எழுத்துரு அளவு Larger Font Smaller Font

01.02.2019 (வெள்ளிக்கிழமை)

திருச்சி: மாலை 6 மணி அறிவியல் பரப்புரை தெருமுனை பிரச்சாரக் கூட்டம்: * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மேலக்கல்கண்டார் கோட்டை, திருச்சி. * தலைமை: மா.மணிமாறன் (பொன்மலை பகுதி தலைவர்), * முன்னிலை: மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,  மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநகர தலைவர் சி.மருதை, மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி, ப.க. தலைவர் மலர்மன்னன், பா.லெ.மதிவாணன், குத்புதீன், பென்னி, * சிறப்புரை:  சே.மெ.மதிவதினி (தலைமைக்கழக பேச்சாளர், * நன்றியுரை: ஆட்டோ ராஜ் (பொன்மலை பகுதி செயலாளர்). * இவண் : பகுத்தறிவாளர் கழகம், திருச்சி

2.2.2019 (சனிக்கிழமை)

திராவிடர் கழக ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: * 29.01.2019 செவ்வாய் மாலை 5.00மணிக்கு நடை பெறுவதாய் இருந்த கூட்டம் எதிர்பாராத விதமாக நமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சீரிய செயல் வீரர் நகர கழக செயலாளர் செல்லதுரை  அவர்களின் மறைவால் நடக்க இயலாமல் போனதால் அந்தக் கூட்டம் எதிர்வரும் 2.02.2019 சனிக்கிழமை மாலை   பெரியார்  மன்றம்,பெரியார் தோட்டம், எண்.10 முனிஸ்வர் நகர் தெரு, மாலை அய்ந்து மணிக்கு நடைபெறும்.  * பொருள்: 1. நகர செயலாளர் பெ.செல்லதுரை அவர்களுக்கு வீரவணக்கம் படத் திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக 2. தஞ்சை யில் பிப்ரவரி 23,24இல் நடைபெற உள்ள சமுக நீதி மாநாடு தொடர்பாக. *வருகை விழைவு:கழக மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம்,இளைஞரணி, மாணவர்  கழகம் மற்றும் கழக தோழர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.  * இவண்: சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஓசூர்) அ.செ.செல்வம் (மாவட்ட செயலாளர், ஓசூர்)

கருநாடக மாநில திராவிடர் கழக செயல் மறவர்கள் கூட்டம்

பெங்களூரு  * காலை 10மணி * இடம்: தலைவர் கி.வீரமணி அரங்கு, பெங்களூர் தமிழ்ச்சங்கம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், * தலைமை: மு.சானகிராமன், * பொருள்: கழக செயல் திட்டங்கள், நிர்வாகி தேர்வுக்கு பாராட்டு, தஞ்சை மாநாடு தொடர்பாக. * அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். * அழைப்பு: மு.சானகிராமன் (தலைவர்), இரா.முல்லைக்கோ (செயலாளர்), கு.செயகிருட்டிணன் (பொருளாளர்), பெங்களூரு.

தருமபுரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: * மாலை 3 மணி முதல் 5.30 மணிவரை, இடம்: பெரியார் மன்றம், தருமபுரி, * தலைமை: இளைய.மாதன் (மாவட்டத் தலைவர்), * வரவேற்புரை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), * முன்னிலை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப் பாளர், மகளிரணி, மகளிர் பாசறை), அண்ணா.சரவணன் (மாநில துணைத் தலைவர், ப.க.), வீ.சிவாஜி (மண்டலத் தலைவர்), சா.ராஜேந்திரன் (ஒன்றியத் தலைவர், ப.க. அரூர்), த.யாழ்திலீபன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), * பொருள்: பிப்ரவரி 7ஆம் தேதி மனுதர்மம் எரிப்பு போராட்டம், திராவிடர் மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து பிப்ரவரி 9 ஆம் தேதி அறிவியல் பரப்புரைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக, *விளக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்), * நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்), * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.

3.2.2019 (ஞாயிற்றுக்கிழமை)

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

இராசபாளையம்: * காலை 10 மணி, இடம்: பெரியார் நூற்றாண்டு படிப்பகம், இராசபாளையம், * தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), * முன்னிலை: கா.நல்லதம்பி (மாநில ப.க. துணைத் தலைவர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.பகீரதன் (பொதுக்குழு உறுப்பினர்), * வரவேற்புரை: பூ.சிவகுமார் (நகர தலைவர்), * கருத்துரை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), மா.பவுன்ராசா (மண்டலத் தலைவர்), * பொருள்: 7.2.2019 மனுதர்ம எரிப்புப் போராட்டம், 17.2.2019 திருவில்லிப்புத்தூர் மண்டல இளைஞர் அணி எழுச்சி மாநாடு தமிழர் தலைவர் அவர்கள் வருகை, 2019 பிப்ரவரி 23, 24 தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் கழக செயல் திட்டங்கள் * நன்றியுரை: இரா.கோவிந்தன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), * விழைவு: பொறுப்பாளர்கர், தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம். * அழைப்பு: இரா.முத்துகணேஷ் (மாவட்ட ப.க. செயலாளர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர், தி.க.)

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம்

85ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: * மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை, * இடம்:  மருத்துவர் வே.உதயகுமார், மருத்துவமனை மேல்தளம், காசீம் சாயபு தெரு, கல்லக்குறிச்சி, * தலைமை: சிலம்பூர்க்கிழான், * வரவேற்புரை: நா.பெரியார் (செயலாளர், பகுத்தறிவு இலக்கிய மன்றம்), * முன்னிலை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்டச் செயலாளர்), * சிற்றுரை: தந்தை பெரியார் அறிஞர் அண்ணா உறவு  - பெ.எழிலரசன் (பகுத்தறிவாளர் கழக தலைவர்), தென்கலைச் செல்வர் உ.வே.சா.வின் தமிழ்ப்பணி - முத்தமிழ்முத்தன் (தலைவர், பவனாம்பாள் அறக்கட்டளை), தன்மானச்சுடர் சிங்காரவேலரின் பகுத்தறிவுப் பணி - நரம்பியல் வல்லுநர் வே.உதயகுமார், எச்.ஏ.கிருட்டிண பிள்ளையின் இலக்கியப் பணி - முனைவர் சாந்தகுமார், தில்லை யாடி வள்ளியம்மை / பாவாணரின் பைந்தமிழ்- அரங்கமின்னல், * நன்றியரை: இரா.முத்துசாமி (நகரச் செயலாளர்) * ஏற்பாடு: பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி மாவட்டம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner