; மறைய மாட்டார் என்பதற்கு இவற்றைவிட ஆதாரங்கள் வேண்டுமா?

திராவிடத்தால் எழுந்தோம்; நடந்தோம்,

விரைந்தோம் வீறுகொண்டு வெற்றிப்

பாதையில் பயணிக்கிறோம் என்பதை

நன்றியுள்ள அத்துணைப் பேரும் நினைத்து நினைத்து

தந்தையின் தன்னிகரற்ற

தொண்டறம் என்றும் பலன் அளிக்கும் என நம்புகின்றனர்.

நமது சுவாசமே, வாழ்வே அவரால் என்பதால்தான்,

இளைய தலைமுறைகூட பெரியாரால் வாழுகிறோம் யாம் என்று பெருமிதம் பொங்க முழங்குகிறது!

அந்த முழக்கத்தில் அவர்தம் சாதனைகளின் பலன் பளிச்சிடுகிறது!

எனவே, பெரியார் நினைவு நாள் என்பது சடங்கல்ல நமக்கு; சம்பிரதாயம் அல்ல - அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.

வைக்கம் வீரர் என்று அரிமாவின் நோக்குப்போல வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ஏற்றமிகு வரலாற்றுக் குறிப்பு நாள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்